பணத்தை திருப்பி கேட்ட வாலிபருக்கு பீர் பாட்டில் அடி

பணத்தை திருப்பி கேட்ட வாலிபருக்கு பீர் பாட்டிலால் அடித்தனர். ராம்குமாரை தாக்கியதாக, பிரபு செந்தில் உள்பட 5 பேர் கும்பலை தல்லாகுளம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
பணத்தை திருப்பி கேட்ட  வாலிபருக்கு பீர் பாட்டில் அடி
Published on

மதுரை

மதுரை நாராயணபுரம், குறிஞ்சி நகர், கபிலர் தெருவை சேர்ந்தவர் ராம்குமார் (வயது 48). இவர் தனது நண்பர் நீதிமோகன் என்பவருடன், நாராயணபுரம் பேங்க் காலனியில் உள்ள டாஸ்மாக் பாரில் மது அருந்திக் கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த பிரபு, செந்தில் உள்பட 5 பேர் கும்பல் ராம்குமாரிடம் தகராறு செய்து அவரை பிளாஸ்டிக் சேர் மற்றும் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி சென்றது.

இதில் படுகாயமடைந்த ராம்குமாரை அங்கு இருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது ராம்குமாருக்கு கடந்த 2019-ம் ஆண்டு வேலை வாங்கி தருவதாக, பிரபு என்பவர் ரூ.20 லட்சம் வாங்கி உள்ளார். அதன் பிறகு அவர் ஏற்கனவே அளித்த வாக்குறுதிப்படி வேலை வாங்கித் தரவில்லை.

எனவே ராம்குமார் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல் ராம்குமாரை தாக்கியது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து ராம்குமாரை தாக்கியதாக, பிரபு செந்தில் உள்பட 5 பேர் கும்பலை தல்லாகுளம் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com