என் மலர்
பைக்

மிரட்டல் அப்டேட்களுடன் இந்தியாவில் அறிமுகமன 1100சிசி பைக்... விலை எவ்வளவு தெரியுமா..?
- பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் டூயல் 310 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.
- புதிய கவாசகி Z1100 மாடலில் 5-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
கவாசாகி நிறுவனத்தின் 2026 Z1100 மாடல் ஒருவழியாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய Z1100 விலை ரூ.12.79 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூப்பர் நேக்கட் பைக் சுகோமி வடிவமைப்பு சார்ந்த தோற்றம் தவிர்த்து ஏராள அம்சங்களுடன் வந்திருக்கிறது.
அதன்படி 2026 Z1100 மாடலில் சக்திவாய்ந்த 1,099சிசி லிக்விட்-கூல்டு இன்லைன்-4 யூனிட் உள்ளது. இதே என்ஜின் நிஞ்சா 1100SX மாடலிலும் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நேக்கட் பைக்கில் இது 136hp பவர், 113Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச் பொருத்தப்பட்டுள்ளது. கவாசாகியின் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டரும் வழங்கப்பட்டு இருக்கிறது.
சேஸிஸ்-ஐ பொருத்தவரை முன்பக்கத்தில், கவாசாகி ஒரு அலுமினியம் ஃபிரேம் பயன்படுத்தி அதை ஸ்போர்ட்டி பயன்பாடுகளுக்கு ஏற்ப டியூன் செய்துள்ளது. சஸ்பென்ஷன் அமைப்பில் முழுமையாக சரிசெய்யக்கூடிய ஷோவா USD ஃபோர்க் மற்றும் ஒரு மோனோஷாக் யூனிட் உள்ளது. பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் டூயல் 310 மில்லிமீட்டர் டிஸ்க் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் புதிய கவாசகி Z1100 மாடலில் 5-இன்ச் TFT டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இது IMU அடிப்படையிலான மூன்று நிலை டிராக்ஷன் கண்ட்ரோல், இரண்டு பவர் மோட்கள், கார்னரிங் ABS, குரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் குயிக் ஷிஃப்டர் கொண்டிருக்கிறது. மேலும், ப்ளூடூத் கனெக்டிவிட்டி, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் அலர்ட்கள் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன்களை வழங்குகிறது.
இவ்வளவு செயல்திறன் மற்றும் தொழில்நுட்பம் இருந்தபோதிலும், கவாசிகி தனது 2026 Z1100 மாடலை சந்தையில் போட்டியை கடுமையாக்கும் வகையில் நிலை நிறுத்தியுள்ளது. அதன் நெருங்கிய போட்டியாளரான ஹோண்டா CB1000 ஹார்னெட் SP ஐ விட விலை குறைவாக உள்ளது.
ஹோண்டா தனது சூப்பர் ஸ்போர்ட் பைக்கை ரூ. 13.29 லட்சத்திற்கு விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது. மறுபக்கம் கவாசகி Z1100 விலை சற்று குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






