என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிலிண்டர்கள்"

    • சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.
    • எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும்

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

    ஈரான்- இஸ்ரேல் , வளைகுடா நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக பெட்ரோலிய பொருட்களை இந்தியாவுக்கு கொண்டுவருவதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இதன் காரணமாக வணிக மற்றும் தொழிற்சாலை பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகத்தைத் தற்காலிகமாக நிறுத்துவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. LPG-க்கு மாற்றாக வேறு எரிபொருளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    தமிழகத்தில் ஏற்கெனவே சில மாவட்டங்களில் சிலிண்டர்கள் கிடைக்காததால் உணவகங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மேலும் தீவிரமடையாமல் இருக்க, உரிய நடவடிக்கைகளை எடுத்து , தக்க நேரத்தில் சிலிண்டர்கள் கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

    அதேபோல், மக்களிடையே இதை வைத்து தேவையற்ற அச்ச உணர்வை ஏற்படுத்தும் வேலைகளை விடுத்து,

    தமிழகத்தில் உணவகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கான எரிவாயு ஏற்பாடுகள் மற்றும் சலுகைகளை பொறுப்புள்ள மாநில அரசாக செய்து தர வேண்டும் எனவும், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அம்மா உணவகங்களை மேலும் முழுவீச்சில் இயங்கவைத்து, எவ்வித தடையுமின்றி தொடர்ந்து உணவு வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் எனவும் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    என்று தெரிவித்துள்ளார். 

    • பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தபட்டுள்ளன.
    • ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகளுக்கு கியாஸ் விநியோகம் தடைபட்டுள்ளது.

    அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.

    இந்த நிலையில் வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் கியாஸ் விநியோக்கும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    அதன்படி மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. இதன் காரணமாக பெங்களூருவில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் ஓட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், பெங்களூருவில் வணிக பயன்பாட்டுக்கான LPG கியாஸ் சிலிண்டர் பற்றாக்குறை குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுதுறை அமைச்சருக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "லட்சக்கணக்கான மக்களுக்காக தினமும் இயங்கும் ஹோட்டல்கள், உணவகங்கள், விடுதிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு கியாஸ் விநியோகம் தடைபட்டுள்ளது. போதுமான வணிக சிலிண்டர் விநியோகத்தை உறுதி செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

    • போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
    • மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன.

    சென்னை:

    அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துகின்றன. அதற்கு, ஈரானும் பதிலடி கொடுத்து வருகிறது.

    இதனால் சர்வதேச அளவில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. போர் சூழல் காரணமாக, அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கான கச்சா எண்ணெய் வரத்து குறைந்துள்ளது.

    நாடு முழுவதும் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலும் சமையல் கியாஸ் சிலிண்டர்களை இந்தியன் ஆயில், பாரத், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விற்கின்றன.

    வீடுகளில் 2 சமையல் கியாஸ் சிலிண்டர் வைத்திருப்பவர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கலாம். வணிக பயன்பாட்டிற்கு தேவைக்கு ஏற்ப சிலிண்டர் விநியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் வீடுகளுக்கான சமையல் கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளன.

    ஒரு சிலிண்டரை வாங்கிய பிறகு மற்றொரு சிலிண்டரை முன்பதிவு செய்வதற்கான கால இடைவெளியை மத்திய அரசு 25 நாட்களாக நீட்டித்து அறிவித்துள்ளது. மேலும் தட்டுப்பாட்டை குறைக்க வீட்டு உபயோக சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

    போதிய அளவில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. சமமான பெட்ரோலிய பொருட்கள் விநியோகத்தை சீரமைக்கும் வகையில், சமையல் எரிவாயு, சிலிண்டர் விநியோகத்தை ஒழுங்குபடுத்த அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை மத்திய அரசு தீவிரமாக நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

    கள்ளச்சந்தையில் பதுக்கி கியாஸ் சிலிண்டரை விற்றால் இந்த சட்டத்தின் கீழ் அபராதம் மற்றும் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் மத்திய அரசு எச்சரித்து உள்ளது.

    இந்த நிலையில் வீடுகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் சமையல் கியாஸ் விநியோக்கும் வகையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்கள் விநியோகத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

    அதன்படி மும்பை, பெங்களூருவில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தி உள்ளன. இதன் காரணமாக பெங்களூருவில் நாளை முதல் உணவகங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையிலும் ஓட்டல்களுக்கான வணிக பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருப்பதாக உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில், சென்னையிலும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவை நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மட்டுமே வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    வீட்டு உபயோக சிலிண்டர்கள் தொடர்ந்து விநியோகம் செய்யப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதியளித்து உள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சென்னை மண்டலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உலகளாவிய அரசியல் சூழலால் சிலிண்டர் எரிவாயு விநியோகச் சங்கிலியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தட்டுப்பாடு எதிரொலியாக தொழில், வணிக வாடிக்கையாளர்களுக்கு எரிவாயு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது'' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதனிடையே வணிக சிலிண்டர்கள் பற்றாக்குறை தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஓட்டல்கள் சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது. மின்சார அடுப்பு போன்ற வசதிகளை கொண்ட ஓட்டல்கள் ஓரளவுக்கு தாக்குப் பிடிக்கலாம் எனவும், கியாஸ் சிலிண்டரை மட்டுமே நம்பியிருக்கும் சிறிய ஓட்டல்கள் பாதிக்கப்படும் எனவும் ஓட்டல்கள் சங்கத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.

    இதனிடையே மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கை காரணமாக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என்று கருதப்படுகிறது.

    இது குறித்து கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தென் மண்டல செயலாளர் செந்தில் கூறுகையில், தென் மண்டலத்திற்கு உட்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, கர்நாடகா புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களிலும் தினசரி ஒரு கியாஸ் டேங்கர் லாரிக்கு 18 டன் கியாஸ் வீதம் 1500 கியாஸ் டேங்கர் லாரிகளில் கியாஸ் நிரப்பப்பட்டு வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டிற்கு விநியோகம் நடைபெற்று வருகிறது.

    தென் மண்டலத்திற்கு உட்பட்ட 6 மாநிலங்களிலும் வீடுகளுக்கு தேவையான கியாஸ் சிலிண்டர்கள் இருப்பு 3 வாரங்களுக்கு போதுமான அளவு உள்ளது. ஓட்டல்கள், வர்த்தக நிறு வனங்களின் வணிக பயன்பாட்டிற்கான கியாஸ் இந்த வாரத்திற்கு தேவையான இருப்பு உள்ளது. அதற்குள் மத்திய அரசு மாற்று ஏற்பாடு செய்யும். இதனால் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்காது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஓட்டல்களில் அதிரடி சோதனை
    • அதிகாரிகள் எச்சரிக்கை

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டத்தில் வீட்டு உபயோகசிலிண்டர்களை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. அதைத்தொடர்ந்து திருப்பத்தூர், வேலூர் மாவட்ட இந்தியன் ஆயில் விற்பனை மேலாளர் ஜெகதீஷ் தலைமையில் ஆம்பூர், திருப்பத்தூர் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் டீ கடைகள், ஓட்டல்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

    அப்போது வீட்டிற்கு பயன்படுத்தக்கூடிய சிலிண்டர்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. அவ்வாறு பயன்படுத்திய 40 வீட்டு உபயோகசிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் வீட்டிற்கு பயன்படுத் தப்படுத்த கூடிய சிலிண்டர்களை வணிக உபயோகத்திற்கு பயன்படுத்தக்கூடாது எனவும், அவ்வாறு பயன்படுத்தப்படும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    ×