search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirunallar saneeswaran temple"

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது.
    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    காரைக்கால்:

    காரைக்கால் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு என்று தனியாக முகநூல் (பேஸ்புக்) பக்கம் உள்ளது.

    இதில் கோவிலில் நடைபெறும் விழாக்கள், பூஜைகள் விவரம், கோவில் வரலாறு மற்றும் சாமியின் புகைப்படங்கள பதிவிடப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் கோவிலின் முகநூல் பக்கத்தை மர்ம நபர்கள் 'ஹேக்' செய்து அந்த கணக்கில் ஆபாச புகைப்படங்களை பதிவிட்டனர்.

    இதனை பார்த்த பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் முகநூல் பக்கத்தில் இருந்த ஆபாச படத்தை சைபர் கிரைம் போலீசார் உடனடியாக நீக்கினர்.

    மேலும் கோவிலின் முகநூல் பக்கத்தை ஹேக் செய்து இந்த மோசமான செயலில் ஈடுபட்டவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் முகநூல் பக்கம் முடக்கப்பட்டு, பின்னர் சைபர் கிரைம் போலீசாரால் மீட்கப்பட்டது. இந்த நிலையில் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் இன்று வழக்கத்தை விட கூடுதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • திருநள்ளாறு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், போக்குவரத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பக்தர்கள் வந்துச் சென்றனர்.

    காரைக்கால்:

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருப்பது காரைக்கால் மாவட்டம். காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில், உலக புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், சனீஸ்வரர் கிழக்கு நோக்கி தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவில் உள்ள சனீஸ்வரரை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    வருகிற 20.12.23 அன்று மாலை 5.20 மணிக்கு 3 ஆண்டுகளுக்கு பிறகு சனிப்பெயர்ச்சி விழா விமர்சையாக நடைபெறவுள்ளது. அதுசமயம், மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இந்நிலையில், இன்று சனிக்கிழமை என்பதால், நேற்று முன்தினம் இரவு முதல் பக்தர்கள் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் குவிந்தனர். சனிப்பெயர்ச்சி விழா நெருங்குவதால், வழக்கத்தைவிட இன்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, மதுரை, கோவை, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிலிருந்தும், திரளான பக்தர்கள், கோவில் அருகே உள்ள நளன் குளத்தில், புனித நீராடி தங்கள் தோஷங்களை போக்கி, சனீஸ்வரரை நீண்ட வரிசையில் காத்திருந்து அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    திருநள்ளாறு போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததால், போக்குவரத்தில் எந்தவித சிக்கலும் இல்லாமல் பக்தர்கள் வந்துச் சென்றனர். அதேபோல் கோவில் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திருந்ததால் பக்தர்கள் சிரமம் இன்றி சாமி தரிசனம் செய்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால், பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும் என்பதால், மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், பாதுகாப்பு பணியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் 20-ந்தேதி நடக்கிறது.
    • இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இ்ங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    இந்தநிலையில் நேற்று சனிக்கிழமை என்பதால் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.

    அதிகாலை முதலே வந்த பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் எள் தீபம் ஏற்றி சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் வருகையையொட்டி போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க நகர பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • வெளி மாநிலங்களிலில் இருந்து திரளான பக்தர்கள் திரண்டனர்.
    • கோவில் அருகே உள்ள நள தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில், கோடைவிடுமுறை முடிந்து வருகிற 7-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது். இதையொட்டியும் நேற்று சனிக்கிழமை என்பதாலும் திருநள்ளாறு மற்றும் காரைக்காலில் பக்தர்கள் குவிந்தனர்.

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் நேற்று அதிகாலை 4.30 மணி முதல், புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலில் இருந்தும் திரளான பக்தர்கள் திரண்டனர். கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தனர்.

    முன்னதாக, கோவில் அருகே உள்ள நள தீர்த்த குளத்தில் பக்தர்கள் புனித நீராடினர். கோடை வெயில் தாக்கிவருவதால் பக்தர்கள், வெயிலை சமாளிக்க, நளன் குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். அங்கு வழக்கத்தை விட கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதன்பின் சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    • சனீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.
    • டிசம்பர் 20-ந்தேதி 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உள்ள உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனி பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் கடந்த 3-ந்தேதி நடந்தது.

    இதைத்தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் சகோபுர வீதி உலா வந்தார். முன்னதாக சனீஸ்வரருக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று இரவு தெப்ப உற்சவம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்தநிலையில் வருகிற டிசம்பர் 20-ந்தேதி 2½ ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

    • நாளை சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலா நடக்கிறது.
    • 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது.

    காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புவாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக 23-ந் தேதி இரவு அடியார்கள் நால்வர் புஷ்பப் பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் வாகன ரூடராய் சகோதர வீதி உலா நடைபெற்றது. விழாவின் மிக முக்கிய நிகழ்ச்சியாக இன்று காலை 5.30 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. 5 தேர்களில் முதல் தேர் சொர்ண கணபதி, 2-வது வள்ளி சமேத சுப்பிரமணியர், 3-வது தேர் செண்பக தியாகராஜர், 4-வது தேர் நீலோத்பலாம்பாள், 5-வது தேரில் சண்டிகேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் இருந்தனர்.

    நிகழ்ச்சியில், புதுச்சேரி குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய்.ஜெ. சரவணன் குமார், திருநள்ளாறு தொகுதி எம்.எல்.ஏ., பி.ஆர்.சிவா , மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.

    நாளை (31-ந் தேதி) சனீஸ்வரர் பகவான் தங்க காக வாகனத்தில் கோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • 30-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    • 1-ந்தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். இத்தகைய சிறப்புவாய்ந்த இக்கோவிலில் பிரமோற்சவ விழா கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய அடியார்கள் நால்வரும் பல வண்ண மலர்கள் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதையடுத்து வருகிற 28-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் ரிஷப வாகன சகோபுர வீதியுலாவும், 30-ந் தேதி காலை தேரோட்டமும், 31-ந் தேதி சனீஸ்வரர் பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலாவும், ஜூன் 1-ந் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடக்கிறது.
    • இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இ்ங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இதையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    இந்தநிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதாலும், நேற்று சனிக்கிழமை என்பதாலும் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.

    அதிகாலை முதலே வந்த பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோடை வெயில் தாக்கி வருவதால் பக்தர்கள் வெயிலை சமாளிக்க, நளன்குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். கோவில் ஊழியர்கள், போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். #Ilayaraja
    திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    கோவிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நேற்று வருகை தந்தார். அவர், கோவிலில் உள்ள சொர்ணகணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தர்ப் பாராண்யேஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, சனிபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். #Ilayaraja
    ×