search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "French Open"

    • பாரிஸ் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான இடம். இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம்.
    • எங்களுக்கு 2-வது சொந்த இடம் போன்றது. ஒலிம்பிக் போட்டிக்கான டெஸ்ட் இடம். ஆனால், இன்னும் சில மாதங்கள் உள்ளன.

    பிரெஞ்ச் ஓபன் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிராக் ஷெட்டி- சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி ஜோடி தைவானின் பி.ஹெச். யாங்- ஜே.எச். லீ ஜோடியை எதிர்கொண்டது.

    முதல் செட்டை 21-11 என எளிதாக கைப்பற்றியது இந்திய ஜோடி. ஆனால் 2-வது செட்டில் தைவான் ஜோடி கடும் சவால் விடுத்து அடுத்தடுத்து புள்ளிகள் கைப்பற்றியது என்றாலும், இந்திய ஜோடி 2-வது செட்டிடையும் 21-17 எனக் கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வென்றது.

    பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை வென்றது சிறப்பான தருணம். இந்த இடத்தில் விளையாடிய போட்டிகளில் சிறந்த போட்டிகளில் ஒன்று என சிராக் ஷெட்டி தெரிவித்துள்ளது.

    மேலும், இது தொடர்பாக சிராக் ஷெட்டி கூறுகையில் "கடந்த சில வாரங்களாக தைவான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சிறந்த எதிர் ஜோடியை எதிர்கொண்டு அவர்களை வீழ்த்தியது. அவர்களை எளிதாக எடுத்து கொள்ளக் கூடாது என்பது எங்களுக்கு தெரியும்.

    அவர்களுடைய தரவரிசையில் உயர்ந்ததாக இல்லை. ஆனால் வலிமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முதல் செட்டை கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. 2-வது செட்டின் தொடக்கத்தில் சற்று நடுக்கம் இருந்தது. அதன்பின் சுதாரித்துக் கொண்டு கைப்பற்றி விட்டோம்.

    இந்த வெற்றியை மிகவும் மகிழ்ச்சியானதாக உணர்கிறேன். பாரிஸ் எப்போதுமே எங்களுக்கு சிறப்பான இடம். இங்கு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளோம். எங்களுக்கு 2-வது சொந்த இடம் போன்றது. ஒலிம்பிக் போட்டிக்கான டெஸ்ட் இடம். ஆனால், இன்னும் சில மாதங்கள் உள்ளன.

    ஒலிம்பிக் போட்டி நடைபெறும் இடத்தில் சந்தோசத்தை வெளிப்படுத்தவில்லை என்று கூறினர். அது பொய்யாக இருக்கும். நாங்கள் இந்த இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளோம். அடுத்த வாரம் இன்னொரு தொடர் உள்ளது. இதை எதிர்பார்த்து கொண்டிருக்கிறோம்" என்றார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிசின் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
    • இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

    பாரீஸ்:

    நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டி ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இதில் இரண்டாவதாக நடைபெறும் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் இறுதிச்சுற்று ஆட்டத்தில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக், செக் வீராங்கனை கரோலினா முச்சோவாவுடன் மோதினார்.

    இதில் ஸ்வியாடெக் 6-2 என்ற செட் கணக்கில் முதல் செட்டைக் கைப்பற்றினார். இரண்டாவது செட்டை முச்சோவா போராடி 7-5 என கைப்பற்றினார்.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 6-4 என கைப்பற்றிய இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார்.

    நாளை மறுதினம் நடைபெற அரை இறுதியில் போபண்ணா ஜோடி, நெதர்லாந்தின் ரோஜர் - எல் சால்வடாரின் மார்சிலோ அரிவலோ ஜோடியை எதிர்கொள்கிறது.
    பாரீஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதி சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - மேத்வி மிட்டெல்கூப் (நெதர்லாந்து) ஜோடி 4-6, 6-4, 7-6 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் லாய்டு கிளாஸ்பூல் - பின்லாந்தின் ஹாரி ஹெலியோவாரா இணையை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது.
    4-வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான சிட்சிபாஸை 19 வயது இளம் வீரர் வீழ்த்தினார்.
    பாரிஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் உலகின் இரண்டாம் நிலை வீரரான மெட்வெடேவ் (ரஷ்யா ) குரோஷிய வீரர் மரின் சிலிச் உடன் மோதினார்.

    இந்த போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய மரின் சிலிச் 6-2 6-3 6-2 என்ற செட் கணக்கில் மெட்வெடேவை வீழ்த்தினார். பிரெஞ்சு ஓபன் சாம்பியன் பட்டத்தை வெல்ல வாய்ப்புள்ள வீரர்களுள் ஒருவராக மெட்வெடேவ் பார்க்கப்பட்டார்.

    இருப்பினும் அவர் அவர் காலிறுதிக்கு முந்தய சுற்றில் வெளியேறியது அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் மற்றொரு 4-வது சுற்று போட்டியில் நான்காம் நிலை வீரரான சிட்சிபாஸை வீழ்த்தி இளம் வீரர் ஹோல்கர் ரூனே  வீழ்த்தி முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளார். ரூனே 7-5 3-6 6-3 6-4 என்ற கணக்கில் சிட்சிபாஸை வீழ்த்தினார்.
    காலிறுதி சுற்றில் விளையாட கேஸ்பர் ரூட், கார்லஸ் அல்காரஸ் உள்ளிட்டோரும் தகுதி பெற்றுள்ளனர்.
    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 6-2, 6-3, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காக்சை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார். 

    மற்றொரு ஆட்டத்தில் டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ருனே 7-5, 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கீரிஸ் நாட்டின் சிட்சிபாசை தோற்கடித்து காலிறுதி சுற்றுக்குள் நுழைந்தார். 

    மற்றொரு 4-வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 6-1, 6-4, 6-4 என்ற நேர் செட்டில் ரஷியாவின் கச்சனோவை வீழ்த்தி கால்இறுதி போட்டியில் விளையாடி தகுதி பெற்றார். 

    இன்று நடைபெறும் முக்கிய கால்இறுதி ஆட்டம் ஒன்றில் டென்னிஸ் உலகின் நம்பர் ஒன் வீரரும், நடப்பு சாம்பியனுமான செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச், பிரெஞ்சு ஓபனை 13 முறை வென்ற ஸ்பெயின் வீரர் ரபெல் நடாலை எதிர்கொள்கிறார். 

    டென்னிஸ் களத்தின் பரம எதிரிகளான இருவரும் இதுவரை 58 முறை மோதியுள்ளனர். இதில் 30 முறை ஜோகோவிச்சும், 28 முறை நடாலும் வெற்றி பெற்றுள்ளனர். 

    இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர், பிரான்ஸில் உள்ள பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆண்கள் ஒன்றையர் பிரிவின் 4வது சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    இதில் ஒரு போட்டியில் நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை  வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

    மற்றொரு போட்டியில் கனடா வீரர் ஃபெலிக்ஸ் ஆகர்- அலியாசிம்மை, ஸ்பெயின் வீரர் நடால் எதிர்கொண்டார். இந்த போட்டியில் 3-6, 6-3, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் நடால் ஃபெலிக்ஸ் ஆகரை தோற்கடித்து காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

    இதன்மூலம் காலிறுதி போட்டியில் ஜோகோவிச்சை, நடால் எதிர்கொள்கிறார்.

    இந்த இரு வீரர்களும் பிரெஞ்ச் ஓபன் போடிட்யில் 10வது முறையாக மோதுகின்றனர். மொத்த டென்னிஸ் தொடர் வரலாற்றிலும் 59-வது முறையாக மோதுகின்றனர்.

    ஏற்கனவே 13 முறை பிரெஞ்ச் ஓபன் தொடரை வென்ற நடால், ஜோகோவிச்சை எதிர்கொள்ளும்போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
    நான்காவது சுற்றில் அர்ஜென்டினா வீரர் டியாகோ ஸ்வாட்ஸ்மேன் தோல்வி அடைந்தார்.
    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. 

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில்,  நடப்பு சாம்பியனும், 'நம்பர் ஒன்' வீரருமான செர்பியோவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வாட்ஸ்மேனை எதிர்கொண்டார். 

    இந்த போட்டியில் ஜோகோவிச் 6-1, 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் ஸ்வாட்ஸ்மேனை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர் காலிறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
    3வது சுற்றில் மியோமிர் கெக்மனோவிச்சை நேர் செட்களில் டேனில் மெட்வடேவ் வீழ்த்தினார்.
    பாரீஸ்:

    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி தொடர் பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. 

    இதில் நேற்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மற்றும் மைக்கேல் யெமர் ஆகியோர் மோதினர்.  இதில்  6-2,6-2,6-1, என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற சிட்சிபாஸ் 4 வது சுற்றுக்கு முன்னறினார் 

    மற்றொரு போட்டியில் டென்னிஸ் உலகில் இரண்டாவது இடத்தில் உள்ள டேனில் மெட்வடேவ் மற்றும் மியோமிர் கெக்மனோவிச்சை எதிர்கொண்டார்.  இந்த போட்டியில், 6-2, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற மெட்வடேவ் 4வது சுற்றுக்கு தகுதி பெற்றார். 

    பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா உள்ளிட்ட வீராங்கனைகள் முதல் சுற்றில் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்றில் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஏஞ்சலிக் கெர்பர், பெலாரசின் அலியாக்சாண்ட்ரா சாஸ்னோவிச்சை எதிர்கொண்டார்.
     
    இதில் சாஸ்னோவிச் 6-4, 7-6  என்ற நேர் செட்களில் கெர்பரை வீழ்த்தினார். பிரெஞ்ச் ஓபனில் 3-வது சுற்றில் கெர்பர் வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    ஜெர்மனியின் ஸ்வரேவ், அர்ஜெண்டினாவின் செபாஸ்டியன் பயாசுடன் மோதினார். இதில் முதல் இரு செட்களை பயாஸ் 6-2, 6-4 என கைப்பற்ற, அடுத்து சுதாரித்துக் கொண்ட ஸ்வரேவ் அடுத்த 3 செட்களை 6-1, 6-2, 7-5 என வென்றார்.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற 2-வது சுற்று ஒன்றில் உலகின் நம்பர் 1 வீரராக உள்ள செர்பியாவின் நோவக் ஜோகோவிச், சுலோவாக்கியாவை சேர்ந்த அலெக்ஸ் மோல்கனை எதிர்கொண்டார்.

    இதில், 6-2, 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்ற ஜோகோவிச், 3வது சுற்றுக்கு முன்னேறினார்,.

    மேலும், ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொரெண்டின் மவுடெட்டை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-1, 6-4 என வெற்றி பெற்ற நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
    பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் இரண்டாவது சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் நடால், செர்பியாவின் ஜோகோவிச் உள்ளிட்ட பலர் முன்னேறியுள்ளனர்.
    பாரிஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று போட்டி ஒன்றில் உலகின் 2-ம் நிலை வீரரான ரஷியாவின் டேனியல் மெத்வதேவ், அர்ஜென்டினாவின் ஃபகுண்டோ பாக்னிஸை எதிர்த்து விளையாடினார்.

    இதில் மெத்வதேவ் 6-2, 6-2, 6-2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். 

    இதேபோல், இத்தாலியை சேர்ந்த ஜானிக் சின்னர், அமெரிக்காவைச் சேர்ந்த பிரெடஞ்சலோவை எதிர்கொண்டார். இதில் 6-3, 6-2, 6-3 என்ற செட்களில் சின்னர் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
    பிரெஞ்ச் ஓபன் தொடரில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதல் சுற்றிலேயே தோற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
    பாரீஸ்:

    பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி அந்நாட்டு தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஜப்பான் நாட்டை சேர்ந்த நவோமி ஒசாகா, அமெரிக்காவைச் சேர்ந்த அமெண்டா அனிசிமோவாவை எதிர்கொண்டார்.

    இதில் நவோமி ஒசாகா 5-7, 4-6 என்ற நேர் செட்களில் அனிசிமோவாவிடம் தோல்வி அடைந்து, தொடரில் இருந்து வெளியேறினார்.
    ×