என் மலர்
நீங்கள் தேடியது "போதகர் கைது"
- வாரணாசியில் சிலர் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன.
- கிறிஸ்தவ மத போதகர் ஒருவரும், 2 பெண்களும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் சிலர் மதம் மாற்றும் முயற்சிகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வாரணாசி அருகே உள்ள பல்வாகி கிராமத்தில் அதிகாரிகள் திடீர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கிறிஸ்தவ மத போதகர் ஒருவரும், 2 பெண்களும் மதம் மாற்ற முயற்சியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் துண்டு பிரசுரங்கள் கொடுத்து இந்துக்களிடம் பிரசாரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அந்த கிறிஸ்தவ போதகர் கைது செய்யப்பட்டார்.
- கயத்தாறு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திருச்சபைக்கு பிரார்த்தனைக்கு சென்று வந்துள்ளார்.
- போதகர் வினோத் ஜோஸ்வாவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு:
வேலூர் மாவட்டம் எழிலநகர் காந்தி தெருவை சேர்ந்தவர் வினோத் ஜோஸ்வா (வயது40).
இவர் கடந்த 10 ஆண்டுகளாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறை அடுத்த கீழக்கோட்டை சின்னகுளம் பகுதியில் உள்ள ஒரு திருச்சபையில் போதகராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு திருச்சபையில் வைத்து போதனை வகுப்புகளும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் கயத்தாறு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அந்த திருச்சபைக்கு பிரார்த்தனைக்கு சென்று வந்துள்ளார். மேலும் அங்கு நடைபெறும் வகுப்பிலும் பங்கேற்றுள்ளார். அப்போது அந்த இளம்பெண்ணுடன் பழகிய போதகர் வினோத் ஜோஸ்வா கடந்த 5 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார்.
மேலும் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் இதனை வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக அந்த இளம்பெண்ணை, போதகர் மிரட்டி உள்ளார். இதனால் அவர் யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.
எனினும் தொடர்ந்து தொந்தவு செய்து வந்ததால் மிகவும் பாதிக்கப்பட்ட இந்த இளம்பெண் தனது பெற்றோரிடம் அழுதவாறே நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது தொடர்பாக கடம்பூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோகிலா இதுகுறித்து விசாரணை நடத்தினார்.
அதில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண், சிறுமியாக இருந்த போதே அவரிடம் போதகர் பாலியல் தொந்தரவு செய்து வந்ததும், பின்னர் அவரை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போச்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் போதகர் வினோத் ஜோஸ்வாவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கெனித்ராஜ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பேய் பிடித்துள்ளது எனது வீட்டுக்கு வா’, நான் பேயை ஓட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருபவர் கெனித் ராஜ். 47 வயதான இவர் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றில் போதகராக உள்ளார்.
கெனித் ராஜிடம் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயது இளம் பெண் மன உளைச்சலில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போதகர் கெனித்ராஜ் 'உனக்கு பேய் பிடித்துள்ளது எனது வீட்டுக்கு வா', நான் பேயை ஓட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை நம்பி கெனித் ராஜின் வீட்டுக்கு சென்ற பெண்ணிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், போதகரை தள்ளி விட்டு விட்டு வெளியில் ஓடி வந்துள்ளார். அப்போது போதகர் கெனித் ராஜ் தான் சொல்கிறபடி கேட்காவிட்டால் உனது கணவன் மற்றும் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் பயந்து போன பெண், மயிலாப்பூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி போலீசார் கெனித்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கெனித்ராஜ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மத போதகர் ஸ்டீபன் ராஜ் என்பவர் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
- பின்னர் அவர் மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார்.
கோவை:
கோவை மலுமச்சம்பட்டி பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரது தாய், தந்தை ஆகியோர் பொம்மை விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். எனவே மாணவி தனது பாட்டியுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாணவியின் பாட்டி அந்த பகுதியில் உள்ள கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார். மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
அப்போது மாணவியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மத போதகர் ஸ்டீபன் ராஜ் (வயது 53) என்பவர் மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தார்.
பின்னர் அவர் மாணவியை கட்டிப்பிடித்து பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதில் அதிர்ச்சியடைந்த மாணவி சத்தம் போட்டார். உடனே போதகர் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அங்கு இருந்து தப்பிச் சென்றார்.
மாணவி நடந்த சம்பவத்தை தனது பாட்டி வந்ததும் கூறி கதறி அழுதார். பின்னர் இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி பிளஸ்-2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற மத போதகர் ஸ்டீபன்ராஜை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் ஸ்டீபன்ராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.






