என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஸ்ரீரங்கம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிரதோஷம் விலகி உடனே திருமணம் கைகூடும். வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும்.
    ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் 236அடி உயரம் கொண்டது. சுக்கிரன் பூஜித்த இத்தலம் ஏழு மதில்களையும் பிராகாரங்களையும் கொண்ட மிகப்பெரிய பிரமாண்டமான கோவிலாகும். மார்கழி மாதத்தில் நடைபெறும் பகல் பத்து இராப்பத்து திருவிழா மிகவும் சிறப்படையது.

    ஸ்ரீவில்லிபுத்தூரின் ஆண்டாளைப் பிராட்டியாக ஏற்றுக் கொண்ட தலம். கம்பர் தாம்பாடிய ராமாயண காவியத்தை அரங்கேற்றியது இத்திருத்தலமேயாம். வைணவத்தை வளர்த்த ராமானுஜர் வைகுந்த பதவியை அடைந்ததும் இத் தலமேயாகும். இங்கு அழகிய சிங்கப்பெருமாள் சந்நிதி, வாசு தேவப் பெருமாள் சந்நிதி, கோதண்டராமர் சந்நிதி, பிள்ளை லோகச்சாரியர் சந்நிதி, பார்த்தசாரதி சந்நிதி, உடையவர் சந்நிதி, திருப்பாணாழ்வார் சந்நிதி, கண்ணபிரான் சந்நிதி, தொண்டரடிப் பொடியாழ்வார் சந்நிதி, கூரத்தாழ்வார் சந்நிதி, வேணுகானன் சந்நிதி, நம்மாழ்வார் சந்நிதி, மதுரகவியாழ்வார் சந்நிதி, திருமங்கை யாழ்வார் சந்நிதி, பட்டாபிராமர் சந்நிதி, முதலணீழ்வார்கள் மூவர் சந்நிதி, தன்வந்தரிப் பெருமாள் சந்நிதி, கோபாலகிருஷ்ணன் சந்நிதி, வியாச மகரிஷி சந்நிதி, வராகப்பெருமாள் சந்நிதி, வரதராஜப் பெருமாள் சந்நிதி, ஸ்ரீநிவாசர் சந்நிதி, போஜராமர் சந்நிதி, திருமழிசையாழ்வார் சந்நிதி, திருக்கச்சி நம்பி சந்நிதி, ஆளவந்தார் சந்நிதி, கருடாழ்வான் சந்நிதி, சேனை முதலியார் சந்நிதி, துலக்கநாச்சியார் சந்நிதி, யோக நரசிம்மன் சந்நிதி, துர்க்காதேவி சந்நிதி ஆகியன உள்ளன. இதுவே பிரதான வைணவக் கோவில். சோழ, பாண்டிய, விஜயநகர மன்னர்களும், ஆழ்வார்களும் இங்கு திருப்பணிகள் செய்து உள்ளனர்.

    தர்மவர்மன் மகளான உறையூர் நாச்சியாரும் குலசேகர மன்னன் மகளான கோகுல வல்லியும், டில்லி பாதுஷாவின் மகளான சுல்தானி என்னும் துலக்க நாச்சியாரும் இத்தலத்தில் ரங்கன்பால் ஐக்கியம் பெற்று இரண்டறக் கலந்தவர்கள்.

    சொந்த தொழில் செய்ய ஆசைப்படுபவர்கள், வேலை தேடுபவர்கள், ஸ்ரீரங்கம் தலத்தில் மனம் உருகி வழிபட்டால் நினைத்தது நடக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு சுக்கிரதோஷம் விலகி உடனே திருமணம் கைகூடும். குறிப்பாக வெள்ளிக்கிழமை அதிகாலை விஸ்வரூப தரிசனம் செய்தால் உங்களுக்கு பணம் வந்து குவியும்.
    திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் விட்டிலாபுரம் பாண்டுரங்கர் கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள்.
    பழமையும், புதுமையும் இணைந்தது, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விட்டிலாபுரம் பாண்டுரங்கர் ஆலயம். இங்குள்ள மூலவர் ‘பாண்டுரங்க விட்டலர்’ என்ற திருநாமத்துடன் கிழக்குத் திசை நோக்கி நின்ற நிலையில் அருள்பாலிக்கிறார். அருகில் ருக்மணி, சத்யபாமா வீற்றிருந்து அருள்கிறார்கள். உற்சவரின் அருகில் ருக்மணி, சத்யபாமா, பூமாதேவி, ஸ்ரீதேவி, நீலாதேவி ஆகியோரும் வீற்றிருக்கிறார்கள்.

    இங்கு மார்கழி மாதத்தில் நடக்கும் வைகுண்ட ஏகாதசி விழா, முற்காலத்தில் மிக பிரமாண்டமாக நடந்துள்ளது. இந்த கோவில் பூலோக வைகுண்டமாக போற்றப்படுவதால் இங்கு பரமபத வாசல் கிடையாது. விட்டலாபுரத்தில் நம்மாழ்வார் விக்கிரகம் எழுந்தருளிய காலத்தில் இக்கோவில் மிகச் சிறப்பாக விளங்கியுள்ளது. இசை, நாட்டியம் இவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் அரங்கேற்றத்துக்கு முன்பு, பாண்டுரங்க விட்டலரை வணங்கிச் சென்று தங்களது அரங்கேற்றத்தினை நடத்துகிறார்கள்.

    இங்கு இறைவனுக்கு படைக்கப்படும் திரட்டுப்பால், பால்பாயசம் மிக விசேஷம். திருமணம் வேண்டியும், மகப்பேறு வேண்டியும் பக்தர்கள் இக்கோவிலில் திரட்டுப்பால் செய்து வழிபட்டுப் பயனடைகிறார்கள். கல்வி -கேள்விகளில் குழந்தைகள் சிறந்து விளங்க சில பக்தர்கள் பால்பாயசம் அளித்தும் வழிபடுகிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வட்டத்தில் விட்டிலாபுரம் கிராமம் உள்ளது. திருநெல்வேலி - திருச்செந்தூர் மெயின் ரோட்டில் செய்துங்கநல்லூரில் இருந்து ஆட்டோ வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து டவுண் பஸ் வசதியும் உள்ளது.
    சனி பாதிப்பு உள்ளவர்கள், ‘நளபுராணம்’ பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களும் விலகிவிடும்.
    ராமாயணம், மகாபாரதம் காலத்திற்கும் முற்பட்டது நளன் தமயந்தி சரித்திரம். நிடத நாட்டில் மாவிந்த நகரைத் தலைநகராகக் கொண்டு வீரசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவரது மகன் நளன். ஒருநாள் நளனின் பேரழகினைக் கண்ட அன்னப்பறவை ஒன்று, “மன்னா! உனது அழகுக்கேற்றவள் விதர்ப்ப நாட்டில் குண்டினபுரம் நகரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வரும் வீமசேனன் எனும் மன்னனின் மகள் தமயந்திதான்” என்று கூறி அவளது குணநலன்களை சொன்னது.

    அதைக் கேட்டு தமயந்தியின் மீது நளனுக்கு காதல் வந்தது. அவன் தன் காதலை கூறும்படி அன்னப்பறவையை தூது அனுப்பினான். அன்னமும் தமயந்தியிடம் சென்று, நளனின் ஆட்சித் திறத்தினையும், அறிவு மற்றும் நற்பண்புகளையும் கூறியது. அதைக் கேட்டு தமயந்திக்கும் நளனின் மீது காதல் உண்டானது.

    இந்நிலையில் தமயந்திக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் நளன் உட்பட மண்ணுலக மன்னர்கள் பலரும், இந்திரன் உட்பட விண்ணுலக தேவர்கள் சிலரும் பங்கேற்றனர். தேவர்கள் நளன் மீது தமயந்தி கொண்டக் காதலை அறிந்து, அனைவரும் நளனின் உருவத்திலேயே சுயம்வரத்திற்கு வந்திருந்தனர். கையில் மணமாலையுடன் வந்த தமயந்தி ஒரு கனம் திகைத்துப் போனாள்.

    ‘இவர்களில் உண்மையான நளனை எப்படிக் கண்டறிவது?’ என்று குழம்பிய தமயந்தி, ‘தேவர்களின் கண்கள் இமைக்காது; அவர்கள் சூடும் மாலை வாடாது’ என்பதனை அறிந்திருந்து வைத்திருந்தாள். அதன் மூலம் உண்மையான நளனைக் கண்டறிந்து மணமாலையை சூட்டினாள். அவர்கள் இல்லற வாழ்க்கையில் இரு குழந்தைகளும் பிறந்தனர்.

    தமயந்தி, நளனை மணந்து கொண்டதால் கோபம்கொண்ட இந்திரனும் அவனுடன் வந்த தேவர்களும், சனி பகவானிடம் நளனைப் பிடித்து துன்புறுத்தும்படிக் கூறினர். சனி பகவான் ஏழரை ஆண்டுகள் நளனைப் பிடித்தார். இதனால் புஷ்கரனோடு சூதாடி நளன் தன் அரசாட்சியை இழந்தான். மனைவியோடு காட்டில் வாழ்ந்தான். அப்போது மனைவியையும் இழந்தான். கணவனைக் காணாததால் தமயந்தி தந்தையோடு சென்று வசித்தாள். கார்கோடகன் என்ற பாம்பு கடித்து, நளன் உடல் கருப்பானதோடு, உருவமும் குள்ளமாக மாறியது. இதையடுத்து அவன் வாகுகன் என்ற பெயரில் அயோத்தியின் அரசனாக இருந்த ரிதுபன்னனிடம் தேரோட்டியாக சேர்ந்தான்.

    இந்த நிலையில் தனக்கு மீண்டும் சுயம்வரம் என்றால் நளன் தன்னைத் தேடி வருவான் என்று நினைத்தாள் தமயந்தி. தன் தந்தையிடம் கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்யச் சென்னாள். ரிதுபன்னன் சுயம்வரத்திற்கு புறப்பட்டான். அவனது தேரோட்டியாக நளனும் அங்கு வந்தான். அவனைக் கண்டறிந்த தமயந்தி, அவனுக்கு மாலையிட்டாள். கார்கோடகன் அளித்திருந்த ஆடையையும் நளனுக்கு வழங்கினாள். அதை அணிந்ததும் நளன் சுயஉருவைப் பெற்றான். நளனும், தமயந்தியும் மீண்டும் இணைந்தனர்.

    பின்னர் பரத்வாஜ முனிவரின் வழிகாட்டுதல்படி, தர்ப்பை புற்கள் நிறைந்த வனமான திருநள்ளாறு திருத்தலம் வந்து, தீர்த்தம் உண்டாக்கி நீராடினார். அங்கு சுயம்புவாக தோன்றிய தர்ப்பை புற்கள் படிந்த தழும்புடன் கூடிய தர்ப்பாரண்யேஸ்வரர் லிங்கத்திற்கு மலர்கள் சூட்டி வழிபாடு செய்தான். இதையடுத்து அவனைப் பிடித்திருந்த ஏழரைச் சனி முற்றிலுமாக நீங்கியது. இழந்த செல்வங்கள் அனைத்தையும் திரும்பப் பெற்று, நல்ல முறையில் அரசாட்சியை தொடர்ந்தான்.

    நளன் இங்கு ஈசனின் கருவறைக்குள் நுழைந்ததுமே, அவனைப் பற்றியிருந்த சகல துன்பங்களும், சனி தோஷங்களும் உள்ளே நுழைய அஞ்சி வெளியிலேயே தங்கிவிட்டது. அதனால்தான் அம்பாள் சன்னிதி அருகில் கட்டை கோபுரத்தின் வெளிச்சுவற்றின் மாடத்தில் சனி பகவான் சன்னிதி இருக்கிறது.

    தன்னால் மிகவும் துன்பப்பட்ட நளனிடம் சனி பகவான், “சோதனை காலத்திலும் மிளிர்ந்த நள வேந்தே! வேண்டிய வரம் கேள்” என்றாராம்.

    உடனே நளன், “சனிபகவானே! நான் பட்ட துன்பம் யாருக்கும் ஏற்படக்கூடாது. என் மனைவி பட்ட துன்பமும் எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. வருங்காலத்தில் எனது கதையைப் படிப்பவர்களுக்கு உங்களால் எந்தவிதமான துன்பமும் வரக்கூடாது” என்ற வரத்தைக் கேட்டான்.

    “நளனே! உன்னுடையக் கதையைக் கேட்போரை, படிப்போரை நான் துன்புறுத்தமாட்டேன். இது உறுதி” என்று கூறினார். எனவே சனி பாதிப்பு உள்ளவர்கள், ‘நளபுராணம்’ பாராயணம் செய்து, திருநள்ளாறு திருத்தலத்தில் வழிபட்டால் சனியால் உண்டாகும் அனைத்து விதமான தோஷங்களும் விலகிவிடும். திருநள்ளாறு செல்பவர்கள், முதலில் ஆலயத்தின் வட மேற்கில் உள்ள நள தீர்த்தத்தில் நீராடி, உடுத்திக் குளித்த துணியை, அதற்கென குளக்கரையில் வைக்கப்பட்டுள்ள தொட்டியில் சமர்பித்துவிட்டு, அருகிலுள்ள நளனின் கலி தீர்த்த விநாயகர், பைரவர் சன்னிதியில் முறைப்படி வழிபட வேண்டும்.

    பின்னர் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் கருவறையில் வீற்றிருக்கும் இறைவனுக்கு சாம்பிராணி தூபம் காட்டி, தீபம் ஏற்றி நறுமண மலர்கள் சாத்தி வழிபட வேண்டும். பின்னர் அம்பாள் சன்னிதியில் குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டு சனிபகவான் சன்னிதியிலும் வழிபாடு செய்ய வேண்டும்.

    தமிழ் மாதத்தின் கடைசி சனிக்கிழமைகளிலும், தமிழ் மாதப் பிறப்பு நாட்களிலும், அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் இத்தல நள தீர்த்தத்தில் நீராடி வழிபடுவது சிறப்பானது.

    அமைவிடம்

    காரைக்காலில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 5 கிமீ தூரத்தில் திருநள்ளாறு திருத்தலம் அமைந்திருக்கிறது.
    இழந்த பொருட்கள், சொத்துக்கள் போன்றவை அப்படியே நமக்கு திரும்ப கிடைக்காவிட்டாலும் அதற்கிணையான செல்வம் நமக்கு கிடைக்க வழிவகை செய்யும் கர்த்தவீர்யார்ஜுன ஹோமம்.
    உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாள், திதியில் யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கர்த்தவீர்யார்ஜுன மந்திரம் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

    கர்த்தவீர்யார்ஜுன ஹோமம் செய்யும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, தூய்மையான ஆடைகள் அணிந்து, உணவு ஏதும் உண்ணாமல் ஹோம பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு. பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது.

    இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது. கார்த்தவீர்யார்ஜுனன் ஹோமம் செய்யப்படுவதின் பிரதான நோக்கமே இழந்த நமது பூர்வீக சொத்துக்களையும், பொருட்களையும் திரும்ப மீட்பதற்காக தான்.

    வேதம் அறிந்த வேதியர்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவதால் நம்மை வஞ்சித்து பிறர் பெற்றுக்கொண்ட சொத்துக்கள், நம்மை அறியாமல் நாம் தொலைத்த அல்லது திருடப்பட்ட பொருட்கள் போன்றவை விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கச் செய்யும். இழந்த பொருட்கள், சொத்துக்கள் போன்றவை அப்படியே நமக்கு திரும்ப கிடைக்காவிட்டாலும் அதற்கிணையான செல்வம் நமக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.

    அதேபோன்று சில குடும்பங்களில் சில நபர்கள் மிக இளம் வயதிலோ அல்லது பல்வேறு காரணங்களால் காணாமல் போவது, பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களை மீண்டும் தொலைந்த தங்களின் உறவுகளோடு சேர்க்க செய்யும் ஆற்றல் மிக்க ஹோம பூஜையாக கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் இருக்கிறது.
    இந்த மாத இறுதியில் செப்டம்பர் 28-ந்தேதி, அதாவது புரட்டாசி 11-ந்தேதி மகாளயபட்ச அமாவாசை வருகிறது. அந்த நாள் பித்ருக்களுக்கு மிகவும் உகந்த நாளாகும்.
    பித்ரு தோஷத்துக்கான பரிகாரத்துக்கு உகந்த மகாளயபட்ச அமாவாசை நெருங்கும் நேரத்தில் சரியாக நாம் அதை பற்றி பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த மாத இறுதியில் செப்டம்பர் 28ந்தேதி, அதாவது புரட்டாசி 11ந்தேதி மகாளயபட்ச அமாவாசை வருகிறது. அந்த நாள் பித்ருக்களுக்கு மிகவும் உகந்த நாளாகும்.

    புரட்டாசி

    ஆன்மீகத்தில் புரட்டாசி மாதமே பக்திக்கான மாதம் ஆகும். புரட்டாசி மாதத்துக்கும் பகவான் விஷ்ணுவுக்கும் உள்ள தொடர்பை நான் விளக்கி சொல்லவேண்டியது இல்லை. விஷ்ணுவுக்கு மிகவும் உகந்த மாதம் இந்த புரட்டாசி ஆகும். சூரியன் கன்யா ராசியில் சஞ்சரிக்கும் புண்ணியமிகு காலமான புரட்டாசி மாதத்தில் கிருஷ்ணபட்ச பிரதமை முதல் அமாவாசை வரை உள்ள காலத்துக்கு பித்ரு பட்சம், மகாளயபட்ச புண்ய காலம் என்று பெயர். அதாவது பவுர்ணமி வந்த மறுநாளில் இருந்து அமாவாசை வரையிலான இருவார காலம். இந்த தேய்பிறை நாட்கள் முழுவதுமே மாபெரும் சக்தி நிறைந்தவை.

    கர்ணன்

    மகாபாரதப் போரில் கர்ணன் மரணம் அடைந்த பின் வானுலகம் சென்றான். அப்போது அவனுக்கு பொன்னையும், ஆபரணங்களையும் அளித்தார்கள். கர்ணன் உண்பதற்கு உணவைக் கேட்டான். அதற்கு எமதர்மன் ‘பூலோகத்தில் இருந்த போது ஏராளமான தானங்களை அளித்த நீ உன் மூதாதையர்களுக்காக அன்னதானமோ, சிரார்த்தமோ செய்யவில்லை. அதற்கு பரிகாரமாக நீ புரட்டாசி மாதத்தில் அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களில் பூலோகம் சென்று முன்னோர்களுக்காக அன்னதானமும், சிராத்தமும் செய்து விட்டு வந்தால் இங்கு உனக்கு உணவு கிடைக்கும்’என்றார். கர்ணனும் அதன்படி பூலோகம் வந்து அன்னதானமும், சிரார்த்தமும் செய்தார். அந்த நாட்களே மகாளயபட்ச நாட்கள் எனவும் ஒரு புராண கதை கூறுகிறது.

    21 தலைமுறை

    மாதம் தோறும் வரும் அமாவாசை அன்று மறைந்த மூதாதையர்களுக்கு திதி கொடுத்தால் யாரை நினைத்து திதி கொடுக்கிறோமோ அவர்கள் மட்டும் தான் வந்து திதியை பெற்றுக் கொள்வர். ஆனால் மகாளய அமாவாசை அன்று கொடுக்கும் திதி அப்படி இல்லை. அன்று திதி கொடுத்தால் நம் மூதாதையர்கள் அனைவரும் அதாவது 21 தலைமுறையை சேர்ந்த பித்ருக்கள் ஒன்றாக வந்து திதியை பெற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார்கள் என்று ஆன்மீக நூல்களில் கூறப்பட்டுள்ளது. இதனால்தான் மகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு திதி கொடுப்பது சிறப்பாக கருதப்படுகிறது. பித்ருக்கள் இறந்த திதி தெரியாதவர்கள் கூட இந்த மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் செய்யலாம்.

    காருண்ய தர்ப்பணம்

    பித்ரு பூஜையை புனித நீர்நிலைகளில் செய்வது சிறப்பு. புனித நதிகள், கடற்கரை ஓரங்கள், கோவில்களில் உள்ள தீர்த்த குளங்கள் ஆகியவை இந்த பூஜைக்கு ஏற்றவையாக கருதப்படுகிறது. புனிதத்தலங்களில் உள்ள நீர் நிலைகளில் புரட்டாசி அமாவாசை அன்று வேத விற்பன்னர்கள் மூலம் தர்ப்பணம் செய்யும்போது அளிக்கப்படும் எள்ளும், தண்ணீரும், பிண்டமும் மூதாதையர்களை சென்று அடைந்துவிடும். மகாளயபட்சத்தின் 15 நாட்களில் கடைசி தினமான அமாவாசை தினத்து அன்று நாம் அளிக்கும் தர்ப்பணம் நம் முன்னோர்களுக்கு மட்டும் அல்லாது தாவரங்கள், மரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் உள்பட அனைத்து உயிரினங்களுக்கும் சென்று சேரும். இந்த தர்ப்பணம் ‘காருண்ய தர்ப்பணம்’ என்று அழைக்கப்படுகிறது.

    அன்ன தானம்

    மகாளயபட்ச தர்ப்பணம் செய்வதால், நமது முன்னோர்கள் ஆசியுடன் நமது வாழ்க்கையும், நமது குழந்தைகளின் வாழ்க்கையும் உயர்வு பெறும். தர்ப்பணம் முடித்த பிறகு ஏழைகளுக்கு அன்னதானம் அளித்தால் பலன்கள் முழுமையாக கிடைக்கும். ஏழைகளுக்கு மட்டும் அல்ல பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது நமது கடமை. அதை மகாளயபட்சத்து அன்று அளிப்பது மிகவும் சிறப்பு. எனவே மகாளய அமாவாசை அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுத்து முடிந்ததும் மறக்காமல் காகங்களுக்கு உணவும், பசுக்களுக்கு அகத்திக் கீரையும் அவசியம் அளிக்க வேண்டும். பகல் நேரத்தில் நமக்கு வசதியான நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் தானம் அளிக்கலாம்.

    காலையில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், புளியோதரை என்று அன்ன பிரசாதம் எதுவாக இருந்தாலும் தயார் செய்து அளிக்கலாம். நாம் எந்த அளவுக்கு ஏழை, எளியவர்களுக்கு அன்னதானம் செய்கிறோமோ, அந்த அளவுக்கு பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்கள் மனம் குளிர்ந்து நம் சந்ததியினருக்கு ஆசிர்வாதம் அளிப்பார்கள்.

    எள்ளும் தர்ப்பையும்

    பித்ரு பூஜையை திருமாலே தனது ராமாவதாரம் மற்றும் கிருஷ்ணாவதார காலங்களில் செய்து தமது முன்னோர்களை வழிபட்டதாக புராணங்கள் கூறுகின்றன. தர்ப்பணம் அளிக்கும் போது எள்ளும், தர்ப்பையும் அவசியம் பயன்படுத்தப்பட வேண்டும். எள் என்பது பெருமாளின் வியர்வை துளியில் இருந்து உருவான பரிசுத்தமான தானியம் ஆகும். தானம் செய்யும் போது எள்ளை தானம் செய்தால் அது அளவிட முடியாத அளவுக்கு பலன் பெற்றுத்தரும், எப்பேற்பட்ட பாவமும் நீங்கும் என்று வேதங்கள் கூறுகின்றன.

    பித்ருபட்ச காலமான இரு வாரகாலமும் கூட விரதம் கடைபிடிக்கலாம். அந்த நாட்களில் சுத்தமான சைவ உணவை ஒரு பொழுது உண்ண வேண்டும். மகாளய பட்சத்தில், அனைத்து நாட்களிலும் தர்ப்பணம் செய்வது விசேஷம். இயலாதவர்கள் மகாளய அமாவாசை அன்றாவது பக்தியுடனும், நம்பிக்கையுடனும் முன்னோர் கடனை அளிப்பது மிகுந்த பலனை தரும். இதனால் பித்ரு தோஷம் நீங்கும்.

    புரட்டாசி அமாவாசை அன்று பித்ருபூஜை செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் எமனுக்கும் மகிழ்ச்சி ஏற்படும். இறுதி காலத்தில் எம பயம் இருக்காது என்று புராணங்கள் கூறுகின்றன. ஆலயங்களுக்கு செல்ல இயலாதவர்கள், தங்கள் இல்லத்திலேயே வேதவிற்பன்னர்களை அழைத்து பித்ரு பூஜையை செய்யச் சொல்லி பலன் பெறலாம்.
     
    பித்ரு தோஷ பரிகார தலங்கள்


    ஸ்ரீராமன் ராவண வதம் செய்த பிறகு சிவபெருமானை நினைத்து பூஜை செய்த ராமேஸ்வரம் எனும் தலத்தில், இந்த மகாளயபட்ச அமாவாசை நாளில், தர்ப்பணங்கள் போன்ற முன்னோர் கடன்களை செய்வது, நம் வாழ்வை செழிக்க செய்யும். மேலும், மயிலாடுதுறை காவிரி படித்துறை, திருவாரூர் அருகிலுள்ள திலதர்ப்பணபுரி, திருச்சிக்கு அருகிலுள்ள முக்கொம்பு கொள்ளிடக்கரை, ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, திருநெல்வேலி அருகேயுள்ள வகுளகிரி நதிக்கரை, மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி, கன்யாகுமரி கடற்கரை, தேவிப் பட்டணம் நவபாஷாணம் உள்ள கடல்துறை, தென்காசி அருகில் உள்ள பாபநாசம் சிவாலய தீர்த்தக்கரை, குடந்தை மகாமகக் குளம், திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தக் குளக்கரை போன்ற இடங்கள் தர்ப்பணம் அளிக்க உகந்த இடங்கள்.

    மந்திரம்

    தர்ப்பணம் முடிந்ததும் நிறைவாக, ‘ஏஷாம் ந மாதா ந பிதா... குசோதகை:’ என்று மந்திரம் சொல்லச் சொல்வார்கள். ‘எவரொருவருக்குத் தாயில்லையோ, தந்தையில்லையோ, பங்காளி கள் இல்லையோ, நண்பர்கள் இல்லையோ... இதுபோன்று யாருமே அற்ற அநாதை என்று சொல்லக்கூடியவர்களுக்கு, நான் அளிக்கும் இந்த எள்ளும் தண்ணீருமானது திருப்தியை அளிக்கட்டும்’ என்று, சாதி மத பேதம் அற்று உலகின் அனைத்து ஜீவராசிகளும் நன்மை அடையவேண்டும் என பிரார்த்தனை செய்ய சொல்கிறது நமது சாஸ்திரம். அவ்வாறே கடைப்பிடித்து நலம் பெறலாம்.
    வியாபாரஸ்தலம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் வைத்து வழிபடலாம். கண் திருஷ்டி கண்பதியின் தோற்றம், போர்க்களம் சென்று எதிரிகளை வென்று திரும்பி வந்த போர்க்கோலத் தோற்றம்.
    ஒருவரது கண் பார்வை சாதாரணமாக, இயல்பாக இருக்கும் பட்சத்தில் அதனால் எந்தக் கெடுதலும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஆனால். அதே கண் பார்வை பொறாமை, வயிற்றெரிச்சல், தீய எண்ணம் என்ற உணர்வுகளை தாங்கி, அதனால் எழுகின்ற எண்ண அலைகளைக் குவித்து, கண்களின் மூலம் தீர்க்கமாகப் பார்க்கப்படும் போது, அது மிகவும் வலிமையாகப் பாய்ந்து மிகக் கெடுதலான விளைவுகளை ஏற்படுத்திவிடும்.

    அகஸ்திய மகாமுனிவர், இந்த கண் திருஷ்டி என்ற அசுரனை அழித்து சம்காரம் செய்து இந்த உலகையும், உலக மக்களையும் பாதுகாக்க ஒரு சர்வவல்லமை பொருந்திய மகா சக்தியைத் தோற்றுவித்தார். அவர் தான் ”கண் திருஷ்டி கணபதி“. இவர் முப்பத்து மூன்றாவது மூர்த்தமாக இந்த உலகில் உதயமான சர்வ மகாசக்தி கணபதி ஆவார். இந்தக் கண் திருஷ்டி கணபதி படத்தை வீட்டில் குறிப்பாக வடக்குத்திசை நோக்கி இருக்குமாறு மாட்டி வணங்கலாம். பூஜை அறையில் வைத்தும் வணங்கலாம். வீட்டின் முன் அறையில் மற்றவர்கள் கண் பார்வை படுமாறு வைத்தும் வணங்கலாம்.

    வியாபாரஸ்தலம், அலுவலகம் மற்றும் தொழிற்சாலைகளிலும் வைத்து வழிபடலாம். கண் திருஷ்டி கண்பதியின் தோற்றம், போர்க்களம் சென்று எதிரிகளை வென்று திரும்பி வந்த போர்க்கோலத் தோற்றம். இந்தச் சிறப்பான ‘வடிவம்’கொண்ட ‘கண் திருஷ்டி கணபதி’யை ஒவ்வொரு வீட்டிலும், வேலை செய்யும் இடத்திலும் வைத்து வணங்க வேண்டியது மிகமிக அவசியமாகும்.

    கேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் உள்ள நாவாய் முகுந்தன் கோவில் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது.
    கேரள மாநிலம் திருநாவாய் என்ற ஊரில் புகழ் பெற்ற வைணவத் தலம் ஒன்று உள்ளது. 108 திவ்ய தேசங்களில் அந்த தலமும் ஒன்றாகும். இத்தலத்தில் எழுந்தருளி உள்ள எம்பெருமானுக்கு ‘‘நாவாய் முகுந்தன்’’ என்று பெயர்.

    இந்த தலம் பித்ருக்கள் பூஜை செய்வதற்கான சிறந்த தலமாக உள்ளது. துவாரபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ணர் இங்கு வந்து பஞ்ச பாண்டவர்களுடன் சேர்ந்து தம் முன்னோருக்கு பித்ரு பூஜை செய்தார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தலத்தில் பித்ரு பூஜை செய்தால் அளவிடற்கரிய புண்ணியம் கிடைக்கும் என்று கருதப்படுகிறது.

    அமாவாசை நாட்களில் இத்தலத்தின் தலவிருட்சம் அடியில் பித்ருக்களுக்கு அன்னம் வைத்து வழிபடுகிறார்கள். கோவில் அருகில் பிரமாண்ட பந்தல் அமைத்து பித்ரு கடமைகள் செய்ய வசதி செய்துள்ளனர்.

    எனவே ஏதாவது ஒரு அமாவாசை தினத்தன்று திருநாவாய் சென்று கிருஷ்ண பரமாத்மா செய்தது போல பித்ரு பூஜைகள் செய்து பலன் பெறலாம்.
    ராகு தோஷத்தால் அவதிப்படுபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகார வழிபாடுகளை தினமும் செய்து வந்தால் வாழ்வில் நல்ல மாற்றங்களை காணலாம்.
    தினசரி துர்க்கை அம்மனுக்குரிய ஸ்தோத்திரங்களை படித்து வர வேண்டும்.

    தினசரி அரசு, வேம்பு மரத்தடியில் உள்ள விநாயகர், நாகர் சிலைகளை 9 தடவை வலம் வர வேண்டும்.

    துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் கிரக வீட்டின் அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    நவக்கிரக பீடத்தில் உள்ள ராகு பகவானை தினசரி வலம் வர வேண்டும். பிரச்சனையின் தீவிரத்திற்கு ஏற்ப 9, 27, 108 என சுற்றுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து இவ்வாறு 48 நாட்கள் வலம் வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

    ராகு பகவானுக்குரிய தியான மற்றும் காயத்ரி அஷ்டோத்திர மந்திரங்களை தினமும் ஒரு முறையாவது சொல்லி வர வேண்டும்.
    மனிதர்கள் வாழ்வில் எல்லாவிதமான இன்பங்களையும், பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்தும் பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது.
    மனிதர்கள் வாழ்வில் எல்லாவிதமான இன்பங்களையும், பேறுகளையும் அடைய விடாமல் தடுத்து நிறுத்துவது முன்னோர்கள் சாபம் எனப்படும் பித்ரு சாபம்தான். அப்படிப்பட்ட பித்ரு சாபங்களை நீக்கும் திருத்தலமாக திருப்பூந்துருத்தி திருத்தலம் அமைந்துள்ளது. இது சிறப்பு மிக்க சிவாலயங்களில் ஒன்று. இங்கு புஷ்பவனேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இறைவன் அருள்பாலிக்கிறார். இறைவியின் திருநாமம் சவுந்தரிய நாயகி. திருவையாறைத் தலைமை தலமாகக் கொண்டு விளங்கும் சப்த ஸ்தானத் தலங்களில் இத்தலம் ஆறாவது தலமாகும்.

    ஆடி அமாவாசை நாளில் இத்தலத்தை கிரிவலம் வந்தால், பித்ரு சாபங்கள் நீங்கும்; செல்வ வளம் பெருகும்; தடைகள் அகலும்; தீவினைகளும் விலகும் என்பது ஐதீகம். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை அன்று, இவ்வாலயத்தில் திருவிழா நடத்தப்படுகிறது.

    அட்டவீரட்டான ஸ்தலங்களில் ஒன்றான திருக்கண்டியூர் என்ற சிவஸ்தலத்தில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் 4 கிலோமீட்டர் தொலைவில் திருப்பூந்துருத்தி இருக்கிறது. திருவையாறில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இந்த ஆலயத்தை அடையலாம். திருவையாற்றில் இருந்து திருப்பூந்துருத்தி செல்ல நகரப் பேருந்து வசதி உண்டு. தஞ்சாவூரில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருப்பூந்துருத்தி திருத்தலம்.
    ஸ்வாதி நட்சத்திரத்தில் அவதரித்த நரசிம்மரை, தொடர்ந்து 9 ஸ்வாதி நட்சத்திர தினத்தில் சேவித்து வர தீராத கடன், நோய் நொடி, கல்யாணத்தடை போன்றவை நிவர்த்தி ஆகும் என்பது சிறப்பு.
    சென்னைக்கு அருகே உள்ள பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் அவசியம் தரிசிக்க வேண்டிய ஒன்று.  சென்னையில் இருந்து பூந்தமல்லி வழியாக பெங்களூர் ஹைவேயில், தண்டலத்தில் இருந்து வலது புறம் திரும்பி பேரம்பாக்கம் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் செல்ல வேண்டும்.

    கூவம் பஸ் ஸ்டாப்பில் இருந்து 2 ரிவி வயல்களின் நடுவே இயற்கையை ரசித்தவாறே நடந்து செல்லலாம். இந்த சாலை, காரில் செல்ல சற்று சுமார்தான். கூவம் பஸ் ஸ்டாப்பில் இருந்து ஷேர் ஆட்டோ வசதி உண்டு. பூந்தமல்லியில் இருந்து கோவில் வரை நேரடி பஸ் வசதியும் உண்டு. (தடம் எண் 591 ). முதல் பஸ் காலை 6 .15 மணிக்கு.

    இந்த «க்ஷத்ரம் 16-வது நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. மூலவர் ஏழரை அடி உயரத்தில் மகாலக்ஷ்மியை இடது துடை மீதமர்த்தி சாந்த ஸ்வரூபியாக அருள் பாலிக்கிறார். பெருமாளுக்கு கல்யாண லக்ஷ்மி நரசிம்ஹர் என்ற பெயரும் உண்டு. தாயாரின் பார்வை முழுவதும் பக்தர்களைப் பார்த்தவாறு இருப்பது இத்தலத்தின் தனிச் சிறப்பு. சமீபத்தில் ஸ்ரீ அஹோபில மடம் 45ஆவது பட்டம் ஸ்ரீமத் அழகிய சிங்கர் விஜயம் செய்து மங்களாஸாசனம் செய்துள்ளார் என்று கோவில் குறிப்பேடு சொல்கிறது.

    “நாளை என்பது நரசிம்ஹனிடத்தில் இல்லை” என்பது இத்தலத்திற்கு மிகவும் பொருந்தும். ஏனெனில் இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்ற செவ்வாய் தோஷ பரிகார ஸ்தலம் ஆகும். பெரிய திருவடி (கருடாழ்வார்) சுமார் 4 அடி உயரத்தில் 16 நாகங்களை அணிந்து இருப்பதால் நாக தோஷ பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது.

    அந்திப் பொழுதில் ஸ்வாதி நக்ஷத்திரத்தில் அவதரித்த நரசிம்ஹரை, தொடர்ந்து 9 ஸ்வாதி நக்ஷத்திர தினத்தில் சேவித்து வர தீராத கடன், நோய் நொடி, கல்யாணத்தடை போன்றவை நிவர்த்தி ஆகும் என்பது சிறப்பு.

    மரகதவல்லித் தாயார் ஸந்நிதி பிரகாரத்தில் தனியே உள்ளது. முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும்.
    சக்கரத்தாழ்வார், ஆண்டாள் மற்றும் ராமருக்கும் தனித் தனியே ஸந்நிதிகள் அமைக்கப் பட்டுள்ளது. ஆஞ்சநேயர் ஸந்நிதி கோவிலுக்கு வெளியே பெருமாளைப் பார்த்தவாறு அமைந்துள்ளது.

    சனிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் கோவில் வாசலில் அர்ச்சனைத் தட்டு, புஷ்பம் போன்றவை கிடைக்கும். பிற நாட்களில் செல்வோர், புஷ்பம் போன்றவற்றை பிற ஊர்களிலிருந்து வாங்கிச் செல்வது உசிதம். கோவிலை ஒட்டி “கோசாலை”யும் பராமரிக்கப்பட்டு வருகிறது. அகத்தி கீரை கிடைக்கும் பட்சத்தில் பசுக்களுக்குக் கொடுக்கலாம்.

    நடை திறந்திருக்கும் நேரம்: காலை 7.30-12.00 மணி, மாலை 4.30-8.00 மணி வரை. (விசேஷ காலங்களில் மாறக் கூடும்).

    மேலும் விவரங்களுக்கு : ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹஸ்வாமி சேவா சபா டிரஸ்ட், நரசிங்கபுரம், பேரம்பாக்கம் வழி, திருவள்ளூர் மாவட்டம்-613402. மொபைல் : 9442585638
    திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவிலில் வழிபட்டால் கிரகங்களால் ஏற்படும் தோஷங்களும், மரண பயமும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
    திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகில் உள்ளது திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். இக்கோவிலில் தென் புறத்தில் எமதர்மராஜனும், வடப்புறத்தில் சனி பகவானும் அமைந்திருப்பது மற்ற எந்த ஒரு கோவிலிலும் இல்லாத சிறப்பு. இருவரும் ஒருங்கே அவதரித்த தலம் என்பதால், இருவரையும் ஒரே இடத்தில் காண்பது கிடைப்பதற்கரிய காட்சி. இரு சகோதரர்களும் ஒருங்கே நின்று வருகின்ற பக்தர்களுக்கு வேண்டிய வரத்தினையும், கிரகங்களால் ஏற்படும் தோஷங்களையும், மரண பயத்தையும் நீக்கி அருள்கிறார்கள்.

    இந்தக் கோவிலில் வியாழக்கிழமை தோறும் எமதர்மனுக்கும், சனிக்கிழமை தோறும் சனீஸ்வரருக்கும் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது. இங்குள்ள எமதர்மன், சனீஸ்வரன், பைரவர் ஆகியோருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால், இழந்த பொருட்களையும், இன்பத்தையும் திரும்ப பெறலாம் என்பது நம்பிக்கை.

    ஏழரைச் சனியின் பாதிப்பால் ஏற்படும் சகல தடைகளையும் இத்தலம் களைகிறது. எனவே இங்கு வந்து இறைவனுக்கும், இறைவிக்கும் அபிஷேகம், ஆராதனை செய்தால் அனைத்து பிரச்சினைகளும் நீங்கும். இத்தல இறைவனை வேண்டி உஷாதேவியும் சாயாதேவியும் புத்திரபேறு பெற்ற காரணத்தால், இத்தலம் குழந்தைப்பேறு வழங்கும் சிறப்பு தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு வந்து எள்ளு தீபம், நல்லெண்ணெய் விளக்கேற்றினால் அனைத்து தோஷங்களும் அகலும். 
    கோ பூஜை, பசு தானம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண தடை, சனி தோஷம் போன்ற பிரச்சனைகள் தீரும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    குழந்தை பாக்கியம் பெற

    கோமாதா பூஜையினால் தரித்திரம், துக்கம் விலகுகின்றன. கோபூஜை செய்து வந்தால் வியாபாரம் விருத்தியடையும். நிலையான லாபம் கிட்டும். குழந்தை பாக்கியம் பெற விரும்புபவர்கள் கோபூஜை, கோதானம் செய்தால் சிறந்த அறிவுள்ள நல்ல குழந்தைகள்பிறப்பர் என்பதற்கு நமது புராணங்களும் வரலாறுகளும் எடுத்துக் காட்டாகும்.

    திருமணம் நடைபெற

    நவக்கிரக பீடை, நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் கோபூஜையைச் செய்வது சிறந்த பலனைத்தரும். விவாகம் நடை பெறா திருந்தாலும், காலதாமதமாகிக் கொண்டே சென்றாலும், நல்ல வரன் அமையவில்லை என்றாலும் இந்தக் கோமாதா பூஜை அவற் றிற்கு ஒரு நல்ல தீர்வினைத்தரும். ஆணுக்கு நல்ல பெண் மனைவியாகவும், பெண்ணுக்குச் சிறந்த நற்குணமுள்ள ஆண் கணவனாகவும் கிடைக்கச் செய்யும் பூஜை இந்தக் கோமாதா பூஜை. பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வும்,கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை ஓங்கவும் இந்தக் கோபூஜை செய்வது அவசியம்.

    வியாதி நீங்க :

    ரோகம், வியாதி ஆகியவை கோமாதா பூஜையினால் நீங்கி ஆரோக்கிய வாழ்க்கை உருவாகிறது. செல்வச் செழிப்பு எற்படுகிறது. தரித்திரம் நீங்குகிறது. சிறந்த பசுவை, உயர்ந்த பசுவை ஸ்ரீசுக்தம் சொல்லி பூஜை செய்து, தானம் செய்ய வேண்டும். இந்தக் கோபூஜை யினால்,கோதானத்தினால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.

    பிதுர் சாபம் தீர :

    பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்கு கிறது. பித்து, பைத்தியம் போன்றவை கோதானத்தினால் குணமாகி நல்ல கதி கிடைக்கிறது.

    சனி தோஷம் விலக

    சனிக்கிரக பீடை, அஷ்டமச்சனி, கண்டச்சனி, ஏழரைச்சனி போன்ற சனிக்கிரகத் தொல்லைகளிலிருந்து விடுபட, கோபூஜையும், கோதானமும் செய்ய வேண்டும். இத்தகு அதி விசேஷமான, மகத்துவம் நிறைந்த பூஜை கோபூஜையே ஆகும்.

    ×