என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும்.
    விநாயகர் சதுர்த்திக்கு மறுநாள் வரும் பஞ்சமி திதியை ‘ரிஷி பஞ்சமி’ என்று அழைக்கிறார்கள். அன்றைய தினம் சப்த ரிஷிகளை வணங்கி வழிபாடு செய்பவர்களின் இல்லங்களில் வளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தின் மூலம் வேண்டிய வரங்களைப் பெற முடியும். பெண்களின் சவுபாக்கியம் அதிகரிக்க வேண்டிச் செய்யப்படும் விரதம் இதுவாகும்.

    அதுவும் வயது முதிர்ந்த பெண்களே இந்த விரதத்தை செய்வது வழக்கமாகும். ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த ரிஷி பஞ்சமி விரதத்தை கணவனுடனோ அல்லது தனியாகவோ செய்ய வேண்டும். அன்றைய தினம் காலை நீர்நிலைகளில், நெல்லிப்பொடியை உடலில் தேய்த்து குளிக்க வேண்டும்.

    பிறகு வீட்டின் நடுவில் மண்டபம் அமைத்து அதில் கலசங்கள் வைத்து, அந்த கலசங்களில் சப்த ரிஷிகளையும், அருந்ததியையும் சேர்த்து ஆவாஹனம் செய்து பூஜிக்க வேண்டும். சப்த ரிஷிகளுக்கு நைவேத்தியம் செய்ததை, 7 பேருக்கு தானமாக வழங்க வேண்டும். இரவு முழுவதும் சப்த ரிஷிகளின் கதைகளைக் கேட்டபடி கண் விழித்து இருக்க வேண்டும்.



    மறுநாள் காலையில் ரிஷிகளுக்கு ஹோமம் செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் ஏழு ஆண்டுகள் செய்து வந்தால், துன்பங்கள் விலகும். மங்கலம் உண்டாகும். செல்வங்கள் சேரும். சவுபாக்கியம் கிடைக்கும்.

    இந்த விரதங்களின் போது 10 விதமான தானங்களைச் செய்வது நன்மைகளை வழங்கும். இந்த தானங்கள் செய்யப்படுவது, நம்முடைய வாழ்விலும், விரதங்களைக் மேற்கொள்ளும் போதும், அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளுக்கு மன்னிப்பு வேண்டியே ஆகும்.

    கோ-தானம் (பசு அல்லது தேங்காய்), பூதானம் (நிலம் அல்லது சந்தனக்கட்டை), தில தானம் (எள்), ஹிரண்யம் (பொன்னாலான நாணயம்), வெள்ளி நாணயம், நெய், வஸ்திரம், நெல், வெல்லம், உப்பு ஆகியன. ஒவ்வொன்றையும் ஒரு பாத்திரம் அல்லது தட்டில் வைத்துத் தானம் செய்யலாம். தச தானம் செய்ய இயலாதவர்கள், பஞ்ச தானம் செய்யலாம். அவை, வஸ்திரம், தீபம், கும்பம், மணி, புத்தகம் ஆகியன.
    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டியையொட்டி சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் தண்டு விரதத்தை நிறைவு செய்தனர்.
    பழனி முருகன் கோவிலில், கடந்த 20-ந்தேதி காப்பு கட்டுதலுடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. இதையொட்டி பக்தர்கள் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்கினர். விரதங்களில் சஷ்டி விரதம் மிக உயர்ந்த விரதமாக கருதப்படுகிறது. சஷ்டி என்பது திதி விரதம் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை நாளில் தொடங்குகிறது.

    சஷ்டி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். சஷ்டி விரதத்தின் போது தினமும் கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். கந்தசஷ்டி விரத நாட்களான 6 நாட்களும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பாகும்.

    கந்தசஷ்டியையொட்டி முருகப்பெருமான் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் பூர்ண கும்பம் வைத்து விஷேச அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை நடைபெறும். பக்தர்கள் 6 நாட்கள் விரதம் இருப்பர். 6-வது நாளில் வாழைத்தண்டு, உளுந்தம் பருப்பு, பழங்கள், தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து முருகனுக்கு படைப்பர்.

    அதன்பின்னர், அவைகளை பக்தர்கள் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்வர். இதற்கு தண்டு விரதம் நிறைவு செய்தல் என்பர். இதன் மூலம் 6 நாட்களாக கடும் விரதம் இருக்கும் உடல் இயல்பு நிலைக்கு திரும்பும். 7-ம் நாளன்று திருக்கல்யாண வைபவத்தை கண்டு பக்தர்கள் விரதத்தை முடிப்பர். இதையொட்டி பழனி திரு ஆவினன்குடி கோவிலில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் தண்டுவிரதத்தை நிறைவு செய்தனர்.
    கந்தசஷ்டி விழாவின் கடைசி நாளான இன்று (சூரசம்ஹாரம்) மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். இந்த ஆறு நாளும் விரதம் இருக்க முடியாதவர்கள் கடைசி நாளான இன்று (சூரசம்ஹாரம்) முழு நாளும் விரதம் அனுஷ்டிக்கலாம்.

    அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.

    தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன்னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.

    இன்றைய தினம் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும். முடியாதவர்கள் பால், பழம், நீர் ஆகாரங்களை அருந்தலாம்.



    அன்று திருமுருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந்தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.

    பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும். மௌன விரதம் அனுஷ்டிப்பதால் உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும்.

    சூரசம்ஹாரத்தை முடிந்த பிறகு முருகப்பெருமான வணங்கி நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய பின்னர் உங்கள் விரதத்தை நிறைவு செய்யலாம்.

    ஓர் ஏழை இவ்விரதமிருந்து மனு என்ற மன்னன் ஆனான். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்று பொருள்.

    குழந்தைப்பேறு மட்டுமின்றி குடும்பப் பிரச்சினைகள் நீங்கவும், வேலை வாய்ப்புகள் பெறவும், கடன், பிணி போன்ற தொல்லைகள் அகலவும் கந்த சஷ்டிவிரதம் பெருமளவு துணை புரிகிறது.
    “துதிப்போர்க்கு வல்வினை போம், துன்பம் போம், நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக்கதித்தோங்கும், நிஷ்டையுங் கைகூடும். நிலமலரருள் கந்த சஷ்டிக் கவசந்தனை” என துதிக்கும் மக்களின் துன்பங்களை போக்கி வாழ்வில் இன்பம் தரும் விரதங்களில் எல்லாம் மிகச் சிறந்ததாக போற்றப்படுகிறது, தமிழ்க்கடவுளான முருகனின் ‘கந்த சஷ்டி விரதம்’. கையிலிருக்கும் ஞான வேல் கொண்டு நம் பாவங்களை எல்லாம் அழித்து நல்வாழ்வு அருளும் அந்த வேலவனுக்கு உகந்த கந்த சஷ்டி விரதம், ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசை முடிந்து சுக்லபட்சத்துப்பிரதமை முதல் சஷ்டித்திதி வரையிலான ஆறு நாட்கள் அனுசரித்து ஆறாம் நாளன்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரத்துடன் நிறைவு பெறுகிறது.

    விரத நாட்களில் அதிகாலையில் (பிரம்ம முகூர்த்தம்) கண்விழித்து, இயற்கைக் கடன்களை முடித்து, குளித்துவிட்டு தூய்மையான உடல் மற்றும் மனதுடன் திருநீறணிந்து முருக பக்தரான தேவராய சுவாமிகள் இயற்றிய கந்த சஷ்டிக் கவசம் பாடி முருகனை இருகரம் கூப்பித் தொழுது, ஆரத்தி நைவேத்தியம் படைத்துப் பிரார்த்திக்க வேண்டும்.

    தொடர்ந்து ஆறுநாட்கள் விரதமிருக்க முடியாதவர்கள், ஆறாம் நாளன்று மட்டுமாவது விரதமிருந்து கந்தனை வணங்கி அடியார்களுக்கு உணவளித்துப் பின் ஒரு நேரம் மட்டும் புசிப்பது நல்லது. நாள் முழுவதும் விரதமிருந்து மதியம் ஒருவேளை மட்டும் பச்சரிசி சாதத்துடன், தயிர் அல்லது வெல்லம் சேர்த்து உண்ணலாம். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம்.

    ராட்சஸ குணங்களை தூண்டக்கூடிய மசாலப் பொருட்கள், வெங்காயம் போன்றவைகளை விரத நாட்களில் தவிர்த்து சாத்வீக குணத்தைத் தரக்கூடிய வகையில் உணவுகளை நாம் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்துடன், ஆன்மிக வெற்றிக்கும் வழிவகுக்கும். வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் அவரவர் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதன்படி விரதங்களை கடைப்பிடிக்கலாம்.

    விரதம் இருக்கும் ஆறுநாட்களும் முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதுடன் வீட்டிலேயே கந்தசஷ்டிக் கவசம், திருப்புகழ், சண்முகக் கவசம், கந்த புராணம், சுப்ரமணிய பஞ்ச ரத்னம், கந்தர் அனுபூதி போன்ற முருகன் புகழ்பாடும் நூல்களை பாராயணம் செய்யலாம்.



    எதுவும் இல்லையெனில் “முருகா சரணம் கந்தா சரணம், கதிர்வேலா சரணம்” என சரண கோஷங்களுடன் சிந்தை எங்கும் சிங்காரவேலனின் நினைவுகளைத் தாங்கி சுய ஒழுக்கத்துடன் இருக்கவேண்டும். அதோடு மனதிலுள்ள காமம், குரோதம், உலோபம், மதம், மாச்சர்யம், கோபம், மயக்கம், கஞ்சத்தனம், அவா, செருக்கு, பொறாமை ஆகிய தீயகுணங்களை விட்டொழித்து, தேவகுணங்களான நற்குணங்களைப் பெறும் நோக்கத்துடன் கடைப்பிடிக்கப்பட்டு வருவதே சஷ்டி விரதத்தின் நோக்கம்.

    கந்த புராணம் போன்றவைகளை வாசிக்கும் போது நம் சிந்தனை வழிபாட்டில் ஒன்றிவிடும். கந்தனை தவிர வேறு எதுவும் சிந்தனைக்கு வராது. மேலும் படைக்கும் பிரசாதங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளித்து, முருகனின் பெருமைகளை அவர்களும் உணரும் விதம் செய்வது புண்ணியம் தரும்.

    விரத நாட்களில் குன்று தோறும் உள்ள முருகன் கோவில்களுக்கு சென்று, மலையை சுற்றி முருக கோஷம் இட்டபடி கிரிவலம் வருவதும் சாலச்சிறந்தது.

    ஆறுநாட்களும் முருகனை நினைத்து விரதமிருந்து, ஆறாம் நாளான சூரசம்ஹாரம் தினத்தன்று அதிகாலை எழுந்து நீராடி, தூய உடை உடுத்தி, நெற்றியில் விபூதி, சந்தனம் பூசி கொள்ளவேண்டும். பிறகு பூஜை அறையில் முருகப்பெருமானுக்குரிய ஆறுகோண கோலத்தை பச்சரிசி மாவினால் இட்டு “சரவணபவ” எனும் மந்திரம் எழுதி, மங்களத்தை நல்கும் ஐந்து முகவிளக்கேற்றி பூஜைக்கு தயார்படுத்தவேண்டும்.

    வீட்டிலுள்ள முருகப்பெருமானின் படம் அல்லது விக்ரகத்திற்கு தேன், பால், பன்னீர் போன்றவற்றால் அபிஷேகம் செய்து, மஞ்சள், குங்குமத்தால் அலங்கரித்து, வாசனை மிகு வண்ண மலர்களை சூடியும், நறுமணம் கமழும் சாம்பிராணி ஊதுபத்தி ஏற்றியும், சர்க்கரைப் பொங்கலை நைவேத்தியம் செய்ய வேண்டும். அத்துடன் கந்தகுரு கவசம், சஷ்டிக் கவசம் போன்றவைகளுடன் சரண கோஷங்களை எழுப்பியும் இறுதியில் அசுரனான சூரனை அழித்து இன்பம் தந்த முருகப் பெருமானை நினைத்து, தூய பழங்களை வெற்றிலை பாக்குடன் சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து கற்பூர ஆரத்தியுடன் மனதாரம் கோரிக்கைகளை வேண்டி விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.



    கந்த சஷ்டி விழாவானது முருகன் குடிகொண்டுள்ள அனைத்து இடங்களிலும் பெருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அறுபடை வீடுகளான பழனி, திருச்செந்தூர், திருத்தனி, சுவாமிமலை, திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய தலங்களில் மட்டுமின்றி இலங்கையின் கதிர்காமம், மலேசியாவின் பத்துமலை முருகன் போன்ற வெளிநாட்டு ஆலயங்களிலும் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    சூரபத்மனை சம்ஹாரம் செய்த திருச்செந்தூர் கடற் கரையில் வருடந்தோறும் நிகழும் சூரனை வதைக்கும் நிகழ்ச்சியை முருகா எனும் கோஷங்கள் முழுங்க லட்சக் கணக்கான முருக பக்தர்கள் கூடிக்கண்டுகளிக்கும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். ஆறுமுகமும், 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின் போது மட்டுமே திருச்செந்தூரில் முழுமையாக தரிசிப்பது நல்லது.

    “சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்” என்னும் சொல்வழக்கில் திரிந்து போன பழமொழியின் உண்மையான பொருள் “சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும்” என்பதே. இவ்விரதத்தின் பலனாக குழந்தைப் பேறு பெற்றவர்கள் எண்ணற்றவர்கள். முழுமனதோடும் நம்பிக்கையோடும் விரதத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் கண்டிப்பாக முருகப்பெருமானின் அருள் கிடைக்கும் என்பது அநேக மக்கள் தங்கள் அனுபவங்களால் உணர்ந்த உண்மை. குழந்தைப்பேறு மட்டுமின்றி குடும்பப் பிரச்சினைகள் நீங்கவும், வேலை வாய்ப்புகள் பெறவும், கடன், பிணி போன்ற தொல்லைகள் அகலவும் கந்த சஷ்டிவிரதம் பெருமளவு துணை புரிகிறது.

    அசுரனான சூரனை வதம் செய்த திருவிளையாடலே கந்த சஷ்டி விழா. சூரபத்மன் ‘நான்’ எனும் அகங்காரத்தாலும், அவனது தம்பிகளான தாரகாசூரன், சிங்கமுகன் ஆகியோர் மாயை மற்றும் கன்மத்தினாலும் வீழ்ந்தனர். இவர்களை கந்தனது ஞானவேல் வென்று உலகில் நீதியை நிலைநாட்டி மக்களை வீடுபேறடைய செய்த நிகழ்வே ‘கந்த சஷ்டி விரதம்’. இதனை அனுசரிக்கும் பக்தர்களுக்கு வேண்டும் வரங்களை நல்குவதே இந்த விரதத்தின் மகிமை.
    குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் கந்தசஷ்டி விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.
    முருகனுக்கு உகந்த விரதங்களில் ஒன்று சஷ்டி விரதமாகும். அதுவும் ஐப்பசி மாதம் வருகின்ற சஷ்டியை கந்த சஷ்டி என்று குறிப்பிடுவது வழக்கம். அதாவது கந்தனுக்குரிய சஷ்டி கந்தசஷ்டி ஆகும். முருகனுக்குரிய திதி விரதங்களில் முக்கியமானது சஷ்டி விரதமாகும்.

    'சஷ்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்பது பழமொழி. இந்தப் பழமொழி நாளடைவில் மருவி 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்று மாற்றம் பெற்றுவிட்டது. திருமண வீடுகளில் பரிமாறும் பொழுது சாம்பார், கூட்டு போன்றவைகள் குறைவாக இருந்தால் கரண்டியில் எடுக்கும் போது குறைவாகவே வரும். அப்பொழுது 'சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்' என்று சிலர் சொல்லிக் கொண்டிருப்பர்.

    ஆனால் அதன் உண்மையான விளக்கம் சஷ்டி திதியிலே முருகனுக்கு விரதமிருந்தால் 'அகப்பை' எனப்படும் கருப்பையில் குழந்தை உருவாகும் என்பதைக் குறிப்பதாகும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் இந்த விரதத்தை முறையாக மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டால் அழகான குழந்தையை பத்துத் திங்களில் பெற்று மகிழ்வர்.

    பொதுவாகவே விரதங்கள் மூன்று வகைப்படும். ஒன்று வார விரதம், மற்றொன்று திதி விரதம், மூன்றாவது நட்சத்திர விரதமாகும். வார விரதத்தை மேற்கொண்டால் சீரான வாழ்க்கை அமையும். நட்சத்திர விரதமிருந்தால் உச்சம் பெற்ற வாழ்க்கை அமையும். திதி விரதமிருந்தால் விதி மாறும். எனவே ஒருவருக்கு விதிக்கப்பட்ட விதி மாற வேண்டுமானால், திதி பார்த்து விரதமிருந்து அதற்குரிய தெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

    மார்க்கண்டேயனுக்கு என்றும் பதினாறு என்று விதியை இறைவன் மாற்றியமைத்த கதையை நீங்கள்அறிந்திருப்பீர்கள். அதைப்போல நமக்கு விதிக்கப்பட்ட விதி எதுவாக இருந்தாலும் அதை மாற்றக்கூடிய ஆற்றல் விரதங்களுக்கு உண்டு. உண்ணாவிரதம் இருந்து இந்த நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் மகாத்மா காந்தி. உண்மையாக நாம் விரதமிருந்து உள்ளன்போடு வழிபட்டால் சுகங்களை வழங்குவார் முருகப்பெருமான்.



    ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டியன்று விரதமிருந்து ஆலயங்களுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வருபவர்களும் உண்டு. அதைப்போல ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று கந்தனை வழிபட்டால் மிகுந்த நற்பலன்கள் கிடைக்கும். அமாவாசை அடுத்த ஆறு நாட்களிலும் அதிகாலையில் குளித்து, தூய ஆடை அணிந்து, கந்தனுக்கு உகந்த அப்பமான கந்தரப்பத்தை நைவேத்தியமாக வைத்து, கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தால், சந்தான விருத்தி கிடைக்கும். சங்கடங்களும் தீரும். வந்த துயரம் விலகி வளமான வாழ்க்கையும் அமையும்.

    ஆறுநாட்களும் விரதம் இருக்க இயலாதவர்கள் சஷ்டியன்று முழுமையாக விரதம் இருப்பது நல்லது. அந்தத் திருநாள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி 17.11.2015 செவ்வாய்க்கிழமை வருகின்றது. முருகனுக்குரிய செவ்வாய்க்கிழமையில் வருவது மிகவும் சிறப்பானதாகும். அன்றைய தினம் சூரசம்ஹாரம் முடிந்த பிறகு முருகப்பெருமானை வழிபட்டு இனிப்பு பொருள் உண்டு விரதத்தை நிவர்த்தி செய்வது நல்லது.

    முருகப்பெருமான் செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக புராண வரலாறு சொல்வதால், அன்றைய தினம் திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை வழிபடச் செல்கின்றனர். 'திருச்செந்தூரின் கடல் ஓரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம், தேடித்தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம்' என்று கவியரசு கண்ணதாசன் வர்ணித்திருப்பார்.

    எனவே அப்படிப்பட்ட தெய்வாம்சம் நமக்குக் கிடைக்க திருவருள் கைகூட, குருபீடமாக வீற்றிருக்கும் திருச்செந்தூருக்கு சென்று வழிபட்டு வரலாம். அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயங்களுக்குச் சென்று ஆறுமுகப்பெருமானை வழிபட்டு வரலாம். வீட்டிலுள்ள பூஜை அறையிலும் ஆறுமுகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் கூடிய தெய்வப்படத்தை வைத்து வழிபடலாம்.



    புத்திரப்பேறு மட்டுமல்லாமல் புகழ், கீர்த்தி, செல்வாக்குபோன்ற பதினாறு பேறுகளும் பெற்று செல்வ வளத்தோடு வாழ இந்த வழிபாடு கைகொடுக்கின்றது.

    'முருகா' என்று நீங்கள் ஒருமுறை சொல்கிற பொழுது முருகனோடு மும்மூர்த்திகளும் அருள் வழங்க வருவார்கள். 'மு' என்றால் 'முகுந்தன்' என்று அழைக்கப்படும் திருமாலைக் குறிக்கும், 'ரு' என்றால் 'ருத்ரன்' என்றழைக்கப்படும் சிவனைக் குறிக்கும். 'க' என்றால் கமலத்தில் அமர்ந்திருக்கும் கமலனைக் குறிக்கும்.

    மும்மூர்த்திகளுக்கும் உள்ள முதல் எழுத்துக்களை இணைத்தால் 'முருக' என்று வருவதால் முருகனைக் கும்பிட்டால் மும்மூர்த்திகளின் அருளும் முருகன் மூலமாகக் கிடைக்கும்.

    பெரியசாமி என்றழைக்கப்படும் கந்தசாமி தான் நமக்குச் சொந்தசாமி. அந்தச் சாமியை நாம் சஷ்டியில் விரதமிருந்து வழிபட்டால் சேமிப்பு உயரும். செயல்பாட்டில் வெற்றி கிடைக்கும்.

    நாளென் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
    கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு
    தாளும் சிலம்பும் சதங்கையும் சண்முகமும் தோளும் கடம்பும்
    எனக்கு முன்வந்து தோன்றிடினே!

    என்ற பாடல் மூலம் முருகப்பெருமானின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம்.
    ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது.
    ஐப்பசி வளர்பிறையில் வரும் ஏகாதசி பாபாங்குசா ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. பாபாங்குசா ஏகாதசியானது, நம்முடைய பாவங்களை அகற்றும் அங்குசம் போன்றது. கங்கை முதலிய புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், உயர்ந்த தான- தர்மங்கள் முதலானவற்றால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் இந்த ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பதால் கிடைக்கும் என்பது ஐதீகம். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், எம பயத்தில் இருந்து விடுபடுவார்கள், நரக வேதனை அவர்களை வாட்டாது என்று புராணங்கள் கூறுகின்றன.

    இந்த விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறைகள் தெரியாமல், விதிப்படி இல்லாமல், ஊரார் மெச்ச வேண்டும் என்பதற்காகவோ அல்லது கபடமாகவோ இந்த விரதத்தைக் கடைப்பிடித்தாலும் கூட பலன் கிடைக்கும். அப்படியானால் முறைப்படி இந்த விரதத்தை கடைப்பிடித்தால் எவ்வளவு சிறப்புகள் வந்து சேரும் என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை.

    விரதம் இருப்பது எப்படி?

    ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உபவாசம் இருந்து தூய்மையான மனதோடு துளசி தேவியுடன் கூடிய மகாவிஷ்ணுவை பூஜை செய்ய வேண்டும். ஐந்து விதமான பூக்களை அல்லது ஐந்து தாமரை மலர்களை வைத்து சுவாமியை அலங்கரிக்க வேண்டும். ஐந்து விளக்குகளை ஏற்றி வைக்க வேண்டும். ஐந்து வகையான நைவேத்தியங்கள் செய்து வைக்க வேண்டும். பூஜையை முடித்து, துளசியுடன் கூடிய மகாவிஷ்ணுவை வலம் வந்து வணங்க வேண்டும். பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமும், ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும்.



    ஐப்பசி மாத வளர்பிறை ஏகாதசி அன்று தொடங்கிய இந்த விரத பூஜையை ஒரு மாதம் கடைப்பிடிக்க வேண்டும். கார்த்திகை மாத வளர்பிறை ஏகாதசி அன்று இந்த விரத பூஜை நிறைவுபெறும். கார்த்திகை மாத ஏகாதசி அன்று உபவாசம் இருந்து பூஜை செய்ய வேண்டும். அன்று இரவு தூங்காமல் கண் விழித்திருக்க வேண்டியது அவசியம்.

    அந்த நேரத்தில் இறைவனின் நாமத்தை உச்சரித்தபடியே இருக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி தூய்மையான ஆடைகளை அணிந்து, ஐந்து படி அரிசி மாவில் சர்க்கரையும் பாலும் சேர்த்துப் பிசைந்து, மூன்று உருண்டைகள் செய்ய வேண்டும். அவற்றில் ஒன்றைத் துளசிக்கு நைவேத்தியமாக படைத்து விட்டு, மற்றொன்றை தானமாக கொடுக்க வேண்டும்.

    மூன்றாவது உருண்டையை உரலில் போட்டு, பால் ஊற்றிக் கரும்புகளை கொண்டு இடிக்க வேண்டும். அவ்வாறு இடிக்கும்போது பெண்கள், பக்தி பாடல்களை பாடிக்கொண்டே இடிப்பார்கள். இடிக்கும்போது எத்தனைப் பால் துளிகள் இடிப்பவர்கள் மீது விழுகின்றனவோ, அத்தனை ஆண்டுகள் அந்தப் பெண்கள் சொர்க்கலோகத்தில் வாழ்வார்கள் என்று இந்த விரதமுறை குறித்து கூறப்பட்டுள்ளது.
    கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர் ஒரு கைத்தண்ணீரையே அருந்துதல், கந்தபுராணம் படித்தல், கேட்டல், உறங்காது விழித்து இறைவனைச் சிந்தித்தல் ஆகியவற்றைத் தவறாது கொண்டொழுதல் வேண்டும்.
    விரதம் என்பதற்று ஒன்றையே எண்ணி அதில் மனம் லயித்திருத்தல் என்று பொருள். விரத காலங்களில் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல. மிதமாக உண்பதும், தீயதை நீக்கி நல்லவற்றை உண்பதும், மனம் அடங்கக் கற்பதுமே விரதத்தின் முக்கிய அம்சமாகும்.

    முருகனுக்குரிய விரதங்கள் மூன்று
    வார விரதம் : செவ்வாய்க்கிழமை விரதம்
    நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம்
    திதி விரதம் : சஷ்டி விரதம்

    செவ்வாய்க்கிழமை விரதம் :

    கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன். செவ்வாய்க்கிழமைகளில் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். மேலும் செவ்வாய்க்கிழமைகளில் முருகனின் ஆலயம் சென்று வழிபடுதல் மிக நல்ல பலன்களை தரும். வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், செவ்வாய்க்கிழமை விரதத்தை மிகவும் வலியுறுத்தி கூறியுள்ளார்கள். அவர், திருத்தணிகை முருகனையும், கந்தக்கோட்ட முருகனையும் முதல்நிலை கடவுளாகக் கொண்டிருந்தார். செவ்வாய்க்கிழமை விரதத்தை கடைப்பிடித்து வாழ்வில் அமைதி பெறலாம்.

    கார்த்திகை விரதம் :

    கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள். அவ்வாறு கந்தனை சீராட்டிபாராட்டி வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு ஒரு வரம் அளித்தார். கார்த்திகை பெண்களே, நீவிர் எம் குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம், கல்வி, ஆயுள், உத்த பத்தினி, நன் மக்கட்பேறு முதலிய நலன்களை அடைவர்Õ என்று அருள் புரிந்தார்.



    கார்த்திகை மாதத்தில் வரும் பரணியன்று இரவில் உண்ணாதிருந்து கார்த்திகையன்று அதிகாலை நீராடி முருகவேலை வழிபாடு செய்ய வேண்டும். அன்று பகலில் உறங்குதல் கூடாது.

    விநாயகரின் கட்டளைப்படி நாரதமுனிவர் பன்னி ரெண்டு ஆண்டுகள் கார்த்திகை விரதமிருந்து கந்தனை வழிபட்டு தேவ முனிவர்களில் முதன்மை பெற்றார்.

    சஷ்டி விரதம் :

    ஐப்பசி மாதத்தில் சுக்கிலபட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை ஆறு தினங்கள் விரதம் இருக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் வைகறையில் எழுந்து நீராடி பூரண கும்பத்தில் நீர் நிரப்பி மாவிலை வைத்து தருப்பையை வரிசையாக வைத்து சந்தனமும் அட்சதையும் வைத்து முருகனை ஆவாகனஞ் செய்து அர்ச்சித்து வழிபட வேண்டும். பகலில் உறங்குதல் கூடாது. ஆறு காலங்களிலும் பூஜிக்க வேண்டும். கந்தனின் சரித்திரங்களை கேட்க வேண்டும். பாராயணம் புரிதல் வேண்டும். தியானம், ஜெபம் செய்தல் வேண்டும்.

    இவ்வாறு மாதந்தோறும் வரும் சுக்கிலபட்ச சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகும். எண்ணிய நலமும் புண்ணிய பலமும் பெறுவர்.
    கந்த சஷ்டி விரதத்தை கடைபிடித்தாலேயே நாரத முனிவர் மேலான பதவி பெற்றார். இவ்விரதச் சிறப்பினை விநாயகப் பெருமானே நாரத முனிவருக்கு எடுத்துரைத்தருளினார்.

    முன்னவன் அதனைக் கோளா முழுதருள் புரிந்து நோக்கி அன்னது பெறுதி திண்ணம் ஆறுமா முகத்து நம்பி பொன்னடி வழிபாடாற்றிப் பொருவில்கார்த்திகை நாள் நோன்மைப் பன்னிரு வருடங்காறும் பரிவுடன் புரிதி என்றான். இப்படி ஆரல் நாளில் விரதத்தை இயல்பின் தோற்று முப்புவனத்தி வேண்டும் முறையை அடைந்த நீரார் மெய்ப்படு தொகையை யாரே விளம்புவார்.. என்று கந்தபுராணம் இவ்விரத்தைப் போற்றுகின்றது.

    கந்த சஷ்டி விரதம் மேற்கொள்வோர் ஒரு கைத்தண்ணீரையே அருந்துதல், தருப்பையில் படுத்தல், கந்தபுராணம் படித்தல், கேட்டல், உறங்காது விழித்து இறைவனைச் சிந்தித்தல் ஆகியவற்றைத் தவறாது கொண்டொழுதல் வேண்டும்.

    ஓர் ஏழை இவ்விரதமிருந்து மனு என்ற மன்னன் ஆனான். சஷ்டி விரதம் இருந்தால் நம் உள்ளத்தில் இறைவன் குடி கொள்வான் என்று பொருள்.



    கந்த சஷ்டி நாளுக்கு முன் வரும் பிரதமை முதல் ஆறு நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து இவ்விரத்தை அநுட்டிப்பது ஒரு முறை.
    அவ்வாறு இயலாதவர்கள் அந்நாட்களில் ஒரு முறை வீதம் ஆறு மிளகையும் ஆறு கை நீரையும் அருந்தலாம்.

    உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் இது. உண்ணாவிரதம் இருப்போர் போன்று உப்பு நீர், எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம் பழச்சாறு, இளநீர் முதலியவற்றை இவ்விரதமிருப்போர் அருந்தக் கூடாது.

    இவ்விரத நாட்களில் விடியற்காலையில் எழுந்திருந்து, நாட் கடன்களை முடித்து, திருநீறணிந்து முருகவேளைத் தியானித்துப் பின் நீராடி, தோய்த்துலர்ந்த இரு ஆடைகளை அணிந்து, தம்பத்திலும், விம்பத்திலும், கும்பத்திலும் முருகவேளை வழிபட்டு இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்துப் பூசிக்க வேண்டும். ஏழாம் நாட்காலை விதிப்படிப் பூசித்துக் கந்தன் அடியார்களுடன் அமர்ந்து பாரணை செய்தல் வேண்டும் என்று கந்த புராணம் விதிக்கின்றது.

    கந்தவேள் சூரபத்மனை வெற்றி கொண்ட நாளே கந்த சஷ்டி, நமது உள்ளத்தில் ஆட்சி செய்து வாழும் காமம் முதலியவற்றை வெற்றி கொண்டு வாகை சூடிப் பேரின்பம் எய்தும் குறிப்பே சூரசம்ஹாரத்தின் பொருளாகும். அதற்குரிய ஆன்மீக வீரம் பெற உதவுவதே கந்த சஷ்டி விரத மாகும். இவ்விரதம் இருப்போர் பெறும்பயன் பெரும்பயனாகும்.
    சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதை அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்றிரவு நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது.

    இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதனை ஆண்டுக்கு ஆண்டு கந்தர் சஷ்டி சமயத்தில் 6 நாட்கள் மட்டும் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இந்த கந்த சஷ்டி தொடங்கி மறு கந்த சஷ்டி வரை மாதாமாதம் வரும் சுக்ல சஷ்டியில் ஒரு வருடம் தொடர்ந்து விரதமிருப்பவர்களும் உண்டு.

    இது போல 6 ஆண்டுகள் 12 ஆண்டுகள் என்று கணக்கு வைத்து தொடர்ந்து விரதம் அனுஷ்டிப்பவர்களும் உண்டு. இதில் மாதா மாதம் அமாவாசைக்குப் பிறகு வருவது சுக்லசஷ்டி என்று பெயர் பெறும். இதனை பூர்வட்ச சஷ்டி என்றும் கூறுவர்.

    பவுர்ணமி கடந்த பின் வரும் சஷ்டி கிருஷ்ண சஷ்டி என்று பெயர் பெறும். இதனை அபரபட்ச சஷ்டி என்றும் கூறுவார்கள்.

    கந்த சஷ்டி விரதம் எவ்வாறு அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்று தெரியுமா?

    ஐப்பசி மாதம் தீபாவளி அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து ஆற்று நீரில் எதிர்முகமாகவும், குளம், கிணறு ஆகியவற்றில் வடக்கு நோக்கி நின்றும் தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.

    தோய்த்து உலர்த்திய தூய ஆடையை அணிந்து இரவில் தம்பம், பிம்பம், கும்பங்களில் முருகனைப் பூஜித்து வெல்லம் சேர்த்து நெய்யில் சமைத்த மோகத்தை நிவேதித்து பிற உபசாரங்களும் செய்தல் வேண்டும். முருகன் சன் னிதி சென்று வலம் வந்து வணங்க வேண்டும்.

    அன்று திரு முருகாற்றுப்படை, கந்த சஷ்டி கவசம், கந்தரலங்காரம், கந்தரங்தாதி, கந் தரனுபூதி, கந்த கலிவெண்பா, திருப்புகழ் ஆகியவற்றை ஆசாரத்துடன் ஓதி கந்தபுராணம் படிக்க வேண்டும்.

    சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.

    ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பராணம் செய்தல் வேண்டும்.

    இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும். ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாரணம் செய்தல் வேண்டும்.

    ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்தில் வரும் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் விரதம் இருக்க வேண்டும்.

    ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து, குளித்து முருகனை மனம் உருக வணங்க வேண்டும்.

    பூரண கும்பத்தில் தண்ணீர் நிரப்பி மாவிலை வைத்து, தருப்பையை வரிசையாக இட்டு முருகனை அதில் ஆவாகனம் செய்து மலரிட்டு தீபம் காட்டி வழிபடுவது நல்லது.



    சஷ்டி விரத நாட்களில் பகலில் தூங்குதல் கூடாது. சஷ்டி தினத்தன்று இரவிலும் விழித்து இருப்பது கூடுதல் பலன்களைத் தரும்.

    முருகனை ஆறு காலமும் பூஜை செய்ய வேண்டும்.

    6 நாட்களும் கந்தனின் சரித்திரங்களையும், சிறப்புகளையும், திருவிளையாடல்களையும், முருகன் செய்த அற்புதங்களையும் கேட்க வேண்டும்.

    திருப்புகழ் பாராயணம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு பாராயணம் செய்கிறோமோ அந்த அளவுக்கு முருகனை நெருங்க முடியும்.

    பிரார்த்தனை, பாராயணம் நேரம் தவிர கூடுதல் நேரம் கிடைத்தால் அந்த சமயத்தை வீணாக்காமல் முருகனை மனதில் நிலை நிறுத்தி தியானம் செய்யலாம்.
    சஷ்டி விரதம் இருப்பவர்களது வினைகள் வெந்து சாம்பலாகி விடும்.

    விரதத்தை கடைபிடிக்க கடைபிடிக்க பக்தர்களுக்கு எண்ணிய நலமும், புண்ணிய பலமும் கிடைக்கும்.

    ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால் பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.

    அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு. இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும். தொடர்ந்து ஆண்டு முழுவதும் வரும் 24 சஷ்டிகளிலும் விரதம் அனுஷ்டிப்பது மிகவும் நல்லது.

    முருக பெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது அல்லவா? தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.

    சஷ்டி விரதம் அனுசரிக்கும் முறை பற்றி திருவாவடுதுறை ஆதீனம் வெளியிட்டுள்ள குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சஷ்டி விரதம் ஐப்பசி மாதத்து சுக்லபட்ச சஷ்டியில் தொடங்கி ஓர் ஆண்டில் வரும் இருபத்து நான்கு சஷ்டிகளிலும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஐப்பசி மாதத்து சஷ்டியே கந்த சஷ்டி என்று சிறப்பித்துப் பேசப்படுகிறது. இது சுக்ல பட்சத்துப் பிரதமை முதல் ஆறு நாட்களும், உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி அனுஷ்டிக்கத்தக்கது.

    இவ்வண்ணம் செய்ய இயலாதவர்கள், நண்பகலில் ஆறு மிளகையும், ஆறு கை நீரையும் அருந்தலாம். உடல் வளம் பெருக்கும் இக்காலத்து உண்ணாவிரதம் போல் அல்லாது உயிர் உணர்ச்சி வளர்க்கும் விரதம் ஆதலால், உப்பு நீரை அருந்துதலும் எலுமிச்சம் பழச்சாறு, நாரத்தம்பழச்சாறு, இளநீர் ஆகியவற்றை அருந்துவதும் அறவே கூடாது.

    கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மண்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணி நிதிகளிலோ நீராட வேண்டும்.

    தோய்த்து உலர்ந்த ஆடையைக் கட்டிக் கொண்டு, அநுஷ்டானங்களை செய்து, முன் கூறியபடி முருகனையே வழிபட்டு, இரவில் நெய்யில் சமைத்த மோதகத்தை நிவேதித்து விதிப்படி பூஜை செய்தல் வேண்டும். ஏழாம் நாள் காலையில் விதிப்படி சிறப்பு வழிபாடுகள் ஆற்றிப் பாராயணம் செய்ய வேண்டும்.

    வீட்டில் தூய்மை காக்க வேண்டும். கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். முறைப்படி இவற்றை பின்பற்றினோர் குழந்தை பாக்கியம் பெறுவர். வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும் மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி.
    கேதார கவுரி விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.
    19-10-2017 கேதார கவுரி விரதம்

    இந்த உலகத்தில் ஆணுக்குப் பெண் சரிசமம் என்ற உண்மையை முதன் முதலில் உணர்த்தியவர் சிவபெருமான். அதற்காக அவர் தனது உடலில் சரி பாதியை பார்வதிதேவிக்கு தந்து அருளினார். சிவனிடம் பாகம் வேண்டி பார்வதி தேவி இருந்த விரதமே ‘கேதார கவுரி விரதம்’ ஆகும். கேதாரம் என்பது ஈசனைக் குறிக்கும். கோதாரனை நினைத்து கவுரியாகிய அம்பாள் இருந்த விரதம் என்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தது.

    கயிலாயத்தில் சிவபெருமானும் பார்வதி தேவியும் இருந்தபோது சூரியன், சந்திரன், பிரம்மா, விஷ்ணு முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள்; தும்புரு, நாரதர், சனகாதி முதலான முனிவர்கள், அட்டவசுக்கள் முதலான யாவரும் தினமும் கூடிப் பார்வதி பரமேஸ்வரனை வணங்கிச் சென்றனர். ஆனால் பிருங்கி முனிவர், சிவனை மட்டும் பலமுறை விழுந்து வணங்கினார். அம்பிகை நெருங்கி அமர, முனிவரோ வண்டு உருவம் எடுத்து இடையில் புகுந்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதனால் கோபமடைந்த தேவி இதற்கான காரணத்தை சிவனிடம் வினவினார்.

    அதற்கு சிவன், ‘தேவி! பிருங்கி முனிவன் பாக்கியத்தை விரும்புபவன் அல்ல. மோட்சத்தை விரும்புபவன். காரணப் பொருள் ஒன்றேயெனக் கருதுபவன்; மற்றொன்றிருப்பதாகக் கருதாதவன்; ஆதலின் என்னை மாத்திரம் பிரதட்சணம் செய்தான்’ எனக் கூறினார்.

    உடனே பார்வதி தேவி பிருங்கி முனிவரை அழைத்து, ‘நான்தான் ஈசனும் சக்தியாக இருப்பவள். உலகில் சக்தியும் சிவனும் இணைந்து இருப்பதுதான் நியதி. சக்தி இல்லையேல் சிவன் இல்லை. உம் உடம்பில் ஓடும் ரத்தமும் ஒட்டியிருக்கும் சதையும் கூட சக்தியான எனது அம்சங்களே. அது உமக்குத் தெரியுமா?’ எனக் கோபமாகக் கேட்டாள்.

    முனிவரோ, ‘தாயே! நீங்கள் கூறும் சக்தி ஏதும் எனக்கு வேண்டாம் என்று கூறிவிட்டு தன் உடம்பில் இருந்த ரத்தத்தையும் சதையையும் உதறி எறிந்தார். சக்தியை இழந்த அவரால் நிற்கக்கூட முடியவில்லை. தடுமாறிய அவருக்கு சிவபெருமான் ஓர் ஊன்றுகோலைக் கொடுத்தார். அதன் உதவியோடு தனது இருப்பிடம் சென்றடைந்தார் முனிவர். இந்த சம்பவம் பார்வதியின் மனதை வெகுவாகப் பாதித்தது.

    தனக்கு நேர்ந்த அவமதிப்பை, ஈசன் கண்டுகொள்ளவில்லையே என்று நினைத்த பார்வதிதேவி, கயிலாசத்தை விட்டு பூலோகம் வந்தாள். அங்கு கவுதம முனிவரது ஆசிரமத்தில் தங்கினாள். அன்னையின் வருகையால், பன்னிரண்டு வருடம் மழையின்றி வாடியிருந்த ஆசிரமத்து நந்தவனமானது துளிர்த்துப், பூத்து நறுமணம் வீசியது.

    அப்போது தர்ப்பை முதலியவற்றிற்காக வெளியே சென்றிருந்த கவுதம முனிவர்; உமாதேவியார் எழுந்தருளியிருப்பதைத் தெரிந்து கொள்ளாதவராய்ப் பூங்காவைக் கண்டு அதிசயித்து, அதனைச் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்தார். வரும்போது ஒரு வில்வ மரத்தடியிலே எழுந்தருளியிருக்கும் உமாதேவியாரைக் கண்டார். ‘தாயே! கயிலாசத்தை நீங்கிப் பூலோகத்திலே அடியேனுக்குக் காட்சியளித்தருளிய தன்மைக்கு, யான் என்ன தவம் செய்தேனோ? என் முன்னோர் புரிந்த பெருந்தவமோ? அல்லது இந்த ஆசிரமந்தான் செய்த புண்ணியமோ?’ என்று கூறி வணங்கினார். மேலும் ‘ஈஸ்வரியே! நீர் பூலோகத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ?’ எனக் கேட்டார். பார்வதிதேவி கயிலாசத்தில் நடந்த சம்பவங்களை எல்லாம் கூறினாள். இதையெல்லாம் கேட்ட முனிவர் பார்வதியை சிம்மாசனம் ஒன்றின் மீது எழுந்தருளச் செய்து, அவளுக்கு வேண்டும் உபசாரங்கள் செய்து வணங்கினார்.



    பார்வதி தேவி கவுதமரை நோக்கி, ‘தபோதனரே! சிவபெருமானுக்கு இடது பாகத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு, இப்பூவுலகில் யான் ஒரு விரதம் அனுஷ்டிக்க வேண்டும். மிகவும் மகத்துவம் நிறைந்த விரதமொன்றும், அதனை அனுஷ்டிக்கும் முறைமையும் உரைத்தல் வேண்டும்’ எனக் கேட்டாள்.

    முனிவர், ‘தாயே! பூவுலகில் அனுஷ்டிக்கப்படும் சிறந்த விரதம் ஒன்றுண்டு. கேதாரீஸ்வரர் விரதம் என்றும், கேதார விரதம் என்றும் அதற்குப் பெயர். இந்த கேதாரீஸ்வரர் விரதம் புரட்டாசி மாதம் வளர்பிறை அஷ்டமித் திதியிலிருந்து ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசித் திதி வரையில் அனுஷ்டிக்கப்படுவது. அல்லது புரட்டாசி தேய்பிறை பிரதமை முதல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசி வரை உள்ள நாட்களில் அனுஷ்டிக்கப்படும்.

    அதுவும் இல்லாமல் ஐப்பசி தேய்பிறை சதுர்த்தசியாகிய ஒரு நாளாயினும் கேதாரநாதரைக் குறித்து அனுஷ்டிக்கப்படுவதாகும். விரதம் ஆரம்பித்த நாட்கள் முதல் ஒவ்வொரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி இரவில் தர்ப்பையில் உறங்க வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அர்ச்சனை செய்து வெண்தாமரை, வெற்றிலை, பாக்கு, சந்தனம், மாவிலை, அரளி மொட்டு, வாழைப்பழம், அதிரசம், முறுக்கு போன்றவற்றை 21 என்ற எண்ணிக்கையில் படைத்து பூஜித்து கேதார நாதரை வணங்கி உபவாசமிருத்தல் வேண்டும். மறுநாள் உதயத்தில் உபவாசம் முடிக்க வேண்டும்’ என்று பார்வதியை நோக்கி கவுதமர் பணிவுடன் கூறினார்.

    பார்வதி தேவியும் இதன்படி விரதமிருந்தார். விரதத்தின் 21-வது நாள் சிவபெருமான், சிவகணங்களோடு கவுரி தேவியான பார்வதிக்குக் காட்சி தந்தார். கவுதம முனிவரை ஆசீர்வதித்து, தனது மேனியில் பாதியை அன்னைக்கு தந்து அர்த்தநாரீஸ்வரராகிக் கயிலாயத்திற்கு எழுந்தருளினார். இதன் மூலம் ஆணும், பெண்ணும் சமம் என இந்த உலகுக்கு உணர்த்தினார். கேதார கவுரி விரதமிருக்கும் பெண்களும் மேற்கூறிய முறையில் விரதம் இருக்க வேண்டும்.

    இதில் சதுர்த்தசி நாளில் கும்பம் வைத்து அதை அம்மனாக நினைத்து வழிபட வேண்டும். வெண்மையை கவுவர்ணம் என்பர். ஆதியில் பரசிவத்திலிருந்து மெல்லிய மின்னல் ஒளி போல் வெண்மையாகத் தோன்றி, அண்ட சராசரங்களையும் உயிர்களையும் படைத்து, அவற்றுக்கெல்லாம் அருள, மலைகளின் மேல் வந்து தங்கினாள் தேவி. வெண்மையான நிறத்துடன் இருந்தாலும் மலைகளில் தங்கியதாலும் கவுரி என அழைக்கப்பட்டாள். கவுரி வழிபாடு இல்லறத்தைச் செழிக்கச் செய்யும் சிறந்த வழிபாடு என்கின்றன ஞானநூல்கள்.

    இவ்விரத நாட்களில் இருபத்தொரு இழையிலாகிய காப்பை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டிக் கொள்ளுதல் வேண்டும். இறுதி நாளாகிய சதுர்த்தசி அன்று கும்பம் வைத்து, அதை அம்மனாக நினைத்து பூஜை செய்ய வேண்டும். விரத நாட்களில் உபவாசமிருக்க இயலாதவர் கேதாரநாதருக்கு நிவேதிக்கப்பட்ட உப்பிலாப் பணியாரம் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

    கேதார கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி நினைத்த காரியம் எல்லாம் கைகூடும். விரதம் இருக்கும் பெண்கள் எல்லா வளங்களையும் நலன்களையும் பெற்று, இல்வாழ்வில் கணவரோடு இணைபிரியாது வாழ்வது நிச்சயம்.
    நாளை (19-ந்தேதி வியாழக்கிழமை) கேதார கவுரி விரதம் கடைபிடிக்க வேண்டிய தினமாகும். இந்த கேதார கவுரி விரதம் தோன்றிய வரலாற்றை பார்க்கலாம்..

    மிக மிக பண்டைய காலத்தில் கைலாயத்தில் பரமசிவனும், பார்வதியும் நவரத்தினங்கள் இழைத்த சிம்மாசனத்தில் அமர்ந்து இருப்பர். பிரம்மா, விஷ்ணு, முப்பத்து முக்கோடி ரிஷிகள், தேவர்கள் மற்றும் அநேக தேவ ரிஷிகளும் தினந்தோறும் இவர்கள் இருவரையும் சுற்றி வந்து நமஸ்கரித்துச் செல்வர்.

    இவ்வாறு அனைவரும் தினமும் செய்ய பிருங்கி ரிஷி என்பவர் மட்டும் பார்வதி தாயினை விட்டு சிவனை மட்டும் சுற்றி வந்து நமஸ்கரித்தார்.

    இதனால் பார்வதி தாய்க்கு கோபம் உண்டாயிற்று. ஏன் பிருங்கி ரிஷி இவ்வாறு செய்கிறார் என்று பார்வதி, சிவனைக் கேட்டார். சிவன் அதற்கு பிருங்கி ரிஷி பாக்கியங்களை கேட்கவில்லை. மோட்சத்தினையே விரும்புகிறார். ஆகவே தான் அவர் என்னை மட்டும் சுற்றி வந்தார் எனக் கூறினார்.

    பார்வதி தேவி பிருங்கி ரிஷியினைப் பார்த்து ‘உன் தேகத்தில் இருக்கின்ற ரத்த மாமிசங்கள் நான் கொடுத்தது. அதனை திருப்பி கொடுத்து விடு என்று கூறினார். பிருங்கி ரிஷியும் தேவி கூறியபடியே செய்தார். அதனால் அவருக்கு நிற்கக் கூட முடியாமல் போயிற்று. பரமசிவன் பிருங்கி ரிஷியினை நோக்கி, ‘நீ பார்வதி தேவியினை விட்டு என்னை நமஸ்கரித்ததால் அன்னை உனக்கு இந்த தண்டனை அளித்தாள்’ எனக் கூறி ஒரு கைத்தடி ஒன்றினைக் கொடுத்தார்.

    பிருங்கி ரிஷி அதனைப் பெற்றுச் சென்றார். பார்வதி தேவி சிவனிடம் கோபித்துக் கொண்டு கைலாயத்தினை விட்டுச் சென்று பூவுலகிற்கு வந்தார். அங்கு வால்மீகி மகரிஷி சஞ்சரிகா நின்ற ஒரு நந்தவனத்தில் ஒரு மரத்தின் அடியில் எழுந்து அருளினார்.

    அந்தப் பகுதியானது 12 ஆண்டுகள் மழையின்றி வறண்டு இருந்த பூமி. பார்வதி அம்மன் வந்து விருட்‌ஷத்தின் அடியில் அமர்ந்ததும் அங்கு மழை பெய்தது. செடி, கொடி, மரங்கள் தழைத்தன. பூத்துக் குலுங்கின. பல அரிய பூக்களின் வாசத்தினைக் கண்டு வால்மீகி மகரிஷி அங்கு வந்து அன்னையை தரிசித்தார். பூஜை செய்து வணங்கி அம்பிகையிடம் முழு விவரங்களும் கேட்டறிந்தார். பின்னர் தேவியினை தன் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று நவரத்தின சிம்மாசனத்தினில் அமரச் செய்தார்.

    பார்வதி தேவி வால்மீகி முனிவரைப் பார்த்து, “ரிஷியே, நான் மீண்டும் ஈசனுடன் சென்று சேருவதற்கு இந்த பூலோகத்தில் மிக மேலான ஒரு விரதத்தினை நான் ஏற்று செய்ய வேண்டும். அப்படியொரு விரதத்தினை கூறுங்கள் என்று கூறினாள். அப்போது வால்மீகி முனிவர் அம்பிகையை வணங்கி கூறியதாவது:-

    “இந்த பூலோகத்தில் ஒருவரும் அறியாத ஒரு விரதமுண்டு. அந்த விரதத்திற்கு கேதாரீஸ்வரர் நோன்பு என்று பெயர். அந்த விரதத்தினை அனுஷ்டித்தால் நீங்கள் நினைத்தது நடக்கும் என்றார். அம்பிகை அந்த விரதத்தினை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும் என்று கேட்க வால்மீகி முனிவர், ‘புரட்டாசி மாதம் சுக்லபட்ச தசமி தொடங்கி ஐப்பசி மாதம் கிருஷ்ணபட்சம் தீபாவளி அமாவாசை வரைக்கும் தொடரும் விரதம் இது. தினமும் காலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து ஆல மரத்தின் கீழ் சிவலிங்கத்தினை பிரதிஷ்டை செய்து, அபிஷேகம் செய்து விபூதி, சந்தனம், பூக்கள், அட்சதை போட்டு வெற்றிலை, பாக்கு, பழம், பட்சணங்கள் நைவேத்தியம் படைத்து அந்த பிரசாதத்தினையே உண்ண வேண்டும்.

    நோன்பு கயிற்றினை கையில் அணிய வேண்டும். 21-வது நாள் ஈஸ்வரன் காட்சி அளித்து வேண்டிய வரம் அளிப்பார் என்று கூறினார். இந்த கேதார கவுரி விரதத்தை எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

    இத்தகைய சிறப்புடைய கேதார கவுரி விரதம் பொதுவில் 21 நாள் அனுசரிக்க வேண்டிய விரதம்.

    பொதுவாக நோன்பின் முதல் நாள் அன்று 21 நூல் கொண்டு 21 முடிச்சுகளால் கலசத்தினை சுற்றி அமைப்பர். இக்கலசமே சிவபார்வதியாக வழிபடப்படுகின்றது. தினமும் வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் நைவேத்தியம் வைத்து அதனையே பிரசாதமாக உண்டு இருப்பர். 21-ம் நாள் அன்று 21 அதிரசம், 21 வாழைப்பழம், 21 மஞ்சள், 21 வெற்றிலை, 21 கொட்டை பாக்கு, தேங்காய், சந்தனம், பூக்கள் வைத்து வழிபடுவர். 21 வகை காய்கறிகள் கொண்டு உணவினை சமைத்து உற்றார்-சுற்றார் சூழ சாப்பிட்டு விரதத்தினை முடிப்பர்.

    இது பெண்களுக்கு மிகச் சிறப்பான விரத பூஜையாகும். இப்பூஜை அவரவர் குடும்ப வழக்கப்படி சற்று மாறுபடும். அவரவர் பெரியோர்களிடம் கேட்டு அறிந்து அவர்கள் மூலம் எடுத்துச் செய்வது நல்லது.

    ஐப்பசி அமாவாசை அன்று செய்யும் பூஜையில் முடிந்தால் தங்கம் (நகை) சாத்தி பட்டுவஸ்திரம் சுற்றி பூவால் அலங்கரித்து சந்தன குங்குமம் இட வேண்டும். விளக்கேற்றி வைக்க வேண்டும். மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அருகம்புல், பூ சுற்றி, மஞ்சள் குங்குமம் இட்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும்.

    என 16 நாமங்களைச் சொல்லி தூப தீப ஆராதனை செய்து நைவேத்தியம் படைத்து வழிபட வேண்டும்.

    பின்னர் அம்மி குழவியினை நன்கு சுத்தம் செய்து பலவித அலங்காரங்களை அதற்கும் செய்து வில்வம், தும்பை போன்ற விசே‌ஷ இலை, பூக்களையும் சேர்த்து சிவ ஷ்தோத்ரம் செய்து பூஜிக்க வேண்டும்.

    தூப, தீப ஆராதனைகள் நைவேத்தியம் வைத்து அட்சதை போட்டு நமஸ்கரித்து பின்னர் வீட்டில் பெரியவர் மூலம் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். பெரியவர்களை நமஸ்கரிக்க வேண்டும். ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் நோன்பு கயிறு கட்டிக் கொள்ள வேண்டும். வருவோருக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

    பார்வதியும் அவ்வாறே இந்த விரதத்தை கடை பிடித்தாள்.

    இறைவனும் 21-ம் நாள் தேவ கணங்கள் சூழ காட்சி அளித்தார். அதோடு தனது இட பாகத்தினை அம்பிகைக்கு அளித்து அர்த்த நாரீஸ்வரராக கைலாயம் சென்றார்.

    அன்று முதல் தேவர்கள் அனைவரும் இந்த விரதத்தினை கடை பிடிக்க தொடங்கினார்கள். ஒரு சமயம் தேவ கன்னியர் கங்கை கரையில் விரதத்தினை அனுஷ்டித்து வந்தனர். அச்சமயம் புண்ணியவதி, பாக்கியவதி என்ற இரு அரச குமாரிகள் அங்கு வந்தனர். அரச குமாரிகளாக அவர்கள் இருந்தாலும் நாடு செல்வங்களை அவர்களது தந்தை இழந்திருந்த காரணத்தினால் மிகுந்த வறுமையில் இருந்தனர். தேவ கன்னியர்கள் நோன்பு கயிற்றினை இவர்களுக்கும் கொடுக்க இருவரும் அதனை கையில் கட்டிக் கொண்டு வீடு திரும்பினர். அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

    குடிசை வீடு மாட மாளிகை ஆகி இருந்தது. இழந்த நாடு மீண்டும் கிடைத்தது. இருவருக்கும் திருமணம் ஆகி புத்திர பாக்கியத்துடன் வாழ்ந்தனர்.

    இச்சமயத்தில் பாக்கியவதி தன் கையில் இருந்த கயிற்றினை புதரின் மேல் எரிந்து விட்டாள். அதன் விளைவாக அவள் மிகுந்த வறுமையினை அடைந்தாள். நாடும் போயிற்று. இந்த நோன்பு கயிறு விழுந்த இடம் அவரைக் கொடி மீது என்பதால் நிறைய அவரை காய்த்துக் கொட்டியது. பாக்கியவதி குடும்பம் அவரைக் காய்களை உண்டே காலம் தள்ளினர்.

    ஒருநாள் பாக்கியவதி தன் மகனை அழைத்து ‘மகனே நாம் மிகவும் கஷ்டப்படுகின்றோம். ஆகவே நீ உன் பெரியம்மா புண்ணியவதியிடம் சென்று சிறிது பொருள் கேட்டு வாங்கி வா’ என்று அனுப்பினாள். பையனும் அவ்வாறே பெரியம்மாவிடம் சென்றான். புண்ணியவதியும் மனம் வருந்தி பாக்கியவதி மகனிடம் பொருள் கொடுத்து அனுப்பினாள்.

    அதை வாங்கி வந்த பையன் குளக்கரையில் மூட்டையினை வைத்து விட்டு உணவு உண்ணும் போது மூட்டையை ஒரு கருடன் தூக்கிச் சென்று விட்டது. வருந்திய பையன் வந்தவாறே தனது பெரியம்மா புண்ணியவதியிடம் சென்று நடந்தவற்றை கூறினான். வருந்திய புண்ணியவதி மீண்டும் பொருள் கொடுத்து அனுப்பினாள்.

    இம்முறை திருடன் வழியில் அப்பொருளினை திருடிக் கொண்டு சென்று விட்டான். வருந்திய புண்ணியவதி பையனிடம் ‘ஏன் உன் அம்மா கேதார கவுரி விரதத்தினை அனுஷ்டித்து வருவதில்லையா’ என்று கேட்டாள். பையன் தன் அம்மாவின் நோன்பு கயிறு புதரில் விழுந்து விட்டதனை கூறினான்.

    ‘ஓ, அதனால் தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் வந்துள்ளது’ என்று கூறி அப்பையனை தன்னோடு வைத்துக் கொண்டு ஐப்பசி மாத விரதத்தினை முடித்து நோன்பு கயிறு, பொருட்கள் இவற்றினை வைத்து புண்ணியவதி பாக்கியவதிக்கு அவன் மகன் மூலம் அனுப்பினாள்.

    பெரியம்மாவிடம் விடை பெற்று பையன் வீடு திரும்புவதற்குள் திருடன் தான் திருடிய பொருளை அச்சிறுவனிடம் கொடுத்தான். கருடன் மூட்டையினை திரும்ப கொண்டு வந்து போட்டது. பாக்கியவதி பல செல்வங்களையும், நாடு உள்பட திரும்ப பெற அன்று முதல் பாக்கியவதி கேதார கவுரி விரதத்தினை விடாது செய்து மேன் மேலும் நன்மைகளைப் பெற்றாள்.

    நாளை நாமும் இந்த விரதத் தினை கடை பிடித்தால் எல்லாவித செல்வங்களையும் பெற முடியும்.
    சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில் நாம் செய்யும் விரத பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும்.
    சந்தோஷத்தையும், மகிழ்ச்சியையும் அள்ளிதரும் தீபாவளி திருநாளில் நாம் செய்யும் பூஜையின் மூலம் சகல ஐஸ்வர்யங்களையும் பெற முடியும். அதில் மிக முக்கியமான பூஜை லட்சுமி குபேர பூஜை. செல்வ வளங்களை வழங்கிடும் மகாலட்சுமியையும், நவநிதிகளையும் வைத்துள்ள குபேரரையும் ஒரு சேர பூஜை செய்வதன் மூலம் நமது செல்வ நிலை உயரும். தரித்திரம் நீங்கும். இதற்கு மிகவும் உன்னதமான நாள் தீபாவளி திருநாள்.

    திருமகள் திருவருளால் செல்வம் பெருகும் :

    மகா விஷ்ணுவின் மார்பில் வாசம் செய்யும் மகாலட்சுமி தீபாவளி தினத்தில் நமது இல்லம் தேடி வந்து அருள் பாலிக்கிறாள். தீபாவளி தினத்தின் மாலை 6 மணிக்கு முன்பே லட்சுமி குபேர பூஜை செய்வது நல்லது. நமது இல்லம் மகாலட்சுமியை வரவேற்க அலங்காரம் அணிவகுப்பு செய்திட வேண்டும். வாசலில் வண்ண கோலமிட்டு பூஜையறையில் குபேர கோலம் இட வேண்டும். மகாலட்சுமியின் திருவருளால் அனைத்து செல்வங்களும் அதாவது தனம், தான்யம், மக்கட் செல்வம், வீடு, தைரியம், வீரம், அறிவு என அனைத்தையும் பெற முடியும்.

    குறைவற்ற செல்வம் வழங்கும் குபேரன் :

    திரேதா யுகத்தில் ஸ்ரீமுக ஆண்டு, தனுசு ராசி, பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர் குபேரர். தந்தையார் விஸ்வரஸ், தாயார் சுவேதாதேவி. சிறந்த சிவ பக்தனாகிய குபேரன் இந்திரனுக்கு இணையாக புஷ்பக விமானத்தில் பயணித்த பெருமை பெற்றவர். சிவனின் அருள்பெற்று அளகாபுரிக்கு அரணாக விளங்கிய குபேரன் வடதிசைக்கு அதிபதியாகவும் திகழ்கிறார்.



    குபேரன் திருமுத்துகுடையான் கீழ் தாமரை மலர் மீதுள்ள ஆசனத்தில் ஒரு அபயமுத்திரையுடன் அமர்ந்திருக்கிறார். அவரது இருபுறமும் சங்க நிதி, பதும நிதி, என்ற தன தேவதைகள் வீற்றிருப்பர். அவர் தன் அருகே இரத்தினங்களை உதிரும் கீரிப்பிள்ளை வைத்திருப்பார். இத்தகைய சிறப்புமிக்க குபேரனை மகாலட்சுமியுடன் இணைந்து பூஜை செய்வதன் மூலம் குறைவற்ற செல்வநிதியை வாரி வழங்குவார்.

    லட்சுமி குபேர பூஜை செய்யும்முறை :

    சிறப்பாக முறையான லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும். சாதாரணமாக வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.

    பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை ஆரம்பித்திட வேண்டியதுதான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரங்கள் (அ) “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லி தாமரை இதழ்கள் (அ) பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர்.

    பின் நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள் வைக்கப்பட வேண்டும். அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம். சிலர் தாம்பூலங்களையும், காசுகளையும் தானமாக வழங்கிடுவர். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்.
    குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய் வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும்.

    அவை முறையே சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிந்த விரதம் கந்த சஷ்டி விரதமேயாகும்.
    இன்று 6ஆம் திகதி கந்த சஷ்டி விரதம் ஆரம்ப மாகுவதுடன், எதிர்வரும் 11ஆம் திகதி வரை விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    கந்தசஷ்டி விரத முறைகள் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள்
    கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத
    நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி
    பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

    கந்தசஷ்டி விரதத்தின் பலன்: குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில்
    இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும்.
    எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய
    பலனைப் பெறலாம்.

    கந்தனுக்குரிய விரதம்:
     
    விரதங்களுள் கலியுக வரதனும் கண்கண்ட தெய் வமுமான கந்தனுக்குரிய சிறந்த விரத நாட்கள் மூன்றாகும்.அவை முறையே சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசஷ்டி விரதம் ஆகியவையாகும். இவற்றுள் மிகச் சிந்த விரதம் கந்த சஷ்டி விரதமேயாகும்.

    கந்தசஷ்டி விரத முறைகள் :


    ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் சுக்கில பட்சத்துப் பிரதமை முதல் சஷ்டி வரையிலான ஆறு நாட்களில் முருகன் பக்தர்கள் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும். விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.

    கந்தசஷ்டி விரதத்தின் பலன் :

    குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ்விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.
    ×