என் மலர்
உள்ளூர் செய்திகள்

பேயை விரட்டுவதாகக் கூறி இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை- போதகர் கைது
- கெனித்ராஜ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- பேய் பிடித்துள்ளது எனது வீட்டுக்கு வா’, நான் பேயை ஓட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
சென்னை:
சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் வசித்து வருபவர் கெனித் ராஜ். 47 வயதான இவர் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ சபை ஒன்றில் போதகராக உள்ளார்.
கெனித் ராஜிடம் அதே பகுதியை சேர்ந்த திருமணமான 26 வயது இளம் பெண் மன உளைச்சலில் இருந்து வருவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து போதகர் கெனித்ராஜ் 'உனக்கு பேய் பிடித்துள்ளது எனது வீட்டுக்கு வா', நான் பேயை ஓட்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
இதை நம்பி கெனித் ராஜின் வீட்டுக்கு சென்ற பெண்ணிடம் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், போதகரை தள்ளி விட்டு விட்டு வெளியில் ஓடி வந்துள்ளார். அப்போது போதகர் கெனித் ராஜ் தான் சொல்கிறபடி கேட்காவிட்டால் உனது கணவன் மற்றும் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் பயந்து போன பெண், மயிலாப்பூர் மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி போலீசார் கெனித்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கெனித்ராஜ் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






