என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் மூலவரான கதிர்வேலை வழிபாடு செய்தால், பகை, பில்லி, சூனியம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும் என்கிறார்கள்.
    இன்றளவும் ஆலயக் கருவறையில் முருகப்பெருமானுக்குப் பதிலாக வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலாகும்.

    கந்தசஷ்டி அன்று இந்த ஆலயத்திற்கு வந்து, ‘சத்ரு சம்கார வேல்’ என்ற பதிகத்தை ஆறு முறை பாராயணம் செய்து, மூலவரான கதிர்வேலை வழிபாடு செய்தால், பகை, பில்லி, சூனியம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும் என்கிறார்கள்.

    சஷ்டி, கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவர் கதிர்வேல், மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து 8 மாதம் வழிபாடு செய்து வந்தால், நம் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும். தொழில் விருத்தி உண்டாகும். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தீவினை, தீயவை, கர்மவினைகள் விலகும்.

    கிருத்திகை நட்சத்திர நாள் அன்று இந்த வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டால், அடுத்த வருடமே குழந்தைப் பேறு கிடைக்கும் என்பதற்கு பலர் சாட்சியாக நிற்கின்றனர். மறு வருடமே குழந்தைப் பேறு கிடைக்கப் பெற்றவர்கள், தங்கள் குழந்தையோடு இத்தலம் வந்து முருகனுக்கு நன்றிக் கடன் செலுத்திச் செல்கிறார்கள்.

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி ஆலயத்துடன் இணைந்த கோவில் இதுவாகும்.
    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.
    புது வீடு கட்டி முடித்ததில் சில குறைபாடுகள் இருக்கலாம். குறிப்பாக கன்னி மூலையில் வாஸ்து தோஷம் இருப்பின் சில தெய்வ வழிபாட்டின் வாயிலாக சரி செய்யலாம்.

    வெள்ளிக்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் தீபம் ஏற்றுவது நலம் தரும்.

    பவுர்ணமி தினத்தில் அழகர் கோவிலில் உள்ள தீர்த்த தொட்டியில் குளித்து ராக்காயி அம்மனுக்கு எலுமிச்சை பழம் மாலை அணிவிப்பது சிறப்பு தரும்.

    ராகுவுக்கு மந்தாரை மலர் வைத்து வழிபாடு செய்யலாம்.

    திருநாகேஸ்வரம் சென்று ராகுகாலத்தில், ராகுவுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது நன்மை தரும்.

    தினமும் 27 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.

    காளஹஸ்தி சென்று சிவனை தரிசனம் செய்து விட்டு அதன் பின்னர் ராகுவுக்கு நாக சாந்தி செய்வதும் பலன் தரும்.
    ஒரு பெண்ணுக்குக் கல்யாணத்திற்குத் தடை இருந்தால் காத்யாயனி தேவியைப் பூஜித்தால் அந்தத் தடை உடனே விலகி விடும்.
    கேரள மாந்திரீக ரத்தின கல்பத்தில் இதற்கான ஆதாரம் இருக்கிறது. இந்த அம்பிகை வழிபாடு கேரளத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும் இருக்கிறது. சென்னை குன்றத்தூரில் காத்யாயனி ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் தினமும் பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    கல்யாணப் பிரார்த்தனைக்கு வருபவர்கள் மூன்று வார தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஆலய சாஸ்திர விதியாக உள்ளது. தினசரி தரிசனம் இருந்தாலும் கல்யாணத்திற்கான வழிபாடு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை, செவ்வாய்க்கிழமைகளிலும், அமாவாசை, பவுர்ணமி நாளிலும் மட்டுமே நடத்திக் கொள்ள வேண்டும்.

    மூன்று தரிசனங்களில் முதல் வார தரிசனத்தில் ஸ்ரீ காத்யாயனி சன்னிதியில் அர்ச்சனை செய்து தனது கிரக தோஷங்கள் விலகிட வேண்டிக் கொள்ள வேண்டும். இரண்டாவது தரிசனத்தில் இந்த ஆலயத்தில் உள்ள திருமண மரத்திற்குப் பூஜை செய்து சன்னிதியில் மஞ்சள் காப்பு கட்டி கொள்ள வேண்டும். தேவர், ரிஷிகள், ஆசி பெற்றிட, விருப்பங்கள் நிறைவேற விருட்சபூஜை அவசியம்.

    மூன்றாவது வார தரிசனத்தில் ஒரு பெண் ஜன்ம பத்ரிகா பூஜை செய்ய வேண்டும். அதாவது ஜனனம் ஆகும்போது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் கல்யாணம் தடைபடுகிறது. அந்தக் கிரகங்கள் நல்ல இடத்தில் சென்று பெண்ணுக்கு சுபமங்களமான வாழ்க்கை அருளிட தேவியை நவகிரக நாயகியாக நினைத்து அவளது பீடத்தில் ஜன்மபத்ரிகா என்னும் ஜாதகத்தை வைத்து விசேஷ ஆகமபீஜ மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வதாகும்.

    இந்த மூன்று தரிசனங்களையும் முறையோடு செய்யும் ஒரு பெண் மூன்று பட்சங்களுக்குள் கல்யாண வரத்தை பெறுகிறாள் என்பது ஆலய தரிசனம் செய்த பெண்களின் கருத்தாகும்.

    இத்தலத்தில் திருமணபேறு வேண்டி தரிசிக்க வரும் பெண்-ஆண் இருபாலருக்கும் அதிக வயதை தாண்டி இருப்பின் (26 வயதுக்கு மேல்) திங்கள், புதன், வியாழக்கிழமைகளில் காமேஸ்வரி துளசியக்ஞம் சுயம்வரகலா, கந்தர்வராஜ யக்ஞம் செய்கிறார்கள். துளசியால் யக்ஞம் செய்து விட்டால் விரைவில் மணமேடை ஏறுவர் என்பது நடந்துவரும் உண்மை.
    திருமண தடை நீங்கி திருமண வாழ்வு சிறப்பாக அமைய கவனிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் சில இருக்கின்றன. அதைப் பற்றி அறிந்துகொள்வோம்.
    புதிய சமுதாய தொடக்கத்தை உருவாக்கும் இரு மனங்களின் இணைவே ‘திருமணம்.’ மனித வாழ்வில் மகத்தான அத்தியாயம் திருமணம் என்றால் அது மிகையல்ல.

    ஆனால் திருமண வயதில் இருக்கும் ஆண்-பெண் அனைவருக்கும் சவால் விடும் பிரச்சினையாக இருப்பது , திருமணத் தடை. நாட்டில் ஆயிரக்கணக்கான திருமணத் தகவல் மையங்கள் இருந்தாலும், திரு மணத்திற்கு வரன் கிடைப்பது குதிரைக்கு கொம்பு முளைத்த கதையாகத்தான் இருந்து வருகிறது. உளவியல் ரீதியாக நாட்டில் ஆண்களை விட பெண்களின் சதவீதம் குறைவாக இருப்பதே திருமணத் தடைக்கான காரணங்கள்.

    திருமணத் தடைக்கு காரணமாக அனைவரும் நம்பும் பிரச்சினைகள் செவ்வாய் தோஷம், ராகு-கேது தோஷம். ஆனால் சூட்சமமான பல்வேறு காரணிகள் திருமணத்தை தடை செய்வதில் முன்னிலையில் இருக்கிறது. ‘களத்திர தோஷம்’ எனும் கடுமையான தோஷம் திருமணத்திற்கு முன்னும், பின்னும் பல்வேறு மன சஞ்சலத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சிலருக்கு திருமணத்தை நடத்தி தராமலும், ஒரு சாரருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தை நடத்துவதும் களத்திர தோஷத்தின் சிறப்பு அம்சமாகும். இவர் களுக்கு எதிர்பார்த்த மண வாழ்க்கை அமையாது. காலதாமத திருமணம், திருமண வாழ்வில் ஏமாற்றம், பிரச்சினையுடன் கூடிய மண வாழ்க்கை, பொருத்தமில்லாத ஜோடி, தம்பதிகளிடையே எப்பொழுதும் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்படும்.

    தன் வாழ்வையே இழக்கும் உறவின் கீழ், வாழ்வு அமையவும் வாய்ப்பு உண்டு. கணவன் - மனைவி உறவு என்பது, அன்பை பரிமாறிக் கொள்ளும் உறவாக இருந்தால் திருமணம் சொர்க்கம். சரியாக அமையாத திருமண உறவு நரகம். இனிமையாக இல்லறம் நடத்துபவர்கள் திருமணத்தை வாழ்வின் முக்கிய நிகழ்வாகவும், திருமணத்தின் மூலம் மன வேதனை அனுபவிப்பவர்கள் அதை கெட்ட சம்பவமாகவும், திருமணத் தடையால் பாதிக்கப்பட்டவர்கள் ‘எப்பொழுது திருமணம் நடைபெறும்?’ என்று அதை ஒரு எட்டாக்கனி போல் பார்த்துக் கொண்டும் இருக்கிறார்கள்.

    திருமண வாழ்வு சிறப்பாக அமைய கவனிக்கப்பட வேண்டிய விதிமுறைகள் சில இருக்கின்றன. அதைப் பற்றி அறிந்துகொள்வோம்.

    திருமணம் தொடர்பான பாவங்களாக 1, 2, 7, 8 ஆகிய இடங்கள் உள்ளன. இவை பலம் பெற வேண்டும். ஆண் ஜாதகத்தில் சுக்ரனுக்கும், பெண் ஜாதகத்தில் செவ்வாய்க்கும் ராகு-கேதுக்களின் சம்பந்தம் இருக்கக்கூடாது. சுக்ரன், செவ்வாய்க்கு சனியின் பார்வை இருந்தால், அது திருமணத்தை காலதாமதமாக்கும். அதே போல், 1, 2, 7, 8 ஆகிய இடத்தின் அதி பதிகள் வக்ரம், நீச்சம், அஸ்தமனம் அடையக்கூடாது. 7-ம் இடமான களத்திர ஸ்தானத்தில், பாவ கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, ராகு- கேது போன்ற அசுப கிரகங்கள் தனித்து நின்றாலும் திருமணம் காலதாமதமாகும். அதே போல் 7-ம் இடத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அசுப கிரகங்கள் இருந்தால், ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் அல்லது திருமணத்திற்குப் பிறகு தவறான நட்பை ஏற்படுத்தும்.

    ஜனன கால ஜாதகத்தில் 2, 7-ம் இடத்திற்கு செவ்வாய்- ராகு, சூரியன்-ராகு, சுக்ரன்- ராகு, சனி- ராகு, சூரியன்- சனி, செவ்வாய்- சனி போன்ற கிரகங்களின் சம்பந்தம் இருந்தால், திருமணம் தாமதமாவதுடன், திருமணத்திற்குப் பின் தம்பதியரிடையே கருத்துவேறுபாட்டை உருவாக்கும்.

    அதே போல் 2, 7-ம் இடத்திற்கு, செவ்வாய் - கேது, சூரியன்- கேது, சுக்ரன்- கேது, சனி- கேது, செவ்வாய் - கேது போன்ற கிரகங்களின் சம்பந்தம் இருந்தால், ஜாதகரின் 1, 5, 9 ஆகி இடங்களில் வலிமைக்கு ஏற்றவாறே திருமணம் கைகூடும்.

    பெண்ணின் ஜாதகத்தில் 8-ம் இடமான மாங்கல்ய ஸ்தானத்தில் அசுப கிரகங்கள் இருந்தால் திருமணத் தடை உண்டாகும். 2, 7-ம் இடத்துக்கான அதிபதிகள், மறை ஸ்தானமான 6, 8, 12-ம் அதிபதிகளுடன் சம்பந்தம் பெறாமல் இருக்க வேண்டும்.

    பரிகாரம்

    ஜாதகத்தில் உள்ள குறையை சரிசெய்ய பிரபஞ்சம் வழங்கிய கொடைதான், திருமணப் பொருத்தம். எனவே தம்பதிகளிடையே மன ஒற்றுமையை அதிகரிக்கச் செய்ய முறையான கட்டப்பொருத்தம் அவசியம். ஒரு ஜாதகத்தில் இருக்கும் பாதகத்தை சாதகமாக மாற்றும் விதமான ஜாதகத்தை இணைப்பதே, திருமணத் தடைக்கு முதல் பரிகாரம்.

    * சூரியன், ராகு-கேது சேர்க்கையால் திருமணத் தடையை சந்திப்பவர்கள் , ஸ்ரீ காளகஸ்தி ஆலயம் சென்று காளகஸ்தீஸ்வரரையும், ஞானப் பூங்கோதை தாயாரையும் வழிபட வேண்டும்.

    * சூரியன், சனி சேர்க்கை இருந்தால், சனிக்கிழமைகளில் திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை தரிசனம் செய்ய திருமணத் தடை அகலும்.

    * சுக்ரன்,கேது சேர்க்கை இருப்பவர்கள், வெள்ளிக்கிழமைகளில் லலிதா சகஸ்ர நாமத்தை குங்கும அர்ச்சனையுடன் சொல்லி வந்தால், மனதிற்கினிய வரன் அமையும்.

    * செவ்வாய், கேதுவால் திருமணத் தடை இருப்பவர்கள், அரச மரத்தடியில் இருக்கும் சர்ப்ப சிலைகளை செவ்வாய்க்கிழமை காலை 8 மணி முதல் 9 மணி வரையான சுக்ர ஒரையில் வழிபட திருமணம் கைகூடும்.

    * சனி, ராகு-கேது சம்பந்தத்தால் திருமணம் தடைபட்டால், ராகு வேளையில் பிரத்யங்கரா தேவியை வழிபட பலன் கிடைக்கும்.

    * செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பவர்கள், லட்சுமி நரசிம்மரை வழிபட வேண்டும்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம்(வழிபாடு) செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    கருட பகவானை எந்தெந்த நாட்களில் தரிசனம்(வழிபாடு) செய்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.

    ஞாயிறு - பிணி விலகும்

    திங்கள் - குடும்ப நலம் சிறக்கும்

    செவ்வாய் - துணிவு பிறக்கும்

    புதன் - பகைவர் பலம் குறையும்

    வியாழன் - நீண்ட ஆயுள் கிடைக்கும்

    வெள்ளி - செல்வம் பெருகும்

    சனி - முக்தி கிடைக்கும்
    ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ராகுவின் அமைப்பு சரியாக இருந்தால் தந்தை வழி சொத்துக்கள் கைகூடி வரும், இல்லாவிட்டால் இழுபறியாகும். கல்யாண மாலை கழுத்தில் விழுவதில் தாமதம், குழந்தை பாக்கியம் கிட்டுவதில் தடை, புகழுக்கு களங்கம் ஏற்படுவது, சட்டத்தினால் தண்டிக்கப்படுவது, தொழிலில் எதிர்பாராத நஷ்டம், மனவிரக்தி, அடிக்கடி இட மாற்றம், வீண் பழி சுமத்தல், குடும்பப் பிரிவு இப்படிப்பட்ட பொதுவான பிரச்சினைகள் வரும். இத்தகைய ராகு தோஷத்தில் இருந்து தப்பிக்க சில வழிகள் உள்ளன. ராகுவுக்கு தனியாக ஓரை காலம் இல்லை.

    அதனால் சனிக்கிழமை காலை 6.15 முதல் 6.45-க்கு 5 அகல் தீபத்தை வீட்டு பூஜை அறையில் ஏற்றி வையுங்கள். தினமும் துர்க்கை காயத்ரியைச் சொல்லுங்கள். செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் துர்க்கையை 5 அகலில் நெய் தீபம் ஏற்றி கும்பிடுங்கள். எலுமிச்சை தீபம் கூடாது. 3 பழத்தை துர்க்கையிடம் வைத்து வழிபட்டு திரும்ப வாங்கி குடும்பத்துடன் சாறு பிழிந்து குடியுங்கள். வருடத்தில் ஒரு முறையாவது, பட்டீஸ்வரம் சென்று அங்குள்ள துர்க்கையையும், திருநாகேஸ்வரம் சென்று ராகுவையும் தரிசித்து விட்டு வாருங்கள்.

    முடிந்த போதெல்லாம் பக்தர்களுக்கு உளுந்துசாதம் விநியோகியுங்கள். பசுவுக்கு கடலைப் பொட்டு அல்லது வேறு ஏதாவது தீவனம் வாங்கிக் கொடுங்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகிலுள்ள கோவிலுக்கு சென்று துர்க்கை, ராகு சன்னதியில் வழிபாடு செய்யுங்கள். சிறியதொரு கருங்கல்லை உங்கள் கைவசம் வைத்திருப்பது ராகு தோஷ நிவர்த்திக்கான மிக எளிய வழி.
    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள பைரவருக்கு கருப்பு நூலினால் நெய்யப்பட்ட வேட்டி, துண்டினை வைத்து வழிபாடு செய்து வஸ்திர தானம் செய்யும் குடும்பத்தவருக்கு பைரவர் காவல் தெய்வமாய் விளங்குவாராம்.
    திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் வட்டப்பாறையம்மன் என்னும் துர்க்கை சந்நிதிக்கு எதிரே ஸ்ரீ பைரவருக்குத் தனிக்கோவில் காணப்படுகிறது.
    நமது ராசி மண்டலத்தில் 27 நட்சத்திரங்கள் ஆட்சி செய்கின்றன. நவக்கிரகக் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்த ராசி மண்டல நட்சத்திரத் தொகுதி ஒவ்வொன்றும் லிங்க வடிவில் இத்தல அதிபதியான ஸ்ரீ பைரவரை வணங்கி பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது.

    தெற்கு நோக்கிய கருவறையில் நாய் வாகனம் இல்லாமல் காட்சியளிக்கும் இவர் சூரசூளாமணி பைரவர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு நேர் எதிரில் முதல் பிரகாரத்தில் சப்த மாதர் சிற்பங்கள் காணப்படுகின்றன. பொதுவாக சப்தமாதர்கள் தெற்குப் பிரகாரத்தில் மட்டுமே காணப்படுவர். ஆனால், இத்தலத்தில் சப்தமாதர்கள் பைரவரின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக வடக்கு பிரகாரத்தில் அமைத்து தனி வழியும் அமைத்துள்ளனர்.

    பைரவருக்குக் கிழக்கில் சூலதீர்த்தம் என்னும் பைரவ தீர்த்தம் அமைந்துள்ளது. இங்குள்ள பைரவருக்கு கருப்பு நூலினால் நெய்யப்பட்ட வேட்டி மற்றும் துண்டினை வைத்து வழிபாடு செய்கின்றனர். பின்னர் இந்த வேண்டுதல் துணிகளை உடல் குறைபாடுள்ள ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்கின்றனர்.

    இவ்வாறு வஸ்திர தானம் செய்யும் குடும்பத்தவருக்கு பைரவர் காவல் தெய்வமாய் விளங்குவாராம்.
    ராமேஸ்வரம் ராமநாத சுவாமி ஆலயத்தின் முன்புள்ள கடல் தீர்த்தம், ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கு வரும் பக்தர்கள், அக்னி தீர்த்தத்தில் மூழ்கி, தங்களை பாவமற்றவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள்.
    தென் தமிழகத்தில் மட்டுமல்லாது, இந்தியாவிலேயே மிகவும் புண்ணியம் மிகுந்த தீர்த்த தலங்களில் ஒன்றாக ராமேஸ்வரம் இருக்கிறது. இங்கு ராமநாத சுவாமி ஆலயத்தின் முன்புள்ள கடல் தீர்த்தம், ‘அக்னி தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது.

    ராமனின் மனைவி சீதாதேவி, இலங்கை மன்னன் ராவணனால் கவந்து செல்லப்பட்டாள். அவள் அங்கு அசோகவனத்தில் பல காலம் சிறைபடுத்தப்பட்டாள். மிகப்பெரிய யுத்தத்திற்குப் பிறகு, ராவணனிடம் இருந்து தன் மனைவியை ராமன் மீட்டார்.

    ‘இவ்வளவு நாள் இலங்கையில் இருந்தவள், கற்புடன்தான் இருக்கிறாளா? என்று ஊரார் எண்ணக்கூடாது. அதனால் தன் மனைவி மனம் கலங்கிவிடக்கூடாது’ என்று நினைத்த ராமன், தன் மனதை கல்லாக்கிக் கொண்டு, சீதாதேவியை அக்னியில் இறங்கும்படி உத்தரவிட்டார்.

    சீதாதேவி இதற்காக கலங்கிப்போகவில்லை. அவளுக்கு, தன் கணவனின் மனதை அறியும் சக்தி இருந்தது. அவளுக்கு ராமனின் சொல்தான் வேதம். உடனடியாக லட்சுமணனை அழைத்த சீதாதேவி, அங்கே ஒரு அக்னி குண்டம் தயார் செய்யச் சொன்னாள். அவன் மனம் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை; தயங்கி நின்றான்.

    அதைக் கண்ட சீதாதேவி, “லட்சுமணா! உன் தாய் சொன்னது உனக்கு நினைவில்லையா? என்னையும் உன் தாயைப் போல பார்த்துக் கொள்ளும்படி கூறியிருந்தார். அந்த தாய் ஸ்தானத்தில் இருந்து உத்தரவிடு கிறேன். அக்னியை மூட்டு” என்றார்.

    லட்சுமணனுக்கு வேறு வழியில்லை. கட்டைகளை எடுத்து வந்து ஓரிடத்தில் அடுக்கி அக்னி வளர்த்தான்.

    அந்த அக்னிக்குள் இறங்கிய சீதாதேவி, “ஏ.. அக்னி தேவனே! நான் கற்புடையவள் என்பதை, இத்தனை பேர் முன்னிலையிலும் நிரூபித்துக் காட்டு” என்றாள்.

    அனைவரும் வணங்கும் மகாலட்சுமியின் சொரூபம் கொண்டவள், தனக்குள் இறங்குவதை நினைத்து அக்னிக்கு மகிழ்ச்சி. ஐஸ்வரியம் படைத்த மகாலட்சுமியின் ஸ்பரிசம் பட்டதால், அக்னி தேவன் குளிர்ந்து போனான். தேவனின் வடிவம் கொண்டு, சீதாதேவியை தன் கைகளில் ஏந்தியபடி அக்னியில் இருந்து வெளிவந்தான். அவளை ராமனிடம் கொடுத்து, “தர்மபத்தினியான இவளை, என்னால் எரிக்க முடியாது” என்று கூறி மறைந்தான்.

    ராமேஸ்வரம் கடற்கரையில் இந்த அற்புதம் நிகழ்ந்ததால், அக்னியின் பெயரே இந்த தீர்த்தத்திற்கு அமைந்து விட்டது. சீதாதேவி எப்படி அக்னியில் மூழ்கி, தன்னை சுத்தமானவளாக நிரூபித்தாளோ, அதுபோல் இங்கு வரும் பக்தர்கள், அக்னி தீர்த்தத்தில் மூழ்கி, தங்களை பாவமற்றவர்களாக மாற்றிக்கொள்கிறார்கள்.
    மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும். இந்த பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாது.
    மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் தங்களது கையில் எலுமிச்சை பழங்கள் மற்றும் மாலையாகவும் கொண்டு வருகிறார்கள். இதற்காக கோவிலின் முன்பு எலுமிச்சை பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. எலுமிச்சை பழத்தில்தான் அதிக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.

    எலுமிச்சை பழத்தை அம்மனின் காலில் வைத்து வழிபட்டு செல்லும் பக்தர்கள் அதனை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாது. மேலும் பலர் எலுமிச்சை பழத்தை வீட்டின் தலைவாசலில் கட்டி தொங்க விடுகிறார்கள். இதன் மூலம் கண்திருஷ்டி விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.

    அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது அங்காளம்மன் கோவிலை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் மாலைகளை வாங்கி கொண்டு தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் கோவிலில் எங்கு பார்த்தாலும் எலுமிச்சை பழங்களாக காட்சி அளிக்கும்.

    பேய், பிசாசு, பில்லி, சூனியம் மற்றும் கண்திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு எலுமிச்சை பழம் பயன்படுகிறது. இவர்கள் அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை கோவிலின் முன்பு கொண்டு செல்கிறார்கள்.

    அங்கு நிற்கும் பூசாரி பாலா என்பவரிடம் வழங்குகிறார்கள். அவர் அந்த எலுமிச்சை பழத்தை கையில் வாங்கி கொண்டு பூஜித்து அதனை கொடுத்த பக்தர்களின் தலையை 3 முறை சுற்றி காலால் மிதிக்கும் படி கூறுகிறார். அதன்படி பக்தர்கள் அந்த எலுமிச்சை பழத்தை காலால் மிதித்து செல்கிறார்கள். இதனால் அவர்கள் உடலில் புகுந்திருந்த கெட்ட ஆவிகள் பறந்து விடுகிறது. பில்லி, சூனியமும் விரட்டப்படுகிறது. இதனால் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் எலுமிச்சை பழம் வழிபாட்டை நடத்தி வருகிறார்கள்.
    கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். இங்கு சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு.
    ‘காசேதான் கடவுளடா அந்த கடவுளுக்கும் அது தெரியுமடா?’ என்பது ஒரு பாடல். ‘ஈட்டி எட்டிய வரை பாயும், பணம் பாதாளம் வரை பாயும்’ என்பது ஒரு பழமொழி. ‘ஒன்னாம் தேதி கொண்டாட்டம், முப்பத்தியொன்னாம் தேதி திண்டாட்டம்’ என்பது பணத்தின் அருமை பற்றி கவிஞர் ஒருவர் பாடிய பாடல். இப்படி பணத்தைப் பற்றி பலரும் பல விதமாக சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    அப்படிப்பட்ட பணத்தை நாம் குவித்து வைத்துப் பார்க்க வேண்டுமானால் லட்சுமி கடாட்சம் நமக்கு வேண்டும். சுக்ர திசை நடப்பவர்களுக்கு, பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் என்பார்கள். ஆனால் கடக ராசிக்கு சுக்ரன் பாவி, தனுசு ராசி, மீனராசிக்கு ராசிநாதன், குருவிற்கு சுக்ரன் பகை கிரகம். பகைவனாக இருந்தாலும் அண்டி வந்தவர்களுக்கு அள்ளி வழங்குகின்ற ஆற்றல் சுக்ர பகவானுக்கு உண்டு.

    அதனால்தான் ‘வெள்ளி சுக்ரன் வேந்தா உன்போல் அள்ளிக் கொடுப்பதற்கு யாரும் உண்டோ’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். பிருகு மாமுனிவரின் மகன் ஆங்கீரஸ முனிவரிடம் பாடம் பயின்றவர் சுக்ரன். நாம் சுக போகங்களை அனுபவிக்கவும், செல்வச் செழிப்பில் மிதக்கவும் வழி வகுத்துக் கொடுப்பவர்.

    கும்பகோணம் மயிலாடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் திருத்தலத்தில், அக்னீஸ்வரர், கற்பகநாயகி அருள்பாலிக்கின்றனர். சுக்ர தோஷ நிவர்த்திக்கு சிறப்பு பூஜை இங்கு உண்டு. வெள்ளை ஆடை, மொச்சை, வெண்தாமரை இவருக்குப் பிரியமானது. இறைவன் - இறைவியின் திருமணக் கோலத்தை காண பிரம்ம தேவர் விரும்பினார். அதற்காக இந்த ஸ்தலத்தில் தவமிருந்தார். பிரம்மா விருப்பப்படி திருமண கோலத்தை இறைவன் காட்டி அருளினார். எனவே நாமும் திருமணக்கோலம் காணவும், செல்வ வளம் பெருகவும் யோகபலம் பெற்ற நாளில் சென்று முறையாக வழிபாடு செய்ய வேண்டும்.
    தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
    * திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பவர்களின் வாழ்க்கை ஒளி பெற்று பிரகாசமாக விளங்கும் என்பது ஐதீகம்.

    * கார்த்திகை தினத்தன்று சொக்கப்பனை கொளுத்துவதன் மூலம் ராட்சஸர்களை கொன்று தீயிட்டு கொளுத்துவதாக ஐதீகம்.

    * கார்த்திகை மாதம் பவுர்ணமி திதி அன்று ஓட்டுச் செடி என்ற நாயுருவி வேரினைப் பறித்து வீட்டுக்கு எடுத்து வந்தால் தனலாபம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    * கார்த்திகையில் சோமாவார விரதம் இருப்பது பாவங்களை விரட்டும்.

    * கார்த்திகை மாதம் காவேரியில் நீராடுவது, தீபம் தானம் செய்வது, வெங்கல பாத்திரம், தானியம், பழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.

    * கார்த்திகை புராணத்தை கேட்டால் நோய், ஏழ்மை அகலும்.

    * கார்த்திகை மாதம் செய்யும் தானத்துக்கு இரு மடங்கு பலன் உண்டு.

    * கார்த்திகையில் அதிகாலையில் நீராடி கடவுளை வழிபட்டால் துன்பங்கள் விலகும்.

    * கார்த்திகை மாதம் நெல்லிக்கனி தானம் செய்தால் உயர் பதவி கிடைக்கும்.

    * கார்த்திகை மாதம் ஆலயத்தை சுத்தம் செய்தால் அளவிடற்கரிய பலன்கள் கிடைக்கும்.

    * கார்த்திகை மாதம் பகவத் கீதை படித்தால் மன அமைதி உண்டாகும்.

    * கார்த்திகை மாதம் பவுர்ணமிக்கு பிறகு வரும் சோமாவாரம், அல்லது கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்துக்கு பிறகு வரும் சோமாவாரத்தில் விரதம் இருந்து கடவுளை வணங்குவதால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

    * தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.

    தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணி நட்சத்திரம் அன்று, அதாவது 9-12-2019 (திங்கட்கிழமை) இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
    மனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக் கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்தனர். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகம்தான் கலியுகம். அங்ஙனம் நாம் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் பலர் அடியெடுத்து வைக்கின்றனர்.

    தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்கள் அகல திருக்கார்த்திகைக்கு முந்தைய தினமான பரணி நட்சத்திரம் அன்று, அதாவது 9-12-2019 (திங்கட்கிழமை) இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும். சிட்டி விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்றுவீதம் ஏற்றி வைப்பது மரபு.

    வீட்டில் நல்லெண்ணெய்யிலும், முருகன் முன்னிலையில் இலுப்பை எண்ணெய்யிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுதுதான் அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைப்பார்கள். ஐஸ்வரியம் பெருகும். அன்றைய தினம் பிரதோஷமும் வருகின்றது. எனவே நந்தியெம்பெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டால் இல்லத்தில் நல்லகாரியம் நடைபெறும்.

    மேலும் கார்த்திகை திங்கட்கிழமையில் வரும் சோமவாரம் சிறப்பு மிக்கது என்பதால், அன்றைய தினம் சிவாலயங்களில் சங்காபிஷேகமும் சிறப்பாக நடைபெறும். எனவே பரணிதீபம், பிரதோஷம், சங்காபிஷேகம் ஆகிய முப்பெரும் விழாக்கள் நடைபெறும் நாளில் ஆலய தரிசனம் செய்வதன் மூலம் அனைத்து நலன்களும் வந்து சேரும்.
    ×