என் மலர்
நீங்கள் தேடியது "MG Motors"
- 2022 எம்ஜி ஹெக்டார் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
- புதிய எம்ஜி ஹெக்டார் மாடல் 14 இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் கொண்டுள்ளது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் புதிய ஹெக்டார் மாடலுக்கான டீசர் வீடியோவை வெளியிட்டு உள்ளது. இதில் புதிய காரின் வெளிப்புற டிசைன் எப்படி இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம்.
2022 எம்ஜி ஹெக்டார் மாசலில் குரோம்-ஸ்டட் செய்யப்பட்ட கிரில் வழங்கப்பட இருக்கிறது. இது அர்கைல் சார்ந்த டைமண்ட் மெஷ் கிரில் போன்ற வடிவமைப்பு ஆகும். இத்துன் ரி-வொர்க் செய்யப்பட்ட முன்புற பம்ப்பர், புதிய ஏர் டேம் மற்றும் ஸ்கிட் பிளேட் உள்ளது. காரின் உள்புறம் 14 இன்ச் அளவில் செங்குத்தாக பொருத்தப்பட்ட டச் ஸ்கிரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு உள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டார் மாடல், தற்போதைய வெர்ஷனுடன் சேர்த்தே விற்பனை செய்யப்பட இருக்கிறது. எம்ஜி ஹெக்டார் புது வெர்ஷனிலும் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின், 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைப்ரிட் மோட்டார் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கிறது.
அறிமுகமானதும் புதிய 2022 எம்ஜி ஹெக்டார் பேஸ்லிப்ட் மாடல் டாடா ஹேரியர் மற்றும் மஹிந்திரா XUV700 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.
- எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்தியாவில் சிறிய எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
- இந்த காரில் டாடா ஆட்டோகாம்ப் நிறுவன பேட்டரி வழங்கப்பட இருக்கிறது.
எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் கார் மாடலின் சோதனையை இந்திய சந்தையில் துவங்கி இருக்கிறது. புதிய எம்ஜி காம்பேக்ட் எலெக்ட்ரிக் வாகனம் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் மாடல் உலிங் ஏர் EV மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த மாடல் இந்தோனேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
தற்போதைய ஸ்பை படங்களின் படி புதிய எம்ஜி எலெக்ட்ரிக் கார் இரண்டு கதவுகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனமாக இருக்கும் என உறுதியாகி இருக்கிறது. எண்ட்ரி லெவல் எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதாக எம்ஜி மோட்டார் நிறுவனம் கடந்த ஆண்டு அறிவித்து இருந்தது. இதன் விலை ரூ. 10 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 15 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம்.

Photo Courtesy: Autocarindia
அளவீடுகளின் படி புதிய எம்ஜி காம்பேக்ட் கார் மாருதி ஆல்டோவை விட அளவில் சிறியது ஆகும். இந்தோனேசிய சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடலில் 12 இன்ச் ஸ்டீல் வீல் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் அறிமுகமாகும் மாடலில் அலாய் வீல்கள் வழங்கப்படலாம்.
எம்ஜி நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் கார் டாடா ஆட்டோகாம்ப் நிறுவனத்தின் பேட்டரியில் இயங்கும் படி உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது இந்திய சந்தையில் பிரபல எலெக்ட்ரிக் கார் மாடலாக விளங்கும் நெக்சான் EV கொண்டிருந்ததை போன்ற பேட்டரி தான் எம்ஜி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

