search icon
என் மலர்tooltip icon

    கார்

    கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றும் எம்ஜி மோட்டார்ஸ்
    X

    கார் மாடல்கள் விலையை திடீரென மாற்றும் எம்ஜி மோட்டார்ஸ்

    • எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாகனங்கள் விலையை மாற்றியமைக்கிறது.
    • எம்ஜி கார்களின் புதிய விலை எப்போது மாற்றப்பட வேண்டும் என்ற தகவல் விற்பனை மையங்களுக்கு கொடுக்கப்பட்டது.

    ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆண்டு துவக்கத்தில் தங்களின் வாகன விலையை உயர்த்துவது வாடிக்கையாகி விட்டது. அந்த வகையில், இந்த ஆண்டு ஜனவரி மாத வாக்கில் பெரும்பாலான வாகன உற்பத்தியாளர்கள் தங்களின் வாகனங்கள் விலையை உயர்த்தின. தற்போது கடுமையான RDE விதிமுறைகள் அமலுக்கு வர இருக்கும் நிலையில், இந்தியாவில் மீண்டும் வாகனங்கள் விலை உயரும் சூழல் உருவாகி இருக்கிறது.

    ஜனவரி மாத விலை உயர்வை அடுத்து எம்ஜி மோட்டார் நிறுவனம் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக தனது கார் மாடல்கள் விலையை உயர்த்துகிறது. அதன்படி இந்தியாவில் எம்ஜி கார்களுக்கு மார்ச் 1 ஆம் தேதி முதல் புதிய விலை அமலுக்கு வருகிறது. புதிய விலை ஏற்கனவே கார்களை முன்பதிவு செய்தவர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும்.

    விலை உயர்வின் படி எம்ஜி ஹெக்டார் மாடல் தற்போது ரூ. 40 ஆயிரம் அதிகரிக்கிறது. இதன் டீசல் வேரியண்ட் விலை ரூ. 60 ஆயிரம் வரை உயர்கிறது. இந்தியாவில் எம்ஜி நிறுவனத்தின் ஒட்டுமொத்த எஸ்யுவி வாகனங்கள் விற்பனையில் மூன்றில் ஒரு பங்கு டீசல் மாடல் ஆகும். ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் எம்ஜி மோட்டார் நிறுவனம் 2023 ஹெக்டார் மாடலை அறிமுகம் செய்தது.

    எம்ஜி குளோஸ்டர் மாடல் விலை ரூ. 60 ஆயிரமும், எம்ஜி ஆஸ்டர் மாடல் விலை ரூ. 30 ஆயிரமும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. எம்ஜி ZS EV மாடலின் விலை ரூ. 40 ஆயிரம் உயர்கிறது. ஏற்கனவே குறிப்பிட்டதை போன்றே எம்ஜி கார்களின் புதிய விலை இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

    Next Story
    ×