என் மலர்
நீங்கள் தேடியது "Kawasaki"
- கவாசகி நிறுவனத்தின் புதிய Z H2 சீரிஸ் மாடல்கள் ஒற்றை நிற ஆப்ஷனில் கிடைக்கிறது.
- இரு மாடல்களிலும் 197ஹெச்பி திறன் வெளிப்படுத்தும் 998சிசி என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் தனது ஃபிளாக்ஷிப் தர நேக்கட் 2023 கவாசகி Z H2 மற்றும் Z H2 SE மோட்டார்சைக்கிள் மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி Z H2 விலை ரூ. 23 லட்சத்து 02 ஆயிரம் என்றும், கவாசகி Z H2 SE விலை ரூ. 27 லட்சத்து 22 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இரு ஸ்டிரீட் ஃபைட்டர் மாடல்களிலும் மெட்டாலிக் மேட் கிராஃபைன் ஸ்டீல் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. புதிய நிறம் மட்டுமே 2023 மாடல்களில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் ஒற்றை மாற்றமாக உள்ளது. இரு மாடல்களிலும் அதன் ஒரிஜினல் அம்சங்கள் அப்படியே வழங்கப்பட்டுள்ளன.

2023 கவாசகி Z H2 மற்றும் Z H2 SE மாடல்களில் 998சிசி, இன்-லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 197 ஹெச்பி பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் Z H2 மாடலில் M4.32 முன்புற பிரேக் கேலிப்பர்கள், Z H2 SE மாடலில் பிரெம்போ ஸ்டைல்மா முன்புற பிரேக் கேலிப்பர்களை கொண்டிருக்கின்றன.
புதிய கவாசகி Z H2 சீரிசின் இரு வேரியண்ட்களிலும் எலெக்டிரானிக் குரூயிஸ் கண்ட்ரோல், பவர் மோட்கள், இண்டகிரேட் செய்யப்பட்ட ரைடிங் மோட்கள், ஃபுல் எல்இடி லைட்டிங், புளூடூத் டிஎப்டி டிஸ்ப்ளே, பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர், ஏபிஎஸ் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இரு மாடல்களின் தோற்றத்தில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. இதில் டுவின் எல்இடி ஹெட்லேம்ப்கள், ஸ்டீல் டிரெலிஸ் ஃபிரேம், அலுமினியம் ஸ்விங்ஆர்ம் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. Z H2 மற்றும் Z H2 SE மாடல்களில் கவாசகி நிறுவனத்தின் "ரிவர்-மார்க்" கொண்டுள்ளன. சூப்பர்சார்ஜ் செய்யப்பட்ட புதிய நேக்கட் மாடல்களின் முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகின்றன.
- கவாசகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலிமினேட்டர் 400 மாடலில் 399சிசி, பேரலல் டுவின் என்ஜின் உள்ளது.
- முதற்கட்டமாக எலிமினேட்டர் 400 மாடல் ஜப்பான் சந்தையில் மட்டும் விற்பனை செய்யப்படுகிறது.
கவாசகி நிறுவனம் முற்றிலும் புதிய எலிமினேட்டர் 400 மோட்டார்சைக்கிளை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய எலிமினேட்டர் 400 மாடலில் நிஞ்சா 400 ஸ்போர்ட்பைக்-இல் உள்ளதை போன்ற எஞ்சினே வழங்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்டாண்டர்டு மற்றும் SE என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் SE வேரியண்டில் முன்புறம், பின்புற கேமராக்கள், இதர அக்சஸரீக்கள் வழங்கப்படுகின்றன.
புதிய கவாசகி எலிமினேட்டர் 400 மாடலில் 399சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் டுவின் எஞ்சின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 48 ஹெச்பி பவர், 37 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய டிரெலிஸ் ஃபிரேம், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், டுவின் ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

பிரேக்கிங்கிற்கு முன்புறம் 310mm டிஸ்க், பின்புறம் 240mm டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. புதிய எலிமினேட்டர் 400 மாடலில் 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஃபியூவல் டேன்க் உள்ளது. இது நிஞ்சா 400 மாடலில் உள்ளதை விட 5 லிட்டர் வரை குறைவு ஆகும். இந்த மோட்டார்சைக்கிளின் சீட் உயரம் அனைத்து வித அளவுகளில் உள்ள ரைடர்களுக்கும் சவுகரியத்தை வழங்கும் வகையில் இருக்கும் என தெரிகிறது.
புதிய கவாசகி எலிமினேட்டர் 400 மாடல் குரூயிசர் போன்ற டிசைன் கொண்டிருக்கிறது. இதன் சைக்கிள் பாகங்கள் அனைத்தும் பிளாக் நிறம் கொண்டிருக்கும் நிலையில், முழுமையான எல்இடி லைட்டிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஹோண்டா ரிபெல் 500 மாடலை போன்றே காட்சியளிக்கிறது.
இதன் டாப் எண்ட் SE வேரியண்டில் முன்புறம் மற்றும் பின்புற கேமரா சென்சார்கள்வழங்கப்பட்டுள்ளன. இவை டேஷ் கேமரா போன்று செயல்படுகின்றன. தற்போது கவாசகி எலிமினேட்டர் 400 மாடல் ஜப்பான் நாட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்டு எடிஷன் விலை இந்திய மதிப்பில் ரூ. 4 லட்சத்து 71 ஆயிரம் என்றும் SE வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ. 5 லட்சத்து 33 ஆயிரம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- கவாசகி நிறுவனத்தின் புதிய 2023 Z900RS மோட்டார்சைக்கிள் இருவித நிறங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.
- கவசாகி Z900RS மாடலிலும் 948சிசி, இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் முற்றிலும் புதிய Z900RS நியோ ரெட்ரோ மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய கவாசகி Z900RS மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 47 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய Z900RS டிசைன் Z650RS போன்றே காட்சியளிக்கிறது. இதன் ஹார்டுவேர் மற்றும் என்ஜின் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
ஸ்டைலிங்கை பொருத்தவரை Z900RS மாடலில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லேம்ப், டியர்டிராப் வடிவ ஃபியூவல் டேன்க், மெல்லிய டெயில் மற்றும் ரிப்டு பேட்டன் கொண்ட சீட் வழங்கப்படுகிறது. மல்டி-ஸ்போக் அலாய் வீல், க்ரோம் ஃபினிஷ் செய்யப்பட்ட வீல் ரிம்களை கொண்டிருக்கும் கவசாகி Z900RS க்ரோம் எக்சாஸ்ட் கொண்டுள்ளது.

இந்திய சந்தையில் கவாசகி Z900RS மாடல்- மெட்டாலிக் டியப்ளோ பிளாக்/மெட்டாலிக் இம்பீரியல் ரெட் மற்றும் கேண்டி டோன் புளூ என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல், அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச், ஆல் எல்இடி லைட்னிங் வழங்கப்படுகிறது. இந்த மாடலில் ரெட்ரோ தீம் கொண்ட இரு அனலாக் டயல், நெகடிவ் எல்சிடி உள்ளது.
புதிய Z900RS மாடலிலும் Z900 ஸ்டிரீட் மாடலில் உள்ளதை போன்றே 948சிசி, இன்லைன் நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 107 ஹெச்பி பவர், 95 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.
- கவாசகி நிறுவனத்தின் வெர்சிஸ் 1000 மாடல் ஒற்றை நிறத்தில் மட்டும் விற்பனைக்கு கிடைக்கிறது.
- வெர்சிஸ் 1000 மாடலில் டிசி சாக்கெட் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் 2023 வெர்சிஸ் 1000 மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய கவாசகி வெர்சிஸ் 1000 மாடலின் விலை ரூ. 12 லட்சத்து 19 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய லிட்டர் கிளாஸ் அட்வென்ச்சர் ஸ்டைல் ஸ்போர்ட்ஸ் டூரர் மாடல் ஒற்றை வேரியண்ட் மற்றும் நிறத்தில் கிடைக்கிறது.
2023 கவாசகி வெர்சிஸ் 1000 மாடல் தோற்றத்தில் 2022 வெர்சிஸ் போன்றே காட்சியளிக்கிறது. இந்த மாடலிலும் டுவின் பாட் ஹெட்லைட், ஃபேரிங்கில் இண்டகிரேட் செய்யப்பட்ட கார்னரிங் லைட்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்கிரீன், ஸ்டெப்-அப் டிசைன், சைடு ஸ்லங் எக்சாஸ்ட் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய வெர்சிஸ் மாடல் டூயல் டோன் மெட்டாலிக் மேட் கிராஃபீன்ஸ்டீல் கிரே மற்றும் மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. மற்ற அம்சங்களை பொருத்தவரை ஃபுல் எல்இடி லைட்டிங், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், அனலாக் போன்ற டகோமீட்டர் மற்றும் எல்சிடி ஸ்கிரீன் கொண்டிருக்கிறது.
கவாசகி வெர்சிஸ் 1000 மாடலிலும் 1043சிசி, இன்லைன், நான்கு சிலிண்டர்கள் கொண்ட லிக்விட் கூல்டு என்ஜின் வழங்ப்படுகிறது. இந்த என்ஜின் 118.2 ஹெச்பி பவர், 10.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது.
- கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
- கவாசகி மோட்டார்சைக்கிள்களுக்கான சலுகைகள் இந்த மாத இறுதி வரை வழங்கப்படுகிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட சில மாடல்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. இதில் குட் டைம்ஸ் வவுச்சர் சலுகையின் கீழ் கவாசகி இந்தியா தனது குறைந்த விலை நின்ஜா 300 மோட்டார்சைக்கிளுக்கு ரூ. 15 ஆயிரம் வரையிலான பலன்களை வழங்குகிறது.
இத்துடன் ரூ. 50 ஆயிரம் மற்றும் ரூ. 2 லட்சம் வரையிலான சலுகைகள் முறையே Z650 மற்றும் W800 மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் குட் டைம்ஸ் வவுச்சரை மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த சலுகை இன்று (பிப்ரவரி 1) துவங்கி பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வழங்கப்பட இருக்கிறது. இதோடு மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களின் ஸ்டாக் இருப்புக்கு ஏற்றவாரு சலுகைகள் வழங்கப்படும். கவாசகி நின்ஜா 300 எக்ஸ்-ஷோரூம் மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம் என துவங்குகிறது.
கவாசகி Z650 மற்றும் W800 மாடல்களின் விலை முறையே ரூ. 6 லட்சத்து 43 ஆயிரம் மற்றும் ரூ. 7 லட்சத்து 33 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளன. கடந்த மாதம் கவாசகி இந்தியா நிறுவனம் நின்ஜா 400, நின்ஜா 1000 SX மற்றும் நின்ஜா ZX-10R மாடல்களின் விலையை மாற்றியமைத்தது.
- கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது நின்ஜா 300 மாடலுக்கு குறுகிய கால விலை குறைப்பை அறிவித்துள்ளது.
- நின்ஜா 300 மாடலில் 38.88 ஹெச்பி பவர் கொண்ட 296சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் செயல்பட்டு வரும் கவாசகி விற்பனையாளர்கள் நின்ஜா 300 மாடலை வாங்குவோருக்கு ரூ. 10 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கி வருகின்றனர். இந்த விலை குறைப்பு குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த விலை குறைப்பு0 டிசம்பர் 31, 2022 தேதி வரை அமலில் இருக்கும். 2023 மாடலை அறிமுகம் செய்யும் முன், தற்போதைய மாடல்களை விற்று முடிக்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், கவாசகி நின்ஜா 300 விலை இதுவரை இரண்டு முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. மேம்பட்ட கிராஃபிக்ஸ் உடன் அறிமுகமான போதிலும், நின்ஜா 300 மாடலின் விலை அதன் முந்தைய வெர்ஷனை விட ரூ. 13 ஆயிரம் வரை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

பின் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் இதன் விலை ரூ. 3 ஆயிரம் உயர்த்தப்பட்டது. விலை உயர்வு காரணமாக வாங்காமல் இருந்த வாடிக்கையாளர்களை தூண்டும் வகையிலும், விலை குறைப்பு மூலம் வாகன விற்பனையை அதிகப்படுத்தவும் கவாசகி நிறுவனம் திட்டமிட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போதைய விலை குறைப்புக்கு முன் கவாசகி நின்ஜா 300 மாடலின் விலை ரூ. 3 லட்சத்து 40 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும்.
நின்ஜா 300 மாடலில் 296சிசி, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 38.8 ஹெச்பி பவர், 26.1 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்டீல் டியூப் சேசிஸ், டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள், பிரீலோடு-அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக், இருபுறமும் ஒற்றை டிஸ்க், டூயல் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை இந்த மோட்டார்சைக்கிளில் கன்வென்ஷனல் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லேம்ப், செமி டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் கவாசகி நின்ஜா 300 மாடல் கேடிஎம் RC 390, டிவிஎஸ் அபாச்சி RR310, பிஎம்டபிள்யூ G310 RR மற்றும் கீவே K300 R போன்ற மாடல்களுக்கு போட்டியாக விளங்குகிறது.
- கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் 2023 நின்ஜா 650 மாடலை அறிமுகம் செய்தது.
- புதிய மாடலின் விலை முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மாற்றப்பட்டு இருக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் மேம்பட்ட நின்ஜா 650 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. 2023 கவாசகி நின்ஜா 650 விலை ரூ. 7 லட்சத்து 12 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட அதிகளவு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

2023 கவாசகி நின்ஜா 650 மாடலின் டிசைன் மற்றும் ஸ்டைலிங் மட்டும் முந்தைய மாடலில் இருப்பதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் முன்புறம் கூர்மையான முகம், ஸ்ப்லிட் எல்இடி ஹெட்லைட், டிரான்ஸ்பேரண்ட் விண்ட்ஸ்கிரீன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் கவாசகி டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (KRTC) வழங்கப்பட்டு இருக்கிறது. இது KRTC 2-லெவல் சிஸ்டம் கொண்டுள்ளது. மேலும் இதை முழுமையாக ஆஃப் செய்ய முடியும்.
புதிய மாடலிலும் 649சிசி, பேரலெல் ட்வின் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 67 ஹெச்பி பவர், 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. எல்இடி இலுமினேஷன், டிராக்ஷன் கண்ட்ரோல் மட்டுமின்றி 2023 மாடலில் 4.3 இன்ச் TFT ஸ்கிரீன், கவாசகி ரைடாலஜி செயலி மூலம் ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி வழங்கப்பட்டு இருக்கிறது.
- கவாசகி நிறுவனத்தின் புதிய KX250 மோட்டார்சைக்கிள் லைம் கிரீன் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
- புதிய கவாசகி டர்ட் பைக் பொது சாலைகளில் பயன்படுத்த அனுமதியில்லை என்பதால், இதனை பதிவு செய்ய வேண்டாம்.
இந்தியா கவாசகி மோட்டார் நிறுவனம் 2023 KX250 டர்ட் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி KX250 விலை ரூ. 7 லட்சத்து 99 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 2023 கவாசகி KX250 டர்ட் மாடல் பந்தய களத்துக்கான மாடல் என்பதால், இதனை பொது சாலைகளில் பயன்படுத்த அனுமதி இல்லை. இதன் காரணமாக இந்த பைக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
KX250 2023 மாடலில் ஏராளமான அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் செயல்திறன் முந்தைய மாடலை விட மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் KX250 இதுவரை வெளியான மாடல்களை விட அதிக சக்திவாய்ந்த என்ஜின் கொண்டிருக்கிறது. புதிய கவாசகி KX250 மாடல் லைம் கிரீன் நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது. இது முழுமையாக உற்பத்தி செய்யப்பட்ட நிலையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.

2023 கவாசகி KX250 மாடலில் 249சிசி, லிக்விட் கூல்டு, நான்கு சிலிண்டர்கள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜினில் ஃபிங்கர்-ஃபாலோவர் வால்வு ஆக்டுவேஷன், இண்டேக் மற்றும் எக்சாஸ்ட் போர்ட்களில் ரிவைஸ்டு பிராசஸிங் உள்ளது. இதில் ரிவைஸ்டு கிரான்க்-கேஸ் டிசைன் மற்றும் ஹைட்ராலிக் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் புதிய KX250 மாடலில் புதிய கியரிங், ரிவைஸ்டு சஸ்பென்ஷன் செட்டிங் மற்றும் புதிய டயர்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இவை தவிர புது மாடலில் குறைந்த எடை மற்றும் அகலமான ஃபூட்பெக், நீண்ட எக்சாஸ்ட் ஹெடர் பைப், மேம்பட்ட இக்னிஷன் டைமிங் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள என்ஜின் லான்ச் கண்ட்ரோல் மற்றும் மூன்று என்ஜின் மேப் சாய்ஸ் கொண்டுள்ளது.
- கவாசகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய W175 மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.
- இந்தியாவில் புதிய கவாசகி W175 இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது.
கவாசகி இந்தியா நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட W175 மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய கவாசகி W175 மாடல் இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பேஸ் வேரியண்ட் எபோனி பெயிண்ட் செய்யப்பட்டு உள்ளது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 47 ஆயிரம் என துவங்குகிறது. இதன் பிரீமியம் வெர்ஷன் போல்டு கேண்டி பெர்சிமன் ரெட் நிறத்தில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1 லட்சத்து 49 ஆயிரம் ஆகும். அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
புதிய கவாசகி W175 மாடல் இந்திய சந்தையில் கவாசகி நிறுவனத்தின் குறைந்த திறன் கொண்ட ரோட்-லீகல் வேரியண்ட் ஆகும். இந்த மோட்டார்சைக்கிளில் 177சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 12.8 ஹெச்பி பவர், 13.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது.

மற்ற அம்சங்களை பொருத்தவரை கவாசகி W175 மாடலில் டபுள் கிராடில் சேசிஸ், முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் ட்வின் ரியர் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் முன்புறம் 270 மில்லிமீட்டர் ரோட்டார், பின்புறம் 110 மில்லிமீட்டர் டிரம் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது. கூடுதலாக சிங்கில் சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.
இவற்றுடன் ஹாலோஜன் ஹெட்லைட், ஹாலோஜன் டெயில் லைட், கன்வென்ஷனல் இண்டிகேட்டர்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய கவாசகி W175 மோட்டார்சைக்கிள் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- கவாசகி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட பைக் மாடல்களுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த சலுகை பலன்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது.
கவாசகி இந்தியா நிறுவனம் தேர்வு செய்யப்பட்ட மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடி போன்ற பலன்களை வழங்குகிறது. இவை கவாசகி Z650, கவாசகி Z650 RS மற்றும் கவாசகி W800 போன்ற மாடல்களுக்கு வழங்கப்படுகிறது. குறுகிய காலத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சலுகைகளை பயனர்கள் அக்டோபர் 31 ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலலாம்.
சலுகைகளின் படி கவாசகி Z650 RS வாங்குவோருக்கு கே-கேர் பேக்கேஜ், குட் டைம்ஸ் வவுச்சர் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. இவற்றின் மதிப்பு முறையே ரூ. 52 ஆயிரத்து 283 மற்றும் ரூ. 25 ஆயிரம் ஆகும். மோட்டார்சைக்கிளின் எக்ஸ்-ஷோரூம் விலையில் இருந்து இந்த வவுச்சர்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

கவாசகி Z650 நேக்கட் ரோட்ஸ்டர் வாங்குவோருக்கு ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள குட் டைம்ஸ் வவுச்சர் வழங்கப்படுகிறது. இதே போன்று கவசாகி W800 வாங்குவோருக்கும் குட் டைம்ஸ் வவுச்சர் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ரெட்ரோ ஸ்டைல் மாடல் இந்திய சந்தையில் டிரையம்ப் T100 மற்றும் ஸ்பீடு ட்வின் 900 போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
சலுகைகள் தவிர கவாசகி இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது குறைந்த விலை மோட்டார்சைக்கிள் W175-ஐ செப்டம்பர் 25 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய கவாசகி W175 விலை ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 2 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் புதிய கவாசகி W175 மாடல் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 மற்றும் டிவிஎஸ் ரோனின் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என தெரிகிறது.