என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து வந்து புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.
    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம் மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும். மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பழிமொழியாக பேசப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலன் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள்.

    மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற் பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.
    முன் ஜென்மத்தில் பிறரை ஏமாற்றி இருந்தாலும், தவறான வழியில் பணம் சம்பாதித்திருந்தாலும், கலப்படம் செய்திருப்பது, கோயில் சொத்துக்களை திருடியிருப்பது, பொய் பேசி பணம் சேர்த்திருப்பது, பெண்கள் தங்கள் கற்பை விற்று பொன், பொருள், ஆடைகள் சேர்த்திருந்தாலும் அவர்கள் இப்பிறவியில்/மறுபிறவிகளில் பாடுபட்டு சேர்த்த பணம், பொருட்கள், பூர்வீக சொத்துக்களை பலவழிகளிலும் இழந்து வறுமையில் தவிக்க வேண்டியிருக்கும்.

    இத்தகைய பாவங்களுக்கு ஸ்ரீமகாலட்சுமி பூஜை செய்வது தக்க பரிகாரமாகும். மகாலட்சுமி பூஜையின்போது நாம் முற் பிறவிகளில் செய்துள்ள தவறான செயல்களை மன்னிக்கும்படி மனப்பூர்வமாக வேண்டினால் அந்தத் தாய் நம்மை மன்னித்து நமது வறுமையை போக்கி அருள்புரிவாள்.

    பெண்களின் மாங்கல்ய தோசத்திற்கும் ஸ்ரீமகாலட்சுமி பூஜை சக்திவாய்ந்த பரிகாரம் ஆகும்.
    அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது.
    மேல்மலையனூர் அங்காளம்மனுக்கு கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அவர்கள் அம்மனுக்கு உகந்ததான எலுமிச்சை பழம் மாலைகள் அணிவித்து வழிபடுகிறார்கள். பலர் பட்டு சேலைகளை நேர்த்திக் கடனாக செலுத்துகிறார்கள். கோவிலுக்கு வரும் பெண்கள் நெய் விளக்கு தீபமும் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். அம்மன் சன்னதியில் நெய்தீபம் ஏற்றுவதால் அவர்களுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கிறது. கோரிக்கைகள் நிறைவேறுகிறது. இதனால் கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் அனைவரும் நெய்தீபம் ஏற்றி வழிபட்டு செல்கிறார்கள்.

    எண்ணிக்கை வடிவில் நெய்தீபம் ஏற்றினால் அவர்களுக்கு கிடைக்கும் பலன்கள்:

    5 நெய் விளக்கு ஏற்றினால் சிறந்த கல்வி, ஞானம் பெறலாம்.
    9 நெய் விளக்கு ஏற்றினால் நவகி ரக தோஷம் நீங்கும்.
    12 நெய் விளக்கு ஏற்றினால் வேலை யில் தடை நீங்கும், வேலைவாய்ப்பு கிடைக்கும்.
    18 நெய் விளக்கு ஏற்றினால் காலசர்ப்ப தோஷம், செவ்வாய் தோஷம் நீங்கும்.
    27 நெய் விளக்கு ஏற்றினால் திருமண தடை நீங்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
    36 நெய் விளக்கு ஏற்றினால் சகல தோஷமும் நீங்கும்.
    48 நெய் விளக்கு ஏற்றினால் தொழில் அபிவிருத்தி மற்றும் சகல ஐஸ்வர்யமும் பெறலாம்.
    108 நெய் விளக்கு ஏற்றினால் அம்மன் அருள் கடாட்ஷம் பெறலாம்.

    நெய் விளக்கு ஏற்றிய பின்னர் பக்தர்கள் அம்மனை வணங்க வேண்டும். அதனை தொடர்ந்து கோவில் பிரகாரத்தை 3 முறை வலம் வந்தால் அவர்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

    பைரவ பக்தர்களைக் கொடுமைப்படுத்துவதில் விருப்பம் இல்லாதவர் சனி பகவான். விதிப்பயன் காரணமாகக் கடுமையைக் காட்டும் பொழுது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றி விடுவார்.
    பைரவ பக்தர்களைக் கொடுமைப்படுத்துவதில் விருப்பம் இல்லாதவர் சனி பகவான். விதிப்பயன் காரணமாகக் கடுமையைக் காட்டும் பொழுது பைரவர் அருள்புரிந்து காப்பாற்றி விடுவார். வேண்டுவோரின் துயர் தீர்ப்பவர் பைரவர். சனி பகவானால் வேண்டிய பூஜையின் மூலம் உரிய பரிகாரங்களைச் செய்து சனியின் கொடூரப் பிடியிலிருந்து விடுபடலாம்.

    வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புகுனு பூசி சாம்பல் பூசணி (வெண்பூசணி) சாம்பார் கலந்த சாதம், அதிரசம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அர்த்தாஷ்டம் சனியால் ஏற்படும் தொல்லைகள் விலகும்.

    ஏழாமிடமென்னும் களத்திரஸ்தானத்தில் தொல்லைகள் தரும் சனி வந்திட்டால் இல்லறத்தில் துன்பங்கள் வந்து சேரும் கூட்டாளி அனைவரும் குடி கொடுக்கும் பொல்லா மனிதராய் ஆவார். எண்ணற்ற தொல்லையிலிருந்து விடுபட கணவனோ, மனைவியோ விரும்புவது இயற்கை. எனவே திங்கட்கிழமை நாளில் காலை 7.30 முதல் 9.00 மணிக்குள் பைரவருக்கு அல்லி மலர் மாலை சூட்டி புனுகு பூசி சாம்பல் பூசணியில் விளக்கேற்றி பாகற்காய் கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வர கண்டச் சனியால் ஏற்பட்ட தோஷங்கள் விலகும்.

    எட்டாமிடத்து வந்து எண்ணற்ற இன்னல் தரும் சனி பகவான், படாத சித்திரவதை படுத்தி விடுவார். அவருடைய தொல்லையிலிருந்து விடுபடச் சனிக்கிழமை நாளில் இரவு 7.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள் பைரவருக்கு கறுப்பு பட்டு அணிவித்து வடைமாலை, கருங்குவளை மலர் மாலை, நீலோற்பவ மலர் மாலை அணிவித்து புனுகு பூசி, கறிவேப்பிலை சாதம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வந்தால் அஷ்டம சனியால் பாதிப்புகள் நீங்கும்.

    ஏழரை ஆண்டுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப்படைக்கும் சனிபகவான் பிடியிலிருந்து, தப்பிக்க வழி வகை உண்டா? என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு. ஊர்விட்டு ஊர் போவது, மனையாள் மதிக்காதது, பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது, தொழில் நஷ்டம், பணக்கஷ்டம் அவமானம் போன்ற அனைத்து இன்னல்களிலிருந்தும் தப்பிக்கச் செய்ய வேண்டிய பரிகாரத்தை காண்போம்.

    சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை வெற்றிலை மாலை அணிவித்து புனுகு பூசி கறிவேப்பிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால்பாயாசம் படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமிட்டு அர்ச்சனை செய்து வர ஏழரைச் சனியிலிருந்து விடுபடலாம்.
    ராசிக்கு பனிரெண்டில் சனியிருக்கும்போது தேங்காயில் நெய்தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும்போது எலுமிச்சம் பழத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும். ராசிக்கு 2-ல் சனி இருக்கும்போது சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றவும்.

    திங்கட்கிழமை சங்கடஹரசதுர்த்தி உள்ள நாளில் பைரவருக்கு நந்தியாவட்டை மலர்மாலை அணிவித்து புனுகு பூசி, ஜவ்வரிசிப் பாயாசம், அன்னம் படையிலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் போகும்.

    செவ்வாய்க்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்குச் செவ்வரளி மாலை அணிவித்து புனுகு பூசி துவரம் பருப்புப்பொடி கலந்த அன்னம், செம்மாதுளம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் சகோதர ஒற்றுமை ஏற்படும். செவ்வாய்க்கிழமை நாளில் பைரவருக்கு சிவப்பு குங்குமம் கலந்த நீரால் அபிஷேகம் செய்து எலுமிச்சம் பழ மாலை அணிவித்து புனுகு பூசி எலுமிச்சம் பழத்தில் நெய் தீபமிட்டு வேகவைத்த பீட்ரூட் கலந்த சாதம், மாதுளம் பழம், ஜிலேபி படையலிட்டு அர்ச்சனை செய்துவர எதிர்ப்புகள் அகன்று வெற்றிகள் குவியும்.

    புதன்கிழமை நாளில் பைரவருக்கு மரிக்கொழுந்து மாலை அணிவித்து புனுகு பூசி பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம், பாசிப்பருப் புப் பாயாசம் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் கல்வியில் ஏற்பட்ட தடை அகலும் புதன்கிழமை காலை 10.30 முதல் 12.00 மணிக்குள் பைரவருக்கு சந்தனகாப்பு செய்து மரிக்கொழுந்து மாலை சூட்டி புனுகு பூசி, பாசிப்பயிறு சுண்டல், பாசிப்பருப்பு பாயாசம், கொய்யாப்பழம், பாசிப்பருப்பு பொடி கலந்த அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் வியாபாரத்தில் வெற்றி வாகை சூடலாம்.

    தேய்பிறை அஷ்டமி நாளில் அல்லது வியாழக்கிழமை பைரவருக்கு சந்தனகாப்பு செய்து மஞ்சள் நிற சம்பங்கி மாலைசூட்டி புனுகு பூசி, சுண்டல் படையலிட்டு பால்பாயாசம், நெல்லிக் கனி, ஆரஞ்சுப்பழம், வறுத்த கடலைப்பருப்பு பொடி கலந்த அன்னம் படைத்து அர்ச்சனை செய்து வர தனப்ராப்தி ஏற்படும்.
    வியாழக்கிழமை நாளில் காலை 7.30 மணிக்குள் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து மந்திரவித்து எனப்படும் முந்திரி யால் மாலை அணிவித்து (முந்திரிப்பருப் பால் மாலை அணிவித்தால் முழுப்பலன் ஏற்படாது. கர்ப்பப்பை போல அமைந்து உள்ளே குழந்தையை உள்ளடக்கியது போல காணப்படும் முந்திரிப்பருப்புடன்...) கொண்டை கடலை, சுண்டல், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து அன்னதானம் 5 பேருக்கு வழங்கினால் பைரவர் திருவருளால் விரைவில் குழந்தை பாக்கியம் ஏற்படும்.

    வெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி தாமரை மலர் மாலை அணிவித்து அவல் கேசரி, பானகம் சர்க்கரைப் பொங்கல் போன்றவற்றை படைத்து அர்ச்சனை செய்து வரத் திருமணத் தடை அகன்று மனதிற்கு பிடித்து துணை அமையும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் பைர வருக்கு சந்தனக்காப்பு செய்து புனுகு பூசி ரோஜா மாலை சூட்டி வெள்ளி ஆபரணங்கள் அணிவித்து சர்க்கரைப் பொங்கல், சேமியா பாயாசம், மாம்பழம் படைத்து அர்ச்சனை செய்து 6 ஏழை கலைஞர்களுக்கு வஸ்திர தானம் செய்தால் கலைத்துறையில் சாதனை படைக்கலாம்.

    வெள்ளிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு பால் அபிஷேகம் செய்து புனுகு பூசி நாகலிங்கப்பூ மாலை அணிவித்து பால்சாதம், பால்பாயாசம் நைவேத்தியமாகப் படைத்து அர்ச்சனை செய்து வந்தால் நாகதோஷம் நீங்கும்.

    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் ஈசனை மனம் உருக வழிபட்டால் வயிற்று வலி, குடும்பப் பிரச்சினை, வழக்கு ஆகிய மூன்று பிரச்சினைகளிலும் சுமூக தீர்வு காணலாம்.
    திருவதிகை வீரட்டானேசுவரர் கோவில் ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது. வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும். எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோஷ நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும்.

    குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும். மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

    இத்தலத்துக்கு தல விருட்சமான சரக் கொன்றை மரம் பட்சி வடிவமாக இருப்பதாக சொல்கிறார்கள். தல விருட்சமான சரக் கொன்றை மரத்தில் வழிபாடு செய்தால் எல்லா வகை நோய்களும் நீஙகும் என்பது ஐதீகம்.

    இத்தலத்தில் மனம் உருக வழிபட்டால் வயிற்று வலி, குடும்பப் பிரச்சினை, வழக்கு ஆகிய மூன்று பிரச்சினைகளிலும் சுமூக தீர்வு காணலாம்.
    வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சினைகளும் படிப்படியாக மறையும்.
    வாரத்தின் ஒவ்வொரு நாட்களிலும் தெய்வங்களுக்கு உகந்த தீபங்களை ஏற்றி வழிபாடு செய்து வந்தால் தடைகளும், பிரச்சினைகளும் படிப்படியாக மறையும்.

    ஞாயிறு: ஞாயிற்றுக்கிழமை ஐயப்பனுக்கு நூறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். தீபங்களைத் தாமரைப் பூ வடிவில் ஏற்றுவது மிகவும் சிறப்புடையது. அதாவது தாமரைப்பூ போன்ற அமைப்பில் தீபங்களை வரிசையாக வைத்து ஏற்றுதல் வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் செய்யப்படும் இத்தீப வழிபாடுகளுக்குத் தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது சிறந்தது. இதுபோன்று தீபங்கள் ஏற்றி வழிபடுவதால் வருமானங்கள் தடையை மீறி வருவதற்கு சந்தர்ப்பம் உண்டு.

    திங்கள்:- திங்கட்கிழமை அன்று இலுப்ப எண்ணெய்கொண்டு ஐம்பத்தாறு தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். இந்த தீபங்களை அன்னபட்சி வடிவத்தில் வரிசையாய் ஏற்றி வழிபடுதல் வேண்டும். அன்னப்பட்சிகள் போன்று அரிசி மாவு கோலம் வரைந்து அவற்றின் மேல் இத் தீபத்தை ஏற்றுவது மிகவும் சிறப்புடையதாகும். மிகவும் கஷ்டப்படுகின்றவர்களுக்கு மனச்சாந்தியைத் தரும் வழிபாடு இது.

    செவ்வாய்: செவ்வாய்க் கிழமைகளில், அரிசி மாவுக் கோலம் போட்டு, அதில் தீபம் ஏற்றுதல் வேண்டும். அரிசி மாவில் இரட்டைக்கிளி உருவம் வரைந்து, அதன் மேல் ஐம்பத்து நான்கு தீபங்களை வரிசையாய் ஏற்றுவது விசேஷமாகும். இத்தீபங்களுக்கு பசுநெய் உபயோகிப்பது மிகவும் சிறப்புடையதாகும் இந்த தீப வழிபாட்டால் கணவன், மனைவியர் இடையே தாம்பத்திய உறவு மேம்படும்.

    புதன்: புதன்கிழமை அன்று இருபத்து மூன்று தீபங்கள் ஏற்றி, அரிசி மாவுக் கோலத்தில் இரட்டைச் சங்கு வரைந்து அதன் மேல் சுற்றியும் தீபங்களை ஏற்றலாம். நல்ல எண்ணெய் தீபங்கள் ஏற்றுவது சிறந்தது. இதனால் குழந்தைகளின் மந்த புத்தி அகலம்.

    வியாழன்: வியாழக்கிழமைகளில் தேங்காய் எண்ணெய் கொண்டு ஐம்பத்தி ஏழு தீபங்கள் ஏற்றி, அரிசி மாவினால் சுதர்சன சக்கர வடிவில் கோலமிட்டு அதைச் சுற்றி இத்தீபங்களை வைத்து வழிபடுதல் வேண்டும். இந்த தீப வழிபாடு காரணமாக பகைமை கொண்டுள்ள உறவினர்கள் இணக்கமாவார்கள்.

    வெள்ளி: வெள்ளிக்கிழமைகளில் அறுபது தீபங்கள் ஏற்றுதல் விசேஷம். மத்தால் கடைந்து எடுத்த வெண்ணையில் நெய் காய்ச்சி தீபமேற்றுதல் மிகவும் விஷேசம். மூன்று உள் வட்டமாகக் சுற்றி தீபமேற்றுவது விசேஷம். இவ்வாறு வழிபடுவதால் இல்லத்தில் தேவையற்ற செலவுகள் குறையும். கணவனுடைய ஊதாரித்தனம் நிவர்த்தி யாகும்.

    சனி: சனிக்கிழமைகளில் நல்லெண்ணெய்கொண்டு 80 விளக்குகள் அல்லது மொத்தத்தில் 80 தீப முகங்கள் கொண்ட விளக்குகளை ஏற்றுவது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த தீபம் பித்ரு சாபங்கள் நீங்கும்.

    ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும். இதற்கான பரிகாரத்தை அறிந்து கொள்ளலாம்.
    திருமணத் தடையால் பெண்களும், ஆண்களும் மிகுந்த வேதனைக்கு உள்ளாகின்றனர். பல குடும்பத்தினரும் தங்கள் வீட்டுப் பையனுக்கு மணமகள் தேடித் தேடிச் சலித்துப் போய் விடுகிறார்கள். இதேபோல் பெண் வீட்டினரும் மணமகன் சரியாக அமையாமல் தவிக்கின்றனர்.

    ஒன்று இருந்தால், இன்னொன்று அமையாமல் தொடர்ந்து திருமணத்தில் தடையாகிறது. ஒருவரது ஜாதக ரீதியாக ராகு கேது தோஷம், செவ்வாய் தோஷம் களத்திர தோஷம், சர்ப தோஷம், குரு பலன் இல்லை இதுபோன்ற காரணங்களால் திருமணம் தடை ஏற்படும்.

    ருது தோஷம் என்பது ஒரு பெண் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து ஜாதகத்தில் ஏதேனும் தோஷம் இருந்தால் திருமணம் செய்ய தாமதம் ஆகும். திருமண வயது வரும் பொழுது நடைபெறும் திசை மற்றும் புத்தி பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் திருமணம் தாமதம் ஆக வாய்ப்பு உண்டு.

    இந்த திருமணத் தடைகள் நீங்க சித்தர்களின் மலை என்று அழைக்கப்படும் சுருளி மலையில் ஹோமங்கள் நடத்தியவர்தான் வாசியோகி ஓம் பரமானந்த பாபா. இதில் பெண்களின் திருமணத் தடை நீங்க சுயம்வர கலா பார்வதி ஹோமமும்,  ஆண்களின் திருமணத் தடை நீங்க ஸ்ரீ காந்தர்வ ராஜ ஹோமமும் நடத்தி அதன் பலன்கள் கிடைக்க செய்துள்ளார்.

    சுருளிமலையில் செய்த யாகங்கள் அனைத்தையும் கோயம்புத்தூரில் C21 / புது எண் 42, 43 சர்க்கரை செட்டியார் நகர், இஎஸ்ஐ (எதிரில்), உப்பிலிபாளையம் (போ) உள்ளது ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சித்தர் பீடத்திலும் நடத்தி உள்ளார். இதனால் இங்கு வந்தாலே தடைகள் நீங்கி பலன் கிடைக்கிறது. திருமணத் தடைகள் விலகி திருமணம் நல்லபடியாக நடக்கிறது என்று பயன் அடைந்தவர்கள் பாராட்டுகின்றனர்.

    திருமணத் தடை மட்டுமின்றி வேலை வாய்ப்பில் தடை, தொழில் முன்னேற்றம் இல்லாத நிலை, பொருளாதாரம் முன்னேற்றம் இல்லாத நிலை, குழந்தையின்மை பிரச்னை, குடும்பத்தில் ஏற்படும் அனைத்து பிரச்னைகளும் நீங்கி வாழ்வில் உயர்வு கிடைக்கிறது. இங்கு மக்கள் நலன் வேண்டியும், சித்தர்கள் அருள் பரிபூரணமாக மக்களுக்கு கிடைக்க வேண்டியும் பிரதி அமாவாசை மேரு பூஜை, பௌர்ணமி அன்று ராஜராஜேஸ்வரி பூஜை நடக்கிறது. மேலும் ஆண்கள், பெண்களுக்கு வாசி யோக பயிற்சிகள், ஆழ்நிலை தியானங்கள் கற்றுத்தரப்படுகிறது. ஓம் பரமானந்த பாபாஜி சுவாமிகள். சித்தர்கள் வாக்கின் பிரகாரம் பரிகாரங்கள் செய்து வைக்கிறார். 
    நவக்கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு-கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள், மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
    ஒவ்வொரு வருடமும் தமிழ் புத்தாண்டு, ஆங்கில புத்தாண்டு வரும்போதெல்லாம், அனைவரின் எதிர்பார்ப்பும், ‘இந்த புதிய வருடம் வாழ்வில் ஏற்படுத்தப் போகும் மாற்றம் என்ன?’ என்பதே ஆகும். புத்தாண்டு பலனை தீர்மானம் செய்வதில் நவக்கிரகங்களின் பங்களிப்பு அளப்பரியது. நவக்கிரகங்களில் வருட கிரகங்களான குரு, ராகு-கேது, சனி ஆகியவற்றின் பெயர்ச்சிகள், மனிதர்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.

    காலை எழுந்தவுடன் டி.வி, பத்திரிகை என அனைத்து மீடியாக்களிலும் ராசி பலனுடன் கிரகப் பெயர்ச்சி பற்றிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள், பகுத்தறிவாளர்கள், ‘கிரகங்களின் நகர்வு இயற்கையானது. குரு, சனி, ராகு- கேதுப் பெயர்ச்சியெல்லாம் இயற்கையின் வேலை. இதை நம்பாமல், பிழைக்கும் வழியை பாருங்கள்’ என்று எளிதாக கூறிவிடுவார்கள்.

    ஆனால் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், எதையும் தாங்கும் மனப்பக்குவம் உள்ளவர்கள், கிரகப் பெயர்ச்சி பற்றிய பலனை படித்து விட்டு, ‘எல்லாம் படைத்தவன் பார்த்துக் கொள்வான். மேடு பள்ளம் உள்ளதுதான் வாழ்க்கை. கடமையைச் செய்வோம்’ என்று அடுத்த வேலையில் கவனம் செலுத்துவார்கள்.

    கிரகப் பெயர்ச்சிகள் மனித வாழ்வில் ஏற்ற, இறக்கத்தை ஏற்படுத்துமா? என்பது பற்றிய சந்தேகம் பலருக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது. இது பற்றிய விளக்கத்தை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

    கிரகங்களை வருட, மாத, தின கிரகம் என பிரித்து பலன் காணலாம்.

    சந்திரன், ஒரு தினக் கோள். இது ஒரு ராசியில் இரண்டேகால் நாட்களே இருப்பதால், அதனால் ஏற்படும் தாக்கம் ஓரிரு நாட்களில் குறைந்து விடும்.

    சூரியன், புதன், சுக்ரன் ஆகியவை மாத கிரகங்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் மாதம் ஒரு ராசியில் இருக்கும் என்பதால், இவற்றால் ஏற்படும் மாற்றங்கள் ஒரு மாதம் வரை நீடிக்கும்.

    செவ்வாய் கிரகமும் மாத கிரகம்தான் என்றாலும், அது 45 நாட்கள் முதல் 6 மாதம் வரை ஒரு ராசியில் இருக்கும் என்பதால், அதனால் ஏற்படும் மாற்றங்களும் ஒரு சில மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீடிக்கலாம்.

    குரு, சனி, ராகு-கேது ஆகிய 4 கிரகங்களும் வருட கிரகங்கள். இவற்றின் நகரும் தன்மை மெதுவாக இருப்பதால், அவற்றால் ஏற்படும் சுப மற்றும் அசுப பலன்கள் வருடக் கணக்கில் ஜாதகரை பாதிக்கும்.

    இவற்றில் குரு பகவான் ஒரு ராசியை கடக்க, தோராயமாக ஒரு வருடம் ஆகும். விருப்பம், ஆசை போன்றவை மனிதனுக்கு மனிதன் மாறுபடும். ஒருவருக்கு அன்றாட தேவைகள் நிறைவேறினால் போதும் என்ற எண்ணம் இருக்கும். இன்னொருவருக்கு வீடு, வாகனம் வாங்க வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இன்னும் சிலருக்கு திருமணம் நடைபெறும் காலம், குழந்தை பாக்கியம் பற்றிய சிந்தனை இருக்கும். மனிதர்களின் இந்த விருப்பம், எண்ணம், ஆசைகளை நிறைவு செய்பவர், குரு.

    ராகுவும் கேதுவும் ஒரே நேரத்தில் பெயர்ச்சி ஆவார்கள். இவர்கள் இருவரும் ஒரு ராசியில் ஒன்றரை ஆண்டுகள், அதாவது 18 மாதங்கள் தங்கி, சுப மற்றும் அசுப பலன்களைத் தருவார்கள். நிழல் கிரகங்களான இவர்கள், சனி பகவானின் பிரதிநிதிகள். மனித வாழ்வில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் பதிவு செய்து சனி பகவானுக்கு அனுப்பி விடுவார்கள்.

    சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் இருப்பார். ஒருவரின் கர்ம வினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர். ‘முன் ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்மா என்ன?’ என்பதை கேது சுட்டிக் காட்டுவார். ‘முன் ஜென்மத்தில் செய்த கர்மாவிற்கு என்ன பலன்?’ என்பதை ராகு சுட்டிக்காட்டுவார். ராகு-கேதுக்களின் உதவியுடன் ஒருவரின் கர்ம வினைக்கு ஏற்ற பலனை வழங்குபவரே சனி பகவான். கிரகப் பெயர்ச்சிகளிலேயே, சனிப் பெயர்ச்சிக்குத்தான் அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.

    பூமியில் பிறக்கும் அனைவருக்கும், அவரவர் பூர்வ ஜென்ம வினைகளே கிரகங்களாக மாறி, ஜாதக கட்டத்தில் அமர்கின்றன. அந்த அமர்விற்கேற்ப தசைகள் அமைந்து, கோட்சார கிரக சஞ்சாரம் மூலம் வினைகளுக்கு ஏற்றபடி வாழ்வு அமைகிறது. ஜனன ஜாதகத்தில் ஒரு சம்பவம் நடப்பதற்கான யோக அமைப்பு இருந்தால், கோட்சார கிரகங்கள் சம்பவத்தை நடத்தி வைக்கும். ஜனன ஜாதகத்தில் இல்லாத பலனை கோட்சாரம் நடத்தி தராது. உதாரணமாக ஒருவருக்கு திருமணத் தடை இருந்தால், ஜனன காலத்தில் உள்ள கிரகங்களுக்கு கோச்சார சனி அல்லது குருவும் தனது சாதகமான பார்வை பலத்தை கொடுத்தால் மட்டுமே திருமணத் தடை அகலும். விருப்பம், ஆசை எதுவாக இருந்தாலும் அதை அடையும் பாக்கிய பலன் ஜனன கால ஜாதகத்தில் இருந்தால் மட்டுமே கோட்சார கிரகங்கள் அதற்கு உதவும்.

    ஒரு கிரகம், கோட்சாரத்தில் ராசி விட்டு ராசி மாறும்போது, அது ஜென்ம ராசிக்கு எந்த இடம் என்பதை பொறுத்து கூறப்படும் ராசி பலனால் 25 சதவீத பலன் மட்டுமே. நடப்பு தசா-புத்திகள், லக்கின ரீதியான விதி பலன்கள் மற்றும் கோட்சார கிரகங்களின் நகர்வுகள் இவை எல்லாமே சேர்ந்த தான் அப்போதைய கோட்சார பலனை முடிவு செய்ய வேண்டும்.

    ஒரு தனிநபரின் ஜாதகத்தினை கொண்டு நிர்ணயம் செய்யப்படும் கோட்சார பலனே துல்லியமாக இருக்கும். தசா புத்திகளுடன் சம்பந்தம் பெறும் கோட்சாரம் சம்பவத்தை 100 சதவீதம் கச்சிதமாக நடத்தி தரும்.

    பல்வேறு பிறவிகளில் ஒரு ஆன்மா நிகழ்த்திய நல்வினை, தீவினை சேமிப்பான ‘சஞ்சித கர்மாவின்’ ஒரு சிறு பகுதியை அனுபவித்து முடிக்கவே, ஒரு ஆன்மா பிறவி எடுக்கிறது. பிராப்த வினையால் ஏற்படும் இன்பம், துன்பங்களே ஒவ்வொரு ஆன்மாவையும் வந்தடையும். ஒரு கிரகம் சாதகமான இடத்தில் பெயர்ச்சியானால் பிராப்த வினையில் உள்ள நல்வினைப் பலன்கள் மிகுதியாகவும், பாதகமான இடத்தில் பெயர்ந்தால் அதே பிராப்தத்தின் தீவினைப் பலன்கள் மிகுதியாகவும் அந்தந்த ராசியினரை வந்துச் சேரும். அதனால் ஒருவரின் நல்வினை, தீவினைகளே துன்பத்தை தருகின்றன; கிரகங்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே சோதனைகளை சாதனைகளாக மாற்ற இஷ்ட, குல தெய்வ வழிபாடு செய்து மகிழுங்கள்.

    பிரசன்ன ஜோதிடர் ஐ.ஆனந்தி
    சாப விமோசனங்களைத் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் படிப்படியாக தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடியேறும்.
    சாபங்களில் பல வகை உள்ளன. அவற்றைப் பற்றி இங்கே பார்க்கலாம். முன்னோர் சாபம், பித்ரு சாபம், மாத்ரு சாபம், பெண் சாபம், பிரேத சாபம், சர்ப்ப சாபம், கோ சாபம், தேவ சாபம், விருட்ச சாபம், ரிஷி சாபம், குலதெய்வ சாபம், குரு சாபம், நீர்நிலை சாபம் என்று பலவகை சாபங்கள் உண்டு.

    அவற்றைக் கண்டறிந்து அவை நீங்குவதற்கான வழிபாடுகளை மேற்கொண்டால் வாழ்வில் வளம் காண இயலும். அந்த சாபங்களின் காரணமாக பல குடும்பங்களில் காலம், காலமாக காரியத் தடைகள் உருவாகும். கல்யாணம் தாமதப்படும். பிள்ளைப்பேறு தாமதிக்கும். உறவுகளில் விரிசல் ஏற்படும்.

    வறுமையில் வாடும் சூழ்நிலை கூட ஒரு சிலருக்கு ஏற்படலாம். அவற்றைக் கண்டறிந்து சாப விமோசனங்களைத் தரும் ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால் படிப்படியாக தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி குடியேறும்.
    திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவிலில் உள்ள சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.
    கும்பகோணத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திலும், நாச்சியார் கோவிலில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சேறை சார நாதப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு எழுந்தருளிய மகாவிஷ்ணு ‘சாரநாதப் பெருமாள்’ எனற திருநாமம் கொண்டுள்ளார். அவரது உடனுறையும் தாயாரும் ‘சார நாயகி’ என அழைக்கப்படுகிறாள்.

    பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் வியாழன் கிரகம் வரும்போது, இத்தல சார புஷ்கரணியில் நீராடி சார நாத பெருமாளை வழிபட்டால், சகல தோஷங்களும், முன்ஜென்ம வினைகளும், கிரக தோஷங்களும், தெரிந்தும் தெரியாமலும் செய்த பாவங்களும் அகன்று, வாழ்வில் நல்வளம் பெருகும் என்று தல புராணம் சொல்கிறது.

    காவிரித்தாய் கண்ணனை மடியில் அணைத்த திருக்கோலத்தில் இருக்கும் திருக்கோவில், சார புஷ்கரணியின் மேற்குக்கரையில் அரசமரத்தடியில் அமைந்துள்ளது. சாரபுஷ்கரணியில் நீராடி காவிரித்தாய், சார நாதப் பெருமாளை முறைப்படி வலம் வந்து தீபமேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் நிச்சயம் உண்டு என்கிறார்கள்.
    வருமானத்தில் ஒரு பகுதியை தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும்.
    உலகை ஆளும் பரமசிவனிடம் ஒரு நாள் பார்வதிதேவி, ஒரு மனிதனின் இல்லற தர்மம் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார். அதற்கு பரமசிவன் கூறியதாவது:-

    அறிவுள்ள மனிதன் தொழில் மூலமாக தான் பெறும் செல்வத்தை மூன்று பாகங்களாக பிரித்து அதில் தர்ம காரியங்களுக்கு ஒரு பாகம். வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள ஒரு பாகம். கஷ்டம் ஏற்படுகையில் ஒரு பாகம் என்று பங்கீடு கொள்ள வேண்டும். இதில் முதல் பாகம் அன்னதானம் செய்வது, ஏழைகளுக்கு உதவுவது. தேவர்களை பூஜிப்பது, பித்ருக்களை பூஜிப்பது, ஆசாரங்களை கடை பிடிப்பவர்களோடு சேர்ந்திருப்பது போன்றவற்றிக்காகச் செலவிட வேண்டும்.
    இவ்வாறு சிவபெருமான் கூறினார்.

    பித்ருக்கள் ஒருபோதும் சாபமிட மாட்டார்கள். ஆனால் மனவருத்தம் கொள்ளுவார்கள். அந்த வருத்தம் கோடானுகோடி சாபங்களுக்கு இணையானது. அதற்கு மன்னிப்பே கிடையாது. அதற்கு நிவர்த்தி பெற பித்ரு பூஜை ஒன்றுதான் சிறந்த வழி. அமாவாசை, மகாளயபட்சம், சிரார்த்த அங்க தர்ப்பணம் என்று சிரத்தையுடன் செய்து, சங்கல்ப தானங்களான அன்னதானம், வித்யா தானம் என்று முடிந்த அளவு செய்தால் போதும் கட்டாயம் பித்ருக்கள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து பெற்றுக் கொள்வார்கள்.
    திருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம் செய்கிறார்கள்.
    திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது குருவிகுளம் கிராமம். இயற்கையாகவே எழில் நிறைந்த செழுமையான ஊராக குருவிகுளம் விளங்குகிறது. இந்த ஊரின் நடுநாயகமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மதுரையில் ஆட்சி புரியும் மீனாட்சி அம்மனே, இங்கு வந்து மக்களுக்கு அருள்புரிவதாக ஐதீகம். எனவே குருவிகுளம் தென் மதுரை என்றும் போற்றப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் தரிசனம் செய்தால், மதுரை மீனாட்சி அம்மனையும், காசி விஸ்வநாதரையும் தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    திருமண தடை, குழந்தை பாக்கியம், நாக தோஷம், குடும்ப சாப தோஷம் தீர இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் இறைவனையும், இறைவியையும் வழிபடலாம். மேலும் நவக்கிரக பலன்கள் கிடைக்கும். செய்வினை மாந்தீரிகம், துஷ்ட சக்திகள், நம்பிக்கை மோசடியில் இருந்து தப்பிக்கலாம். குடும்ப விருத்தி. குடும்ப ஒற்றுமை. பிரிந்தவர்கள் ஒன்றுசேர. வழக்கு பிரச்சினைகள் முடிவுக்கு வரவும் இந்த ஆலயத்தினை வணங்கி நிற்கலாம். வீடு, வாசல், மண்ணு, மனை, தொழில் விருத்தி அடைய இக்கோவிலில் அருளும் மீனாட்சியை வணங்கலாம். கடன் சுமை தீர வேலை வாய்ப்பு கிடைக்க இக்கோவில் வந்து தரிசனம் செய்கிறார்கள். கல்வி பெறவும், நோய் நொடிகள் தீரவும் இங்கு வந்து வழிபடுவது நன்மை தரும்.

    இக்கோவிலுக்கு வர திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் இருந்து 16 கிலோ மீட்டரிலும், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 27 கிலோ மீட்டரிலும் பஸ் வசதி உள்ளது. திருவேங்கடத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் கோவிலை அடையலாம். ஆட்டோ வசதியும் உண்டு.
    ×