என் மலர்
பைக்

ரூ. 9.99 லட்சத்தில் 2026 Z900... சம்பவம் செய்த கவாசகி..!
- இந்த மோட்டார்சைக்கிள் எந்த விரிவான மாற்றங்களையும் பெறவில்லை.
- இந்த பைக்கிலும் 948சிசி, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவின் மிகவும் பிரபலமான பெரிய பைக் மாடல்களில் ஒன்று கவாசகி Z900. இந்த பைக் தற்போது 2026 ஆம் ஆண்டிற்கு மேம்படுத்தப்பட்டு சற்று மலிவு விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. ரூ. 9.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில், கிடைக்கும் புதிய 2026 Z900 மாடல் 2025 மாடலை விட ரூ. 19,000 விலை குறைவு ஆகும்.
கடந்த ஆண்டு மேம்படுத்தல் நீண்ட காலத்திற்குப் பிறகு மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்றாக இருந்ததால், எதிர்பார்க்கப்பட்டபடி, இந்த மோட்டார்சைக்கிள் எந்த விரிவான மாற்றங்களையும் பெறவில்லை. 2026 ஆம் ஆண்டிற்காக, கவாசகி இரண்டு புதிய வண்ண விருப்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கேண்டி லைம் கிரீன்/மெட்டாலிக் கார்பன் கிரே மற்றும் மெட்டாலிக் மேட் கிராஃபீன் ஸ்டீல் கிரே/மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க்.
மற்றொரு ஆச்சரியமான மாற்றம் பவர் மற்றும் டார்க் வெளியீட்டு எண்களில் லேசான அதிகரிப்பு ஆகும். சமீபத்திய மாடல் 123.6bhp பவர் மற்றும் 98.6Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இது முந்தைய மாடலை விட முறையே 1.6bhp மற்றும் 1.2Nm இன் அதிகம் ஆகும். மேலும், இதன் எடை 212 கிலோவில், முன்பை விட 1 கிலோ குறைவாக உள்ளது.
இந்த பைக்கிலும் 948சிசி, இன்லைன் 4-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. மற்றொரு புதுப்பிப்பு ரைடு-பை-வயர் திராட்டில், க்ரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் போன்ற கூடுதல் அம்சம்ங்கள் உள்ளது. இது IMU- உதவியுடன் கூடிய கார்னரிங் டிராக்ஷன் கண்ட்ரோல் மற்றும் கார்னரிங் ABS ஆகியவற்றையும், புதிய 5-இன்ச் TFT திரையையும் கொண்டுள்ளது.






