என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    வேதம் அறிந்த வேதியர்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவதால் நம்மை வஞ்சித்து பிறர் பெற்றுக்கொண்ட சொத்துக்கள், நம்மை அறியாமல் நாம் தொலைத்த அல்லது திருடப்பட்ட பொருட்கள் போன்றவை விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கச் செய்யும்.
    உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய நாள், திதியில் யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் கர்த்தவீர்யார்ஜுன மந்திரம் துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது.

    கர்த்தவீர்யார்ஜுன ஹோமம் செய்யும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து முடித்து விட்டு, தூய்மையான ஆடைகள் அணிந்து, உணவு ஏதும் உண்ணாமல் ஹோம பூஜையில் கலந்து கொள்வது சிறப்பு. பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது.

    இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது. கார்த்தவீர்யார்ஜுனன் ஹோமம் செய்யப்படுவதின் பிரதான நோக்கமே இழந்த நமது பூர்வீக சொத்துக்களையும், பொருட்களையும் திரும்ப மீட்பதற்காக தான்.

    வேதம் அறிந்த வேதியர்களைக் கொண்டு இந்த ஹோமம் செய்யப்படுவதால் நம்மை வஞ்சித்து பிறர் பெற்றுக்கொண்ட சொத்துக்கள், நம்மை அறியாமல் நாம் தொலைத்த அல்லது திருடப்பட்ட பொருட்கள் போன்றவை விரைவில் நமக்கு திரும்ப கிடைக்கச் செய்யும். இழந்த பொருட்கள், சொத்துக்கள் போன்றவை அப்படியே நமக்கு திரும்ப கிடைக்காவிட்டாலும் அதற்கிணையான செல்வம் நமக்கு கிடைக்க வழிவகை செய்கிறது.

    அதேபோன்று சில குடும்பங்களில் சில நபர்கள் மிக இளம் வயதிலோ அல்லது பல்வேறு காரணங்களால் காணாமல் போவது, பிரிந்து செல்லும் நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்களை மீண்டும் தொலைந்த தங்களின் உறவுகளோடு சேர்க்க செய்யும் ஆற்றல் மிக்க ஹோம பூஜையாக கார்த்தவீர்யார்ஜுன ஹோமம் இருக்கிறது.
    இந்த பரிகாரம் செய்வதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள்.
    என்னதான் சம்பாதித்தாலும் சில வீடுகளில் தொடர்ந்து உடல்நலக் குறைபாடு, கணவன் மனைவிக்குள் எப்போதும் கருத்து வேறுபாடுகள் , சண்டை , சச்சரவுகள் நீடித்துக்கொண்டே இருக்கும். அப்படி இருந்தால் இதனை ஒரு எளிய பரிகாரம் மூலம் சரி செய்து விட முடியும். இதனை நம்பிக்கையுடன் செய்து வர சிறப்பான பலன்களை பெறலாம். வீட்டில் தொடர்ந்து பிரச்சினைகள் இருக்கும் பொழுது சிறிதளவு வெண்கடுகை கையில் எடுத்து வீட்டின் அனைத்து மூலைகளிலும், திசைகளிலும் தூவி விடலாம்.

    24 மணி நேரம் கழிந்ததும் வீட்டை சுத்தமாக பெருக்கி ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து முச்சந்தியில் போட்டு விடலாம். இதனைச் செய்வதால் வீட்டில் அமைதி நிலவுவதை அனுபவத்தில் உணரலாம். இதே போல் வாரம் 1 அல்லது 2 முறைகள் , விசேஷ தினங்கள் சாம்பிராணி புகை போடலாம். அதிலும் வெண்கடுகு தூபம் போடலாம். விசேஷ தினங்களில் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பூஜைகள் செய்யும் பொழுது வீடு முழுவதும் வெண்கடுகு, சாம்பிராணி, குங்குலியம், ஏலக்காய் சேர்த்து தூபம் போட்டால் வீடு முழுவதும் கமகமவென்று தெய்வீக மணம் கமழுவதை உணர முடியும்.

    இதன் மூலம் வீட்டில் இருக்கும் தீய சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் மறைந்து நேர்மறை சக்திகளின் பலம் கூடும். பிரிந்த தம்பதியினர் ஒன்று இணைவார்கள் .அதே போல் கணவன் மனைவிக்குள் அடிக்கடி கருத்து வேறுபாடு வந்தாலும் இந்த பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து வரலாம்.
    இந்த பரிகாரத்தை தொடர்ந்து தினமும் செய்து வந்தால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது. இந்த பரிகாரம் செய்தால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.
    அந்த காலங்களில் வீடுகளில் சாம்பிராணி புகை போடுவார்கள். அதனால் தேவையற்றவை விலகி தேவையானவை தேடி வரும் என்பது ஐதீகமாக இருந்தது. அதே போன்று நீங்களும் வீட்டில் வெள்ளி, செவ்வாய் மற்றும் முக்கிய நாட்களில் கலப்படமில்லாத சாம்பிராணியால் புகை போட்டு வாருங்கள். இது நாள் வரை உங்களை தொடர்ந்த துரதிர்ஷ்டம் விலகி விரய செலவுகள் கட்டுக்குள் வந்து வீட்டில் செல்வம் மென்மேலும் வளர வழிவகுக்கும். அந்த சாம்பிராணியை எதனுடன் கலந்து போட்டால் என்னென்ன நடக்கும் என்பதை பார்ப்போம்.

    உங்கள் சூழ்நிலைக்கு ஏற்றாற்போல் அதற்கேற்ற சாம்பிராணியை போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.

    சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் அகில் போட்டு தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.

    சாம்பிராணியில் மருதாணி விதைகளை போட்டு தூபமிட சூனிய கோளாறுகள் விலகும்.

    சாம்பிராணியில் தூதுவளையை போட்டு தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.

    சாம்பிராணியில் சந்தனத்தை போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் அருகம்புல் பொடியை போட்டு தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.

    சாம்பிராணியில் வெட்டிவேரை போட்டு தூபமிட காரியசித்தி உண்டாகும்.

    சாம்பிராணியில் வேப்பிலையை போட்டு தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் வெண்கடுகை போட்டு தூபமிட பகைமை விலகும்.

    சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை போட்டு தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.

    சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டு தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.

    சாம்பிராணியில் வேப்பம்பட்டையை போட்டு தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.

    சாம்பிராணியில் நாய் கடுகை போட்டு தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.

    சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.

    சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை போட்டு தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.

    சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை போட்டு தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.

    சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை போட்டு தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.

    மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கி பயன்படுத்தி தீராத செல்வ வளம் கிடைக்கப் பெறுங்கள்.
    நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும் இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம்.
    தவறு செய்வது மனித இயல்பு. இதற்குக் காரணம், கலியுகத்தில், மனித மனதில் உறுதி குறைவதேயாகும். அதனால்தான் தர்மம் குறைந்து, அதர்மம் பலம் அடைகிறது. எத்தகைய தவறை  நாம்  செய்திருந்தாலும், அத்தகைய தோஷங்களினால் நமக்குத் துன்பங்கள் ஏற்படாமலிருக்க எளிய, சக்திவாய்ந்த பரிகாரங்களை, வேதகால மகரிஷிகள் அருளியுள்ளனர்.

    அத்தகைய பரிகாரங்களில், முதன்மை பெற்று விளங்குவது,  திருக்கோயில்களிலும், மகான்களின் பிருந்தா வனங்களிலும், தினமும் அல்லது குறிப்பிட்ட கிழமைகளிலும் நெய் தீபம் ஏற்றி வருவதேயாகும். இதற்கும் வசதியற்றவர்கள், நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம்.

    நெய் தீபம் ஏற்றும் பரிகார முறையில் பல ரகசியங்களும், சூட்சுமங்களும் உள்ளன. உடனுக்குடன், தவறாது பலனளிக்கும் இந்தப் பரிகாரத்தின் மகத்தான சக்தியை அனுபவத்தில் பார்க்கலாம்.

    கிழமை, தோஷ பரிகாரம்:

    ஞாயிறு: இதயம், வயிறு, இரத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், நாத்திக எண்ணங்கள், தெய்வ நிந்தனை, பெரியோர்களை எதிர்த்து வாக்குவாதம், பித்ரு பூஜைகளை விட்டுவிடுவதால் ஏற்படும் துன்பங்கள்.

    திங்கள்: மனக் கவலை, மனோவியாதி, நிம்மதியின்மை, பயம், தாழ்வு மனப்பான்மை, குழந்தைகளுக்கு ஏற்படும் Autism குறை, வெள்ளைப்புள்ளிகள் போன்ற சருமநோய்கள்.

    செவ்வாய்: பெண்களுக்குத் திருமணம் தடைப்படுதல், “ஜாதகத்தில் செவ்வாய் தோஷம்”, முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், வார்த்தைகளால் பிறர் மனதைப் புண்படுத்துவது, ஜாதகத்தில் கேதுவினால் ஏற்படும் தோஷங்கள்.

    புதன்: படிப்பில் தடை, “ஞாபக மறதி”, பாடங்களில் ஆர்வமின்மை, மாணவர்களுக்கு சகவாச தோஷம், மருந்துகளுக்குப் பிடிபடாத நோய்கள்.

    வியாழன்: ஆண்களுக்கு விவாகம் தடைபடுவது, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, புத்திர பாக்கியம் (ஆண் குழந்தை), தெய்வத்திடம் நம்பிக்கையின்மை, ஆச்சார்யர், குரு ஆகியோருக்குத் துரோகம் இழைத்தல், பெரியோர்களை அவமதிப்பது, குழந்தைகளால் பிரச்சனை.

    வெள்ளி: தாம்பத்திய சுகக் குறைவு, கணவர் மனைவி அன்னியோன்யம் பாதிக்கப்படுதல், கடன் தொல்லைகள், மாங்கல்ய பலத்திற்குச் சோதனை, பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனவேதனைகள், பண விரயம்.

    சனி: ஆயுள், ஆரோக்கியம், விபரீத நோய்கள், தொழில், பிரச்சனைகள், ராகுவினால் ஏற்படும்  பில்லி - சூனியம், செய்வினை தோஷங்கள், வேலையில் நிரந்தரமின்மை, ஜாதகத்தில் ராகுவினால் ஏற்படும் தோஷங்கள்.

    விசேஷ குறிப்பு

    1. ராகுவினால் ஏற்படும் தோஷங்களுக்கு சனிக்கிழமையும், கேதுவினால் ஏற்படும் தோஷங்களுக்குச் செவ்வாய்க்கிழமையும் தீபம் ஏற்றுவது விசேஷ நன்மைகளைத் தரும்.

    2. நெய் என்று சொல்லி, லாபம் சம்பாதிப்பதற்காக கொழுப்பு போன்றவற்றைக் கலப்படம் செய்து விற்பவர்கள், இப்பிறவியிலேயோ அல்லது மறுபிறவிகளிலோ நினைத்துப் பார்க்கவும் முடியாத பயங்கரமான சரும நோய்கள், குஷ்ட நோய்கள் ஆகியவற்றிற்கு ஆளாவார்கள்.

    ஆதாரம்: தர்ம சாஸ்திரம், ஆயுர்வேதம் “சாதாரண பரிகாரமாக இருக்கிறதே!” என்று எண்ணிவிடாதீர்கள்! சர்வதோஷ பரிகாரமான இதன் சக்தி மகத்தானது!
    அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள், கடன், எதிரிகள் தொல்லை , முன் வினை, பித்ரு சாபம், கர்ம வினைகள் நீங்க கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரம் நல்ல பலனைத்தரும்.
    (1) தினசரி சுத்தமான பசு நெய்யினால் இஷ்ட தெய்வம் அல்லது குல தெய்வத்திற்க்கு விளக்கு.

    (2) தினசரி பசுவிற்கு சிறிது உணவு.

    (3) தினசரி மதியம் 12 மணிக்கு மேல் காகத்திற்கு சிறிது உணவு.

    (4) தினசரி ஒருவருக்கு சிறிது உணவோ அல்லது குழந்தைகளுக்கு இனிப்பு சிறிதேனும் வழங்குதல்.

    (5) தினசரி சிறிது சர்க்கரை எறும்புகளுக்கு.

    மேற்கண்டவை மிகவும் சக்தி வாய்ந்த பரிகாரங்களாக நமது முன்னோர்கள் வழங்கியவை ஆகும்
    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. இது குழந்தை பாக்கியம் அருளும் சிறந்த தலமாக கருதப்படுகிறது.
    செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்திற்கு அருகில் விட்டலாபுரம் என்ற சிற்றூரில் பழமையான ‘பிரேமிக விட்டலர் கோவில்’ உள்ளது. விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரின் அரச பிரதிநிதியாக இருந்த கொண்டைய தேவ சோழ மகாராஜன் என்பவரால், 16-ம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டிருக்கிறது.

    கருவறை, அர்த்தமண்டபம், முகமண்டபம், மகாமண்டபம், திருச்சுற்று, தாயார் சன்னிதி என பல அம்சங்களுடன் இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ளது. ஆலயத்திற்கு வெளியே ஒரு சிறிய சன்னிதியில் பக்த ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில், விட்டலர் கோவிலை பார்த்தபடி காட்சி தருகிறார்.

    குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சந்தானலட்சுமி தாயாரை மனமுருகிப் பிரார்த்தித்து, விட்டலர் சன்னிதியில் தரும் சந்தாகிருஷ்ணர் விக்கிரகத்தை மடியில் வைத்து ‘ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே; ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே’ என்ற மந்திரத்தை உச்சரித்து, விட்டலனையும் தாயாரையும் மனதால் வழிபட குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது ஐதீகம்.

    கல்பாக்கத்தில் இருந்து நெரும்பூர் - திருக்கழுக்குன்றம் வழித்தடத்தில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம். இத்தடத்தில் சில பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கல்பாக்கம் மற்றும் நெரும்பூரில் இருந்து ஷேர் ஆட்டோவில் பயணித்தும் இக்கோவிலை அடையலாம். சென்னை -புதுச்சேரி கிழக்குக்கடற்கரைச் சாலைத் தடத்தில் மாமல்லபுரத்தை அடுத்த வெங்கம்பாக்கத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் இளையனார்குப்பம் என்ற ஊர் வரும். அங்கிருந்து வலது புறச்சாலையில் திரும்பினால் இரண்டு கிலோமீட்டரில் விட்டலாபுரம் சென்றுவிடலாம்.
    தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்த பாவங்கள் கூட உங்களுக்கு வினையாக வந்து நிற்கும். நீங்கள் சில சுலபமான பரிகாரங்களை செய்து உங்கள் பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்கிறது ஐதீகம்.
    நமக்கு மட்டும் ஏன் இப்படி எல்லாம் நடக்குது என்று எந்நேரமும் யோசிப்பவரா நீங்கள் ? எதை செய்தாலும் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லையே? எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் அது நம் கைகளில் நிற்கவில்லையே என்று ஏங்குபவரா நீங்கள்? அதற்கு எல்லாம் முக்கிய காரணம் உங்கள் பூர்வ ஜென்மத்தில் செய்த பாவங்கள் தான் என்கிறது புராணம். தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்த பாவங்கள் கூட உங்களுக்கு வினையாக வந்து நிற்கும். இதுபோன்ற சூழலில் சிக்கிக் கொண்டிருக்கும் நீங்கள் சில சுலபமான பரிகாரங்களை செய்து உங்கள் பாவங்களில் இருந்து விமோசனம் பெறலாம் என்கிறது ஐதீகம்.

    முக்கியமாக பசியோடு இருப்பவர்கள், வறுமையில் வாடுபவர்களுக்கு தேடி சென்று உணவளியுங்கள். , மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றவர்களுக்கு நீங்கள் தரும் உணவு உங்களின் பாவம் கணக்கை குறைத்துவிடும். வீட்டில் மிச்சமான உணவை தருவதைவிட நீங்கள் விருப்பப்பட்டு சமைத்து, அதை இல்லாதோருக்கு தரும்போது உங்களின் கர்மா நீங்கும் என்று சொல்லப்படுகிறது.

    அதேபோல் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் புறாக்களுக்கு உணவளிக்க மறக்காதீர்கள் . கோதுமை அல்லது ஏதேனும் தானிய வகையை நீங்கள் புறாக்களுக்கு கொடுப்பதன் மூலம் உங்களின் பூர்வ ஜென்ம சாபம் நீங்கும் என்று நம்பப்படுகிறது.

    ஏழு ஜென்ம பாவத்தை போக்க 3 வழிகள்!

    அதேபோல் அரிதிலும் அரிதாக ஏதேனும் இறந்து கிடக்கும் பாம்பை நீங்கள் காண முற்பட்டால் அதை குழி தோண்டி புதைத்து அதன் மேல் சிறிது பாலை ஊற்றி இறுதி சடங்கு செய்து விடுங்கள். இது அரிதிலும் அரிதாக நடக்கும் விஷயம் தான், இருந்தாலும் இதுபோன்ற செயல் உங்கள் கண்களில் பட்டால் அதை செய்வது நல்லது . அதேசமயம் அந்தப் பாம்பு இறந்து விட்டதா என்று பரிசோதித்துவிட்டு பிறகு இதை நீங்கள் செய்யலாம்.
    ஜாதக ரீதியான தோஷங்களுக்கு பரிகாரம் செய்ய கோவிலுக்கு செல்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த விஷயங்களை கடைபிடிக்க வில்லையென்றால் பரிகாரங்கள் கண்டிப்பாக பலன் அளிக்காது.
    ஆலய நுழை வாசலில் கை கால்களை கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். தலையில் நீரை தெளிக்க வேண்டாம்.

    முதல் நாள் இரவே பரிகார தலத்திற்கு சென்று விடுவது நல்லது.

    குடும்பத்தோடு செல்வது நல்லது. அதற்காக வாரக்கணக்கில் தாமதப்படுத்துவது கூடாது

    யாரிடமும் கடன் வாங்கி செல்ல வேண்டாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் பூஜைக்கென்று  சொல்லி வாங்காதீர்.

    போகும்போதோ வரும் போதோ குலதெய்வத்தை வழிபடலாம்.

    தர்ப்பணம் கொடுக்காதவர்களுக்கு எந்த  பரிகார பூஜையும் பலன் தராது.

    பரிகாரங்கள் அனைத்தையும் தாங்களே முன்னின்று செய்ய வேண்டும்

    ஆலயம் வர இயலாதவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு அவர்களது இரத்த உறவுக்காரர்கள் மிகுந்த விசுவாசமுள்ளவர்கள் குருமார்கள் பூஜை செய்தால் பலித்தமாகும்.

    முக்கிய பரிகார பூஜை சம்பந்தப்பட்ட விஷயங்களை யாரிடமும்  சொல்லாமல் இருப்பது நல்லது.

    பூஜை சம்பந்தப்பட்ட கிரகத்தின் நாள் ஓரையில் செய்யுங்கள்

    பூஜைக்கு பிறந்த நட்சத்திரம் , ஜென்ம நட்சத்திரம் அல்லது அமாவாசை, பவுர்ணமி, சித்திரை 1 போன்றவை உகந்தவை

    பரிகாரம் செய்ய செல்வதற்கு முன் 1 நாளும், பின்னர் 1 நாளும் இறந்தவர், தீட்டு வீட்டிற்கு செல்லாதீர்கள்

    காலையில் அணிந்த உடையில் மாலையில் பரிகாரத்திற்கு அணியாதீர்கள்

    ராகு கால பூஜையை தவிர மற்ற பரிகார பூஜைகளை காலை 7 மணிக்குள் ஆரம்பித்து விட வேண்டும்.

    பூஜை சாமான்களை கையில் , பிளாஸ்டிக் கவரில் கொடுக்காமல், பித்தளை, எவர்சில்வர் தாம்பாளம், கூடை ஆகியவற்றில் வைத்து கொடுங்கள்.
    இந்த கோவில் மிகவும் பழமையானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.
    சிவனின் பெயர்   : புண்ணியகோடியப்பர்
    அம்மனின் பெயர் :  அபிராமி
    தல விருட்சம்     : கஸ்தூரி அரளி

    கோவில் திறக்கும் : காலை 9 மணி முதல் 12 மணி வரை, மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும்.

    இந்த கோவில் 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது. இது 270 வது தேவாரத்தலம் ஆகும். தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் 274 என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவிடைவாய் தலத்திற்காக சம்பந்தர் பாடல்கள் 1917ல் கண்டுபிடிக்கப்பட்டு, தேவாரப்பாடல் பெற்ற தலங்கள் வரிசையில் கடைசியாக சேர்க்கப்பட்டு 275வது தலமானது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். இவர்மீது வைகாசி, மார்கழி மாதங்களில் சூரிய ஒளி படுவது சிறப்பு.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது.

    திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வேண்டிகொள்கிறார்கள்.

    முகவரி :  அருள்மிகு புண்ணியகோடியப்பர் திருக்கோயில்,
    திருவிடைவாசல் - 613 702, அத்திக்கடை வழி,
    குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம்
    Ph:  04366-232 853,94433 32853, 99431 52999
    ருத்ராம்சம் உடைய ஆஞ்சநேயர், ஐந்து முகம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயராகவும் விளங்குகின்றார். அப்படி ஐந்து முகங்களோடு அவர் விளங்கும் பொழுது, அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று பெயர்.
    நமது சமய மரபில் ஐந்து என்கிற எண் விசேஷமானது. பஞ்சபூதங்கள், பஞ்சாட்சர நாமம், பஞ்ச வேள்விகள், பஞ்ச இந்திரியங்கள் என்று பல சிறப்புகள் ஐந்து என்கிற எண்ணுக்கு உண்டு. இராமாயணத்தில் மகாவிஷ்ணு இராமனாக  அவதரித்தார். அவருடைய பரிவாரங்கள் பற்பல வடிவங்களில் பூலோகத்தில் அவதரித்தனர். ருத்ரனின் அம்சமாக  ஆஞ்சநேயர் அவதரித்தார்.

    ருத்ரன் அழிக்கும் சக்தி படைத்தவர். கெட்ட சக்திகளை அழிக்கும் வல்லமை ருத்ராம்சத்திற்கு உண்டு. இராமாயணத்தில் இராவணன் அழிந்ததற்கும், இந்திரஜித் அழிந்ததற்கும், இராமனும் இலட்சுமணனும் மருந்து மலையால் போர்க் களத்தில் காப்பாற்றப்பட்டதிலும் ஆஞ்சநேயரின் பங்கு மகத்தானது. அடுத்து ராம நாமத்தில் திளைத்தவர் ருத்ர அம்சமான ஆஞ்சநேயர்.இது அப்படியே பரமசிவன்  பார்வதியிடம் “ராம நாமம் மூன்று முறை சொன்னால் சஹஸ்ர நாமத்திற்கு சமம்” என்று சொல்வதிலிருந்து தெரிந்துகொள்ளலாம். ருத்ராம்சம்  உடைய  ஆஞ்சநேயர், ஐந்து முகம் கொண்ட விஸ்வரூப ஆஞ்சநேயராகவும்  விளங்குகின்றார். அப்படி ஐந்து முகங்களோடு அவர் விளங்கும் பொழுது, அவருக்கு பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று பெயர்.

    கிழக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சுவாமி முகமானது, நமது பாவத்தின் கறைகளைப் போக்கும்., தெற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீநரசிம்மர் சுவாமி முகமானது, நமது எதிரிகளை நாசமாக்கும். மேற்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீ கருட சுவாமி முகமானது, தீய சக்திகள் மற்றும் கொடிய விஷக்கடியினால் நமது உடலில் சேரும்விஷத்தையும் முறிக்கும்.வடக்குத் திசையை நோக்கியுள்ள ஸ்ரீலஷ்மி வராக சுவாமி முகமானது, நமக்கு அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளித்து கிரக தோஷங்களை நீக்கும்.மேல் நோக்கியுள்ள ஸ்ரீஹயக்ரீவ சுவாமி முகமானது, நமக்கு ஞானத்தையும், காரிய வெற்றியினையும், புத்ர பாக்கியதையும் வித்தைகளையும் அளிக்கும்.மந்த்ராலய மகானான ஸ்ரீராகவேந்த்ர தீர்த்தரின் உபாசனை தெய்வம் பஞ்சமுக ஆஞ்சநேயர்.

    அவர், பஞ்சமுக ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்த இடம் பஞ்சமுகி என்றழைக்கப்படுகிறது. அங்கு, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளது. பஞ்சமுக ஆஞ்ச நேயர் வடிவங்கள் நம் நாட்டில் பல ஊர்களிலும் உண்டு. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்று சொன்னால் புதுச்சேரி அருகே பஞ்சவடி என்கிற ஊரில் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் பிரசித்தமாக  உண்டு. சென்னைக்கு அருகில் திருவள்ளூரில், தேவி மீனாட்சி நகரில், 32 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயம் உண்டு. ஐந்து முகங்கள் தவிர பத்து முகங்களைக் கொண்ட தசமுக ஆஞ்சநேயரும் உண்டு.
    சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.
    இந்த கோவிலில் சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கட்டைவிரல் அளவுள்ள சிவலிங்கம் மரணமடைந்தவர்களுக்காக இங்கு தினமும் பிசாசு மோட்சம் என்ற நிகழ்ச்சி நடக்கிறது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது கர்ண சக்தி பீடம் ஆகும்.

    திருக்கோகர்ணம் மகாபலேசுவரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் துளுவ நாட்டில் உள்ள தலமாகும். சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற இத்தலம் கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் உள்ள சிவலிங்கம் கைலையிலிருந்து இராவணன் கொண்டுவந்தது என்பது தொன்நம்பிக்கை. இராவணன் எடுக்க முயலும் போது அந்த சிவலிங்கம் பசுவின் காது போல குழைந்ததால் கோகர்ணம் என்ற பெயர் பெற்றது.

    சிவபார்வதி திருமணத்தலமாதலால், திருமண பாக்கியம் வேண்டுபவர்கள் இத்தலத்தில் ஓடும் நதியில் நீராடி சிவனை வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

    இராவணன் எடுக்க கடும் முயற்சி செய்ததால் லிங்கத் திருமேனி பசுவின் காது போல் வளைந்து நீண்டது. அதனால் இத்தலம் 'கோகர்ணம்' என்று அழைக்கப்படுகிறது. கோ - பசு, கர்ணம் - காது. அரபிக்கடல் ஓரத்தில் அமைந்துள்ளது. மூலஸ்தானத்தில் பாணம் இல்லாமல் துவாரம் மட்டும் உள்ளது. அந்த துவாரத்தில் நீர் பால் போன்ற அபிஷேக பொருட்களால் நாமே அபிஷேகம் செய்யலாம். மலரிட்டு வணங்கலாம். கைவைத்து தொட்டு வழிபடலாம். மூலவர் சன்னதிக்கு பின்புறம் அம்பாள் சன்னதி உள்ளது.

    40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இங்கு ஆத்ம லிங்க பூஜை நடைபெறுகிறது. தற்போது குழியாக இருக்கும் இடத்தில் உள்ள பீடத்தை அகற்றி லிங்கத்தை வெளியில் எடுத்து பூஜை செய்கின்றனர்.

    திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தலா ஒரு பதிகம் பாடியுள்ளனர். காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

    இத்திருக்கோயில் கோகர்ணம் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து ரயில் மூலம் குண்டக்கல் வழியாக ஹூப்ளி வரை சென்று, அங்கிருந்து பேருந்து மூலம் செல்லக்கூடிய தலம். மங்களூரிலிருந்தும் பேருந்துகள் உள்ளன

     முகவரி : அருள்மிகு மகாபலேஸ்வரர் திருக்கோவில்,
    திருக்கோகர்ணம்-576 234. உத்தர் கன்னடா மாவட்டம்,
     கர்நாடகா மாநிலம். Ph:08386 - 256 167, 257 167
    வெற்றிலையை 12 ராசிகளுக்கேற்ப பயன்படுத்தி நம் துன்பங்களிிலிருந்து விடுபடலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?..இதோ தெரிந்து அதன்படி செய்து துன்பங்களில் இருந்து விடுபடலாமே.
    வெற்றிலையை சுபகாரியங்களுக்கும் , நாம் உணவிற்குபின் போட்டு்க் கொள்வதற்கும்..மருந்துகளுக்கு மட்டுமே நாம்பயன்படுத்துவது அனைவருக்கும் தெரிந்தது.  ஆனால் நமது ராசிகளுக்கேற்ப அதனை பயன்படுத்தி நம் துன்பங்களிிலிருந்து விடுபடலாம் என்பது தெரியுமா..இதோ தெரிந்து அதன்படி செய்துதுன்பங்களில் இருந்து விடுபடலாமே.

    மேஷம்:
    வெற்றிலையில் மாம்பழம் வைத்து செவ்வாய் கிழமை முருகனை வழிபட்டு சாப்பிட துனபங்கள் அகலும்.

    ரிஷபம்:
    வெற்றிலையில் மிளகு வைத்து செவ்வாய் கிழமை ராகுவை வழிப்பட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    மிதுனம்:
    வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து புதன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் விலகும்.

    கடகம்:
    வெற்றிலையில் மாதுளம்பழம் வைத்து வெள்ளிக் கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்

    சிம்மம்:
    வெற்றிலையில் வாழைப்பழம் வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கஷடம் விலகும்.

    கன்னி:
    வெற்றிலையில் மிளகு வைத்து வியாழக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    துலாம்:
    வெற்றிலையில் கிராம்பு வைத்து வெள்ளிக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துன்பம் தீரும்.

    விருச்சிகம்:
    வெற்றிலையில் பேரிச்சம்பழம் வைத்து செவ்வாய் கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் துயரம் தீரும்.

    தனுசு:
    வெற்றிலையில் கற்கண்டு வைத்து வியாழன்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.
    மகரம்:
    வெற்றிலையில் அச்சு வெல்லம் வைத்து சனிக்கிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    கும்பம்:
    வெற்றிலையில் நெய் வைத்து சனிகிழமை காளி தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் கவலை தீரும்.

    மீனம்:
    வெற்றிலையில் சர்க்கரை வைத்து ஞாயிற்றுக்கிழமை இஷ்ட தெய்வத்தை வழிபட்டு சாப்பிட்டால் நோய் தீரும்.
    ×