என் மலர்
நீங்கள் தேடியது "வெங்கட் பிரபு"
- வெங்கட் பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா நடித்து வரும் திரைப்படம் என்சி22.
- இந்த படத்தில் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றனர்.
மாநாடு', 'மன்மத லீலை' போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி இணைந்துள்ளார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ளது.

படக்குழு
முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. இதில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ராணா டகுபதி சர்ப்ரைஸ் விசிட் செய்து பூஜையில் கலந்து கொண்டுள்ளார்கள். இந்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் - ராணா டகுபதி
மேலும் இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குனர் வெங்கட் பிரபுவின் பட பூஜைக்காக தெலுங்கில் வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
- மன்மத லீலை படத்தைத் தொடர்ந்து வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கி வரும் படம் என்சி22.
- இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார்.
'மாநாடு', 'மன்மத லீலை' போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்து இயக்கும் புதிய படம் என்சி22. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்காலிகமாக 'என்சி22' என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீநிவாஸா சித்தூரி தயாரிக்கவுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி இப்படத்திற்கு இந்திய திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாகவும் இப்படத்தின் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளதாகவும் வெங்கட் பிரபு தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

என்சி22
மேலும் வெங்கட்பிரபு முதல் முறையாக இளையராஜாவுடன் இணைந்துள்ளார். இதுவரை இயக்கிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா, பிரேம்ஜி மட்டுமே இசையமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் படத்தின் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
- சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் சிம்பு பட இயக்குனருடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இரண்டு திரைப்படங்களும் பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்திற்கு மனோஷ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் உக்ரைன் நடிகை மரியா, சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படம் ஆகஸ்ட் 31-ம் தேதி விநாயகர் சதூர்த்தி அன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது.

சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து சென்னை-28, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட பல படங்களை இயக்கிய வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கல்பாத்தி எஸ் அகோரம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் சுனைனா. இவர் நடிப்பில் வெளியான காதலில் விழுந்தேன், நீர்ப்பறவை, சில்லுக்கருப்பட்டி உள்ளிட்ட பல படங்களின் மூலம் அனைவரையும் கவர்ந்தவர். தற்போது பன்மொழிகளில் உருவாகும் ரெஜினா என்ற புதிய திரைப்படத்தில் முதன்மை நாயகியாக நடிக்கிறார். இப்படத்தை எல்லோ பியர் புரொடக்ஷன் சதீஷ் நாயர் தயாரிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் இப்படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறார், மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா. இவர் மலையாளத்தில் இயக்கிய "பைப்பின் சுவத்திலே பிராணயம்" மற்றும் "ஸ்டார்" படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. ரெஜினா படத்தின் பாடல்களை இசையமைத்து படத்தை தயாரிக்கிறார் சதிஷ் நாயர். இப்படத்தின் பாடல் வரிகளை யுகபாரதி, விவேக் வேல்முருகன், விஜயன் வின்சென்ட் மற்றும் இஜாஸ்.ஆர் எழுதியுள்ளனர்.

ரெஜினா
இந்நிலையில் "ரெஜினா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். இதன் மலையாள போஸ்டரை பிரபல மலையாள இயக்குனர் ஆஷிக் அபு வெளியிட்டுள்ளார். "ரெஜினா" படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.