search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TTD"

    • பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மூலமாக செல்ல சாலைகளும் உள்ளன
    • திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

    இந்தியாவின் ஆந்திர பிரதேச மாநிலத்திலுள்ளது திருப்பதி.

    இந்துக்களுக்கு மிக முக்கிய புனித தலமாக கருதப்படும் திருப்பதியில் உள்ள திருமலை எனும் மலையில் உள்ள உலக புகழ் பெற்ற கோயிலில், இந்துக்கள் வழிபடும் தெய்வமான திருமாலின் சன்னதி உள்ளது.

    இவரை தரிசிக்க நாடு முழுவதிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினசரி அங்கு வந்து செல்கின்றனர். இக்கோயிலின் நிர்வாகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) எனும் வாரியம் மேற்கொண்டு வருகிறது.

    திருப்பதியில் இருந்து மலை மீது உள்ள திருமலைக்கு பக்தர்கள் கால்நடையாக செல்ல படிக்கட்டுகளும், பேருந்து மற்றும் 2 அல்லது 4 சக்கர வாகனங்கள் மூலமாக செல்வதற்கு சாலைகளும் உள்ளன. படிக்கட்டுகள் வழியாக மேல் திருப்பதிக்கு செல்ல சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் ஆகும்.

    சென்ற வாரம் அங்கு படிக்கட்டு மார்க்கமாக திருமலைக்கு சென்ற ஒரு குடும்பத்தை சேர்ந்த லக்ஷிதா எனும் 6-வயது சிறுமி பெற்றோரிடமிருந்து சற்று விலகி நடந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மலைப்பகுதியிலுள்ள காடுகளில் மறைந்திருந்த சிறுத்தை ஒன்று அச்சிறுமியை தாக்கியதில், அச்சிறுமி உயிரிழந்தாள்.

    இச்சம்பவத்திற்கு பிறகு திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்தே செல்ல விரும்பும் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகளை தேவஸ்தான வாரியம் அறிவுறுத்தியிருக்கிறது.

    வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்படுவதாவது:

    "நடந்து செல்ல விரும்பும் பக்தர்கள் உணவு பண்டங்களை வழியில் இரைக்க கூடாது. நடைபயணமாக படிக்கட்டில் ஏறிச்செல்லும் பக்தர்கள் இனி 100 பேர் கொண்ட ஒரு குழுவாக ஒன்றாக இணைந்துதான் செல்ல வேண்டும். தாக்க வரும் விலங்குகளிடமிருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு பக்தருக்கும் ஒரு கம்பு கொடுக்கப்படும்," இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    திருமலையிலுள்ள காடு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டுக்களின் பக்கவாட்டில் உள்ள திறந்தவெளியை மூட மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் அதற்கான கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது என்றும் வாரியம் தெரிவிக்கிறது.

    • அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    • அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில், ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கூடுதலாக இன்று ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    அக்டோபர் மாதத்திற்கான, திருப்பதி மற்றும் தலகோனா விடுதியில் வாடகை அறைகள் முன்பதிவு வரும் 26-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் முன்பதிவு பட்டியலை வெளியிட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்கனவே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்காக கூடுதலாக வெளியிடப்பட உள்ளது.

    இதுதவிர அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை இன்று (25-ந் தேதி) காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    • அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அக்டோபர் மாதத்திற்க்கான திருமலை அங்கபிரதட்சணம் டோக்கன்களின் முன்பதிவு வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான தரிசனம் மற்றும் தங்குமிட ஒதுக்கீடு உள்ளிட்டவை வரும் 24-ந் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    அக்டோபர் மாதத்திற்க்கான மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் அவதியுறுவோர் உள்ளிட்டோரின் முன்பதிவு வரும் 24-ந் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் கூடுதலாக வரும் 25-ந் தேதி ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. அதேபோல் அக்டோபர் மாதத்துக்கான டிக்கெட்டுகளும் வெளியிடப்படுகிறது.

    அக்டோபர் மாதத்திற்க்கான, திருப்பதி மற்றும் தலகோனா விடுதியில் வாடகை அறைகள் முன்பதிவு வரும் 26-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக தேவஸ்தானம் முன்பதிவு பட்டியலை வெளியிட்டுள்ளது.

    திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய ஏற்கனவே ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களுக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு நாளைக்கு 4 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களுக்காக கூடுதலாக வெளியிடப்பட உள்ளது.

    இதுதவிர அக்டோபர் மாதத்திற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் இந்த டிக்கெட்டுகளை வருகிற 25-ந் தேதி காலை 10 மணி முதல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 71,721 பேர் சாமி தரிசனம் செய்தனர். 30,078 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.3.88 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் மொபைல் எண், இ-மெயில் ஐடி குறிப்பிட்டு குலுக்கலில் பங்கு பெறலாம்.
    • டிக்கெட் ஒதுக்கீடு பெறும் பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும்.

    திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு ஆன்லைன் மூலம் குலுக்கல் முறையில் சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, கல்யாண உற்சவம் உட்பட கட்டண சேவை டிக்கெட் ஒதுக்கீடுசெய்யப்படுகிறது. பக்தர்கள் மொபைல் எண், இ-மெயில் ஐடி குறிப்பிட்டு குலுக்கலில் பங்கு பெறலாம்.

    டிக்கெட் ஒதுக்கீடு பெறும் பக்தர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். பின்னர் வங்கி கவுண்டரில் பக்தர்கள் நேரடியாக பணம் செலுத்தி, டிக்கெட் பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் டிக்கெட் ஒதுக்கீடாக பெறும் பக்தர்கள் மொபைல் எண்ணுக்கு பேமென்ட்லிங்க் அனுப்பி, அதன்மூலம் பணம் செலுத்தி டிக்கெட் வாங்கிக் கொள்ளும் வசதியை தேவஸ்தான நிர்வாகம் சோதனை அடிப்படையில் நேற்று அறிமுகம் செய்தது.

    இந்த பேமென்ட் லிங்க் மூலம் யுபிஐ ஐடி, நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பக்தர்கள் பணம் செலுத்தலாம். பக்தர்கள் கொடுத்திருக்கும் வாட்ஸ்ஆப் எண் அல்லது மெயில் ஐடிக்கு டிக்கெட் வந்து சேரும். அந்த டிக்கெட்டை பக்தர்கள் நகல் எடுத்துக் கொள்ளலாம்.

    திருப்பதியில் பரிசோதனை அடிப்படையில் கொண்டு வந்துள்ள இந்த நடைமுறை வெற்றி பெற்றால், அடுத்து வி.ஐ.பி பிரேக் தரிசன கட்டணம் செலுத்தவும் இதே நடைமுறையை கொண்டுவர தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது.

    • கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சியில் சுறுசுறுப்பாகவும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு விசுவாசமாகவும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்.
    • கிருஷ்ணமூர்த்தியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலை நிர்வகிக்க திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழுவின் தலைவராக சுப்பா ரெட்டியும், 28 பேர் உறுப்பினர்களாக உள்ளனர்.

    இந்த நிலையில் தற்போது உள்ள அறங்காவலர் குழு உறுப்பினர்களை நீக்கிவிட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு விசுவாசமாகவும் மக்களிடையே நெருக்கமாக உள்ள கட்சியினருக்கு புதிய பதவி வழங்க ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளார்.

    அதன்படி வரும் ஆகஸ்டு மாதம் 12-ந்தேதி நடைபெறும் அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட உள்ளதாக கூறப்படுகிறது.

    தற்போது அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என வற்புறுத்தப்படும் என கூறப்படுகிறது.

    ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆரம்பம் முதல் தற்போது வரை கிருஷ்ணமூர்த்தி என்பவர் கட்சியில் சுறுசுறுப்பாகவும் முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு விசுவாசமாகவும் தொடர்ந்து வேலை செய்து வருகிறார்.

    எனவே கிருஷ்ணமூர்த்தியை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க முதல்-அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதியில் நேற்று 74,024 பேர் தரிசனம் செய்தனர். 32,688 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.96 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் 20 மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • ரூ 5.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    • பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை தரிசன டிக்கெட்டுகள் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டது.

    90 நாட்களுக்கு முன்பு பக்தர்கள் தங்களது திருப்பதி பயணத்தை முன்பதிவு செய்து கொள்ளும் விதமாக டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன.

    அக்டோபர் மாதத்திற்கான சுப்ரபாதம் தோமாலை அர்ச்சனை அஷ்டதல பாத மாறாதன சேவைக்காளை காண இன்று காலை 10 மணிக்கு டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டது.

    ஆர்ஜித சேவை தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் வருகிற 20-ந் தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். பின்னர் நடைபெறும் ஆன்லைன் குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படும். தகவல் பெற்ற பக்தர்கள் தங்கள் டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெற்றுக் கொள்ள வேண்டும்.

    கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரமோற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ர தீப அலங்கார சேவைகளை காண டிக்கெட்டுகள் வரும் 21-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது அக்டோபர் மாதத்துக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன் ஒதுக்கீடு வரும் 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

    பக்தர்கள் https:tiripati balaji.ap.gov.in என்ற இணையதளத்தில் சேவை டிக்கெட்டுகளை முன் பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    திருப்பதியில் நேற்று 71,894 பேர் தரிசனம் செய்தனர். 25,208 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 5.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. பக்தர்கள் 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    • ஆகஸ்ட் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பவித்ர உற்சவம் நடைபெற உள்ளது.
    • நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடைபெறக்கூடிய சுப்ரபாதம், அர்ச்சனை, தோமாலை, உள்ளிட்ட கட்டண சேவைகளுக்கான குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பதிவுக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்படுகிறது.

    வருகிற 19-ந் தேதி காலை 10 மணி முதல் 21-ந் தேதி காலை 10 மணி வரை பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

    21-ந் தேதி காலை 12 மணிக்கு எலக்ட்ரானிக் குலுக்கல் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு செல்போன் அல்லது இமெயிலுக்கு தகவல் அனுப்பப்படும்.

    அதனை வைத்துக் கொண்டு பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.

    இதேபோன்று ஆகஸ்ட் மாதம் 27-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வருடாந்திர பவித்ர உற்சவம் ஏழுமலையான் கோவிலில் நடைபெற உள்ளது.

    இதில் பங்கேற்பதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

    செப்டம்பர் 1-ந்தேதி முதல் 30-ந் தேதி வரையில் நடைபெறக்கூடிய கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைக்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 22-ந் தேதி காலை 10 மணி முதல் தங்களுக்கு வேண்டிய சேவைகளை பக்தர்கள் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

    செப்டம்பர் மாதம் அங்க பிரதட்சணம் செய்வதற்கான டிக்கெட்டுகள் இந்த மாதம் 23-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று 70 ஆயிரத்து 896 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 37,546 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4.07 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    நேரடி இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    • மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • 1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையொட்டி ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்தே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    நேரடி இலவச தரிசனத்தில் பக்தர்கள் 2 நாட்கள் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    குறிப்பாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிக அளவு பக்தர்கள் வந்தனர். தரிசனத்தை எளிமைப்படுத்துவதற்காக வெள்ளி சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது.

    ஏழுமலையான் கோவிலில் கடந்த மே மாதத்தில் 23 லட்சத்து 38 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.109.99 கோடி உண்டியல் வருமானமாக கிடைத்துள்ளது.

    1 கோடியே 6 லட்சம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டன.

    56 லட்சத்து 30 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. 11 லட்சம் பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்.

    கோடை விடுமுறையின் கடைசி நாளான நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    எங்கு பார்த்தாலும் பக்தர்களாக காட்சியளித்தனர்.நேற்று ஒரே நாளில் 92,328 பேர் சாமி தரிசனம் செய்தனர். 40,400 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.2 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    கடந்த 3 ஆண்டுகளில் ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் தரிசனம் செய்த பக்தர்கள் எண்ணிக்கை இதுவே அதிகமாகும்.

    திருப்பதியில் இன்று காலையில் பக்தர்கள் காத்திருப்பு அறைகளை தாண்டி ஒரு கிலோமீட்டருக்கு மேல் வரிசையில் காத்திருந்தனர்.

    சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது.

    • இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது.
    • இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    திருப்பதியில் ஏழுமலையான் கோவிலில் தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் கடந்த மாதம் முதல் பக்தர்களின் எண்ணிக்கை எதிர்பாராத அளவு 2 மடங்காக அதிகரித்தது. பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டாலும், விஐபி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதால் உண்டியல் வருவாய் குறைந்து காணப்படுகிறது.

    ஆங்கில வருட பிறப்பு முதல் ஏப்ரல் மாதம் வரை உண்டியல் வருவாய் சராசரியாக ஒரு நாளைக்கு ரூ.4 கோடியாக இருந்தது.

    கடந்த மாதம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டதால் சுமார் 35 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். இருப்பினும் மே மாத உண்டியல் வருவாய் ரூ.110 கோடி மட்டுமே வசூலானது. மற்ற மாத உண்டியல் வசூலைவிட இது குறைவாகும்.

    திருப்பதியில் நேற்று 62,407 பேர் தரிசனம் செய்தனர். 33,895 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.56 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    இன்று காலை சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர்.

    இதனால் இலவச தரிசனத்திற்கு சுமார் 24 மணி நேரம் ஆனது. ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டில் பக்தர்கள் சுமார் 6 மணி நேரமும் இலவச நேர ஒதுக்கீட்டில் வந்த பக்தர்கள் 10 மணி நேரமும் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • 2-ந்தேதி நம்மாழ்வார் சாத்துமுறை நடக்கிறது.
    • 2-ந்தேதியில் இருந்து 4-ந்தேதி வரை ஜேஷ்டாபிஷேகம் நடக்கிறது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜூன் மாதம் நடக்கும் விழாக்கள் பற்றிய விவரங்களை கோவில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

    அதன் விவரம் வருமாறு:-

    ஜூன் மாதம் 2-ந்தேதி நம்மாழ்வார் சாத்துமுறை, 2-ந்தேதியில் இருந்து 4-ந்தேதி வரை ஜேஷ்டாபிஷேகம், 4-ந்தேதி எருவகா பூர்ணிமா, 14-ந்தேதி மதத்ரய ஏகாதசி, 20-ந்தேதி பெரியாழ்வார் உற்சவம், 29-ந்தேதி ஷயன ஏகாதசி, சதுர்மாஸ்ய விரதம்.

    மேற்கண்ட விழாக்கள் நடக்கிறது.

    • இன்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பியது.
    • பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் தரிசன நேரம் அதிகரித்துள்ளது.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

    பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதாலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

    நேரடி இலவச தரிசனத்தில் இன்று வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ் அனைத்து அறைகளும் நிரம்பியது. சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

    பக்தர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுவதால் தரிசன நேரம் அதிகரித்துள்ளது.

    ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தர்கள் 5 மணி நேரத்தில் தரிசனம் செய்து வருகின்றனர். நேர ஒதுக்கீடு இலவச தரிசன டோக்கன் உள்ள பக்தர்கள் 10 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 24 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    திருப்பதியில் நேற்று 78,818 பேர் தரிசனம் செய்தனர். 39,076 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.66 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.

    • பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.

    இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, அந்த மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

    பக்தர்கள் இதைக் கவனித்து, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in -ல் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

    மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் நேற்று 85,297 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    37,392 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை இரவு எண்ணப்பட்டது இதில் ரூ.3.71 கோடி காணிக்கையாக கிடைத்தது.

    ×