என் மலர்
தோஷ பரிகாரங்கள்
- ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
- 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
திருமண தடை பெற்றோரை மட்டுமல்லாமல், பிள்ளைகளையும் மன ரீதியாக மிகவும் பாதிக்கக்கூடியதாக இருக்கிறது. சரியான வயதில் திருமணம் நடக்காதவர்கள், சில தோஷங்களால் திருமண தடையை எதிர் கொள்ளக்கூடியவர்கள் ஒவ்வொரு ராசிக்கு ஏற்ற மந்திரத்தை உச்சரித்தால் திருமண தோஷம் நீங்கும். ராசிக்கு ஏற்ற மந்திரத்தை அதற்கேற்ற கிழமைகளில் உச்சரித்தால் திருமண தடை நீங்கும்.
ஒருவருக்கு சரியான வயதில் திருமணம் நடந்தால் தான், அவரின் வாழ்க்கையை சரியாக வழிநடத்திச் செல்ல முடியும். திருமண தடைக்கான தோஷத்தை நீக்கக்கூடிய 12 ராசிகளுக்கு மந்திரத்தை இங்கு பார்ப்போம்.
மேஷம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
ரிஷபம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மிதுனம் :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கடகம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
சிம்மம் :
தினமும் அல்லது சனிக்கிழமைகளில் 'ஓம் சம் சனைச்சராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கன்னி :
தினமும் அல்லது வியாழக்கிழமைகளில் 'ஓம் வ்ரீம் ப்ருஹஸ்பதயே நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
துலாம் :
தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் 'ஓம் அங் அங்காரகாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
விருச்சிகம் :
தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் 'ஓம் சும் சுக்ராய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
தனுசு :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மகரம் :
தினமும் அல்லது திங்கட்கிழமைகளில் 'ஓம் சோம் சோமாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
கும்பம் :
தினமும் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 'ஓம் ஹ்ராம் சூர்யாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
மீனம் :
தினமும் அல்லது புதன்கிழமைகளில் 'ஓம் பும் புதாய நமஹ' என்று 108 முறை ஜெபித்து வரவும்.
- அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.
முற்பிறவியில் செய்த பாவத்தால் இப்பிறவியில் தீராத துன்பங்களை அனுபவித்து அவதிப்படுபவர்கள், சிவாலயங்களுக்கு சென்று முறையாக வழிபட்டால் தங்கள் முற்பிறவி பாவங்களில் இருந்து விடுபடலாம் என்பது முன்னோர் கூற்று.
முற்பிறவி பாவங்களை போக்கும் சிவாலயங்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்தாலும் இதில் முக்கிய இடத்தை பிடிக்கும் சிவாலயமாக நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது.
குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்வாழ்வை அடைந்து அனைத்து பேறுகளையும் பெற சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரை தங்கள் வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டும்
மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் ஒரு அற்புத ஆலயம்தான், நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் உள்ள சீயாத்தமங்கை சிவாலயம் ஆகும். மேற்கு நோக்கி உள்ள சிவலாயத்தை வணங்கினால், 100 சிவாலயத்தை வணங்கியதற்கு சமம் என்பர்.
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் சிவனுக்கும், அன்னைக்கும் தனித்தனி சன்னதி உள்ளது.
சீயாத்தமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோவில் இறைவனின் திருமேனியில் சிலந்தி ஊர்ந்ததும் மூல நட்சத்திர நாளில்தான். எனவே மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வணங்கி நலம்பெற வேண்டிய திருத்தலம் இந்த கோவில் ஆகும்.
ஆவணி மாத மூல நட்சத்திர நாளில் இங்கு நடைபெறும் திருக்கல்யாண வைபவத்தை தரிசித்து அந்த நாளில் நடைபெறும் ருத்ர வியாமளா தந்திர பூஜையில் பங்கேற்றால் திருமணத்தடை நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் பவுர்ணமியில் இந்த கோவிலில் உள்ள சூரிய-சந்திர தீர்த்தத்தில் நீராடி அம்பிகைக்கு அபிஷேகம் செய்து தரிசித்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குழந்தை பாக்கியம், கல்வி, திருமணம் வேண்டுவோர் 5 பவுர்ணமிகளில் சிவன் மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் செய்து வணங்கினால் வேண்டிய வரம் கிடைக்கும்.
சென்னையில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்கள் பஸ் அல்லது ரெயில் மூலம் நாகப்பட்டினத்துக்கு வந்து அங்கிருந்து நாகை- கும்பகோணம் சாலையில் உள்ள திருமருகலுக்கு சென்று திருமருகலில் இருந்து 2 கி.மீட்டர் தொலைவில் உள்ள இக்கோவிலை அடையலாம்.
தென்மாவட்டங்களில் இருந்து இந்த கோவிலுக்கு வர விரும்பும் பக்தர்களும் நாகப்பட்டினத்துக்கு வந்த மேற்கண்ட வழித்தடம் வழியாக கோவிலை அடையலாம். நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 13 கி.மீட்டர் தொலைவில் இந்த கோவில் உள்ளது.
- சிவன் பார்வதி படத்திற்கு விளக்கேற்றி வணங்க வேண்டும்.
- இந்த பரிகாரத்தை 40 நாட்கள் தொடர்ந்து செய்து வர வேண்டும்.
களத்திர தோஷத்தால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் திருமணம் நடைபெறாமல் அவதிப்படுகின்றனர். திருமண தடை நீங்க இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும் என்று நிச்சயம்.
சந்தன கட்டிகள் 7, வெள்ளை கற்கண்டு 7, ஒரு ரூபாய் நாணயம் 7, பச்சரிசி சரியாக 70 கிராம், லவங்கம் 7, பூநூல் 7 மச்சள் தடவாமல் , வெள்ளை மலர் 7, வெள்ளை பட்டு 70 cm
மேற்கண்ட பொருள் அனைத்தையும் மஞ்சள் துணியில் முடிந்து சிவன் பார்வதி இணைந்த படத்திற்கு முன்பாக வைத்து நெய் தீபம் ஏற்றி தனக்கு திருமணம் விரைவாக அமைய வேண்டும் என்று மானசீகமாக வேண்டிய பின் , அந்த முடிச்சினை சிவன் பார்வதி படத்திற்கு பின்புறம் வைக்க வேண்டும்.
40 நாட்கள் தொடர்ந்து அந்த சிவன் பார்வதி படத்திற்கு விளக்கேற்றி வணங்க வேண்டும். 40-து நாள் நாள் காலை குளித்து விநாயகரை வணங்கி சிதறு தேங்காய் ஒன்று உடைத்து, குலதெய்வத்தை மனதார எண்ணி, குலதெய்வம் அருகில் இருந்தால் கோவிலுக்கு சென்று வரவும். பின் காணிக்கை முடிச்சை சிவன் பார்வதி இணைந்து(தனித்தனி சந்நிதியில் இருந்தாலும் செய்யலாம்) உள்ள கோவில் அர்ச்சகருக்கு தரலாம் அல்லது கோவில் விருட்சத்தின் கிளையில் கட்டலாம்.
இதனை காலை நேரத்தில் செய்வது சிறப்பு. நிச்சயமாக எப்பேற்பட்ட களத்திர தோஷமும் நீங்கி திருமண பாக்கியத்தை பெறலாம்.
- சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும்.
- நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.
சிவனைத் தூய நல்லெண்ணையில் வாசனைத் திரவியங்கள் கலந்து நூறு குடம் அபிஷேகம் செய்தால் வாழ்வில் நோய் நீங்கி நோயற்ற வாழ்வு கிடைக்கும்.
கோமூத்திரம் கலந்த பஞ்சகவ்யத்தைப் பத்துக்குடம் அபிஷேகம் செய்தால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி, மாசு மருவற்ற தேத்தினைப் பெறலாம்.
சுத்தமானப பசுவின் கறந்த பால் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் தீர்க்காயுசு கிடைக்கும்.
சுத்தமான தேன் கொண்டு அபிஷேகம் செய்தால் மன துக்கமும், இனிய கானம் பாடும் திறமையும், குயிலினும் இனிய குரலும் கிடைக்கும்.
எலுமிச்சம்பழம் ஆயிரம் கொண்டு அபிஷேகம் செய்தால் அஞ்ஞானம் நீங்கிவிடும்.
சர்க்கரையினால் நூறு மூட்டை அபிஷேகம் செய்ய வாழ்வில் இல்லாமை நீங்கி, மனநிறைவு உண்டாகும்.
இளநீர் ஆயிரம் குடம் அபிஷேகம் செய்தால் பேரானந்தமும், கைலாசவாசனின் காலடியில் வாழும் பேறும் கிட்டும்.
பத்தாயிரம் பழங்கள் சேர்த்து செய்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால் வாழ்வில் வீரத்துடன் எதையும் சாதிக்கும் மனோபலமும், சகல காரியங்களில் வெற்றியும் கிடைக்கும்.
தயிர் நூறு குடம் அபிஷேகம் செய்தால் மேலான சம்பத்து கிடைக்கும்.
கரும்புச்சாறு நூறு குடம் அபிஷேகம் செய்தால் தேக ஆரோக்கியம், உடல் வலிமை பெற்று விளங்கும்.
மஞ்சள் தூளினால் அபிஷேகம் செய்தால் அரசனின் அன்பிற்கு பாத்திரமாகும் நிலை உண்டாகும்.
திராட்சை ரசம் செல்வத்தினை அளிக்கும்.
பசு நெய் கொண்டு அபிஷேகம் செய்தால் இகபரசுகங்களில் இருந்து நம்மை விடுவித்து சுவர்க்க நிலையை நமக்கு அளிக்கும்.
அரிசிமாவினால் அபிஷேகம் செய்தால் எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவற்றில் இருந்து நம்மை விடுவிக்கும்.
அன்னாபிஷேகம், பதினொரு மூட்டை அரிசியால் அன்னம் சமைத்து அதனை லிங்கஸ்வரூபமான சிவனுக்கு அபிஷேகம் செய்தால் வயிற்றில் உண்டாகும் சகலவிதமான நோய்களும் பஞ்சாகப் பறந்துவிடும்.
தூய்மையான மங்களகரமான கங்கை நீர் நூறு குடம் கொண்டு அபிஷேகம் செய்தால் மனத்திலுள்ள கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி , பயம் போய், மனநிம்மதி உண்டாகும்.
சந்தனக்குழம்பினைப் பன்னீரில் கரைத்து அபிஷேகம் செய்தால் இறைவனிடம் மாசற்ற பக்தி உண்டாகி அஞ்ஞானம் விலகும்.
ருத்ரம் ஜபித்த ஆயிரம் கலசங்களில் வைக்கப்பட்டுள்ள கங்கை நீரால் கங்காதரனைக் குளிர்வித்தால் மந்திரசித்தி ஏற்படும்.
ஈசனின் திருமேனியில் இருந்து தோன்றிய விபூதியினால் அபிஷேகம் செய்ய சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
தங்கத்தாமரை மொட்டுகள் செய்து அதனால் அபிஷேகம் செய்தால் சொவர்க்க போகம் கிடைக்கும்.
மாதுளை - அரச பதவி கொடுக்கும்
நெய் - மோட்சத்தைக் கொடுக்கும்
அன்னம் - வயிற்று நோயை நீக்கும்
நெல்லிக்கனி - பித்தம் நீக்கும்
பழ ரசங்கள் - வறட்சியைப் போக்கும்
நெய் அபிஷேகம் செய்தவுடன் ஆறிய வெந்நீர் அபிஷேகம் செய்ய வேண்டும். ஒவ்வொரு அபிஷேகத்திற்கும் வாசனை கலந்த சுத்த தண்ணீரால் அபிஷேகம் செய்து, அடுத்தது தொடங்க வேண்டும்.
ஒவ்வொரு அபிஷேகத்தின் போதும் வகை வகையான மலர்களை சிவன் தலையில் வைக்க வேண்டும். ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது சல்லடைக்கண்கள் உள்ள தாராபாத்திரத்தில் அபிஷேகம் செய்யதால் நன்மைகள் பல உண்டு.
சுத்தமான நீரால் செய்யப்படும் தாராபிஷேகத்தால் கஷ்டங்கள் நீங்கும். சுகம், குழந்தை பாக்கியம் ஏற் படும்.
நெய் அபிஷேகம் செய்தால் நோய் நீங்கி வம்ச விருத்தி ஏற்படும்.
சர்க்கரை கலந்த பாலாபிஷேகம் செய்ய மந்திர ஏவல்களால் பாதிப்பு ஏற்படாது.
வாசனைத் திரவியங்களோடு கூடிய தயிர் அபிஷேகம் எதிரிகளை அழிக்கும்.
தேன், வியாதிகளை நீக்கும், கரும்புச்சாறு துக்கங்களை நீக்கி சந்தோஷத்தை கொடுக்கும்.
- இந்த மந்திரத்தை தினமும் 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும்.
- கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள்.
கணவன் - மனைவி ஒற்றுமை ஏற்பட தினமும் சுந்தர காண்டம் பாராயணம் செய்யலாம். ராமர் - சீதையை சேர்த்து வைத்தது போல் பிரிந்திருக்கும் கணவர் - மனைவி அனுமனின் அருளால் ஒன்று சேருவார்கள். கீழே உள்ள மந்திரத்தை தினமும் காலையிலும், மாலையிலும் குளித்து விட்டு 11 முறை பாராயணம் செய்தால் நல்ல மாற்றம் ஏற்படும். இந்த சக்தி வாய்ந்த மந்திரங்களை எத்தனை முறை முடியும் அத்தனை முறை சொல்வதால் வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும்
ஓம் ஏகவீரம் மிளித்வாஸெள க்ருஹமாபீய சாதராத்
புண்யே(அ) ஹ்நி காரயாமாஸ, விவாஹம் விதிபூர்வகம்
பாரிபர்ஹம் ததோ தத்வா, ஸம்பூஜ்ய விதிவத்ததா
புத்ரீம் விஸர்ஜயாமாஸ, யசோவத்யா ஸமந்விதாம்
ஏவம் விவாஹே ஸ்ம்வ்ருத்தே, ரமாபுத்ரோ முகாந்விதஹ
க்ருஹம் ப்ராப்ய பஹீந் போகாந், புபுஜே ப்ரியயாஸஹ
இந்த மந்திரத்தை சொல்ல முடியாதவர்கள் 7 பேருக்கு சுந்தரகாண்ட புத்தகத்தை வாங்கி கொடுக்கவும்
- ஒருவரை வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருக செய்யவும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.
- இந்த பரிகாரம் செய்ய நாள், நட்சத்திரம், நேரம், காலம் எல்லாம் ஒன்றும் கிடையாது.
கணவன், மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகளை தீர்க்க உப்பு மற்றும் மிளகு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. தாந்திரீகம் மற்றும் மாந்திரீகம் போன்ற விஷயங்களில் உப்பு, மிளகு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. எவரையும் வசியம் செய்யும் சக்தி இந்தக் கல் உப்பு மற்றும் மிளகிற்கு நிச்சயம் உண்டு. ஒருவரை வசியம் செய்யவும், அவரை நம் வசப்படுத்திக் கொள்ளவும், நம்மீது அன்பு பெருக செய்யவும் உப்பு, மிளகு சிறந்த பரிகாரமாக உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு நாள், நட்சத்திரம், நேரம், காலம் எல்லாம் ஒன்றும் கிடையாது.
கணவன், மனைவிக்குள் இருக்கும் தீராத சண்டை, சச்சரவுகள் தீர்வதற்கு ஒருவரை ஒருவர் முதலில் அமைதியான நிலையில் அமர்ந்து மனம் விட்டு பேச வேண்டும். சண்டையை தீர்த்துக் கொள்ள முடிவு எடுத்துவிட்டால் எவ்வளவு சண்டை, சச்சரவுகள், எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் அதனை தாங்கிக் கொள்ளும் மனோதிடமும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களால் முடிந்த நேரத்தில் நீங்கள் சுத்தபத்தமாக குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் ஒரு கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அமைதியாக அமர்ந்து கொள்ளுங்கள். அதில் முக்கால் பாகம் தண்ணீரை நிரப்பிக் கொள்ளுங்கள். குண்டு குண்டாக இருக்கும் 27 மிளகுகள் மற்றும் இருபத்தி ஏழு கல் உப்புகளை எண்ணி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கணவன் மனைவி இடையே சண்டை தீர வேண்டும் என்று மனதார நினைத்துக்கொண்டு கண்ணாடி டம்ளருக்குள் இருக்கும் தண்ணீரில் முதலில் ஒவ்வொரு கல் உப்பையும் எடுத்து போட்டு கொண்டே வர வேண்டும்.
எல்லா மிளகு மற்றும் கல் உப்புகளையும் போட்டு முடித்த பின்பு நீங்கள் மனதார உங்கள் பிரச்சனையை நினைத்து வேண்டிக் கொள்ள வேண்டும். என்னுடைய கணவன் அல்லது மனைவி என் மேல் மீண்டும் பழைய அன்புடன் அதே போல இருக்க வேண்டும். எல்லோரையும் போல நாங்களும் ஒருமித்த தம்பதிகளாக வாழ வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்ட பின் கண்ணாடி தம்ளரை எடுத்துக் கொண்டு போய் அப்படியே ஓடும் தண்ணீரில் கரைத்து விடுங்கள். நீர் நிலைகள் இல்லாத பட்சத்தில் உங்கள் வீட்டில் இருக்கும் சிங்கிள் கொட்டி விடலாம். அல்லது கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்த கொஞ்ச நாட்களிலேயே உங்களுக்கு நிச்சயம் நல்லதொரு மாற்றம் தெரியும்.
- பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும்.
- குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர்கோவிலில் உள்ள இறைவனின் பெயர் பாடலீஸ்வரர். பாடலீஸ்வரரை விரதமிருந்து மனமுருகி வேண்டினால், நினைத்த காரியம் நினைத்தபடி நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உடல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீருவதோடு, மனநிம்மதியும் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
பாடலீஸ்வரருக்கு நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், சந்தனம், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். இது தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம். சாமிக்கு வேட்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், சேலை சாத்துதலும் செய்யலாம்.
அமாவாசை அன்று கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது.இது தவிர பாடலீஸ்வரருக்கு ஒவ்வொரு கார்த்திகை 5 திங்கட்கிழமைகளிலும் சங்காபிஷேகம், கலசாபிஷேகம் செய்யப்படுகிறது. தங்க கவசம் செலுத்தியும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் தல விருட்சமாக பாதிரி மரம் உள்ளது. இந்த மரத்திற்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. மற்ற மரங்களை போல பாதிரி மரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. விதை மற்றும் காய் இல்லாமல் இந்த பாதிரி மரம் வளரும். ஊதா, சந்தனம், சிவப்பு என வெவ்வேறு நிறத்தில் பூ பூக்கும்.
இந்த பாதிரி பூ வருடத்தில் பங்குனி, சித்திரை ஆகிய 2 மாதத்தில் மட்டுமே மலரும். இந்த பூவை பாடலீஸ்வரருக்கு பூஜையின் போது, பயன்படுத்தப்பட்டு வந்ததாக வரலாறுகள் கூறுகின்றன.
தற்போது இந்த மரம் கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. கோவிலில் உள்ள இந்த பாதிரி மரத்தை வலம் வந்தால், சாபம், தோஷம் நீங்கும் என்று இன்றளவும் பக்தர்களால் நம்பப்படுகிறது.
- நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான்.
- பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது.
பச்சை கற்பூரத்திற்கு செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகளவில் உண்டு. ஒரு மஞ்சள் துணியில் பச்சை கற்பூரத்தை முடிச்சாக கட்டி குபேர மூலையில் வைத்து தூபம் காண்பித்து வழிபட்டு வந்தாலே வீட்டில் பணம் எப்பொழுதும் இருந்து வரும்.
பச்சை கற்பூரத்தின் வாசனைக்கு பெரிய சக்தி இருக்கிறது. 2 அல்லது 4 துண்டு பச்சை கற்பூரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். இதனை பூஜை அறையில் வைப்பதால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும்.
நமக்கு நிம்மதி இல்லாமல் போக காரணமே வீட்டில் இருக்க கூடிய துர்சக்திகள் தான். பச்சைக்கற்பூரத்தின் வாசனையினாலும், அதன் மகிமையினாலும் வீட்டில் இருக்க கூடிய துர்சக்தியானது வீட்டை விட்டு வெளியே போய் விடும்.
அதனால் வீட்டில் எப்போதும் நிம்மதி இருக்கும். அதுமட்டுமல்லாது பச்சை கற்பூரத்திற்கு பணத்தினை ஈர்க்கும் தன்மை இருப்பதால் வீட்டில் பணத்திற்கு கஷ்டம் இல்லாமல் வீட்டில் பணம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வீண் செலவுகள் இருக்காது.
இந்த கற்பூரத்தினை பணம் இருக்கும் இடத்தில் வைக்கும் போது, அங்கு வரும் எதிர்மறையான வாசங்களையும், சக்திகளையும் இது தடுத்து நிறுத்தும். 2 பச்சை கற்பூரத் துண்டை ஒரு பேப்பரில் வைத்து மடித்து உங்களது பர்சில் வைத்திருந்தால் பர்சில் பணம் குறையாது எப்பொழுதும் இருக்கும்.
தொழில் விருத்தியடைய, செல்வம் பெருக பணம் புழங்கும் இடமான பணப்பெட்டி மற்றும் பீரோ போன்ற இடங்களில் இந்த பச்சை கற்பூரத்தை ஒரு டப்பாவில் போட்டு வைக்கலாம்.
வீட்டில் நடைபெறக்கூடிய எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் பச்சை கற்பூரத்தை இடம் பெற செய்வது நல்லது.
பச்சை கற்பூரத்தை எடுத்து குலதெய்வத்தையும், இஷ்டதெய்வங்களையும் மனதார வணங்கி நமக்கு வேண்டியவற்றை நினைத்து பிரார்த்தனை செய்து அந்த பச்சை கற்பூரத்தை டப்பாவில் போட்டு வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் நம் வீட்டில் உள்ள துர்சக்திகள், கெட்ட சக்திகள், கண்திருஷ்டி, எதிர்மறை ஆற்றல் அனைத்தும் விலகி செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும்.
வாசனை மிகுந்த இடங்களில் மகாலட்சுமி குடிகொள்வாள். ஆதலால் பணம் புழங்கும் இடங்களில் வாசனை மிக்க பச்சை கற்பூரமானது இருந்தால் செல்வம் செழிக்கும்....!!!
- திருஷ்டி தோஷத்தைப் போக்க, பல வழிமுறைகள் உள்ளன.
- பசுவின் பாத மண்ணுக்கு மிகுந்த சக்தி உண்டு.
வீட்டில் தீய சக்திகள் அதாவது எதிர்மறை ஆற்றல்கள் இருப்பின் அவற்றையே திருஷ்டி என்கிறார்கள். இவ்வாறு ஏற்படும் திருஷ்டி தோஷத்தைப் போக்க, பல வழிமுறைகளையும் சொல்கின்றனர். திருஷ்டி கழிக்க செய்யப்படும் விஷயங்களால் பல நச்சுக்களும் வெளியேறுவதாக அறியப்படுகிறது
* அமாவாசை, பௌர்ணமி நாட்களில் உச்சி வேளையில் வீட்டிற்கு திருஷ்டி கழிக்க வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள் காலை 6.00 மணி அல்லது மாலை 6.00 மணிக்குத் திருஷ்டி கழிக்கலாம்.
* வீட்டின் எல்லாப் பகுதிகளிலும் வேப்பிலை கொண்டு மஞ்சள்நீர் தெளிக்க வேண்டும். வேப்பிலை என்பது மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.
* கடல் தண்ணீரை சிறிது எடுத்து, ஒரு பக்கெட் தண்ணீரில் ஊற்றி வீட்டை கழுவி விட்டாலோ அல்லது துடைத்து விட்டாலோ தோஷங்கள் போகும்.
* ஆகாச கருடன் கிழங்கு வாங்கி அதில் மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்பு கம்பளி கயிற்றில் கட்டி வீட்டின் வாசலில் தொங்க விடுவதும் உண்டு. பல நச்சுக்களை அகற்றும் தன்மை மஞ்சளிற்கு உண்டு
* வளர்பிறையில் வரும் செவ்வாய், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் கடற்கரைக்குச் சென்று கடல் நீரை எடுத்து வந்து அதில் மஞ்சள் பொடியை கலந்து கடை, அலுவலகம், வீடு ஆகியவற்றில் தெளிப்பது சிறந்த பரிகாரம் ஆகும்.
* அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி போன்ற நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றை கலந்து வீடு, கடை அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்ட திருஷ்டியும், தீய சக்திகளும் வெளியேறும் என்பது நம்பிக்கை.
* பசுவின் பாத மண்ணுக்கு மிகுந்த சக்தி உண்டு. வீட்டில் ஆறு மாதத்திற்கு இருக்கும் கிரக தோஷங்கள் விலகும். ஒருமுறையாவது பசுவை இல்லத்திற்கு அழைத்து வந்து கோபூஜை செய்தால் அந்த இல்லத்தில் இருக்கும் கிரக தோஷம் விலகும்.
- கண் திருஷ்டியால் அதிக பாதிப்புகள் ஏற்படும்.
- இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தில், தொடர்ந்து பிரச்சினைகள், தடைகள், பொருள் இழப்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்கள் இந்த பரிகாரங்களை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
வாரம் ஒருமுறை கல் உப்பை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து வர, திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் நீங்கும். குறிப்பாக அவரவர் பிறந்த கிழமை அல்லது செவ்வாய்க்கிழமையில் இவ்வாறு குளிக்கலாம்.
கல் உப்பு கொஞ்சம் எடுத்து தலையை 3 முறை சுற்றி ஓடும் தண்ணீரில் போடுவார்கள்.. பிறந்த குழந்தைகளுக்கு ஒரு வேஷ்டி துணி சிறிது கிழித்து திரி செய்து திரியை தலை முதல் கால் வரை வலது புறம் தடவி மற்றொரு திரியை இடதுபக்கமாக தடவி அதனை சுவர் ஓரமாக வைத்து எரிய விடவும்... குழந்தை அழாமல் தூங்கி விடும்.
குடும்பத்தில் இருக்கும் அனைவரின் தோஷம் நீங்க, தெரு மண் கொஞ்சம் எடுத்து கடுகு, உப்பு, மூன்று காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து கிழக்கு பார்த்து அமர்ந்து மூன்று முறை எல்லோரையும் சுற்றி எரியும் விறகு அடுப்பில் போட்டுவிடவேண்டும்..இது கண் திருஷ்டியை போக்கும். இதை செவ்வாய் அல்லது ஞாயிற்றுக்கிழமையில் செய்வார்கள்..
நம் வீட்டிற்குள் கெட்ட சக்தி நுழையாமல் தடுக்கவும், கெட்ட எண்ணம் உடைய மனிதர்களின் தாக்கம் பாதிக்காமல் இருக்கவும், கண் திருஷ்டி விலகவும் வீட்டு வாசலில் பௌர்ணமியில் நீர் பூசணி கட்டி தொங்கவிடலாம். வளர்பிறை வெள்ளிக்கிழமையில் காலை 9 மணிக்கு கற்றாழை கட்டி தொங்கவிடலாம்...வாசலுக்கு மேல்...ஒரு எலுமிச்சை, ஒரு பச்சை மிளகாய் என மாற்றி மாற்றி 3 எலுமிச்சை நான்கு பச்சை மிளகாய் என கெட்டியான கயிறில் கோர்த்து தொங்கவிடலாம்...செவ்வாய் கிழமையில் இதை செய்யலாம்..!! சிலர் படிகாரக்கல், வெள்ளெருக்கு வேர், மருதாணிக்கட்டை சேர்த்தும் தொங்க விடுவர்...
- வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படும்.
- எந்த மூலையில் குப்பையை வைக்கக்கூடாது என்று தெரிந்துக்கொள்வோம்.
வீட்டைக்கூட்டி குப்பையை வீட்டில் இருக்கும் மூலையில் ஒதுக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆம். அப்படி செய்தால் வீட்டில் தரித்திரம் உண்டாகும் என நம்புகின்றார்கள். ஆனாலும் அதை நம் காதில் எடுத்துக்கொள்வதில்லை. வீட்டைக்கூட்டி மூலையில் தான் வைப்போம்.
வீட்டில் குப்பையை வைத்தால் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடங்கள் ஏற்படும்.
அதுபோலவே வீட்டில் இருக்கும் ஒரு சில மூலைகளில் குப்பையை வைத்தால் பண கஷ்டம் ஏற்படுமாம். அது எந்த மூலை என்று முதலில் தெரிந்துக்கொள்வோம்.
நாம் வீடு கட்டும் போதே வாஸ்து பார்த்து கட்டுவது தான் வழக்கம். வீட்டில் இருக்கும் படுக்கையறை, சமையலறை, குளியலறை மற்றும் கதவு என்பவைகளை வாஸ்து பார்த்து தான் கட்டுவோம்.
அவ்வாறு கட்டினால் தான் வீட்டில் நன்மைகள் ஏற்படும். தென்கிழக்கு மூலையை தான் பொதுவாக அக்னி மூலை என்று கூறுவோம்.
தென்கிழக்கு திசையில் தான் பொதுவாகவே சமையலறை அமைப்பார்கள். சமையலறை இருக்கும் இடங்களில் குளியலறை இருக்க கூடாது. அதாவது நீரை பயன்படுத்தி எதுவும் செய்ய கூடாது.
அதுபோலவே தென்கிழக்கு மூலையில் குப்பைகளையும் ஒதுக்க கூடாது. அவ்வாறு செய்யதால் வீட்டில் சம்பாதிக்கும் பணம் நீடிக்காது.
பணக்கஷ்டம், தொழிலில் கஷ்டம் மற்றும் குடும்பத்தில் பிரச்சினை என்பவை ஏற்படும். ஆகவே வீட்டில் இருக்கும் தென்கிழக்கு மூலையில் குப்பைகளை ஒதுக்கி வைக்க கூடாது என்பதை மறக்கக்கூடாது.
- சேலம் - திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது.
- கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றது. இந்த ஆலயத்தில் இருந்து சுமார் 22 கி.மீ. தொலைவில் சேலம் - திருச்செங்கோடு சாலையில் காளிப்பட்டி முருகன் கோவில் உள்ளது. முன்னொரு காலத்தில், இங்கு முருக பக்தர் ஒருவர் வசித்தார். ஆண்டு தோறும் தைப்பூசத் திருநாளையொட்டி, கடும் விரதம் இருந்து, பாத யாத்திரையாக பழனிக்கு காவடி எடுத்துச் சென்று வழிபடுவது இவரது வழக்கம்.
ஒரு நாள் அவரின் கனவில் தோன்றிய முருகக் கடவுள், "இனி, என்னைத் தேடி பழனி வர வேண்டாம். உனது இடத்திலேயே குடியிருக்க விரும்புகிறேன். இங்கேயே கோவில் எழுப்பு!"என்று அருளி மறைந்தாராம், அதன்படி கட்டப்பட்டதே, காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்.இந்தப் பகுதியில் எவரேனும் பாம்பு கடித்து மயங்கி விட்டால், உடனடியாக அவரை இந்தக் கோயில் மண்டபத்துக்கு கொண்டு வந்து கிடத்துகின்றனர்.
பூசாரி, முருகக் கடவுளின் அபிஷேகத் தீர்த்தத்தையும் விபூதியையும் தர, சிறிது நேரத்தில் விஷம் இறங்கி விடுமாம். இந்த கோவிலில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது விசேஷம். வைகாசி விசாகம் போன்ற நாட்களில், பாலாபிஷேகம் செய்து கந்தசாமியைப் பிரார்த்திக்க கல்யாண வரமும் பிள்ளை பாக்கியமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
குடும்பத்தில் பிரச்சினை, வியாபாரத்தில் நஷ்டம், வீண் பயம் முதலனவற்றால் அவதிப்படுபவர்கள், இங்கு வந்து கந்தசாமியை மனமுருகிப் பிரார்த்தித்து, இடும்பன் சந்நிதியில் தரப்படும் "மை" பிரசாதத்தைப் பெற்று மூன்று நாட்கள் தினமும் நெற்றியில் வைத்துக் கொண்டால், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும், தேவையற்ற பயம் விலகும்.
வைகாசி விசாக நாளில், உற்சவர் வீதியுலா நடைபெறும் போது காளிப்பட்டி கந்த சாமியை வணங்கினால் கவலையெல்லாம் பறந்தோடி விடும் என்பது ஐதீகம்.






