என் மலர்tooltip icon

    முக்கிய விரதங்கள்

    பிரதோஷ விரதத்தின் சிறப்பினையும், அதனை யார் எப்பொழுது கடைபிடிக்க வேண்டும் என்பதனை பற்றியும் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கிவிடும். சர்ப்ப தோஷம் உட்பட எந்த தோஷமாக இருந்தாலும் நீங்கிவிடும். சிவனை தேவர்கள், மூவர்கள் வழிபடுவது ஒரு காலம். அதேபோல, மனிதர்கள் சிவனை வழிபடுவதற்கான காலம்தான் பிரதோஷம். அதில் தேய்பிறை பிரதோஷம் மனிதர்களுக்கு உள்ளது. வளர்பிறை பிரதோஷம் தேவர்களுக்கு உள்ளது.

    தேய்பிறை பிரதோஷங்கள் எல்லாமே விசேஷமானது. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய சதுர்த்தி திதியை சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். அதேபோல தேய்பிறையில் வரும் சஷ்டியிலும் விரதம் இருக்கிறோம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதியைத்தான் பிரதோஷ நாள் என்கிறோம். இந்த நாள் எப்பொழுதும் மனிதர்களுக்காக உள்ளது. அதனால் அது விசேஷமானது.

    மற்ற நாட்களில் சிவன் மட்டும் காட்சி கொடுப்பார் வணங்கலாம். பிரதோஷ நாளில், பிரதோஷ நேரமான மாலை 4 முதல் 6 வரை நந்தி பகவானையும் சேர்த்து வணங்கலாம். நந்தி பகவான் அன்றைய தினத்தில் தனது தவத்தை துறந்துவிட்டு மக்களுக்காக எல்லாவற்றையும் செய்யக்கூடியவர். அதனால்தான் பிரதோஷம் அன்று சிலர் நந்தியினுடைய காதில் ஏதாவது ரகசியத்தைச் சொல்வார்கள்.

    சைவத்தைப் பொறுத்தவரையில் பிரதோஷம் என்பது பிரதானமான விரதம். அன்றைக்கு எல்லா வேளைகளையும் உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷத்தை முடித்துவிட்டு மாலை 6 மணிக்கு மேல் உணவு உட்கொள்கிறவர்கள் எல்லாம் இருக்கிறார்கள். அது ஒரு அற்புதமான நாள். பொதுவாக பிரதோஷம் அன்று விரதம் இருப்பதால் நமது உடம்பும் நலம் பெறும். ஏனென்றால் சந்திரன் சூரியனை நோக்கி பயணிக்கக்கூடிய காலகட்டம் அது. குறிப்பிட்ட அந்த பிரயோதசி திதியில் விரதம் இருந்தால் வாயுக்கோளாறு, வயிற்றுக்கோளாறு எல்லாம் நீங்கும். அடுத்து, உடல் நிலை, மனநிலை எல்லாம் சீராகும். இதுபோன்ற சிறப்புகள் உண்டு.

    பொதுவாக பிரதோஷம் அன்று கறந்த பசும்பால் கொடுத்து வழிபட்டால் நல்லது. ஏனென்றால் சிவன் அபிஷேகப் பிரியன். அதனால் கறந்த பசும்பால் கொடுக்கலாம். இல்லையென்றால் இளநீர் வாங்கித் தரலாம். ஏனென்றால் சிவனை அபிஷேகப் பொருளாலும், அர்ச்சனைப் பொருளாலும் வணங்க வேண்டும். இறைவன் எப்பொழுதுமே இயற்கையை விரும்பக்கூடியவன். இயற்கையான வில்வ இல்லை. அதற்கடுத்து பசும்பால். இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும் இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் கடைபிடித்தால் எல்லா வகைகளிலும் சிறப்பாக இருக்கும். 
    சீரடி பாபா விரத முறைகளில் வியாழக்கிழமை விரதம் போல் இன்னும் பல வகையான விரதங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான சாய் சத்ய விரத பூஜையை பற்றி பார்க்கலாம்.
    சாய் சத்யவிரத பூஜை என்று ஒன்று உண்டு. இந்த பூஜையில் சத்யநாராயணர் கதைக்குப் பதில் சாய் சரித்திரம் படிப்பது வழக்கம். பாபாவிற்குப் பிடித்த செண்பகப்பூ சாத்தி நவவித பக்தியாலும் அவரை ஆராதிக்கலாம். பாபாவின் வழிபாட்டு முறையில் ஒன்று, சர்க்கரையில் அக்கறை இல்லா லீலை. ஒரு வியாழக்கிழமை சின்ன டப்பாவில் சர்க்கரையை எடுத்து வைக்க வேண்டும்.

    21 நாட்களுக்கு எந்த இனிப்பையும் எந்த வகையிலும் சாப்பிடக் கூடாது. எந்நேரமும் பாபாவை மனதார துதித்தபடி இருக்க வேண்டும். மிகச் சரியாக 21ம் நாள் நாம் எதிர்பார்க்கிற இனிப்பான செய்தி நம்மைத் தேடி வரும்.

    பாபா சத்சரித்திரத்தில், ‘டெண்டுல்கர் அத்தியாயம்’ என்று ஒரு பகுதி உள்ளது. அந்த அத்தியாத்தை படித்து விட்டு கல்கண்டு நைவேத்யம் செய்து பரீட்சை எழுதும் மாணவ மாணவியருக்கு அதை பிரசாதமாக அளித்தால், அவர்கள் தேர்வுகளில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் தாமரை மாலையை அவர்கள் பிறந்த நட்சத்திர தினத்தன்று பாபாவிற்கு சாத்தி 108 நெல் பொரி உருண்டைகளை 108 எளியவர்களுக்கு தானமாக அளித்தால் பாபாவின் திருவருளால் அவர்களுக்கு உடனே திருமணம் நிச்சயமாகிறது.

    மேல்மலையனூரில் குடிகொண்டுள்ள அங்காளம்மனை விரதம் இருந்த வழிபாடு செய்தால் நம் துன்பங்கள் பறந்தோடும். பில்லி, சூன்யம், ஏவல் விலக்கி நல்வாழ்வு தருவாள்..
    ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி. இதையே ஆற்றலாக கருதும் போது, விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல், இதையே தெய்வமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, இதையே வாழ்க்கையின் நிலைகளாக, கல்வி, செல்வம், வீரம் என்று ஏற்கொள்கிறோம்.

    லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சிற்சக்தியே, அங்காளி என்ற உருவ மற்ற சக்தி ஆகும். அங்காளம்மன் உருவ சக்தியே அங்காளம்மன்.

    அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர். இதுவே தலைமையிடமாகவும், இந்த கோயிலில் உள்ள தேவதையே தலைமைத்தாய், மூலதாய், முதன்மைத்தாய், குலதெய்வம் என்றும் வழிபாடு செய்கிறோம். இதுவே வம்சாவழியாக செய்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகள்.

    குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு தங்களின் வம்சாவழியினராக தங்களின் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றறோருடன் ஆடி மாதம் ஒன்று சேர்ந்து வந்து மொட்டை அடிப்பது காதணி விழா செய்வது, அபிஷேகம் செய்வது, ஆராதணை செய்வது, அர்ச்சனை செய்வது, பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்யும் வழிபாட்டு தெய்வமாக அங்காளம்மன் விளங்குகின்றாள்.

    இந்த ஆற்றல் மிகு சக்தியின் துணைவர், கணவர், இறைவன் என்று போற்றப்படுபவர். முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் மும்மூர்த்திகள் ஆவார்.
    இந்த மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிரமஹக்தி தோசம் பிடித்துவிட்டதாகவும், இந்த பிரமஹத்தி தோஷத்தை அங்காளியான இந்த அங்காளம்மன் மாசிமாதம் விலக்கியதாகவும் நீங்கள் ஏற்கனவே படித்து இருப்பீர்கள்.

    சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரமஹத்தியை விலக்கியதைப் போன்றே மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள்,பீடைகள், சகடைகள், தோஷம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள் போன்றவற்றை ஆடி மாத வழிபாடு மூலம் அங்காளம்மன் விலக்கி நல்வாழ்வு தருகிறார்.

    பிரம்மஹத்தியில் இருந்து சிவபெருமானை விடுவித்த அங்காளி மானிடங்களின் இந்த ஆன்ம பிணிகளைப் போக்கிடுவாள் என்று கருதியே மேல்மலையனூரை தலைமையிடமாக ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து காணிக்கை பிராத்தனைகளை செய்து நல்லருள் பெற்று செல்கின்றனர்.

    அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்துவரும் எட்டாவது நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் 'அஷ்டமி திதி விரதம்' ஆகும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.
    அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் அடுத்துவரும் எட்டாவது நாள் அஷ்டமி திதி. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் என்பதால், இது 'அஷ்டமி திதி விரதம்' என்று அழைக்கப்படுகிறது. அஷ்டமி நாளில் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது என்ற நம்பிக்கை பெரும்பாலும் உண்டு. ஆனால், தீய செயல் செய்பவர்களுக்கே இது பொருந்தும்; நற்செயல் செய்பவர்களுக்குப் பொருந்தாது. அஷ்டமி விரதமானது பைரவருக்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

    திருமாலின் அவதாரமான கண்ணன் அஷ்டமி திதியில் பிறந்தவர். அவர் பிறந்த தினம் 'கோகுலாஷ்டமி' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

    வைகாசி 'அஷ்டமி விரதம்' சிவனுக்குரிய விரதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆடி மாதம் தேய்பிறையில் வரும் அஷ்டமி, தட்சிணாமூர்த்திக்காக மேற்கொள்ளப்படுகிறது. அஷ்டமி திதியில் துர்கைக்கு விரதம் இருந்து வழிபடுவது, உத்தமப் பலன்களைத் தரும். அஷ்டமி விரதம், சகலவிதமான கஷ்டங்களையும் போக்கும்.
    விரதம் இருந்து திரயோதசி வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சந்தோஷமான வாழ்க்கை அமையும்.
    அமாவாசை தினத்துக்கும், பௌர்ணமி தினத்துக்கும் அடுத்து வரும் பதிமூன்றாம் திதி  'திரயோதசி' என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் கடைப்பிடிக்கப்படும் விரதம் 'பிரதோஷ விரதம்.’

    மாதத்துக்கு இரு முறை திரயோதசி திதியில் கடைப்பிடிக்கப்படுவதால், இது 'திரயோதசி திதி விரதம்' என்றும் அழைக்கப்படுகிறது. அமாவாசைக்கு அடுத்து வரும்போது 'சுக்கிலபட்ச திரயோதசி' என்றும், பௌர்ணமியை  அடுத்த திரயோதசி 'கிருஷ்ணபட்ச திரயோதசி' என்றும் அழைக்கப்படுகிறது.

    பாற்கடலில் தோன்றிய ஆலகால விஷம், மூவுலகையும் அழிக்க இருந்த பேரழிவில் இருந்து சிவபெருமான் காப்பாற்றிய தினம்தான் திரயோதசி. எனவே, அன்றைய தினம் விரதம் இருந்து, மாலை பிரதோஷ வேளையில் சிவாலயங்களில் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு சிவபெருமானை வழிபடுவதால், அனைத்துவிதமான தோஷங்களும் நீங்கி, சிவபெருமானின் அருளால் சந்தோஷமான வாழ்க்கை அமையும்.

    சனிக்கிழமைகளில் வருவது 'மகா பிரதோஷம்' என்று சிறப்பு வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. புதிதாக பிரதோஷ விரதத்தை மேற்கொள்ள விரும்புவர்கள் சித்திரை, வைகாசி, ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் வரும் சனி மகா பிரதோஷ நாளில் கடைப்பிடிப்பது நல்லது. விரத நாளில் காலை முதல் மாலை வரை உபவாசம் இருக்க வேண்டும். பிரதோஷ நேரமாகிய மாலை 4:30 முதல் 7 மணி வரை ஆலயங்களுக்குச் சென்று, பிரதோஷ பூஜையில் கலந்துகொண்டு இறைவனைத் தரிசித்த பின்னர் உணவருந்தி விரதத்தை முடித்துக்கொள்ளலாம்.
    கிருஷ்ண ஜெயந்தியன்று மட்டும் இருக்காமல் ஒவ்வொரு மாதமும் வரும் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில் தொடர்ந்து கிருஷ்ணனை நினைத்து விரதம் இருந்தால் குழந்தை வரம் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    கிருஷ்ண மந்திரம் கூறுவது, கிருஷ்ண நாமம் கூறுவது கலியுகத்தில் புண்ணியம் தரக்கூடிய செயல்களாகும். குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குருவாயூர் கிருஷ்ணனை வணங்கலாம். கிருஷ்ண ஜெயந்தியன்று விரதம் இருக்கலாம். கிருஷ்ண ஜெயந்தியன்று மட்டும் இருக்காமல் ஒவ்வொரு மாதமும் வரும் பெருமாளுக்குரிய ஏகாதசி திதியில் தொடர்ந்து கிருஷ்ணனை நினைத்து விரதம் இருந்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும்.

    திருமணமாகி நீண்ட காலமாக குழந்தை இல்லாதவர்கள், கிருஷ்ண ஜெயந்தி அன்று காலையில் நீராடி விரதத்தை தொடங்க வேண்டும். கிருஷ்ணர் பாதத்தை வீடு முழுவதும் மாக்கோலமாக வரைந்து, பூஜை அறையில் விளக்கேற்ற வேண்டும். கிருஷ்ணரின் வாழ்க்கையை விவரிக்கும் பாகவதம் என்ற நூலின், பத்தாவது அத்தியாயத்தை படிக்க வேண்டும்.

    நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களையும் பாடலாம். கண்ணனுக்குப் படைத்த நைவேத்யத்தை குழந்தைகளுக்கு வழங்க வேண்டும். இதனால் சிறுவரல்& சிறுயர்களின் மனம் குளிரும். அந்த குளர்ந்த வாழ்த்து உங்கள் வயிற்றில் புத்திரபாக்கியத்தை சுமக்கும் பேற்றைத் தரும். இரவில் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபட வேண்டும். இதன் மூலம் விரைவில் வீட்டில் மழலைக் குரல் கேட்கும்.

    விரதம் இருப்பது எப்படி?

    கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும். மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.
    விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை இறை வழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
    விரதங்கள் இறைவழிபாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து விதமான விரதங்களும் பலன் தரக்கூடியவையே. விரதங்கள் இருப்பதால் மனமும், உடலும் சுத்தம் அடைகிறது. ஆனாலும் சில முக்கிய விரதங்கள் அனைவராலும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    அவை இறை வழிபாட்டில் முக்கியமாக ஒன்பது விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை நவராத்திரி விரதம், வரலட்சுமி விரதம், கேதாரகவுரி விரதம், பாவை நோன்பு, விநாயகர் சதுர்த்தி விரதம், கந்தசஷ்டி விரதம், வைகுண்ட ஏகாதசி விரதம், சிவராத்திரி விரதம், காரடையான் நோன்பு ஆகியன ஆகும்.

    விரதங்கள் இருப்பதற்கு பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. விரதம் இருக்கும் நாள் முழுவதும் உபவாசம் இருத்தல், ஒரு பொழுது மட்டும் உணவு உண்டு உபவாசம் இருத்தல், நீர் ஆகாரம் மட்டும் குடித்து உபவாசம் இருத்தல் போன்ற அவரவரின் விருப்பத்திற்கு ஏற்ப விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    கடவுளிடம் வைக்கப்படும் நியாயமாக கோரிக்கைகளுக்காக இருக்கும் அனைத்து விதமான விரதங்களுக்கும் பலன் கிடைக்கும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை
    சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது. இந்த விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்துவர வேண்டும்.
    சந்தோஷிமாதா விரதம் அனைவருக்கும் உரியது. அந்த விரதத்தை மேற் கொள்ளுவதால் சகல மங்களங்களும் உண்டாகும். சந்தோஷிமாதா விரதத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் தொடங்க வேண்டும். அதுமுதல் ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் பூஜை செய்துவர வேண்டும்.

    சந்தோஷிமாதாவுக்கு மிகவும் உகந்தது வறுத்த   கடலையும், வெல்லமுமே ஆகும். விரதத்தை வீட்டிற்குள்ளேயோ, வெளியேயுள்ள தனியான இடங்களிலோ, கோயில்களிலோ செய்யாலம். சந்தோஷிமாதா படத்தை வைத்து பூக்களால் அலங்கரித்துப் பூஜை செய்ய   வேண்டும். படத்தின் முன் விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.

    கிண்ணம் ஒன்றில் கொஞ்சம் வறுத்த கடலையையும் வெல்லத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கையில் கொஞ்சம் வறுத்த   கடலையும், வெல்லமும் எடுத்துக் கொண்டு, எண்ணிய காரியம் நிறைவேற வேண்டும் என்று மனதில் திடமான நம்பிக்கையுடன் சங்கல்பம் செய்து, விக்னேச்சுவர   பூஜையையும், சந்தோஷிமாதா பூஜையையும் செய்ய வேண்டும். பிறகு சந்தோஷி மாதாவின் கதையைப் பக்தி சிரத்தையோடு படிக்க வேண்டும்.

    கதை படித்து முடிந்ததும் மாதாவைப் பற்றிய ஸ்தோத்திரப் பாடல்களைப் பாடி நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு ஆரத்தி எடுக்க வேண்டும். இந்த விரதத்தில் புளிப்பு சேர்க்க கூடாது. புளிப்பு மோர் அல்லது புளிப்பு பழங்கள் கூட தொடக் கூடாது.

    இதே போல் பதினாறு வெள்ளிக் கிழமைகள் செய்து, பின் பதினேழாவது வெள்ளிக்கிழமையன்று பூஜை செய்து எட்டு குழந்தைகளுக்கு சாப்பாடு போட வேண்டும். பின் அவர்களுக்கு தட்சணையாக துணியோ அல்லது பொருளோ கொடுக்கலாம் ஆனால் பணம் கண்டிப்பாக கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அவர்கள் அந்தப் பணத்தில் புளிப்பு பண்டங்கள் சாப்பிட்டால் அபசாரம் ஆகிவிடும்.
    விநாயகரை வழிபட பல்வேறு விரதங்கள் இருந்தாலும், 'சங்கடஹர சதுர்த்தி' மிக முக்கியமானது. முதன்முதலாக கடைப்பிடிப்பவர்கள் ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம்.
    இது மாதத்துக்கு ஒருமுறை பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் கடைப்பிடிக்கப்படும் விரதம். 'ஹர' என்றால் அழித்தல் என்று பொருள். சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் வல்லமை 'சங்கடஹர சதுர்த்தி' விரதத்துக்கு உண்டு. விநாயகரை வழிபட பல்வேறு விரதங்கள் இருந்தாலும், 'சங்கடஹர சதுர்த்தி' மிக முக்கியமானது. முதன்முதலாக கடைப்பிடிப்பவர்கள் ஆவணி மாதத்தில் தொடங்குவது நலம்.

    செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சிறப்பான ஒன்று. இது, 'மகா  சங்கடஹர சதுர்த்தி' என்று அழைக்கப்படுகிறது.  திதிகளில் கடைப்பிடிக்கக்கூடிய இந்த விரதங்களைக் கடைப்பிடித்தால், இல்லத்தில் சுபிட்சம் உண்டாகும். சகல சௌபாக்கியமும் உண்டாகும். நாள்பட்ட  நோய்கள் குணமாகும். நீண்ட ஆயுள், நிறைசெல்வம், உண்டாகும். தோஷங்கள் நீங்கும்.
    மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் நாம் எந்த அளவுக்கு விரதம் இருந்து மனப்பூர்வமாக வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும்.
    இன்றைய உலகில் பணம்தான் பிரதானம் என்று ஆகிவிட்டது. பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே என்று கூட சொல்வார்கள். பணம் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நிலைதான் இன்று உள்ளது. இந்த பணத்தை சம்பாதிக்க உடல் உழைப்பு, அறிவு உழைப்பு மட்டும் இருந்தால் போதாது. கடவுளின் அனுகிரகமும் வேண்டும். செல்வத்தையும், பணத்தையும் வாரி வழங்கும் இறை அம்சமாக லட்சுமிதேவி கருதப்படுகிறாள்.

    மகாலட்சுமியை நாம் எந்த அளவுக்கு மனப்பூர்வமாக வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு செல்வ செழிப்பு உண்டாகும். லட்சுமியின் அம்சமாக பல்வேறு லட்சுமியின் அவதாரங்கள் உள்ளன. அதில் மிகுந்த முக்கியத்துவமும், தனித்துவமும் கொண்டது வரலட்சுமி ஆகும். நாம் வேண்டும் வரங்களை எல்லாம் மறுக்காமல் தருவது வரலட்சுமிதான்.

    வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களாக இருந்தால் கணவர் நலமாக இருக்க வேண்டும், நீடுழி வாழ வேண்டும், அதற்கு வரலட்சுமி அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். கன்னி பெண்களாக இருந்தால் தங்களுக்கு நல்ல கணவர் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள்.

    வரலட்சுமியை வீட்டுக்குள் வரவழைத்த பிறகு உரிய முறையில் ஐதீகம் தவறாமல் பூஜைகளை செய்ய வேண்டும். இந்த பூஜை முறைகள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டதாக இருக்கும். கலச பூஜை, பாடல்கள், நைவேத்தியம், தானம் உள்பட அனைத்து முறைகளிலும் வித விதமான சம்பிரதாயங்கள் உள்ளன. எனவே உங்கள் குடும்ப முறைக்கு எந்த பூஜை முறையை கடைபிடிக்கிறார்களோ அதை தெரிந்து கொண்டு பூஜைகள் செய்ய வேண்டும்.

    பொதுவாக வரலட்சுமி விரத பூஜை என்றதுமே கலச பூஜையை பிரதானமாக பெரும்பாலானவர்கள் நினைக்கிறார்கள். கலச பூஜையை எல்லோரும் நினைத்தவுடன் செய்து விடக்கூடாது. அதற்கு என்று ஐதீகங்கள் உள்ளன. எனவே கலச பூஜை செய்து பழக்கம் இல்லாத குடும்பத்தினர் லட்சுமி படத்தை வணங்கினாலே போதும்.

    பாரம்பரியமாக கலச பூஜை செய்பவர்கள் தவறாமல் இந்த ஆண்டும் செய்ய வேண்டும். கலச பூஜையை மட்டும் தவற விடவே கூடாது. அதுபோல லட்சுமி ஆராதனை செய்து கையில் ரட்சை கட்டுபவர்கள் தவறாது கடைபிடிக்க வேண்டும். ஆண்கள் ரட்சை கட்டக்கூடாது. பெண்கள் மட்டுமே வலது கையில் ரட்சை கயிறை கட்டிக் கொள்ள வேண்டும். ஒரு வாரம் கழித்து அதை அவிழ்த்து விடலாம்.

    கலச பூஜை செய்து பழக்கம் இல்லாதவர்கள் பூஜை அறையில் லட்சுமி படத்தை வைத்து தாமரை பூ, தாழம்பூ வைத்து அலங்கரிக்க வேண்டும். குத்துவிளக்கை நன்றாக சுத்தம் செய்து அதில் பூ சுற்றி அதையே லட்சுமியாக கருதி வழிபட வேண்டும். ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் அனைத்து தரப்பினரும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். நீங்கள் கலசத்தை லட்சுமியாக நினைத்தாலும் சரி, குத்து விளக்கை லட்சுமியாக நினைத்தாலும் சரி தீபதூப ஆராதனைகளை சரியாக செய்ய வேண்டும். லட்சுமி அஷ்டோத்தரம் பாட வேண்டும். இல்லையெனில் தெரிந்த லட்சுமி பாடல்களையாவது பாட வேண்டும்.

    பூஜை முடிந்த பிறகு சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பூ, தட்சணை வைத்து கொடுக்க வேண்டும். உங்கள் சக்திக்கேற்ப எத்தனை சுமங்கலி பெண்களுக்கு வேண்டுமானாலும் செய்யலாம். குறைந்தபட்சம் 2 சுமங்கலி பெண்களுக்காவது தானம் செய்ய வேண்டும்.

    சிலர் தங்கள் வீட்டுக்கு சுமங்கலி பெண்களை அழைக்க இயலாத சூழ்நிலையில் இருந்தால் ஆலயங்களுக்கு எடுத்து சென்று தானங்களை செய்யலாம். மொத்தத்தில் லட்சுமி மனம் குளிர வேண்டும். அதற்கு என்ன வேண்டுமோ அதை செய்ய வேண்டும். லட்சுமிக்கு தாமரை பூ மிகவும் பிடிக்கும். எனவே அதை தவறாமல் படையுங்கள். நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் படைக்கலாம்.

    வருகிற வெள்ளிக்கிழமை காலை-மாலை இருவேளையும் லட்சுமி பூஜை செய்யப்பட வேண்டும். காலை பூஜையை அதிகாலையிலே முடித்து விட வேண்டும். மாலை நேரத்து பூஜையை 6 மணி அளவில் வைத்துக் கொள்ளலாம். மாலையில் பால் நைவேத்தியம் செய்வது நல்லது. இரு பூஜைகளிலும் லட்சுமி பாடல்களை பாட வேண்டும். வாசலில் மாவிலை தோரணம் தொங்க வேண்டும். இதில் கவனமாக இருங்கள். இப்படி வரலட்சுமி விரத பூஜைக்கு நிறைய ஐதீகங்கள் உள்ளன. 
    கருட பகவான் எல்லாப் பெருமாள் கோவில்களிலும் பெரிய திருவடியாக வீற்றிருக்கிறார். இவரை விரதம் இருந்து வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்களை பார்க்கலாம்.
    * எதிரிகளை ஜெயிக்கலாம், வழக்குகளில் வெற்றி உண்டாகும்.

    * சர்வரோக நிவாரணம், பிணி பீடைகள் நிவர்த்தி.

    * பில்லி, சூன்யம், ஏவல் கண்திருஷ்டி தோஷம், செய்வினைக் குற்றம் போன்றன நிவர்த்தி ஆகுதல்.

    * ஜாதக கிரக தசாபுத்தி, கோச்சார கிரகங்களால் ஏற்படும்  கண்டாதி தோஷங்கள், விபத்து, ஆயுள் பயம் போன்றன நிவர்த்தி ஆகும்.

    * போட்டி, பந்தயங்களில் வெற்றி கிட்டுதல்.

    * நிலம், வீடு, மனைபோன்றவற்றில் லாபம் ஏற்படல்.

    * திருமண பாக்கியம் கைகூடுதல், புத்திரதோஷம் நீங்கி, புத்திரப்பேறு உண்டாகுதல்.

    * படிப்புகளில், கல்வி சம்பந்தமானவற்றில் தேர்ச்சி பெறுதல், வேலைவாய்ப்புக்கிடைத்தல்.

    * அவரவர் செய்யும் உத்தியோகம், தொழில், வர்த்தகம், வியாபாரத்தில் வெற்றியும், லாபமும் உண்டாகும்.

    * குடும்பத்தில் அமைதி, ஒற்றுமை, சௌக்கியம் உண்டாகும்.

    * கிடைக்க வேண்டிய சொத்துகள், காசு பணம், இழந்த பொருட்களை மீண்டும் பெறுதல் போன்றன கருட பகவான் அருளால் கிடைக்கும்.

    * நியாயமான எண்ணங்கள், ஆசைகள், விருப்பங்கள் நிறைவேறும்.

    * விஷ ஜந்துக்கள், சர்ப்ப வாக்குகளில் இருந்து சதா பாதுகாப்பு சக்தி கிடைக்கும்.

    * விஷம குணங்கள் கொண்ட கொடிய சத்ருக்களிடம் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.
    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் மகா சிவராத்திரி விரதத்தையும், மாதம் தோறும் வரும் சிவராத்திரி விரதத்தையும் அனுஷ்டிப்பது மிகவும் இருப்பது நல்லது.
    கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் சிவராத்திரி விரதம் இருப்பது நல்லது. சிவராத்திரி விரதம் அனுசரிப்பவர்கள் அன்று முழுவதும் சாப்பிடக்கூடாது. உலகத்தின் அமைதிக்காகவும் நன்மைக்காகவும் சிவாலயங்களில் ஹோமத்திற்கு ஏற்பாடு செய்வார்கள்.

    “ஓம் நமசிவாய” என்ற மந்திரம் உச்சரிக்க வேண்டும். மகா சிவராத்திரி இரவு கோவிலில் அனைவரும் ஒன்று கூடி ‘சிவாய நம’ என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும். இரவில் நான்கு ஜாமங்களிலும் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பக்தியுடன் அவரை வழிபட வேண்டும். முதல் ஜாமத்தில் அரிசி, இரண்டாம், மூன்றாம் ஜாமங்களில் கோதுமை.

    நான்காம் ஜாமத்தில் அரிசி, உளுந்து, பயிறு, தினை ஆகியவற்றை அட்சதையாக சிவலிங்கத்திற்கு சமர்ப்பிக்க வேண்டும். முதல் ஜாமத்தில் தாமரை பூக்களாலும், இரண்டாம் ஜாமத்தில் தாமரை மற்றும் வில்வத்தாலும் மூன்றாம் ஜாமத்தில் அருகம் புல்லாலும், நான்காம் ஜாமத்தில் தாழம்பூ, செண்பகம் நீங்கலான மற்ற மனம் கமழும் மலர்களாலும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    ஆடிக்கிருத்திகை, கிருத்திகை அல்லது கார்த்திகை என்ற நட்சத்திரம் முருகப் பெருமானின் நட்சத்திரம். மாதம் தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் மேலும் விசேஷம்.
    ×