என் மலர்
பைக்

பைக்கிற்கு ரூ.84,000 வரை தள்ளுபடி அறிவித்த நிறுவனம்- எந்த மாடல் தெரியுமா?
- மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
- 6-ஸ்பீடு ரிட்டர்ன் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் கவாசகி நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட்டுக்கு முந்தைய 2025 நிஞ்சா 300 பைக்கை விற்பனை செய்யும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கவாசகி நிறுவனம் இந்த பைக்கிற்கு கணிசமான தள்ளுபடிகளை வழங்குகிறது.
குறிப்பாக, இந்த பைக்கின் சூப்பர்ஸ்போர்ட் வேரியண்ட் ரூ.84,000 வரை தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இருப்பினும் இந்த தள்ளுபடி மும்பையில் வழங்கப்படுகிறது. டெல்லியில் உள்ள டீலர்ஷிப்கள் இந்த மாடலுக்கு ரூ. 25,000 வரை தள்ளுபடி வழங்குகின்றன.
புதிய 2025 நிஞ்சா 300 மோட்டார்சைக்கிள் அதன் முந்தைய மாடலை விட பல மேம்படுத்தல்களைக் கொண்டுள்ளது. இதில் பெரிய விண்ட்ஷீல்ட், நிஞ்சா ZX-6R ஆல் ஈர்க்கப்பட்ட புதிய ப்ரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் சிறந்த சாலை நிலைத்தன்மைக்காக புதுப்பிக்கப்பட்ட டயர் வடிவங்கள் ஆகியவை அடங்கும்.
வடிவமைப்பை பொருத்தவரை நிஞ்சா 300 மாடலில் அலுமினியம் ஃபுட்பெக்குகள், கூர்மையான ஃபேரிங்ஸ், ஃபுளோட்டிங் விண்ட்ஸ்கிரீன் உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள்- லைம் கிரீன், கேண்டி லைம் கிரீன் மற்றும் மெட்டாலிக் மூண்டஸ்ட் கிரே என மூன்றுவித நிறங்களில் கிடைக்கிறது.
ஸ்டீல்-டியூப் டைமண்ட் ஃபிரேமை அடிப்படையாகக் கொண்ட இந்த பைக், டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ஐந்து வழிகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் சஸ்பென்ஷன் கொண்டிருக்கிறது. பிரேக்கிங்கிற்கு முன்புறம் 290 மில்லிமீட்டர் ஒற்றை-டிஸ்க் பிரேக் மற்றும் பின்புறத்தில் 220 மில்லிமீட்டர் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு இருக்கிறது.
இயந்திர ரீதியாக, இந்த பைக் அதன் முந்தைய மாடலை போலவே உள்ளது. இதில் லிக்விட் கூல்டு, பேரலல் டுவின் சிலிண்டர் 296 சிசி எஞ்சினுடன் வருகிறது. இது 11,000 ஆர்பிஎம்மில் 38 ஹெச்பி பவர், 10,000 ஆர்பிஎம்மில் 26.1 என்எம் டார்க்கை உருவாக்குகிறது. இது அசிஸ்ட் & ஸ்லிப்பர் கிளட்ச் உடன் 6-ஸ்பீடு ரிட்டர்ன் டிரான்ஸ்மிஷனைக் கொண்டுள்ளது.