என் மலர்
புதுச்சேரி
திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று பெயர்ச்சி- திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவிலில் குவிந்த பக்தர்கள்
- தினசரி ஸ்ரீசனிபகவானுக்கு நடைபெறும் அபிஷேகமும் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது.
- அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் திருநள்ளாறு பகுதியில் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி:
திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று சனிஸ்வர பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்கிறார்.
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் சாமி கோவிலில் வாக்கிய பஞ்சாங்கமே பின்பற்றப்படுகிறது. இதன்படி அடுத்த ஆண்டுதான் சனி பெயர்ச்சி நடக்கிறது.
இதுதொடர்பாக திருநள்ளாறு தேவஸ்தானம் விளக்கம் அளித்தது. இருப்பினும் இன்று திருநள்ளாறு சனிஸ்வரன் கோவிலில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் குவிந்தனர்.
மேலும் ரம்ஜான் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளதாலும் சில வகுப்புகளுக்கு ஆண்டு விடுமுறை மற்றும் இன்று பங்குனி அமாவாசை சனிக்கிழமை என்பதாலும் தமிழக பகுதியில் சேலம், ஈரோடு, கோவை மதுரை உள்ளிட்ட பகுதியிலிருந்தும் இருந்து கேரளா ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
தினசரி ஸ்ரீசனிபகவானுக்கு நடைபெறும் அபிஷேகமும் வெள்ளிக்கவசம் அலங்காரத்தில் மகாதீபாராதனை நடைபெற்றது. பக்தர்கள் சனிபகவானுக்கு உகந்த எள் தீபமேற்றி வழிபட்டனர்.
தொடர் விடுமுறையால் சனி பகவானை தரிசிக்க அதிக அளவிலான பக்தர்கள் வருகை தந்துள்ளதால் திருநள்ளாறு பகுதியில் 100-க்கும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.








