என் மலர்
சினிமா

X
திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இளையராஜா சாமி தரிசனம்
By
மாலை மலர்16 May 2018 10:40 AM IST (Updated: 16 May 2018 10:40 AM IST)

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் இசையமைப்பாளர் இளையராஜா சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். #Ilayaraja
திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலில், சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில், சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின்போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.
கோவிலுக்கு, இசையமைப்பாளர் இளையராஜா நேற்று வருகை தந்தார். அவர், கோவிலில் உள்ள சொர்ணகணபதி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தர்ப் பாராண்யேஸ்வரர், அம்பாள் உள்ளிட்ட சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, சனிபகவான் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் செய்து வழிபட்டார். #Ilayaraja

Next Story
×
X