search icon
என் மலர்tooltip icon

    இது புதுசு

    எலெக்ட்ரிக் ஹேச்பேக் காருக்கு அசத்தல் டீசர் வெளியிட்ட எம்ஜி மோட்டார்ஸ்!
    X

    எலெக்ட்ரிக் ஹேச்பேக் காருக்கு அசத்தல் டீசர் வெளியிட்ட எம்ஜி மோட்டார்ஸ்!

    • எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் புது எலெக்ட்ரிக் கார் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • எலெக்ட்ரிக் கார் மட்டுமின்றி ஹெக்டார் மாடலின் புது வெர்ஷனை அறிமுகம் செய்யும் பணிகளிலும் எம்ஜி மோட்டார்ஸ் ஈடுபட்டு வருகிறது.

    எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் தனது புது எலெக்ட்ரிக் ஹேச்பேக் காருக்கான டீசரை வெளியிட்டு உள்ளது. புதிய எம்ஜி 4 எலெக்ட்ரிக் ஹேச்பேக் மாடல் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஜனவரி 11 ஆம் தேதி ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் எம்ஜி இந்தியா ஸ்டாலில் எம்ஜி 4 கார் காட்சிக்கு வைக்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் இந்த மாடல் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்டது.

    புதிய எம்ஜி 4 மட்டுமின்றி எம்ஜி ஏர் சிட்டி EV மற்றும் புதிய 2023 ஹெக்டார் போன்ற கார்களையும் எம்ஜி நிறுவனம் 2023 ஆட்டோ எக்ஸ்போ நிகழ்வில் காட்சிக்கு வைக்கிறது. இந்த எலெக்ட்ரிக் கார் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மாட்யுலர் ஸ்கேலபில் பிளாட்ஃபார்ம் பேட்டரி ஆர்கிடெக்ச்சரில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த புது பிளாட்ஃபார்மில் உருவாகி இருக்கும் முதல் கார் இது ஆகும்.

    அளவீடுகளை பொருத்தவரை இந்த கார் 4287mm நீளம், 1836mm அகலம், 1506mm உயரம் மற்றும் 2705mm வீல்பேஸ் கொண்டிருக்கிறது. தோற்றத்தில் எம்ஜி 4 எலெக்ட்ரிக் கிராஸ் ஒவர்-எஸ்கியூ டிசைன், பிரம்மாண்ட ஸ்டைலிங், எல்இடி லைட்டிங், ஸ்போர்ட் அலாய் வீல்கள் மற்றும் கூர்மையான கேரக்டர் லைன்கள் வழங்கப்படுகிறது. எம்ஜி 4 கேபினில் ஃபுளோடிங் டிஸ்ப்ளே, 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் யூனிட், 7 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் உள்ளது.

    இத்துடன் சழலும் வகையிலான டயல், வயர்லெஸ் சார்ஜிங் பேட், 360 டிகிரி கேமரா, ADAS மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் எம்ஜி 4 மாடல் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 168 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் 51 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 202 ஹெச்பி திறன் கொண்ட 64 கிலோவாட் ஹவர் பேட்டரியும் உள்ளது.

    Next Story
    ×