என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு டாக்டர்கள்"

    • பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • பொங்கல் முடிந்த பிறகு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    சென்னை:

    அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (போக்டா) சார்பாக தொடர் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

    அரசு டாக்டர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 354 அரசாணையை மறுவரையறை செய்ய வேண்டும் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு படி ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இதுகுறித்து அரசு ஜனநாயக டாக்டர்கள் சங்கங்க ளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பி பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

    நீண்ட காலமாக நாங்கள் முன் வைத்துள்ள கோரிக்கையை அரசு இதுவரை பரிசீலிக்கவில்லை. இந்த நிலையில் மீண்டும் சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். அவர் 19-ந்தேதி இதுகுறித்து நிதித்துறை செயலாளர் இடம் பேசி முடிவு அறிவிப்பதாக கூறியுள்ளார்.

    19-ந்தேதி எங்களது கோரிக்கை பரிசீலிக்கப்படாவிட்டால் 20-ந்தேதி முதல் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளோம். முதல் கட்டமாக 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ளப்படும், பின்னர் புறநோயாளிகள் புறக்கணிப்பு போராட்டம், அதனைத் தொடர்ந்து சாகும் வரை போராட்டம், காலவரையற்ற வேலை நிறுத்தம் என பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பொதுமக்கள் நலன் பாதிக்காத வகையில் அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும். பொங்கலுக்குள் எங்களுக்கு தீர்வு கிடைக்குமா? என்று பார்ப்போம். ஆனால் பொங்கல் முடிந்த பிறகு உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி முடிவை அறிவிப்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது.
    • முக்கியமான இந்த 3 கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இலையென்றால் வருகிற 29-ந் தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணா விரத போராட்டம் நடந்தது. மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ரவிசங்கர், செயலாளர்கள் டாக்டர் சீனிவாசன், ஜெஸ்வின், ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக அறிவித்த 293 அரசாணையை 21 மாதமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனை உடனே நிறைவேற்ற வேண்டும், முதமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு இலக்கு வைத்திருப்பதை கண்டித்தும் இப்போராட்டம் நடந்தது.

    தமிழகம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:-

    புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது. அதனை உடனே அமல்படுத்த வேண்டும். பிரசவத்தின் போது தாய்-சேய் உயிரிழப்பு ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர்கள் டாக்டர்களிடம் சென்று குற்றவாளி போல் கருதி செயல்படுகிறார்கள். அதனை கண்டிக்கிறோம்.

    முக்கியமான இந்த 3 கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இலையென்றால் வருகிற 29-ந் தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது.
    • பிரசவத்தின் போது தாய்-சேய் உயிரிழப்பு ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர்கள் டாக்டர்களிடம் சென்று குற்றவாளி போல் கருதி செயல்படுகிறார்கள்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமையில் நடந்த போராட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் ரவிசங்கர், செயலாளர்கள் டாக்டர் சீனிவாசன், ஜெஸ்வின், ஸ்ரீதர், பொருளாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்வு வழங்குவதற்காக அறிவித்த 293 அரசாணையை 21 மாதமாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதனை உடனே நிறைவேற்ற வேண்டும். முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சைக்கு இலக்கு வைத்திருப்பதை கண்டித்தும் இப்போராட்டம் நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து மாநில, மாவட்ட நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் கூறியதாவது:-

    புதிய அரசு பதவியேற்ற உடன் அரசு டாக்டர்களுக்கு சம்பள உயர்விற்கான அரசாணையை வெளியிட்டது. அதனை உடனே அமல்படுத்த வேண்டும். பிரசவத்தின் போது தாய்-சேய் உயிரிழப்பு ஏற்பட்டால் மாவட்ட கலெக்டர்கள் டாக்டர்களிடம் சென்று குற்றவாளி போல் கருதி செயல்படுகிறார்கள். அதனை கண்டிக்கிறோம்.

    முக்கியமான இந்த 3 கோரிக்கைகளை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும். இலையென்றால் வருகிற 29-ந்தேதி புறநோயாளிகள் புறக்கணிக்கும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை.
    • காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    அரசு மருத்துவமனைகளில் காலியிடங்கள் அதிகரித்ததற்கு தமிழக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். கடந்த 2018-ம் ஆண்டுக்குப் பிறகு ஐந்தாண்டுகளில் முதன் முறையாக இப்போது தான் மருத்துவர்கள் நியமிக்கப்படவுள்ளனர். இதற்குப் பிறகு எப்போது புதிய மருத்துவர்கள் தேர்வு நடைபெறும் என்பது தெரியவில்லை. அரசு மருத்துவமனைகளில் புதிதாக ஏற்பட்டுள்ள காலியிடங்களையும் அண்மையில் நடத்தப்பட்ட போட்டித் தேர்வின் அடிப்படையில் நிரப்புவது தான் சரியாக இருக்கும். அது தான் தமிழ்நாட்டு மக்களுக்கும், மருத்துவர்களுக்கும் பயன் அளிக்கும். எனவே, மக்களின் நலனையும், மருத்துவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு, கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் நாள் வெளியிடப்பட்ட அறிவிக்கையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படவுள்ள அரசு மருத்துவர்கள் எண்ணிக்கையை 1752 ஆக உயர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.
    • ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    ஆந்திரா மாநில அரசு ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் டாக்டர்கள் சரிவர வேலைக்கு வராததால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் வந்தன.

    இந்த நிலையில் கிருஷ்ணா மாவட்டம், உய்யூரை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சீனிவாஸ் கவுட் என்பவர் லோக் ஆயுக்தாவில் புகார் தெரிவித்தார்.

    புகாரில் மாவட்டத்தில் உள்ள டாக்டர்கள் கடந்த ஒரு ஆண்டாக எந்தவித அனுமதியோ விடுப்போ எடுக்காமல் வேலைக்கு வராமல் உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

    இது குறித்து ஆந்திர மாநில மருத்துவ மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 55 அரசு டாக்டர்களை பணி நீக்கம் செய்தனர்.

    ×