என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவையில் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய காசாளர் கைது
  X

  கோவையில் தொழிலாளியை பீர் பாட்டிலால் தாக்கிய காசாளர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மது குடிக்க வந்த தொழிலாளியை தாக்கிய டாஸ்மாக் காசாளர் முத்து கருப்பையாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

  கோவை:

  கோவை வெள்ளலூர் குடிைச மாற்றுவாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முத்து (வயது 25). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மாமாவுடன் வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். அப்போது முத்து போதை தலைக்கேறிய நிலையில் அருகே உள்ள நாற்காலி மீது சரிந்தார்.

  இதனை பார்த்த டாஸ்மாக் பாரில் காசாளராக வேலை பார்க்கும் தஞ்சாவூரை சேர்ந்த முத்து கருப்பையா (21) என்பவர் முத்துவிடம் வந்து தகராறு செய்தார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முத்து கருப்பையா அங்கு இருந்த பீர் பாட்டிலை எடுத்து முத்துவின் தலையில் தாக்கினார்.

  இதில் படுகாயம் அடைந்த அவரரை அங்கு இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மது குடிக்க வந்த தொழிலாளியை தாக்கிய டாஸ்மாக் காசாளர் முத்து கருப்பையாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ெஜயிலில் அடைத்தனர்.

  Next Story
  ×