என் மலர்
கோவில்கள்
பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஊதியூர் வேலாயுதசுவாமி திருத்தலம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கொங்கண சித்தர் தவம் இயற்றி முருகன் சிலை வடித்த தலம், திருப்புகழ் பாடல்பெற்ற தலம், இயற்கையான சூழலில் அரிய மூலிகைகள் கொண்ட மலை என பல்வேறு சிறப்புகள் கொண்ட தலமாக விளங்குகிறது, திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ஊதியூர் வேலாயுதசுவாமி திருத்தலம்.
ஊதியூர் என இவ்வூர் அறியப்பட்டாலும், இதன் பழமையான பெயர் ‘பொன்னூதி மலை’ ஆகும். காரணம், மேலைக்கொங்கு நாட்டினை ஆட்சி செய்த, உதியர்கள் குலச்சின்னமாக ‘உதி’ என்ற மரம் விளங்கியது. இம்மரத்திற்கு ஒதி, ஓதி என்ற பெயர்களும் உண்டு. மேலும், இந்த உதி மரத்தில் பூக்கும் பூக்கள், பொன்னிறமாய் மின்னுமாம். இம்மரங்கள், இம்மலைகளில் நிறைந்திருந்தன. அதனால் ‘பொன் ஒதி மலை’ என்று இவ்வூர் அழைக்கப்பட்டது. அதுவே மருவி ‘பொன்னூதி மலை’யானதாக, ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
போகரின் சீடரான கொங்கணச் சித்தர், தான் தவம் புரிய ஏற்ற இடத்தை தேடிய போது, இம்மலையைக் கண்டார். உடனே அவருக்கு இனம் புரியாத ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பஞ்சபூத தலமாகவும், அரிய கற்கள், பாறைகள் நிறைந்த இடமாகவும் இது இவருக்கு புலப்பட்டது. இதனால் இம்மலையிலுள்ள, சந்திரகாந்தக் கல் தூணின் மீது அமர்ந்து தவம் இயற்றினார்.
கொங்கணர் இம்மலையில், வாழ்ந்தபோது, மக்களின் வறுமையை நீக்க விரும்பினார். மலையில் கிடைத்த அபூர்வ மூலிகைகளை கொண்டு, அவற்றை நெருப்பிலிட்டு, மண்குழல் கொண்டு ஊதி, அதைப் பொன்னாக்கினார். அதனால் இம்மலைக்கு ‘பொன்னூதி மலை’ என்ற பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சாலையில் இருந்து பார்க்கும்போது, அழகிய மலை மீது முருகன் ஆலயம் கண்ணுக்கு விருந்தாக தெரிகிறது. சுமார் 300 அடி உயரம்உள்ள இம்மலை 150 படிகளைக் கொண்டதாகும். அடிவாரத்தில், பாத விநாயகர், அனுமந்தராயர் சன்னிதிகள் உள்ளன. படியேறும்போது வழியில் உள்ள பாறையில் பழமையான விநாயகர் புடைப்புச்சிற்பமும், அதன் அருகில் இடும்பன் சன்னிதியும் உள்ளன. பொன்னூதி மலையின் நடுப்பகுதியில் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது.
திருக்கோவில் நுழைவு வாசல் தென்புறம் அமைந்துள்ளது. கிழக்கில் ராஜகோபுரம் வாசலுடன் காணப்படுகிறது. கருவறையில், உத்தண்ட வேலாயுத சுவாமி, கிழக்கு நோக்கி ஐந்தடி உயரத்தில் காட்சி தருகின்றார். இவரின் கோலம் மேற்கு நோக்கிய பழனி ஆண்டவரை தரிசித்தவாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மூலவரை கொங்கண சித்தர் உருவாக்கியதாக தலவரலாறு கூறுகிறது. இவருக்கு துணையாக விநாயகப் பெருமான் மற்றும் பைரவர் சன்னிதிகள் அமைந்துள்ளன.
இந்த ஆலயத்தில் பவுர்ணமி, சஷ்டி, பங்குனி உத்திர விழாக்கள் சிறப்பாக நடைபெறும். பவுர்ணமி நாட்களில் நள்ளிரவு வரை சுவாமி தரிசனம் செய்யலாம்.
அமைவிடம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் காங்கேயம்-பழனி வழித்தடத்தில் காங்கேயத்தில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், பழனியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் இருந்து, வட்டமலை ஐந்து கிலோமீட்டர், சிவன்மலை 18 கிலோமீட்டர், சென்னிமலை 35 கிலோமீட்டர் என சில பழமையான ஆலயங்களும் உள்ளன.
கொங்கணச் சித்தர் ஆலயம்
பொன்னூதி மலையின் உச்சியில்கொங்கணர் ஆலயம் அமைந்துள்ளது. உத்தண்ட வேலாயுத சுவாமி ஆலயம் வழியாக, மூன்று கிலோமீட்டர் தொலைவு மலைமீது செல்ல வேண்டும். செட்டித்தம்பிரான் சித்தர் ஜீவசமாதி, உச்சிப்பிள்ளையார் கோவில், ஆகியவற்றைக் கடந்து செல்லும்போது கொங்கணர் சித்தர் ஆலயம் வருகின்றது. மற்றொரு எளிய வழியும் உள்ளது. இம்மலை அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாதையில் ஏறினால், அரை கிலோ மீட்டர் தூரம் மட்டுமே. இந்த வழியாக செல்பவர்கள் சந்திரகாந்தக்கல், அக்குபஞ்சர் பாறை, விஷமுறிவு பாறைகள் இவற்றை தரிசிக்க முடியும்.
பாறை மீது அமைக்கப்பட்டுள்ளது எளிய கொங்கணர் ஆலயம். கருவறையில் கொங்கணச் சித்தர் சந்திரகாந்த கல் மீது தவமியற்றும் கோலத்தில் அமர்ந்துள்ளார். இவருக்கு 200 அடி தூரத்தில் கொங்கணர் தவம் இயற்றிய குகை ஒன்று உள்ளது. இக்குகையில் இருந்து பழனி முருகன் கோவிலுக்கு சுரங்கப்பாதை உள்ளதாக கூறப்படுகிறது. தியானத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் இங்கே தவம் செய்யும்போது தெய்வீக அனுபவத்தை உணரலாம்.
பவுர்ணமிக்கு முதல் நாள் தொடங்கி, நான்கு நாட்கள் சிறப்பு பூஜைகள் இக்கோவிலில் நடத்தப்படுகின்றன. குறையோடு வரும் பக்தர்களை இங்குள்ள விஷமுறிவு பாறையில் படுக்க வைத்து பரிகாரம் செய்யப்படுகின்றது.

வள்ளி வாழ்ந்த இடம் என்று சிறப்புப் பெறும் இந்த வள்ளிமலைக் கோயில் வடக்கு ஆற்காடு மாவட்டத்தில் வாலாஜா பகுதிக்கு அருகே அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூல தெய்வமாக வள்ளி தெய்வானையுடன் முருகன் காட்சி அளிக்கிறார்.
புராண வரலாறு
சமண சமயத்தில் 23-வது தீர்த்தங்கரராகத் திகழ்ந்தவர் பார்சுவநாதர். இவர், முக்குடையின் கீழ் அமர்ந்த நிலையிலும் நின்ற நிலையிலும் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளார். முக்குடைக்குக் கீழ் ஏழு தலைகளைக் கொண்ட நாகம் இவருக்கு அரணாகக் காட்டப்படுகிறது. எனவே, இவரை பார்சுவநாதர் என்று கூறுவர். இவரது பாதுகாவலர்களாகவும், அவர்களின் சாசனா தெய்வமாகவும் விளங்கியவர்கள் பத்மாவதி இயக்கியம்மனும், இயக்கன் தர்னேந்திரனும் ஆவர். சிற்பங்களில் பத்மாவதி இயக்கியம்மன் சற்று ஒய்யாரமாக அமர்ந்த நிலையில் தனது வலது காலை சற்று தூக்கி அமர்ந்துள்ள நிலையில் வடிக்கப்பட்டுள்ளது. தனது வலது கையை அபய முத்திரையுடன், தூக்கிய தனது இடது காலின் மேல் வைத்த நிலையில் காணப்படுகிறது.
இச்சிற்பம், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ள வள்ளிமலையில் காணப்பட்ட சமண பெண் தெய்வமாகிய பத்மாவதி இயக்கியம்மன் ஆகும். வள்ளிமலை ஒரு சமணத் தலமாக விளங்கிய ஒன்று. இங்கு குடவரைச் சிற்பங்களும் உள்ளன. இதன் காலம் பொ.ஆ. 9-ம் நூற்றாண்டு என்பர். கழுகு மலையிலும் பத்மாவதி சிற்பம் ஒன்று காணப்படுகிறது. அமர்ந்த நிலையில், நான்கு கரங்களுடன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. பத்மாவதி வழிபாடு பொ.ஆ.18-ம் நூற்றாண்டு வரை காணப்படுகின்றது.
மேலும் தற்போது இது இந்து தலமாக மாற்றப்பட்டு பல புனைவுகளை உள்ளடக்கியுள்ளது. அதன்படி இத்தலத்தில் வளர்ந்த வள்ளி, முருகனை கணவனாக அடைய விரும்பி, திருமால் பாதத்தை வைத்து வழிபட்டாள். கன்னிப்பருவத்தில் அவள் தினைப்புனம் காக்கும் பணி செய்தாள். அங்கு வந்த முருகன், வள்ளியைத் திருமணம் செய்ய விரும்பினார். இதையறிந்த வள்ளியின் வளர்ப்பு தந்தை நம்பிராஜன், திருத்தணியில் முருகனுக்கு முறைப்படி வள்ளியை திருமணம் செய்து கொடுத்தார். நம்பிராஜனின் வேண்டுதலுக்கு இணங்க இங்குள்ள குன்றில் முருகன் எழுந்தருளினார்.
கோயில் அமைப்பு
வள்ளிமலைக் கோயிலிலின் கருவறையில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தருகிறார். வள்ளி குறவர் வேடர் குலத்தில் வளர்ந்ததால் அர்த்தஜாம பூஜையில் தேனும், தினை மாவும் நைவேத்யமாக படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவளது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.
அடிவாரம் மற்றும் மலைக்கோயிலில்; குமரி வள்ளிக்கு தனி சன்னதி இருக்கிறது. வள்ளி கையில் பறவை விரட்ட பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் வைத்திருக்கிறாள். முருகன், வள்ளியுடன் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு நம்பிராஜன் வந்து விட்டார். எனவே முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். இந்த மரமே இத்தலத்தின் விருட்சமாக இருக்கிறது.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் இது. மலைக்கோயிலில் கொடி மரத்திற்கு எதிரே விநாயகர் இருக்கிறார். முன் மண்டபத்தில் நவவீரர்கள், நம்பிராஜன் இருக்கின்றனர். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி பறவைகள் விரட்டிய மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம், முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன. யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர், மலை வடிவில் இருக்கிறார். இதை யானைக்குன்று என்றழைக்கிறார்கள்.
இந்த கோயிலில் அமைந்துள்ள குளத்திற்கு சரவண பொய்கை என்று பெயர். குளத்திற்கு அருகே வள்ளியின் கோயில் ஒன்றும் அமைந்துள்ளது. குளத்தை அடுத்து வரும் படிகட்டுகளில் ஏறித்தான் முருகனை வழிபட முடியும். படிகட்டுகளின் பாதையில் ஆங்காங்கே மண்டபங்களும் அமைந்துள்ளது. அதில் 8 கால் மண்டபத்தை தவிர மற்றவைகள் சில ஆண்டுகளுக்கு முன்புதான் புதுப்பிக்கப்பட்டன. ஆனால் அந்த 8 கால் மண்டபம் மட்டும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
வள்ளிமலைக் கோயிலை புதுப்பிக்கும் பணிகள் நடந்த போது, 8 கால் மண்டபப் பகுதியில் உள்ள ஒரு கல்லை அகற்றும்போது அங்கிருந்து வாசனை நிரம்பிய புகை வந்ததாகவும், அதற்குள் சித்தர்கள் தியான நிலையில் இருந்ததைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் அவ்விடத்தில் மட்டும் எந்தவித மாற்றமும் செய்யாமல் அந்த கல்லை அப்படியே மூடிவிட்டனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதும் அப்பகுதியில் சித்தர்கள் தவம் புரிந்து வருவதாகவும் கருதப்படுகிறது. அதனால் தான் அப்பகுதி எவ்விதத்திலும் மாற்றியமைக்கப் படவில்லை. படிகளைக் கடந்து கோயிலுக்குச் சென்றால் அங்கு நம் கண்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒரே கல்லினால் குடைந்து செய்யப்பட்ட கோயில் நம்மை அதிசயிக்க வைக்கிறது.
நுழைவாயிலில் உள்ள ஒரு சந்நதியில் வள்ளி அம்மன் பாறையில் செதுக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்திற்கும் ஆடைகள் அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. அவரை வணங்கிவிட்டு உள்ளே செல்லும் போது சாதாரண உயரம் கொண்டவர்களும் குணிந்துதான் செல்ல வேண்டும். அவ்வளவு தாழ்வான நுழைவாயிலை அடுத்து முருகன் கர்ப்பகிரகம் காட்சி அளிக்கிறது.
மேலே பார்த்தால் பாறை எங்கே நமது தலையில் விழுந்து விடுமோ என்ற அச்சம் உருவாகிறது. பாறைகளைக் குடைந்து அதற்குள் முருகனை வைத்து வழிபட வேண்டும் என்ற எண்ணம் எப்படி தோன்றியிருக்கும் என்று பிரம்மிப்பாக உள்ளது. எப்படித்தான் இந்த கோயிலை உருவாக்கியிருப்பார்கள் என்று நாம் பிரம்மித்து நிற்கும்போது, கோயில் கருவறைக்குள் உள்ள ஒரு துளையைக் காண்பித்து, இது சித்தர்கள் சென்று வந்து கொண்டிருந்த இடம் என்றும், தற்போதும் இதற்குள் சித்தர்கள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது என்று கூறுகிறார் கோயில் பூசாரி.
மேலும், அப்பகுதியில் அமைந்துள்ள ஒரு பாறையைப் பார்த்தால் யானையின் உருவம் தெரிகிறது. வள்ளியை தன் பால் கவர முருகனுக்கு உதவி செய்ய வந்த விநாயகர் பெருமான் தான் அந்த யானையின் உருவம் கொண்ட பாறை என்று நம்பும் பக்தர்கள் அதனை கணேச கிரி என்று பக்தியோடு வணங்குகிறார்கள். கோயிலில் இருந்து 2 கி.மீ. தொலைவில் சுவாமி சட்சிதானந்தர் சமாதி அடைந்த ஆசிரமும் அமைந்துள்ளது.
மலையின் உச்சியில், திருமால் கிரீஸ்வரா கோயிலும் உள்ளது. ஆசிரமத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சுனை உள்ளது. அதனை சூரியன் காணாத சுனை என்று அழைக்கின்றனர். ஏனெனில் அந்த சுனையின் மீது சூரியனின் கணைகள் விழுந்ததே இல்லையாம். இதற்கு ஒரு புராணக் கதையும் உள்ளது. அதாவது முருகன் வயதான தோற்றத்தில் வள்ளியிடம் வந்து தனக்கு பசிப்பதாகவும், தேனும், தினை மாவும் தரும்படி கேட்டுக் கொண்டார். அதன்படி வள்ளியும் கொடுத்தார். அதனை சாப்பிடும்போது முருகனுக்கு விக்கல் எடுத்ததாகவும், அதற்காக வள்ளி ஓடோடிச் சென்று இந்த சுனையில் இருந்துதான் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சுனைக்கு மிகவும் மகத்துவம் உள்ளதாக பக்தர்கள் நம்புகின்றனர். திருமணமாகாத பெண்கள் இந்த சுனையில் இருக்கும் நீரை எடுத்து தலையில் தடவிக் கொண்டு தனக்கு நல்ல கணவன் வர வேண்டும் என்று வேண்டிக் கொள்வது வழக்கம். இந்த கோயில் மாலை 5 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். கோயிலுக்குள் 4 மணிக்கெல்லாம் சென்று விட்டால் அதற்கு பின்னர் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று ஆசிரமம், சுனை, திருமால் கிரீஸ்வரர் கோயில்களை தரிசனம் செய்துவிட்டு திரும்ப இயலும். கோயிலின் நடை சார்த்தப்பட்டாலும், மற்ற பகுதிகளுக்குச் சென்று திரும்ப தனி வழி உள்ளது.
சென்னையில் இருந்து வள்ளிமலைக்குச் செல்ல இரண்டரை மணி நேரம் ஆகும். சென்னையில் இருந்து வேலூர் அல்லது ஆரணி ஆற்காடு செல்லும் பேருந்துகள் பல வள்ளிமலையில் நின்று செல்லும். எனவே இறைத்தன்மை வாய்ந்த இத்தலத்திற்கு சென்று வள்ளி மலையின் அற்புதத்தை கண்டு வாருங்கள். வள்ளி, தெய்வயானை சமேதராய் வீற்றிருக்கும் முருகனின் அருளைப் பெற்று வாருங்கள்.

ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது.
மூலவர் - மல்லிகார்ஜுனர்,(ஸ்ரீசைலநாதர், ஸ்ரீபருப்பதநாதர் )
அம்மன் - பிரமராம்பாள், பருப்பநாயகி
தல விருட்சம் - மருதமரம்
தீர்த்தம் - பாலாநதி
பழமை - 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர்- திருப்பருப்பதம்
ஊர்- ஸ்ரீசைலம்
மாவட்டம்- கர்நூல்
மாநிலம் - ஆந்திரப்பிரதேசம்
பாடியவர்கள்- அப்பர், சம்பந்தர், சுந்தரர்
சிலாதர் என்ற மகரிஷி குழந்தை வரம் வேண்டி சிவனைக்குறித்து தவம் இருந்தார். சிவனின் அருளால் நந்தி, பர்வதன் என்ற இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர். குழந்தைகளைப் பார்க்க சனகாதி முனிவர்கள் வந்தனர். அவர்கள், நந்திதேவர் சில காலம் தான் பூமியில் வாழ்வார் என சிலாதரிடம் தெரிவித்தனர். சிலாதர் மிகவும் வருந்தினார். தந்தையின் வருத்தத்தை அறிந்த நந்தி,”தந்தையே! கலங்காதீர்கள். நான் சிவனைக்குறித்துக் கடும் தவம் இருந்து சாகா வரம் பெறுவேன்” என்றார். தவத்தில் மகிழ்ந்த சிவன், நந்தியை தன் வாகனமாக்கியதுடன், அவரது அனுமதியின்றி யாரும் தன்னைக் காண வர முடியாது என்று உத்தரவும் பிறப்பித்தார். நந்தி தவம் செய்த “நந்தியால்” என்ற இடம் மலையின் கீழே உள்ளது. அத்துடன் அவனது தம்பியாகிய பர்வதனும் தவமிருந்தான். பர்வத ன்கடும் தவம் செய்து சிவபெருமான் பாதம் எப்போதும் தன் மீது இருக்க வேண்டும் என்ற வரம் பெற்றான். ஆதன்படிப் பர்வதனை ஒரு மலையாக ஆக்கி ஸ்ரீ பர்வதம் என்னும் பெயரிட்டு தாம் சிவலிங்கமாக அம்மலையின் மீது அமர்ந்து எழுந்தருளினார். ஆந்த ஸ்ரீ பர்வதமே நாளடைவில் ஸ்ரீசைலம் என வழங்கலாயிற்று. சைலம் என்றால் மலை எனப் பொருள்படும்.
மற்றும் ஒரு சிவபக்தை நகஸ்ரீ என்பவள் தவமிருந்து இத்தலம் தனது பெயரால் வழங்கப்பட வேண்டுமென சிவபெருமானிடம் வரம் பெற்றாள். நகஸ்ரீ என்பது ஸ்ரீ நகம் என மாறி தற்போது ஸ்ரீசைலம் என மருவி வழங்குகிறது. சிலாதமுனிவர் தவம் செய்தமையால் இம்மலை சிலாத முனி மலை எனப்பெயர் பெற்று நாளடைவில் ஸ்ரீ சைலம் எனப் பெயர் மருவிவிட்டது எனவும் கூறப்படுகிறது.
மல்லிகாபுரி என்ற பகுதியை ஆண்ட சந்திரகுப்தனின் மகள், சந்திரரேகா இங்கு கிடைத்த மல்லிகைப்பூவாலும், அர்ஜுனா மலர்களாலும் இறைவனைப் பூஜித்து வந்தாள். இதனால் இங்குள்ள இறைவன் “மல்லிகார்ஜுனர்” எனப்படுகிறார். பிரதோஷத்தன்று நமது ஊர் நந்தீஸ்வரரை வணங்கி வந்தாலே கோடி புண்ணியம் கிடைக்கும் போது, நந்திதேவர் அவதரித்த தலத்திற்கே சென்று அவரை வணங்கி வந்தால், முக்தியே அடைந்து விடலாம் என்பதில் சந்தேகமில்லை. அவரது அவதாரத் தலமான ஸ்ரீசைலம் மனதிற்கு இதம் தரும் மலைப்பகுதியில் உள்ளது.
ஆந்திராவிலுள்ள ஸ்ரீசைலம் சிவனின் 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்று. இங்குள்ள மல்லிகார்ஜுனருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம். சிவத்தலங்களில் கைலாயம் முதலிடம் என்றால், நந்தி அவதரித்த ஸ்ரீசைலம் இரண்டாம் இடம் வகிக்கிறது. அத்துடன் அம்மனின் 51 சக்திபீடங்களில் இது மூன்றாம் இடத்தில் இருக்கிறது.
குருக்ஷேத்ரத்தில் லட்சக்கணக்காக தானம் செய்வதாலும், கங்கையில் 2000 முறை குளிப்பதாலும், நர்மதா நதிக்கரையில் பல வருடங்கள் தவம் செய்வதாலும், காசியில் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அவ்வளவு புண்ணியம் ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனரை ஒரு முறை தரிசிப்பதால் கிடைக்கிறது என கந்த புராணம் கூறுகிறது. நந்தியே இங்கு மலையாக அமைந்திருந்து அதன் மீது சிவன் ஆட்சிபுரிகிறார். நந்தியைத் தன் வாகனமாக்கியதும் இத்தலத்தில் தான். இங்குள்ள மிகப்பிரமாண்டமான நந்தி மிகவும் அழகு வாய்ந்தது. இங்கு சிவன் சன்னதி கீழே இருக்க, பிரமராம்பாள் சன்னதி 30 படிகள் உயரத்தில் அமைந்துள்ளது விசேஷமாகும்.
மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால் கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை பார்ப்பவர்களைக் கவரும். பஞ்ச பாண்டவர்கள் வந்து தங்கியதாக கூறப்படும் மடம் உள்ளது. மலைப்பாறை ஒன்றின் மீது பீமனின் பாதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. சிவன் தன் சூலத்தை ஊன்றி நின்ற தலம் என்பதால், மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது. கோயில், மலை உச்சியில் கிழக்கு நோக்கியுள்ளது. நாற்புறமும் கோபுரவாயில்கள். பிரதான வாயில் கிழக்கு கோபுரமே. ஆலய வாயிலில் உள்ள பெரிய மண்டபத்தில் கல்லால் ஆன நந்தி உள்ளது. ஆலய முகப்பில் சித்தி விநாயகர் தரிசனம். மேற்குப் பிராகாரத்தில் பாண்டவர்கள் கட்டியதாகக் சொல்லப்படும் ஆறு ஆலயங்கள், பளிங்குக் கல்லால் ஆன சண்முகர் கோயில் ஆகியவை உள்ளன.
ராஜராஜேஸ்வரி கோயில், அன்னபூரணி ஆலயம், சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், பஞ்ச நதீஸ்வரம் ஆலயம் முதலியன தரிசிக்கத் தக்கன. தெற்கு வாயில் கோபுரம் “ரங்க மண்டபம்” எனப்படும். கிழக்கு வாயிலில் கல்யாண மண்டபமுள்ளது. இக்கோயிலிலிருந்து அருகிலுள்ள நாகார்ஜுனர் அணைக்கு செல்ல விசைப்படகு வசதி உள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக சத்திரங்கள் உள்ளன. மலையின் கீழேயிருந்து 3 மணி நேரம் பிரயாணம் செய்தால் தான் ஸ்ரீசைலத்தை அடைய முடியும். அடர்ந்த காட்டுப்பகுதியாக இம்மலை இருப்பதால், தனியார் வாகனங்கள் இரவு 8 மணியிலிருந்து காலை 6 மணிவரை செல்ல அனுமதி கிடையாது. அரசு பஸ்கள் மட்டுமே செல்லும். திங்கள், வெள்ளியில் கூட்டம் அலைமோதுகிறது.
இத்தலத்தில் வரலாறு சம்பந்தமான கல்வெட்டுகள் காணப்படுகின்றன. சிவாஜி மகாராஜாவால் இத்தலம் திருப்பணி செய்யப்பட்டுள்ளது வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. சுவர்களில் பல சிற்பங்களும் காணப்படுகின்றன. இம்மலையில் மகாகாளர்கள் குகையும் அக்குகையில் அவர்கள் வணங்கிய காளியும் ஆதிசங்கரர் சிலையும் உள்ளன.
முன்னொரு காலத்தில் அனந்தபுரம் என்ற ஊரில் பிராமணப் பண்டிதர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் வயதான காலத்தில் கல்யாணி என்ற இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். ஒருநாள் கல்யாணி ஆற்றுக்குப் போகும் போது வழியில் ஒரு அரிஜன வாலிபப் பையனைப் பார்த்து அவன் மேல் மோகம் கொண்டு இருவரும் ஒரு தோப்பில் கலந்து இன்புற்றனர். பின்பு கல்யாணி கங்கையாற்றில் குளிக்கப்போனாள்.
அப்போது கங்கை ஒருபெண் வடிவில் வந்து கல்யாணி கங்கையில் குளிக்கக் கூடாது எனத் தடுத்தாள். கணவனுக்குத் துரோகம் செய்து அந்நியனுடன் சம்போகம் செய்த துரோகி கங்கையில் குளித்தால் கங்கையின் புனிதம் கெட்டு விடும் என்று கங்கை கூறினாள். மேலும் கல்யாணியின் பாவத்தை கங்கை ஏற்க வேண்டி வரும் எனவும் கூறித்தடுத்தாள். கல்யாணி தன் தவறை உணர்ந்து தான் இளமை வேகத்தில் தவறு செய்து விட்டதாகக் கூறி கங்காதேவியிடம் மன்னிப்புக் கேட்டு மன்றாடி அழுது புலம்பினாள். மனமிரங்கிய கங்கை அவளைக் குளிக்க அனுமதித்தாள்.
கல்யாணியின் பாவம் நீங்கி அப்பாவம் கங்கையைப் பிடித்துக் கொண்டது. கங்கையான பெண் நம்நாட்டில் உள்ள எல்லா புனிதத் தீர்த்தங்களில் நீராடியும் பாவம் தீரவில்லை. ஆகாயத்தில் அலைந்து கொண்டு திரிந்த கங்கை ஸ்ரீசைலத்தில் சிவபெருமான் பாதத்தைத் தொட்டு ஓடிக்கொண்டு இருக்கும் புனித நீரைக் கண்டு கீழே இறங்கி வந்து அந்தப்புனித நீரில் நீராடினாள். கங்காதேவியின் சாபம் நீங்கியது.
கங்கையைப் பிடித்திருந்த பாவம் பச்சை நிறமாக அந்த நீரில் ஓடியது. பாறைகள் பச்சைவண்ணமாக மாறின. ஆதனால் இந்த ஆற்றுக்குக் கிருஷ்ணா நதி எனப் பெயர் ஏற்பட்டது. இந்த இடம் பாதாள கங்கை எனவும் பெயர் பெற்றது. ஸ்ரீசைலத்திலுள்ள தீர்த்தங்களில் இதுவே மேன்மையுடையது. மல்லிகார்ச்சுனர் கோயிலிலிருந்து இறங்கப் படிக்கட்டுகள் உள்ளன. பக்தர்கள் முதலில் இங்கே குளித்துப் புனிதம் அடைந்த பின்பே இறைவன் கோயிலுக்குச் சென்று லிங்கத்தைத் தொட்டு வழிபட வேண்டும்.
துரியோதனன் சூழ்ச்சியைக் கூறி அவனுடன் போர் செய்ய வேண்டிய நிலை வரும் அவனை வெல்ல பாசுபதாஸ்திரம் வேண்டும் எனவே சிவபெருமானை நோக்கித் தவம் செய்து அவரிடமிருந்து பாசுபதாஸ்திரம் பெற்று வரும்படியான அறிவுரையை அர்ச்சுனனுக்குக் கண்ணபெருமான் கூறினார். கண்ணபெருமான் ஆலோசனைப்படி அர்ச்சுனன் ஸ்ரீசைலம் வந்து சிவபெருமானை நோக்கி கடும் தவம் செய்தார்.
சிவபெருமான் ஒரு வேடன் வடிவில் அர்ச்சுனன் தபசு செய்யுமிடம் வந்தார். அப்போது ஒரு அசுரன் பன்றி வடிவில் அர்ச்சுனனைக் கொல்ல பயங்கரமாக உறுமிக் கொண்டு பாய்ந்து வந்தான். அர்ச்சுனன் கண்விழித்து பன்றி மீது அம்பு விடவும் சிவபெருமானும் அதே சமயம் பன்றி மீது அம்பு விட்டார். இருவரும் பன்றியைக் கொன்றது பற்றி சண்டை வந்துவிட்டது. இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டார். அர்ச்சுனன் வில் ஒடியவே சிவபெருமானை வில்லால் அடித்தார். சிவபெருமான் அர்ச்சுனனுக்கு காட்சி கொடுத்து என்ன வரம் வேண்டும் எனக்கேட்டார்.
அர்ச்சுனன் தான் செய்த தவறை மன்னிக்க வேண்டும் என சிவபெருமானைக் கேட்டுக் கொண்டார். பின்பு தமக்குப் பாசுபதாஸ்திரம் வேண்டும் எனக் கேட்டார். அர்ச்சுனனின் வில்லாற்றல் தம்முடன் போர் செய்து அபிவிருத்தி அடையவுமே வேடனாக வந்து தனுர் வேதத்தை அர்ச்சுனனுக்கு போதித்ததாகச் சிவபெருமான் கூறினார். பின்பு பாசுபதாஸதிரப் பயிற்சியையும் மந்திரத்தையும் உபதேசம் செய்து அருள் புரிந்தார். அப்படி அர்ச்சுனன் தபசு செய்த இடம் இங்கே உள்ளது. அதனால்தான் இங்கு சிவபெருமானுக்கு மல்லிகார்ச்சுனர் என்ற பெயர் வழங்கி வருகிறது. படிக்கட்டுபக்கம் வீரசங்கரர் ஆலயம் உள்ளது. அந்த வீரசங்கரர் தான் அர்ச்சுனனுடன் வேடன் வடிவில் போர் செய்தவர்.
பிரார்த்தனை:
பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற சுவாமிக்கும் அம்மனும் திருமணம் செய்து வைக்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
இருப்பிடம் :
சென்னையிலிருந்து ஓங்கோல் வரை ரயிலில் சென்று அங்கிருந்து பஸ்களில் ஸ்ரீசைலம் செல்லலாம். பஸ்சில் செல்பவர்கள் திருப்பதி சென்று, அங்கிருந்து கர்நூல் செல்லும் பஸ்சில் நந்தியாலில் இறங்கி, ஸ்ரீசைலம் செல்லலாம். மலைப்பகுதியை சுற்றி பார்க்க ஜீப் வசதி உள்ளது. இதற்கு ரூ. 200 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முக்கிய இடங்களிலிருந்து தூரம்: ஸ்ரீசைலம் நந்தியாலிலிருந்து வடக்கே 120 கி.மீ தூரம் உள்ளது. டொரனலாவுக்கும் வடக்கே 50 கி.மீ யில் உள்ளது. ஸ்ரீசைலம் ஹைதராபாத்திற்கும் தெற்கே 200 கி.மீ. மேற்கே கர்னூலிலிருந்து 180 கி.மீ. கிழக்கேயும் கிழக்கே குண்டூரிலிருந்து மேற்கே 195 கி.மீ. மெகப்பூரிலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ யில் உள்ளது ஓங்கோலிலிருந்து வடமேற்கே 182 கி.மீ. பத்ராசலத்திலிருந்து தென்மேற்கே 275 கி.மீ தூரத்தில் உள்ளது. பெங்களூருக்கு 537 கி.மீ தொலைவில் உள்ளது. சென்னை -340 கி.மீ. நெல்லூர் 425 கி.மீ கோவை 820 கி.மீ. டெல்லி 1655 கி.மீ தூரமும் உள்ளது.
அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயில், ஸ்ரீசைலம், (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம்.
+91- 8524 288 881, 887, 888
காலை 5 மதியம் 3மணி, மாலை 5.30 இரவு 10 மணி. காலை நேரத்தில் மட்டுமே சுவாமிக்கு நாமே பூஜை செய்ய அனுமதியுண்டு. இதற்கு தனியாக கட்டணம் உண்டு.

திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்கவும், நவகிரக தோஷங்கள் தீரவும் அருள்மிகு ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவிலில் பிரார்த்தனை செய்கிறார்கள்.
மூலவர் : ஆதித்ய ஹிருதய பெருமாள்
அம்மன்/தாயார் : ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் : தில்லைமரம்
தீர்த்தம் : பாஸ்கர தீர்த்தம்
ஊர் : உதயமார்த்தாண்டபுரம்
மாவட்டம் : திருவாரூர்
தல சிறப்பு :
ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம்
பொது தகவல் :
கோயிலின் கிழக்குப் பக்கம் ஆதித்ய ஹிருதய பெருமாள் , இடபக்கம் ஸ்ரீதேவி, வலப்பக்கம் பூதேவியுடன் அருள்பாலிக்கிறார். கோயிலின் இடப்பக்கம் நேர்த்திக்கடன் செய்யும் வகையில் அகல் விளக்கு ஏற்ற வசதியாக கட்டில் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முன் பக்கம் பாஸ்கர தீர்த குளம் எப்போதும் தண்ணீர் வற்றாமல் உள்ளது.
பெருமாள்: வலப்பக்கம் ஸ்ரீதேவியுடனும், இடபக்கம் பூதேவியுடன் 9 அடி உயரத்தில் ஆதித்ய பெருமாள் சிரிப்புடன் காட்சித்தருகிறார். பீடம் நான்கு அடியில் வட்ட வடிவில், இடது கையில் சங்கு, வலக்கையில் வரம் அருளியும், கையில் கட்டைவிரலை மடித்து மோதிர விரல் மீது வைத்துள்ளார். தலையில் கிரிடத்துடன், நெற்றிப்பட்டம், தொல் காதும், குண்டலம் அணிந்துள்ளதுடன் இரு கால்களிலும் கண்டிலம் அணிந்துள்ளார்.
ஸ்ரீதேவி, பூதேவி: தலைகிரிடம், நீள்நெற்றி, கழுத்தில் ஆரம் முப்பறிநூல் லட்சுமி அடையாளம், கையில் தாமரை மொட்டுடன் சிரித்த முகத்துடன் காட்சித்தருகின்றனர்.
பிரார்த்தனை :
கண் மருத்துவத் துறையில் புகழ் பெறவும், கணக்குப்பாடத்தில் சிறப்படையவும், கம்ப்யூட்டர் துறையில் வளர்ச்சியடையவும், திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் கிடைக்கவும், நவகிரக தோஷங்கள் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.
கண்பார்வை கோளாறு குணமடைய:
கண்கண்ட ருத்திரராம் கண்கண்ட திருமாலாம்
கண்கண்ட பிரம்மருமாம் கண்கண்ட சக்தியுமாம்
கண்கண்ட ஒலியொளியாம் கண்கண்ட வேதமுமாம்
பண்கொண்டு விண்ணுண்டக் கதிரவரின் கார் போற்றி என்று வழிபாட்டு பாடலலை பாடியும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன் :
அத்திப்பழங்களை தேனில் ஊறவைத்து, முந்திரி, திராட்சை, கற்கண்டு ஆகியவற்றை ஆதித்ய ஹிருதய பெருமாளுக்கு படைத்து பக்தர்களுக்கு வழங்க வேண்டும். மேலும் நட்சத்திர வடிவில் அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.
தலபெருமை :
கலியுகம் முடிவதை குறிக்கும் சாதனங்கள் பல உள்ளது. கலியுகத்தின் கடைசி மூன்று நாட்களில் சூரியன் கிழக்கே அல்லாது மேற்கே உதிப்பதாகும். என சித்தர்களின் யுக நிதிய கிரகங்களில் விளக்கப்படுகிறது. கலியுகத்தின் இறுதி நாட்களான அந்த மூன்று தினங்களில் திகழும் மேற்கு திசை சூரிய உதய திசை மாற்றத்தை உதய மாருதி, உதய நாழி, சகோரம், சிம்புள், சரபம், யாளி, தூப்பல் ஆகிய ஏழு முக்கியமான சூரிய லோகத்து தெய்வீகப்பறவைகளே முதன்முதலில் தீர்க்க தரிசனமாய் அறிந்து மனிதர்களுக்கும் உணர்விக்கும். பட்சி சாஸ்திர வாக்கு மெய்வாக்கியமாய் பொழியும் மூல முதல் தலமாகியது. பின்னாளில் உதயமார்த்தாண்டபுரம் என மருவியதாக கூறப்படுகிறது.
மிகவும் பழமை வாய்ந்த சூரிய சக்தி வழிபாட்டு தலமாகும். மேலும் நல்ல சீதோஷ்ண நிலை இருப்பதால் பல்வேறுப்பகுதியில் இருந்து பறவைகள் இனப் பெருக்கத்திற்கு வந்து செல்வதாலும், அகஸ்திய மகரிஷி ராமபிரானுக்கு உபதேசித்த ஆதித்ய ஹிருதயம் என்னும் அற்புத துதியை படைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்ட தலம் என்ற சிறப்பிற்குரியது.
சூரிய பகவானிடம் வேத பாடம் கற்கையில் ஆஞ்சநேயர், சூரியன் உதயமாகும் உதயகிரி மலையில் ஒருபாதத்தை வைத்தும், சூரியன் உதயமானதும், அஸ்தகிரி மலையில் மற்றொரு பாதத்தை வைத்தும் சூரிய சக்கரத்தின் படுவேகத்திற்கு இணையாய் ஓடிக்கற்றார். இதனால் இங்கு ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம். முட்ட சித்தர் வாழ்ந்தருளிய அவரின் சிறப்பு மிக்க ஆயுத எழுத்தான (ஃ) பெருமை கூறி தோன்றி தவழ்ந்தற்கான சிறப்பும் கூறப்படுகிறது. கோயில் எதிரில் பாஸ்கர தீர்த்தம் என சிறப்பிக்கப்படும் அழகிய திருக்குளம் எப்போதும் வற்றாமல் உள்ளது. சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலத்தில் பாஸ்கர தீர்த்தம் முதன்மையானது. மேலும் கடுமையான பிதுர் தோஷங்களையும், குறிப்பாக தந்தை வழியில் தர்ப்பணம், திவசம், முறைப்படி ஆற்றாததால் விளையும் பிதுர் தோஷங்களை களைய வல்ல பிதுர் முக்தி பூமியாகும். இககோயில் ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முற்பட்டதாக இருக்கலாம் என அப்பகுதியினர் கருதுகின்றனர். மேலும் சிவ-விஷ்னு தலமாக இருந்தது என்றும் கருதுகின்றனர். 9 ஆடி உயரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை ஆதித்ய ஹிரு தய பெருமாள் விக்கரகங்கள் கருவறையில் பல தலைமுறையாக இருந்து வந்துள்ளது.
தல வரலாறு :
அகஸ்திய மாமுனிவர் அரிய சூரிய சக்தி மந்திரங்களை ஓதி வழிபட்டு ஆதித்ய ஹிருதயம் துதியை இயற்றுவதற்கு பிள்ளையார் சுழி இட்ட புண்ணிய பூமி என சித்தர்களால் போற்றப்பட்டதும், ஆதித்ய ஹிரு தயம் என்னும் மந்திரத்தை அகத்திய மாமுனிவரால் இலங்கை ராணுவ யுத்தத்திற்கு ராமபிரான் செல்வதற்கு முன் இப்பெருமாள் முன்னிலையில் ஸ்ரீராம பெருமானுக்கு உபதேசம் செய்யப்பட்டதும் இந்த மண்ணில்தான் என்று கூறப்படுகிறது.
சிறப்பம்சம் :
அதிசயத்தின் அடிப்படையில்: ஆஞ்சநேயரின் இடது திருப்பாதம் தீர்த்தத்தில் பதிந்திருப்பதாக ஐதீகம்.
திறக்கும் நேரம் :
காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாலை 5 மணி முதல் இரவு 8.15 மணிவரை திறந்திருக்கும்.
திருவிழா :
ராம நவமி, சித்திரை அட்சய திருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உள்ளிட்ட ராமருக்குரிய அனைத்து திருவிழாவும் விமர்சியாக கொண்டாடப்படுகிறது.
முகவரி :
அருள்மிகு ஆதித்ய ஹிருதய பெருமாள் திருக்கோவில்
உதயமார்த்தாண்டபுரம்,
திருத்துறைப்பூண்டி தாலுகா,
திருவாரூர் மாவட்டம்.614 706

ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
கன்னியாகுமரி– திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில், ஆரல்வாய்மொழிக்கும், காவல்கிணறு என்ற ஊருக்கும் இடையில் உள்ளது இசக்கி அம்மனின் தலைமை பீடமான முப்பந்தல். தமிழகத்தை மூவேந்தர்கள் ஆட்சி செய்த காலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இவ்விடத்தில் கூடி பந்தல் அமைத்து, அதன் கீழ் தங்களின் பிரச்சினைகளை அவ்வையார் தலைமையில் பேசி தீர்த்துக் கொண்டனர். இதன் அடிப்படையிலேயே இந்த இடம் முப்பந்தல் என்று பெயர் பெற்றது.
தல வரலாறு :
முப்பந்தல் அருகில் உள்ளது பழவூர். இந்த ஊரில் நாட் டிய பெண்மணி ஒருத்தி தனது மகள் இசக்கியுடன் செல்வச் செழிப்பில் வசித்து வந்தாள். அவளது சொத்தின் மீது ஆசை கொண்ட ஒருவன், இசக்கியை காதல் மொழி பேசி வஞ்சனையால் வீழ்த்தினான். பின்னர் இசக்கியை வீட்டில் உள்ள நகை பணத்துடன் அருகில் இருந்த காட்டுக்கு வரவழைத்தவன், இசக்கி அவன்பால் கட்டுண்டு இருந்த போது தலையில் பாறாங்கல்லை தூக்கிப்போட்டான். இதில் இசக்கி துடிதுடித்து இறந்துபோனாள்.
பின்னர் அந்தக் கயவன், நகை– பணத்துடன் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தபோது பாம்பு ஒன்று தீண்டியதில் அவனும் இறந்துபோனான். இந்த நிலையில் தெய்வ பிறவியான இசக்கி, சிவபெருமானிடம் தன்னை வஞ்சனையால் கொன்றவனைத் தானே அழிக்க வேண்டும் என்று வரம் பெற்று மீண்டும் தன்னையும், தன்னை ஏமாற்றியவனையும் உயிர்த்தெழச் செய்யுமாறு வேண்டினாள். சிவனும் வரம் கொடுத்தார்.
கள்ளியை, குழந்தையாக மாற்றி...
அதன்படி பாம்பு தீண்டி இறந்து கிடந்த இசக்கியை கொன்றவன் வீடு திரும்பினான். இசக்கியோ காட்டில் அலைந்து திரிந்தாள். ஒருநாள், காட்டில் இருந்த கள்ளிச் செடியை ஒடித்து அதனை அழகிய குழந்தையாக மாற்றி னாள் இசக்கி. பின்னர் அந்த குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு, தன்னை ஏமாற்றிய கயவனின் ஊருக்கு சென்று பஞ்சாயத்தை கூட்டி, தன்னையும், தனது குழந்தையையும் அவன் ஏற்க மறுப்பதாக புகார் கூறினாள்.
விசாரணைக்கு வந்த இசக்கியை ஏமாற்றியவன், அவள் தனது மனைவியல்ல, அது என் குழந்தை அல்ல என்று மன்றாடினான். ஒரு கட்டத்தில் இசக்கி தனது இடுப்பில் இருந்த குழந்தையை கீழே இறக்கி விட்டாள். அந்த குழந்தை நேராக, குற்றம் சாட்டப்பட்டவனிடம் சென்று அப்பா என்றது. இதனை பார்த்த பஞ்சாயத்து தலைவர், ‘குழந்தை பொய் சொல்லாது, எனவே நீ உன் மனைவியுடன் பேசி ஒரு முடிவுக்கு வா’ என்று கூறி ஒரு வீட்டில் இருவரையும் உள்ளே வைத்து பூட்டி சென்று விட்டனர்.
முப்பந்தலில் அமர்ந்தாள் :
இந்த நேரத்திற்காக காத்திருந்த இசக்கி, நள்ளிரவு ஆனதும் விஸ்வரூபம் எடுத்தாள். பின்னர் தன்னை ஏமாற்றி கொன்றவனை, தனது கையால் கொன்று பழிதீர்த்தாள். அதன்பிறகு பழவூரை விட்டு, மேற்கு நோக்கி நடந்தாள். அப்போது அவ்வையார் முப்பந்தல் பகுதியில் மூவேந்தர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவ்வழியாக சென்ற இசக்கியை அழைத்து, சாந்தப்படுத்தி, ‘இனி நீ இருக்க வேண்டிய இடம் இதுதான்’ என்றார். இசக்கியும் அங்கேயே தங்கினாள். இதனை கயிலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த சிவபெருமான் பார்வதியை நோக்க, உடனே பார்வதிதேவி தன் வீரசக்தியை இசக்கிக்கு அளித்தாள். அன்று முதல் ஊரை காக்கும் தெய்வமானாள் இசக்கி. முப்பந்தலில் அமர்ந்ததால் முப்பந்தல் இசக்கி அம்மன் என்று பெயர் பெற்றாள்.
அவ்வைக்கு தனி சன்னிதி :
இசக்கியை, அவ்வையார் சாந்தப்படுத்தியதால் முப்பந்தலில் அவ்வையாரம்மன் என்ற பெயரில் அவ்வைக்கு தனி சன்னிதி உள்ளது. மேலும் இசக்கியின் சகோதரனான நீலனுக்கும் தனி சன்னிதி அமைந்துள்ளது. திருமாலே இசக்கியின் தமையனாக வந்ததாக கூறப்படுகிறது. ‘இசக்கி’ என்ற சொல்லுக்கு ‘மனதை மயக்குபவள்’ என்று பொருள். முப்பந்தலில் கருவறையில் அம்மன் வடக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறாள். வலதுபுறம் பிராமணத்தி அம்மன் உள்ளார். கருவறை சுற்றுச்சுவரில் வைஷ்ணவி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவி ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
கோவில் சுற்றுப்பிரகாரத்தில் வலம்புரி விநாயகரும், பாலமுருகனும், அவ்வையாரம்மனும் தனி சன்னிதியில் பாங்குடன் அருள்புரிகின்றனர். முகப்பில் காவல் தெய்வங்களான சுடலைமாடனும், அவருக்கு எதிரில் பட்டவராயரும் தனி சன்னிதிகளில் உள்ளனர்.
இந்த கோவிலின் அருகில் மற்றுமொரு இசக்கி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கும் சுடலை மாட சுவாமி காவல் தெய்வமாக கனகம்பீரமாக அமர்ந்துள்ளார். இந்தக் கோவில் கருவறை முன் மண்டபம் கேரள பாணியில் ஓடு வேயப்பட்டுள்ளது. இங்குள்ள இசக்கி அம்மன், ஆதி இசக்கி அம்மன் என்று அழைக்கப்படுகிறாள். ஆலயத்தின் வெளியே மிகப் பெரிய அளவில் இசக்கி அம்மன் இடது காலை மடித்து, வலது காலை தொங்க விட்ட நிலையில் அமர்ந்துள்ளார்.
ஆடியில் அமர்க்களம்
முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் கடைசி செவ்வாய்க்கிழமையன்று நடைபெறும் திருவிழா மிகப்பெரிய திருவிழாவாகும். சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் மாட்டு வண்டிகள் முதல் கார், ஜீப் உள்ளிட்ட பல வாகனங்களில் வந்து குழுமி, ஆடுகளை பலியிட்டு அம்மனை வழிபடுகிறார்கள்.
இந்த நாளில் முப்பந்தல் இசக்கியம்மன் கோயிலுக்கு ஏராளமான சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தவிர தை மாதத்தில் மலர் அபிஷேகமும் நடைபெறுகிறது. இக்கோவிலில் நடைபெறும் மலர் அபிஷேகத்தைக் காண கண் கோடி வேண்டும்.

சிதம்பரத்திலிருந்து பிச்சாவரம் செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் தான் பின்னத்தூர். இங்கு அபிராமிக்கு அழகான அற்புதமான பல சிறப்புகள் வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. அதன் வரலாற்றைப் பார்ப்போம்..
உலகை ஆளும் சக்திகளில் முதன்மை சக்தியாக கருதப்படும் பராசக்திக்கு, பல இடங்களிலும் ஆலயங்கள் காணப்படுகின்றன. பலதலங்களிலும் பல பெயர்களில் அன்னை அருள்பாலித்து வருகிறாள். காஞ்சியிலே காமாட்சி, மதுரையிலே மீனாட்சி, காசியிலே விசாலாட்சி, தில்லையிலே சிவகாமி, திருக்கடையூரில் அபிராமி என்று சக்தியின் பல்வேறு ஆலயங்கள் பல்வேறு சிறப்புகளை உடையதாக உள்ளது.
திருக்கடையூரில் அபிராமி ஆலயம், அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தின் உள்ளேதான் அமைந்துள்ளது. ஆனால் அபிராமிக்கு தனி ஆலயம் இருப்பது மிக மிக அரிது. அபிராமிக்கு, பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட ஆலயத்தை தரிசிக்க கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் பின்னத்தூர் கிராமத்திற்கு செல்ல வேண்டும்.
சிதம்பரத்திலிருந்து பிச்சாவரம் செல்லும் சாலையில் உள்ள அழகிய கிராமம் தான் பின்னத்தூர். இங்கு அபிராமிக்கு அழகான அற்புதமான பல சிறப்புகள் வாய்ந்த ஆலயம் ஒன்று உள்ளது. அதன் வரலாற்றைப் பார்ப்போம்..
பல நூற்றாண்டுகளுக்கு முன் கிராமம் மட்டுமல்ல, நகரங்களிலும் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்து ஆடியது. மக்கள் உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அல்லாடிக்கொண்டு இருந்தனர். இந்த காலகட்டத்தில் இந்தப் பகுதியில் சக்தியின் பக்தர் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு வேப்ப மரத்தடியில் தினமும் பராசக்தியின் திருநாமத்தை மனதில் உச்சரித்தபடியே அமர்ந்து இருப்பார். இவர் வீட்டில் சில பசு மாடுகள் இருந்தன. அந்த பசு மாட்டில் இருந்து பெறப்படும் பாலை தானமாக அனைவருக்கும் கொடுப்பார். அதுதான் இக்கிராமத்திற்கு உணவாக இருந்தது.
இவர் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தன்று திருக்கடையூர் அபிராமி கோவிலுக்குச்செல்வது வழக்கம். பல ஆண்டுகள் இப்படித்தான் செய்து வந்துள்ளார். இவர் தீவிரமான அபிராமியின் பக்தர் என்பதால், இவரை இந்தப் பகுதி மக்கள் ‘பட்டர்’ என்றே அழைப்பார்கள். ஒரு சமயம் இவர் திருக்கடையூர் சென்று திரும்பும் வேளையில் ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது. இவர் வீட்டில் இருந்த பசுக்கள் அனைத்தும் இறந்து விட்டன. அந்தச் செய்தியை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
பசுக்களின் பாலைக் கொண்டு மக்களின் துன்பங்களை நீக்கி வந்த நிலையில், அந்தப் பசுக்கள் இல்லாதது அவரை வேதனை படுத்தியது. இதனால் அவர் வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து தியானம் செய்ய ஆரம்பித்து விட்டார்.
அன்று இரவு அபிராமி அம்மன் அவர் கனவில் வந்து, “நீ இங்கி ருந்து மேல்மலையனூர் செல். அங்கு உனக்கு ஒரு செல்வந்தர் மாடுகள் வாங்கி கொடுப்பார். அதை அழைத்து வா. வரும் வழியில் உனக்கு ஒரு பக்தர் உருவில் நானே வந்து உதவி செய்வேன். அதை வைத்து ஒரு ஆலயம் கட்டு. உன்னையும் இந்த கிராமத்தையும் நான் காப்பேன்” என்றாள்.
பட்டர் வரும் வழியில் இவரின் பக்தியைக் கண்ட மெய்யன்பர்கள் இவரிடம் விசாரித்து கோவில் கட்ட போதுமான உதவிகளை செய்தனர். அந்த உதவிகளை வைத்து அபிராமி அம்மனுக்கு என்று தனி ஆலயம், ஒரு சின்ன கீற்றுக் கொட்டகையில் அமைக்கப்பட்டது. பட்டரால் சிறிய ஆலயமாக கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் பொதுமக்கள் வழிபாடு செய்ய ஆரம்பித்தவுடன் பலவிதமான அற்புதங்கள் நிகழ்ந்துள்ளன.
பல மாதங்களாக மழை இல்லாததால் கடுமையான பஞ்சத்தில் இருந்த அந்த ஊர், நல்ல மழை பெய்து செல்வ செழிப்போடு காணப்பட்டது. விவசாயமும் நல்லபடியாக நடந்ததாக ஆலயம் உருவான விதம் பற்றி கூறப்படுகிறது.
இந்த ஆலயத்தின் முன்னே, அலங்கார வளைவு உள்ளது. அதில் அபிராமி அன்னை காட்சி தருகிறாள். தரிசித்து விட்டு உள்ளே சென்றால் மகா மண்டபம். அந்த மண்டபத்தில் நெடிய கொடிமரம், பலிபீடம், சிம்மவாகனம், இவற்றுக்கு முன்னால் விநாயகர், முருகன் காட்சியளிக்கிறார்கள். அவர்களை வணங்கி விட்டு சென்றால் அடுத்ததாக அர்த்த மண்டபம் உள்ளது. இங்கு உற்சவர் சிலைகள் வரிசையாக வைக்கப் பட்டுள்ளன.
இவைகளைக் கடந்து சென்றால் கருவறையில் அபிராமி அம்மன், நான்கு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி மிக அற்புதமாய் காட்சி தருகிறாள். கோஷ்டத்தில் வலது பக்கம் தட்சணாமூர்த்தி சன்னிதியும், ஐயப்பன், துர்க்கை சன்னிதிகளும், இடதுபக்கம் இடும்பன் சன்னிதியும் உள்ளன. கோவிலின் உள்ளே முதல் சுற்றில் வள்ளி - தெய்வானை உடனாய முருகன் சன்னிதி, இடும்பன் சன்னிதி, நவக்கிரகங்களும், புற்று சன்னிதியும் காணப்படுகின்றன.
இந்த ஆலயத்தை பொறுத்தவரை நான்கு உற்சவங்கள் இங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படுகின்றன. தை மாதம் அமாவாசை அன்று அபிராமிப் பட்டருக்கு காட்சிதரும் நிகழ்வு நடைபெறும். மாசி மாதம் மகத்தன்று அருகில் உள்ள கிள்ளை கடற்கரையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று ஆலயத்தின் உள்ளே உள்ள முருகன் சன்னிதியிலும், இடும்பன் சன்னிதியிலும் சிறப்பு பூஜைகள் சிறப்பு அலங்காரங்கள் செய்யப் பட்டு பெரிய அளவில் காவடி திருவிழா நடைபெறும். அதேபோல் சித்திரை திருவிழா நடைபெறும். இதில் சித்ரா பவுர்ணமியன்று முருகன், வள்ளி - தெய்வானை திருக்கல்யாண உற்சவமும், அன்று இரவு ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும்.
இவ்வாலயத்தின் உள்சுற்றில் இருக்கும் நாக புற்றுக்கு, வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சர்வ பிரார்த்தனைக்காக பக்தர்கள் சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்கிறார்கள்.
விவசாயத்தை மட்டும் அல்ல நம் வாழ்க்கையில் எந்த ஒரு பிரார்த்தனையையும் மனமுருகி வைத்தால் நிச்சயமாக அதை ஏற்று கருணைக் கடலாய் இருக்கும் அபிராமி நிச்சயமாக நல்ல பலன்களை தருவாள்.

திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும்.
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவில் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 61ஆவது சிவத்தலமாகும். மேலும், மேலும் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வீழிநாதேஸ்வரர். தாயார் சுந்தரகுசாம்பிகை.
இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவீழிமிழலை எனும் ஊரில் அமைந்துள்ளது.
கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் சென்று தென்கரை என்ற இடத்தில் இறங்கி ஒரு கிமீ சென்று இத்தலத்தை அடையலாம். இத்தலத்தில் திருமால் சக்கரம் வேண்டிப் பூசிக்கும்போது ஒரு மலர் குறையத் தன் கண்ணையே மலராக இட்டு அர்ச்சித்தார் என்பது தொன்நம்பிக்கை. சம்பந்தருக்கும் அப்பருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம் என்ற தொன்நம்பிக்கையும் உள்ளது.
பெருமிழலைக் குறும்பர் என்னும் பரமயோகி மிழலை நாட்டுக் குறும்பூரில் வாழ்ந்தவர். குறும்பூர் இக்காலத்தில் திருக்குறுக்கைப் பள்ளி என்னும் பெயருடன் விளங்குகிறது. நாற்பெருங்குரவர் என்று போற்றப்படுபவர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனாரையே தெய்வமாகக் கொண்டு வாழ்ந்தவர். அப்பூதி அடிகள் அப்பர் பெருமானையே தெய்வமாகக் கருதியது போன்றது இது.
விழி என்னும் தமிழ்ப்பெயர் நேத்ரம் என்று வடமொழி ஆக்கம் பெற்று இங்குள்ள இறைவன் பெயர் அமைந்துள்ளது. திருவிழிமிழலை என்பது திருவீழிமிழலை ஆயிற்று.
தொழில்நுட்பம்
திருவலஞ்சுழி பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் கூறுவதுண்டு. இதன்மூலமாக இத்திருக்கோயிலின் கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும். திருவீழிமிழலை வௌவால்நத்தி மண்டபத்தில் வௌவால்களால் தொங்க முடியாது. ஆவுடையார்கோயில் கொடுங்கை மிகவும் மெல்லியதாக இருக்கும்.
சங்ககாலம்
சங்ககாலத்தில் இதனைச் சூழ்ந்திருந்த நாடு மிழலை நாடு என்னும் பெயருடன் திகழ்ந்தது. நீடூரைத் தலைநகராகக் கொண்டு எவ்வி என்னும் வள்ளல் இதனை ஆண்டுவந்தான்.
மிழலை திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இது இக்காலத்தில் திருவீழிமிழலை என்னும் பெயருடன் விளங்குகிறது. கி.பி. ஏழாம் நூற்றாண்டுத் தேவாரம் இவ்வூரின் சிவனைப் போற்றுகிறது. இவ்வூரில் பஞ்சம் நிலவிய காலத்தில் அப்பரும், சம்பந்தரும் இவ்வூர்க் கோயிலில் படிக்காசு பெற்று மக்களின் பசியைப் போக்கிவந்ததாகப் பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
சங்ககாலத்தில் இவ்வூர் சூழ்ந்த நாட்டை ஆண்ட குறுநிலத் தலைவன் எவ்வி. இவன் சிறந்த வள்ளல்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்த நாட்டை வென்று தனதாக்கிக் கொண்டபின் அப்பகுதியில் இருந்த முத்தூறு பகுதியையும் தனதாக்கிக்கொண்டான் என்கிறார் அவனது அவைக்களத் தலைமைப் புலவர் மாங்குடி மருதனார் (=மாங்குடி கிழார்).
திருவீழிமிழலை என்ற ஊரில் ஸ்ரீநேத்ரார்ப்பனேஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இங்கு ‘கல்யாண சுந்தரர்’ என்று அழைக்கப்படும் ‘மாப்பிள்ளை சுவாமி’ உற்சவ மூர்த்தியாக விளங்குகிறார். அவர் பாதத்தின் மேலே, திருமால் அர்ச்சித்த கண் மலர் உள்ளது.
திருமண வீடுகளில் வைத்திருப்பதுபோல் இங்கும் அரசாணிக்கால் உள்ளது. வயதாகியும் மணமாலை கூடாமல் இருப்பவர்கள், இந்த திருக்கோவிலுக்கு வந்து, மாலை சூட்டியபடியே அரசாணிக்காலை மூன்று முறை வலம் வந்து கல்யாண சுந்தரரை வழிபட்டால் கல்யாணக் கனவுகள் நனவாகும்.

பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 30-வது திவ்ய தேசம். இந்த கோவில் பற்றிய சிறப்புகளை அறிந்து கொள்ளலாம்.
தல சிறப்பு:
பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 30 வது திவ்ய தேசம்.
மூலவர் : புருஷோத்தமர் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலம். கிழக்கே திருமுக மண்டலம்.
தாயார் : புருஷோத்தம நாயகி
தல விருட்சம் : பலா, வாழை மரம்.
தீர்த்தம் : திருப்பாற்கடல் தீர்த்தம்(பாசிபடியாத தீர்த்தம்)
விமானம் - ஸஞ்ஜீவிவிக்ரஹ விமானம்.
ப்ரத்யக்ஷம்: உபமன்யு, வ்யாக்ரபாத முனிவர்
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : திருவன் புருஷோத்தமம்
ஊர் : திருவண்புருசோத்தமம்
மாவட்டம் : நாகப்பட்டினம்.
மாநிலம் : தமிழ்நாடு
விசேஷம் - உத்ஸவப் பெருமாளின் திருவுருவம் மிக அழகியது. தை அமாவாசைக்கு மறுநாள் நடக்கும் கருடஸேவை மிக விசேஷம். ஸ்ரீ மணவாள மாமுனிகள், பிரதிவாதி பயங்கரம் அண்ணன் மங்களாசாஸனம் செய்த இடம்.
குறிப்பு - திருமணிமாடக் கோவில், திருஅரிமேய விண்ணகரம், திருத் தெற்றியம்பலம், திருவெண்புருடோத்தமம் - இந் நான்கும் திருநாங்கூரின் ஒரே தெருவின் பக்கங்களில் உள்ளன.
மங்களாசாசனம்
திருமங்கையாழ்வார் - 1258-67 -10 பாசுரங்கள்.
பல்லவம் திகழ்பூங்கடம்பேறி அக்காளியன் பணவரங்கில் ஒல்லை வந்திறப் பாய்ந்து அருநடஞ்செய்த உம்பர்கோனுறை கோவில் நல்லவெந்தழல் மூன்று நால்வேதம் ஐவேள்வியோடு ஆறங்கம் வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் வண்புருடோத்தமமே.
-திருமங்கையாழ்வார்
பொது தகவல்:
மூலவர் புருஷோத்தமன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அருள்பாலிக்கிறார். தாயார் புருஷோத்தம நாயகி தென்மேற்கு மூலையில் தனி சன்னதியில் அமர்ந்த நிலையில் அருள் பாலிக்கிறார். உள்பிரகாரத்தில் ஆண்டாள், ராமர், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயர், நம்மாழ்வார், உடையவர், சேனை முதலியார் சன்னதிகள் உள்ளன.
இத்தல மூலவர் கிழக்கு பார்த்த திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் சஞ்சீவி விக்ரக விமானம் எனப்படுகிறது. இத்தல இறைவனை காட்சி கண்டவர்கள் உபமன்பு, வியாக்ரபாத முனிவர்.
இங்கு பெருமாளை ராமனாகக் கருதி வழிபடுகின்றனர்.
பிரார்த்தனை
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபடுகின்றனர்.
தலபெருமை:
108 திருப்பதிகளில் இதுவும் ஒன்று. இத்தல பெருமாளை திருமங்கையாழ்வார் அயோத்தி ராமராக மங்களாசாசனம் செய்துள்ளார். இத்தல பெருமாளைப் பற்றி பாடுபவர் மட்டுமல்லாது, கேட்பவருக்கும் எல்லா நலனும் கிடைக்கும் என கூறியுள்ளார். 48 நாட்கள் தொடர்ந்து விஷ்ணு சகஸ்ர நாம அர்ச்சனை செய்து, கடைசி நாளன்று விசேஷ அர்ச்சனை செய்து வழிபட்டால் எப்படிப்பட்ட பிரச்னை இருந்தாலும் பெருமாள் தீர்த்து விடுவார் என்பது ஐதீகம்.
திருச்சி அருகே திருக்கரமனூர். அதேபோல் இந்த திருநாங்கூர் வன் புருஷோத்தமன். வேறு எங்கும் புருஷோத்தமனுக்கு தனி சன்னதி இல்லை. மணவாள மாமுனிகள் இங்கு தங்கி வன்புருஷோத்தம பெருமாளுக்கு இரண்டு வருடம் சேவை புரிந்துள்ளார். இங்கு மூன்று ஆஞ்சநேயர் சன்னதிகள் உள்ளன. அதில் ராமர் சன்னதியில் உள்ள ஆஞ்சநேயர் கைகட்டி வாய்பொத்திய நிலையில் உள்ளார். பாசிபடியாத திருப்பாற்கடல் இத்தலத்திலிருந்து வடக்கே அமைந்துள்ளது. செண்பகப்பூ என்றால் இந்த பெருமாளுக்கு மிகவும் விருப்பம்.
தல வரலாறு:
சைவ சமயத்தில் ஞான சம்பந்தருக்கு பார்வதி ஞானப்பாலை ஒரு கிண்ணத்தில் வைத்து ஊட்டி விட்டாள். அதே போல வைணவத்தில், மகா விஷ்ணு பசியால் அழும் குழந்தைக்கு ஒரு பாற்கடலையே உருவாக்கி பால் அமுது தந்திருக்கிறார். அவர் தான் சீர்காழி வன் புருஷோத்தமர். வியாக்ரபாதர் என்ற மகரிஷி, தன் குழந்தை உபமன்யுவை அழைத்துக்கொண்டு இந்த பெருமாள் கோயிலில் உள்ள நந்தவனத்தில் பூப்பறித்து இறைவனுக்கு சார்த்த வந்தார். குழந்தையை நந்தவனத்தின் வாசலில் அமர செய்து விட்டு பூப்பறிக்க செல்கிறார். குழந்தை தந்தையை காணாததாலும், பசியாலும் அழுதது. குழந்தையின் அழுகுரல் திருப்பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள பரந்தாமனுக்கு கேட்டது. உடனே இத்தலத்தில் ஒரு பாற்கடலையே உண்டு பண்ணி குழந்தைக்கு ஊட்டினார். அழும் குழந்தைக்கு தாயார் புருஷோத்தம நாயகி பால் அமுது படைத்தாள்.
சிறப்புக்கள்
குழந்தைக்கு வரும் துன்பத்தை தாய்தந்தை போக்குவர். தம்மிடம் தோன்றிய பிரம்மா முதலான தேவாதி தேவர்கட்கு உண்டாகும் துன்பத்தைப் போக்கி தம்மை எதிர்ப்பவர்களை அழித்து உலகத்தை ரட்சிக்கும் புருடோத்தமன் இவனே. இங்கு எழுந்தருளியுள்ள எம்பெருமான் புருஷோத்தமன். “புருஷோத்தம இதி வைஷ்ணவா” என்று ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானை புருஷோத்தமன் என்ற பெயரில் அழைப்பார்கள்.
இவனைப் பற்றிக் கூறும் வித்தைக்கு “புருஷோத்தம வித்னய” என்று பெயர். புருஷோத்தமனைத் தான் தூய தமிழில் புருடோத்தமன் என்கிறார் மங்கை மன்னன். (பக்தர்களும், முக்தர்களும், நித்யர்களுமாகிய புருஷர்கள்யாவரினுஞ் சிறந்தவனென்னும் பொருள்படும்) குறைவில்லா ரட்சிப்புத் தன்மைகொண்டு வள்ளல்போல் தன் அருளை வாரி வழங்குதலால்(வள்ளல் தன்மையை உயர்வு படுத்திக் காட்ட) வண் புருடோத்தமன் ஆனான்.
இந்த சம்பந்தத்தால் இத்தலம் வண் புருடோத்தம மாயிற்று. உத்தமன்- என்னும் சொல்லுக்கு பெரியவாச்சான் பிள்ளையின் வ்யாக்யானம் யாதெனில், புருஷர்கள் மூவகை முதல்வகை அதமன் தான் இன்பமுற அடுத்தவன் துன்புற்றாலும் கவலையில்லையென்று எண்ணுபவன்.
2வது வகை மத்திமன் தான் இன்பமுறுதல் போல் அடுத்தவனும் இன்பமுற வேண்டும் என்று எண்ணுபவன்
3வது வகை உத்தமன் தான் துன்பமுற்றாலும் பரவாயில்லை அடுத்தவன் இன்பமுறவேண்டுமென நினைப்பவன்.
எம்பெருமானின் அவதார ரகசியங்கள் தான் துன்பமுற்றாலும் பரவாயில்லை உலகம் இன்பமுற வேண்டுமென அவதார மெடுத்ததால் இவனே உத்தமன் என்றாயிற்று. அதானாலன்றோ ஆண்டாளும் “ஓங்கியுலகளந்த உத்தமன்” என்றார்.
சிறப்புக்கள்
1) இங்குள்ள உற்சவர் மிக அழகானவர்
2) அயோத்தி எம்பெருமானே இங்கு பதினொருவரில் ஒருவராக எழுந்தருளினார். அயோத்தி ராமன் புருடோத்தமனல்லவா அயோத்தியில் உள்ளவன்தான் புருடோத்தமன் என்பதை திருமங்கையாழ்வார் மட்டுமல்ல, பெரியாழ்வாரும், வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி இடமுடை வதரி யிடவகை யுடைய
எம்புரு டோத்தம னிருக்கை - என்றார். அந்த அயோத்தி எம்பெருமானே இங்கு எழுந்தருளியமையால் புருடோத்தம திருநாமம் உண்டாயிற்று.
3) திருமங்கையாழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்தலம்
4) மணவாள மாமுனிகளும் இங்கு எழுந்தருளினார்.
5) பங்குனி மாதம் 10 நாள் பிரம்மோற்சவம் கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதம் பவுர்ணமியில் பவித்ர உற்சவம் நடக்கிறது.தை அமாவாசைக்கு மறுநாளான கருட சேவைக்கு இந்தப் புருடோத்தமனும் புறப்படுவார்.
6) தமிழ்நாட்டில் சங்க காலத்திலும் சங்கம் மருவிய காலத்திலும் பெண்கள் பந்து விளையாடியதை இலக்கியங்கள் பேசுகின்றன. இவ்வூரின் பெண்கள் பந்து விளையாட்டில் சிறப்புற்றுத் திகழ்ந்தனர். இவ்வூரில் பந்தடிக்கும் பெண்களின் கால்களில் உள்ள சிலம்போசையும், கைவளையல்களின் ஓசையும் எந்நேரமும் மல்கியிருக்குமாம், திவ்யதேசங்களின், மருங்கமைந்த இயற்கைச் சூழ்நிலைகளையும், பிற நிகழ்வுகளையும் தம் பாடல்களில் விரித்துரைக்கும் திருமங்கை இதை விட்டுவிடுவாரா என்ன. இதோ இதைப் பற்றித் திருமங்கை கூறுகிறார்.
7) வ்யாக்ர பாத முனிவர் என்பவர் எம்பெருமானுக்கு பூமாலை கட்டிச் சூட்டும் கைங்கர்யத்தை மேற்கொண்டிருந்தார். இக்கோவிலில் எம் பெருமானுக்கு மாலை கட்ட வந்தவர் தனது குழந்தை உபமன்யூவை உட்கார வைத்துவிட்டுப் பூப்பறிக்கச் சென்றார். குழந்தை பசியால் அழுதது. புருடோத்தம நாயகி தூண்ட வண்புருடோத்தமன் திருப்பாற்கடலை வரவழைத்து. குழந்தைக்குப் பாலைப் புகட்டி அனுக்கிரஹம் புரிந்து வ்யாக்ர பாத முனிவருக்கும் காட்சி தந்தார் என்பதும் இத்தலத்தோடு வரலாறாகும்.
அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோயில்,
திருநாங்கூர்- 609 106 (சீர்காழி-திருநாங்கூர்)
நாகப்பட்டினம் மாவட்டம்.
சீர்காழி- நாகப்பட்டினம் ரோட்டில் அண்ணன் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் இறங்கி கிழக்கே 2 கி.மீ. செல்ல வேண்டும். சீர்காழியிலிருந்து 9 கி.மீ., தூரத்திலுள்ள இக்கோயிலுக்கு அடிக்கடி பஸ் வசதி உள்ளது

காஞ்சிக்கு அருகிலுள்ள உத்திரமேரூரில் உள்ள அம்மையப்பநல்லூர் என்னும் சிற்றூரில் அமைந்துள்ளது ஸ்ரீதேவி பூதேவி ஸமேதனாக ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்.
தொண்டை மண்டலமான காஞ்சிக்கு அருகிலுள்ள உத்திரமேரூரிலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் மேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது அம்மையப்பநல்லூர் என்னும் சிற்றூர். அந்த கிராமத்தின் நடுவே ஸ்ரீதேவி பூதேவி ஸமேதனாக ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
அழகான சிறிய கோவில். ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் வடக்கு நோக்கிய திருமுக மண்டலம்; நின்ற திருக்கோலம். வெளியில் கல்லாலான கொடிமரம். அடுத்ததாக சிறிய கருடன் சன்னதி. அழகாக புன்னகையோடு கூப்பிய கைகளோடே கருடன் சேவை சாதிக்கிறார். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சன்னதி என்றாலும், போதிய பராமரிப்பு இல்லாததால் மிகவும் சிதிலமடைந்து மிகவும் வருந்ததக்க நிலையில் உள்ளது. கோவில் முழுவதும் செங்கல்லால் ஆனது.
இடையில் எந்த திருப்பணிகளும் செய்யாததால், எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயமுள்ளது. ஏற்கனவே சன்னிதியின் ஒருபக்க சுற்றுசுவர் முற்றிலும் இடிந்துவிழுந்துள்ளது. கோவிலை சுற்றிலும் செடிகளும் புதர்களும் சூழ்ந்துள்ளன. முன்னொரு காலத்தில் உத்ஸவங்கள் சிறப்பாக நடைபெற்றதற்கு ஆதாரமாக சிதிலிமடைந்த கருடவாஹனம் இன்றும் உள்ளது. உத்ஸவங்கள் நின்று, நித்திய திருவாராதனம் குறைந்துபோனாலும், இந்த பெருமாளுக்கு தினமும் விளக்கேற்றி இன்றளவும் இந்த கோவிலை பாதுகாத்து வருகிறார் ஒரு மூதாட்டி. பெருமாளின் மீது அவர்களுக்கு இருக்கும் பக்தியை நாம் என்னவென்று சொல்வது!!!
உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி ஸமேத ஸ்ரீநவநீதகிருஷ்ணனாக வெண்ணைக்காடும் கண்ணனாக எழுந்தருளியுள்ளார். பாதுகாப்பு காரணம் கருதி உற்சவர் அருகிலுள்ள விநாயகர் ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளார். கோவிலுக்கு சற்று மேற்கே சக்கரத்தாழ்வார் எழுந்தருளியுள்ளார். சன்னதிக்கு பின்புறம் அழகான கிணறு ஒன்று அமைந்துள்ளது. அதற்கு அருகிலேயே திருமடப்பள்ளி இருந்ததாக நாம் அறிகிறோம்.
இந்த கிணற்றிலிருந்தே பெருமாளின் திருவாராதனத்திற்கு தீர்த்தம் எடுக்கப்பட்டுள்ளது. சுற்றியிருந்த மதில் சுவர்கள் எல்லாம் முற்றிலும் இடிந்து இருந்த இடம் தெரியாமல் உள்ளன. அழிவின் விளம்பில் உள்ள இந்த அழகான சன்னதி உடனடியாக திருப்பணிகளை எதிர்நோக்கியுள்ளது. எனவே இச்செய்தியை படிக்கும் ஆஸ்திக அன்பர்கள், சிதிலமடைந்த இத்திருக்கோவிலை புணரமைக்கும் பணிகளில் பங்குகொண்டு திருக்கோவில் மீண்டும் பொலிவுடன் திகழ்வதற்கு தங்களால் முடிந்த அளவு உதவிட வேண்டுகிறோம்.
அடியேன்,
ஸ்ரீக்ருஷ்ணதாஸன்
+91-9994783677
மேலும் விவரங்களுக்கு,
திரு. மின்னல் ஸ்ரீதர்
+91-9789778749

தஞ்சாவூர் அடுத்த திருநாகேஸ்வரத்திற்கு தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ‘திருவிண்ணகரம்’ எனப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
தஞ்சாவூர் அடுத்த திருநாகேஸ்வரத்திற்கு தெற்கே 1 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ‘திருவிண்ணகரம்’ எனப்படும் உப்பிலியப்பன் திருக்கோவில். இத்தல இறைவன், நிகரில்லாத பெருமாள் என்பதால், ‘ஒப்பிலியப்பன்’ என்று அழைக்கப்படுகிறார். சிலர் ‘உப்பிலியப்பன்’ என்றும் அழைப்பார்கள். உப்பு இல்லாத நைவேத்தியங்கள் படைக்கப்படுவதால் இந்த பெயர் ஏற்பட்டது. உப்பிலியப்பன் ஆலயத்தைப் பற்றி மேலும் சில விவரங்களை பார்க்கலாம்.
* இந்த ஆலயம், தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் எழுப்பப்பட்டதாக புராணங்கள் சொல்கின்றன. சுத்தானந்த விமானத்தின் கீழ், கிழக்கு நோக்கியபடி நின்ற கோலத்தில் உப்பிலியப்பன் அருள்பாலிக்கிறார். அருகில் வடக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் நாச்சியார் அருள்புரிகிறார்.
* இந்த ஆலயத்தை பற்றியும், இங்குள்ள பெருமாளை போற்றியும் நம்மாழ்வார், பேயாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் பாசுரம் பாடியுள்ளனர். பேயாழ்வார் 2 பாசுரமும், நம்மாழ்வார் 11 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 34 பாசுரங்களும், பொய்கையாழ்வார் ஒரு பாசுரமும் பாடியிருக்கிறார்கள்.
* திருப்பதியில் உள்ள ஏழுமலையானுக்கு தனி சுப்ரபாதம் இருப்பதுபோல, இத்தல இறைவனுக்கும் தனியாக சுப்ரபாதம் இருக்கிறது. இதை இயற்றியவர், ராமதேசிகாசார்ய சுவாமிகள். தினமும் திருப்பள்ளி எழுச்சியின்போது, இந்த சுப்ரபாதம் ஒலிக்கவிடப்படும்.
* கருட பகவான், காவிரி, தர்ம தேவதை, மார்கண்டேயர் ஆகியோருக்கு, இந்த தலத்தில் பெருமுாள் காட்சி கொடுத்துள்ளார். இத்தல இறைவனை துளசி, சூரியன், சந்திரன் ஆகியோர் பூஜித்து பலன் பெற்றுள்ளனர்.
* உப்பலியப்பனை, துளசி இலையால் அர்ச்சனை செய்து வழிபட்டால் ‘அஸ்வமேத யாகம்’ செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். பாத யாத்திரையாக இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் புண்ணியம் அடைவார்கள்.
* உப்பிலியப்பனின் கீழ் வலது கரம், தனது திருவடியை சுட்டிக்காட்டும் வகையில் இருக்கிறது. அந்த கரத்தில் ‘மாம் ஏகம் சரணம் வ்ரஜ’ என்ற கீதையின் சுலோகம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு ‘என்னை சரணடை, உன்னை பாதுகாக்கிறேன்’ என்று பொருள்.
* விஷ்ணு பகவான், பூதேவியை மணம் புரிந்த தலம் இது. மார்க்கண்டேயர், தன் மகளை விட்டு ஒருபோதும் பிரியக்கூடாது என்று பெருமாளுக்கு நிபந்தனை விதித்தார். எனவே அனைத்து விழாக்களிலும் பூதேவியுடன் இணைந்தே பவனி வருகிறார். வருடத்தில் ஒருமுறை, அதாவது நவராத்திரி உற்சவத்தில் அம்பு போடும் நிகழ்வின் போது மட்டும், உப்பிலியப்பன் தனது மனைவியை ஒரு மணி நேரம் பிரிவார். அந்த நேரத்தில் பூதேவி யாருக்கும் தரிசனம் தரமாட்டார். எனவே தாயார் சன்னிதி திரையிட்டு மறைக்கப்படும்.
* இத்தல பெருமாளுக்கு படைக்கப்படும், புளியோதரை, தயிர்சாதம், பொங்கல், வடை, முறுக்கு போன்ற நைவேத்தியங்களில் உப்பு போடப்படுவதில்லை. ஆனாலும் இந்த நைவேத்தியங்கள் சுவையாகவே இருக்கின்றன.
* இங்குள்ள சந்தான கிருஷ்ணனை, மடியில் எழச் செய்யும் சேவை தினமும் காலை 8.30 மணிக்கு நடைபெறும். குழந்தை இல்லாதவர்கள், இங்குள்ள பொய்கையில் நீராடி, நோன்பிருந்து அங்கப்பிரதட்சணம் செய்து சந்தான கிருஷ்ணனை மடியில் வைத்தபடி பெருமாளை வணங்கினால், விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது. விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.
திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்ரா பௌர்ணமி, வைகாசி வசந்தோத்சவம், ஆனி பிரமோத்சவம், ஆவணி பவித்ரோத்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உத்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
தல வரலாறு...
இந்த கோயிலில் மூலவராக திருநின்ற நாராயண பெருமாள் வீற்றிருக்கிறார். செங்கமலத்தாயார், ஆஞ்சநேயர், கருடாழ்வார், சக்கரத்தாழ்வார் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. கோயிலில் கொடிமரம் உள்ளது. பாஸ்கர தீர்த்தம், பாபநாச தீர்த்தம், அர்ச்சுனா நதி ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன. ஸ்ரீரங்கம், அழகர்கோவில் போன்று இங்கும் சோமசந்திர விமானம் உள்ளது.
திருத்தங்கல்லில் உள்ள ‘தங்காலமலை’ என்ற குன்றின் மீது திருநின்ற நாராயண பெருமாள் கோயில் உள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கோயிலை கட்டியவர் குறித்து விபரம் எதுவும் இல்லை.
இந்த கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 45ம் திவ்ய தேசமாகும். 2 நிலைகளாக உள்ள இந்த கோயிலில் முதல் நிலை கோயிலில் மூலவரான ‘நின்ற நாராயணப்பெருமாள்’ நிற்கும் கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தருகிறார். இவரது திருமேனி சுதையால் ஆனது. இவருக்கு தெய்வீக வாசுதேவன், திருத்தங்காலப்பன் என திருநாமங்கள் உள்ளன. 2ம் நிலை கோயிலில் செங்கமலத்தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குறிஞ்சி ஆண்டவர் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் பஸ் ஸ்டாண்டில் இருந்து 3 கிமீ தொலைவில் அமைந்துள்ளது குறிஞ்சி ஆண்டவர் கோயில். பழந்தமிழர்களின் நிலவகை பகுப்பில் மலையும் மலை சார்ந்த நிலமும் குறிஞ்சி என அழைக்கப்படுகிறது. இது தமிழரின் மலை நிலத்திற்கும், குறிஞ்சி செடிகளுக்கும் இடையேயான பிணைப்பை குறிக்கும் சொல்.
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் இந்த அரிய வகை குறிஞ்சி மலர்கள் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நீல வண்ணத்தில் பூத்துக் குலுங்கும் அழகை ரசித்த ஆஸ்திரேலிய பெண்மணி ஆர்.எல்.ஹாரிசன் என்பவர், இப்பகுதியை சேர்ந்த ராமநாதன் என்பவரை திருமணம் செய்தார். தனது பெயரை லீலாவதி என மாற்றிக் கொண்டார். கொடைக்கானலில் தங்கிய அவர், அங்கிருந்தே முருகன், தண்டாயுதபாணியாய் வீற்றிருக்கும் பழநி மலையை தினமும் பார்த்து பரவசமடைந்துள்ளார்.
மழைக்காலங்களில் மேகக் கூட்டங்கள் பழநி மலை மற்றும் கோயிலை மறைத்ததால், கொடைக்கானலில் ஒரு பகுதியிலேயே கடந்த 1936ல் ஒரு முருகன் கோயிலைக் கட்டி வழிபட்டுள்ளார். பின்னர் ராமநாதனின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி, அவரது கணவர் பாஸ்கரன் ஆகியோர் இந்தக் கோயிலை பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் நிர்வாகத்திற்கு கொடுத்துள்ளனர். இதன் பின்னர், இக்கோயில் குறிஞ்சி ஆண்டவர் கோயில் என்று அழைக்கப்பட்டு வருகிறது.
தற்போதும் குறிஞ்சி ஆண்டவர் கோயிலின் இடதுபுறத்தில் இருந்து பார்த்தால் பழநி மலைக்கோயிலை காணலாம். கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகள், குறிஞ்சி ஆண்டவரான முருகனை தரிசனம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் மே மாதத்தில் மலர் வழிபாடு நடைபெறும். இதனைக் காண நாடு முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். கொடைக்கானல் பகுதிகளில் பூத்துக் குலுங்கும் மலர்களைக் கொண்டே குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடை முழுவதும் அலங்காரம் செய்யப்படுகிறது. மேலும் குறிஞ்சி முருகனுக்கும் இந்த மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.
குறிஞ்சி ஆண்டவர் கோயில் நடையில் குறிஞ்சி செடிகள் உள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இச்செடிகள் பூக்கும். கடந்த 2006ல் குறிஞ்சிப் பூக்கள் நீல நிறத்தில் கொடைக்கானலில் பூத்து குலுங்கின. பச்சைப் புடவையை மாற்றி, நீலக்கலரில் புடவை கட்டி பவனி வருகிறாள் கொடைக்கானல் மலை இளவரசி என இந்த அழகை இப்பகுதி மக்கள் சிலாகிக்கின்றனர்.
12 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த ஆண்டு குறிஞ்சி மலர்கள் பூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிஞ்சி மலர் பூக்கும் காலங்களில், இக்கோயிலில் உள்ள முருகனுக்கு பெரும்பாலும் குறிஞ்சிப் பூக்களைக் கொண்டே அலங்காரங்கள் செய்து, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.