என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.
    கணவன்-மனைவி இருவரும் ஏக ராசியாக இருக்கக் கூடாது என்பதால்தான் திருமணத்திற்கு முன்னரே பொருத்தம் (ராசிப் பொருத்தம் உட்பட) பார்த்து மணமுடிக்க வேண்டும் எனக் கூறுகிறோம்.

    ஆனால் பெற்றோர் கையை மீறி காதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளால் ஏக ராசிப் பொருத்தம் அமைந்து விடுகிறது. அதிலும், அந்த தம்பதிகளுக்கு பிறக்கும் குழந்தையும் அதே ராசியில் பிறந்து விட்டால், ஒரே குடும்பத்தில் 3 பேர் ஏக ராசிக்காரர்களாக அமைந்து விடுகின்றனர்.

    இதன் காரணமாக ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, மோசமான தசை நடக்கும் போது குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவர். அதனால் திடீர் விபத்துகள், இழப்புகள் ஏற்படும்.

    ஒரே குடும்பத்தில் 3 பேரும் ஏகராசிக்காரர்களாக அமையும் பட்சத்தில் ஆண்டுதோறும் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று வழிபடுவதே சிறந்த பரிகாரமாகும்.

    ஒரே ராசியில் ஒருவருக்கு மேல் ஒரு குடும்பத்தில் இருந்தால் சம்ஹார ஸ்தலங்களுக்கு (கடலோரமாக உள்ள) சென்று வழிபாடு நடத்தலாம் என பழைய நூல்களில் கூறப்பட்டுள்ளது.

    ஏக ராசிக்காரர்களாக இருக்கும்பட்சத்தில் ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடந்தால் குடும்பத்தில் இருந்து ஒருவர் தற்காலிகமாக பிரிந்து இருப்பது நல்லது. மகன், மகளை உறவினர்கள் வீட்டில் அல்லது நல்ல விடுதியில் சேர்க்கலாம். கணவன்/மனைவி பணியிட மாற்றம் செய்து கொள்ளலாம். இதனால் விவாதம் மூலம் வரும் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

    ஏழரைச் சனி, அஷ்டமச் சனி நடக்கும் போது அனைவரும் ஒரே வண்டியில் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
    ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதுபோன்ற தோஷ பாதிப்புகளை நீக்கிக்கொள்ள குன்றத்தூர் தலத்தில் நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.
    நவகிரகங்களில் ராகு பகவானை யோகக்காரகன் என்று அழைப்பர் யோகக் காலத்தை உருவாக்குபவரே ராகுதான். ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேதனையும், வெறுப்பும் அதிகமிருக்கும். இதுபோன்ற தோஷ பாதிப்புகளை நீக்கிக்கொள்ள குன்றத்தூர் தலத்தில் நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.

    ஈடு இணையற்ற பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது. சேக்கிழார் பெருமான், சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பேறாக கருதினார். இப்படியொரு ஆலயத்தை தம் சொந்த ஊரில் அமைக்க ஆவல் கொண்டு அதை நிறைவேற்றி மனநிறைவு கொண்டார்.

    இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர். இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈசன். கோயிலினுள் சேக்கிழார் பெருமான் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் நாகேஸ்வரர் அருள் பொழிகிறார். தலைப்பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டிருந்ததால் நாகேஸ்வரரை திருக்குளத்தில் இட்டுவிட்டு அருணாசலேஸ்வரரை மூலவராக பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர், சிவனடியார்கள்.

    சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.
    சிவன் கோயில்களில் மட்டுமே நவகிரக வழிபாடு உண்டு. அவ்வழிபாடுகளினால் பக்தர்கள் தங்கள் தோஷங்களை நீக்கிக்கொள்வார்கள். விஷ்ணு கோவில்களில் உள்ள சக்கரத்தாழ்வார் வழிபாடும் நவகிர தோஷங்களை நீக்கும் என்பது ஐதீகம். சக்கரத்தாழ்வார் சன்னதியில் நெய் தீபம் ஏற்றி, `ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம’ என்ற மந்திரம் சொன்னால் நவகிரக தோஷங்கள் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை.

    மேலும் திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும் என்பதும் ஐதீகம். இந்த சுதர்சனருக்கு உகந்த நாள் வியாழன் மற்றும் சனிக்கிழமை. அன்று அவருக்கு சிவப்பு மலர்களால் மாலை சூட்டி வழிபட்டால் நினைத்த நல்ல காரியங்களில் வெற்றி கிட்டும் என்றும் நம்பிக்கை உள்ளது.

    ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும்.
    கடன் பிரச்சனை என்பது நமது உடலுக்கு மட்டுமல்ல மனதிற்கும் தெம்பு இல்லாமல் செய்து விடுகிறது. கடன் பிரச்சினையை எளிதில் தீர்க்கும் சக்தி பைரவருக்கு உண்டு. இதனால் கடன் பிரச்சினையைத் தீர்க்கும் பைரவர் பரிகாரத்தை எப்படி செய்வது என்று இந்த செய்தி குறிப்பில் காணலாம்.

    செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்ய ஆரம்பிக்கலாம். ஒரு சுத்தமான வெள்ளை நிற துணியில் 27 மிளகுகளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதை சிறிய மூட்டை போல கட்டி உங்கள் பூஜை அறையில் வைத்து விடுங்கள். பின்னர் பைரவரை நினைத்து அவர்கள் மந்திரங்களை சொல்லியவாறு பிரார்த்தனை செய்து வாருங்கள்.

    அதேபோல் மாலையில் பைரவர் சன்னதிக்குச் சென்று அங்குள்ள பைரவருக்கு செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து வாருங்கள். பைரவர்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் காலபைரவர் என்று சொல்வதுண்டு. கோடி கோடியாக எவ்வளவு கடன் இருந்தாலும் கால பைரவரை வணங்கி வரும் நிலையில் அந்தக் கடன்கள் அனைத்தையும் பைரவர் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

    ஒருவரின் கிரக நிலை சரியாக இல்லை என்றாலும் கால நிலை சரியாக இல்லை என்றாலும் பைரவர் வழிபாடு மேற்கொள்வது மிகுந்த பலன்களைத் தரும். நமது கெட்ட நேரத்தை கூட நல்ல நேரமாக மாற்றும் சக்தியும், ஆற்றலும் பைரவ பகவானுக்கு உள்ளது. அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி அதில் நீங்கள் வீட்டில் இருந்து கொண்டு வந்த மிளகு முடித்து வைத்து நன்கு நனைத்து தீபமேற்றி பைரவர் அஷ்டகம் வாசித்தால் போதுமானது. ஒன்பது வாரங்களில் உங்களின் அனைத்து தோஷங்களும் நீங்கி உங்கள் கடன் பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும்.

    பிரத்யங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி.
    பிரத்யங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்த காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமத்தை சொன்னாலே நிவாரணம் கிடைத்துவிடும். சக்தியின் உக்கிரமான வடிவங்களில் ஒன்றாகும். பிரத்யங்கிரா தேவி நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும், எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறாள். இந்து தொன்மவியலின் படி பிரத்யங்கிரா தேவி விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். பிரத்யங்கிரா தேவியை மனதார வேண்டி, தரிசித்து வந்தாலே நம் எதிர்ப்புகள் அனைத்தும் துரத்தியருள்வாள். எதிரிகளை பலமிழக்கச் செய்வாள் என்பது ஐதீகம்.

    பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்க செய்வாள் என்பதும் ஐதீகம். ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலம் மாலை 4.30 முதல் 6.00 மணிவரை. இந்த நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுங்கள். செந்நிற மலர்கள் சூட்டி அலங்கரியுங்கள்.

    பிரத்யங்கிரா தேவியின் காயத்ரி மந்திரத்தைச் பாராயாணம் செய்து, ஆத்மார்த்தமாக வேண்டிக்கொள்ளுங்கள். துஷ்ட சக்திகளையெல்லாம் அண்டவிடாமல் நம்மைக் காத்தருள்வாள் தேவி. பிரத்யங்கிரா தேவி, சக்தி வாய்ந்தவள். தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கருணையே உருவாகி அருள்பாலிப்பவள். தொடர்ந்து தேவியை வழிபடுங்கள். தடைகள் அனைத்தும் தகர்த்து, முன்னேற்றப் பாதையில் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்து அருளுவாள் பிரத்யங்கிரா தேவி.

    சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
    பிரதோஷ தினத்தில் சிவனை முப்பத்து முக்கோடி தேவர்கள், பிரம்மா, விஷ்ணு இவர்களெல்லாம் வணங்கி ஆசி பெறும் இத்தருணத்தில் நாமும் வணங்கி நம் துன்பங்களை அடியோடு போக்கிக் கொள்ள பிரதோஷ வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.

    எத்தனை பெரிய துன்பமாக இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து காராம் பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை, சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம கர்ம வினைகளும், நாம் செய்த பாவங்களும் நீங்கி சிறப்பான பலன் கிடைக்கும்.

    உலகை காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து, தீமையான விஷத்தை தான் ஏற்றுக்கொண்டார் ஈசன். இவ்வாறு உலகை காத்த உத்தமனான இறைவனை மனமுருக வேண்டி வழிபடும் தினமே பிரதோஷம்.

    11-ம் திதியாகிய ஏகாதசியில் சிவன் விஷம் உண்டார். 12-ம் திதியாகிய துவாதசியில் காட்சி தந்தார். 13-ம் திதியான திரயோதசி அன்று மாலை பிரதோஷ காலத்தில் நடன தரிசனம் தந்தார். சிவபெருமான் விஷம் உண்ட நாள் சனிக்கிழமையாகும். எனவே, சனி பிரதோஷம் மகத்தான சிறப்பு வாய்ந்தது.

    பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திரு முறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்க வேண் டும்.

    நாம் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப ஏழரைச்சனி, அர்த்தாஷ்டம சனி, கண்டகச்சனி, அஷ்டமச்சனி காலகட்டத்தில் பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் சனீஸ்வர பகவானின் கோபம் தணிந்து துன்பத்தைப் போக்க கண்டிப்பாக சனி பிரதோஷ வழிபாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.

    பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறணிந்து சிவ நாமம் ஆன ‘நமசிவாய’ ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

    ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால், ஐந்து வருடங்கள் தினமும் சிவாலயம் சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும். சிவனுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம் ஆகும்.
    அம்பாளின் திருநாமம், அபிராமி அம்மன் என்பதாகும். மார்கண்டேயனின் உயிரைக்காக்க, இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் இது. எனவே விதியை மாற்றிய திருத்தலமாக இது அறியப்படுகிறது.
    ‘கடம்’ என்பது ‘குடம்’ என்று பொருள்படும். அமிர்த குடத்தை அருளியவர் திருக்கடவூரில் உள்ள அமிர்தகடேஸ்வரர். அம்பாளின் திருநாமம், அபிராமி அம்மன் என்பதாகும். மார்கண்டேயனின் உயிரைக்காக்க, இறைவன் திருவிளையாடல் புரிந்த தலம் இது. எனவே விதியை மாற்றிய திருத்தலமாக இது அறியப்படுகிறது.

    இந்த ஆலயத்தில் தம்பதியர் தங்களின் 60-ம் வயதில் செய்யும் சிறப்பு பூஜையின் வாயிலாக ஆயுள் நீட்டிக்கும் என்று நம்பப்படுகிறது. அபிராமி பட்டருக்கு அமாவாசையன்று முழுநிலவு காட்சியை அளித்தவள், இத்தல அபிராமி அன்னை. இந்தக் கோவிலில் மணிவிழா பூஜை செய்து கொண்டால், வாழ்வில் மகிழ்ச்சி பொங்கும்.
    ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் தோஷங்கள் நீங்கி, வாழ்வில் மேன்மையான பலன்களை பெறுவதற்கான பரிகாரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    நவகிரகங்களில் சந்திர பகவானின் ஆதிக்கத்திற்குரிய நட்சத்திரமாக ரோகிணி நட்சத்திரம் இருக்கிறது. ரோகிணி நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் சிறந்த நிலையை அடைவதற்கு கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வருவது சிறப்பானதாகும்.

    வருடத்திற்கு ஒருமுறை நவகிரகங்களில் சந்திர பகவானுக்குரிய திருக்கோயில்களான திங்களூர், திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில் போன்றவற்றிற்கு சென்று வழிபட வேண்டும். எந்த ஒரு புதிய காரியத்தை தொடங்குவதற்கு முன்பும் பெற்ற தாயாரையும், தாய் வழி முன்னோர்களையும் வழிபட்டு தொடங்குவது சிறந்த வெற்றிகளைத் தரும். கோடைக்காலங்களில் மற்றும் கோவில் விழாக்களில் மக்களின் தாகத்தைத் தணிக்க மோர் பந்தல் அமைத்து, மோர் தானம் வழங்குவது நல்லது. மேலும் வீட்டிற்கு வெளியே பசுக்கள், நாய்கள் போன்றவை தாகத்தைத் தீர்த்துக் கொள்ளும் வகையில் நீர் தொட்டி அமைத்து, அதில் எப்போதும் நீர் ஊற்றி வைத்தது சிறப்பான பலன்களைத் தரும்.

    ரோகிணி நட்சத்திரத்திற்குரிய தலவிருட்சமாக நாவல் பழ மரம் இருக்கிறது. நாவல் மரம் தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று நாவல் பழமரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது ரோகிணி நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை நீக்கும். மன நோயாளிகளுக்கு உணவு, ஆடை தானங்கள் போன்றவற்றை செய்வது சந்திர பகவானின் அருளாசிகளைத் தரும் பரிகாரமாக இருக்கிறது.
    இறைவனை வழிபடும் போது, அவரவர் வசதிக்கேற்ப இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுவர். அப்படி அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பலன் இருக்கிறது. அதனைப் பார்ப்போம்..
    நாம் வாழ்வில் மன அமைதியோடு இருக்க, இறை வழிபாட்டை மேற்கொள்கிறோம். அப்படி இறைவனை வழிபடும் போது, அவரவர் வசதிக்கேற்ப வழிபாட்டிற்கான பொருட்களை வழங்குவார்கள். மேலும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும் வழிபடுவர். அப்படி அபிஷேகம் செய்யும் ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு பலன் இருக்கிறது. அதனைப் பார்ப்போம்..

    மஞ்சள் பொடி - கடன் நிவர்த்தியாகும்.

    பால் - ஆயுள் கூடும்

    பசுநெய் - வீடு பேறு கிடைக்கும்

    தயிர் - குழந்தை பாக்கியம் உண்டாகும்

    எண்ணெய் - நோய் தீரும்

    இளநீர் - போகமான வாழ்வு வரும்

    தேன் - இன்பம் வந்துசேரும்

    சந்தனம் - லட்சுமி கடாட்சம் உண்டாகும்

    எலுமிச்சைச் சாறு - எம பயம் நீங்கும்

    அன்னாபிஷேகம் - பெரும் பதவி கிடைக்கும்

    பஞ்சாமிர்தம் - வெற்றி தேடி வரும்

    விபூதி - பேர் சொல்லும் பிள்ளைகள் வாய்ப்பர்

    பன்னீர் - புகழ் சேரும்

    மலர்கள் - மகிழ்ச்சியான வாழ்வமையும்

    குங்குமம் - மங்கல வாழ்வு கிடைக்கும்
    செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சித்தால் விரைவில் திருமணம் நடக்கும். எனவே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.
    விழுப்புரம் மாவட்டத்தில் மயிலம் பகுதியில் மலைக் குன்றின் மீது முருகப்பெருமான் கோவில் இருக்கிறது. இது சூரபத்மன் வழிபாடு செய்த திருத்தலமாகும். இங்கு மயில் வடிவ மலை உருவத்தில் சூரபத்மன் இருப்பதாக தல புராணம் சொல்கிறது.

    மயிலம் மலையில், நொச்சி மரங்கள் ஏராளமாக உள்ளன. தினமும் காலை பூஜையின்போது நொச்சி இலைகளை மாலையாகத் தொடுத்து மூலவருக்கும், உற்சவ மூர்த்திகளுக்கும் அணிவிக்கிறார்கள். அதன் பிறகே மற்ற பூமாலைகளை அணிவிக்கிறார்கள். மூலவர் வீற்றிருக்கும் கருவறை மண்டபத்துக்கு வெளியில் பிரமாண்டமான வேலும், மயிலும் இருக்கின்றன. செவ்வாய்க்கிழமை தோறும் காலசந்தி பூஜையின் போது வேலாயுதத்துக்கு அர்ச்சனை செய்கிறார்கள். இப்படி அர்ச்சனை செய்யும் பக்தர்களுக்கு பணப் பிரச்சினைகள் அகலும் என்பது நம்பிக்கை.

    இதேபோல உற்சவமூர்த்தி முருகப்பெருமானின் அருகில் அவரின் படைத் தளபதியான வீரபாகுவும் உற்சவராக இருக்கிறார். செவ்வாய்க்கிழமை காலையில் இவருக்குப் பாலபிஷேகம் செய்து, அர்ச்சித்தால் விரைவில் திருமணம் நடக்கும். எனவே ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் ஏராளமான பெண்கள் இங்கு வருகிறார்கள்.

    எப்போதும் அமைதி நிலவும் இந்தத் தலத்துக்கு வந்து வழிபடுகிறவர்களுக்கு நிச்சயம் மன அமைதி கிடைக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கையாகும்.

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகில் இருக்கிறது, மயிலம். புதுவை, விழுப்புரம், திண்டிவனம் ஆகிய நகரங்களில் இருந்து அடிக்கடி பஸ்கள் உண்டு. சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூட்டேரிப்பட்டு என்ற நிறுத்தத்தில் இறங்கினால், அங்கிருந்து 3 கி.மீ. தூரத்தில் இருக்கிறது மயிலம்.
    எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
    சனி பகவானுக்கு இரண்டு மைந்தர்கள் ஒருவர் மாந்தி, மற்றொருவர் குளிகன். இதில் குளிகன் சனி பகவானுக்கும் நீலா தேவிக்கும் பிறந்தவர். ஆனால் மாந்தி சனியின் வெட்டுப்பட்ட காலில் இருந்து உருவானவர்.

    வெட்டுப்பட்ட கால் என்றாலே அது சவத்துக்கு சமம். எனவே சவ ஊர்வலங்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்வதும், இறந்தவரின் ஆன்மாவுக்காக ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்துக்கு நம்மால் முயன்ற உதவிகளைச் செய்வதும், மாந்தியின் தோஷத்தை வெகுவாகக் குறைக்கும். இன்னும் சொல்லப்போனால் மாந்தி தோஷம் இல்லாமலே போகும்!

    கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் பக்கத்தில் திருநரையூர் எனும் ஸ்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நிதியில் எழுந்தருளுகிறார். அதுமட்டுமா? தன் மனைவி நீலாதேவி மகன்கள் குளிகன் மற்றும் மாந்தி என குடும்பத்தோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று முறையாக பூஜை செய்து வழிபட்டால் மாந்தி தோஷம் விலகும்.

    பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு ஆலயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் உள்ளது, அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபட்டாலும் மாந்தி தோஷம் நீங்கும்.

    பட்டுகோட்டைக்கு அருகே விளங்குளம் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார். அங்கே சென்று வழிபட்டாலும் மாந்தி தோஷம் இல்லாமல் போகும்.

    மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு அதிலும் குறிப்பாக கால்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிந்தவரை உதவி செய்யுங்கள். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்கிக் கொடுத்து இந்த மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைத்துக்கொள்ளலாம். குறிப்பாக புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் விரைவாக புத்திர பாக்கியம் பெறுவார்கள்.

    குடும்பத்தில் அமைதியின்மை, நிம்மதியற்ற நிலை, வருமானம் போதுமான அளவிற்கு இல்லையே என்று கலங்குபவர்கள், குடும்பத்தினர் ஆளுக்கொரு பக்கம் பணிபுரிந்து கொண்டு சேர்ந்து வாழ முடியாமல் தவிப்பவர்கள் என்றிருந்தால், மேற்கண்ட பரிகாரங்கள் மிகப்பெரிய பலன்களைக் கொடுக்கும்! பிரச்சினைகள் விரைவாகத் தீரும். தொடர்ந்து சிவபெருமானை வழிபாடு செய்வதும், தினமும் காலையில் சூரிய வழிபாடு செய்வதும், ஆதித்யஹிருதயம் கேட்டு வருவதும் மாந்தி தோஷத்தின் வீரியத்தைக் குறைக்கும்.

    பொதுவாக எந்த ஒரு மனிதர் இறந்தாலும் அவரை தூற்றுவது, அதாவது அவர் கெட்டவராகவே இருந்தாலும் இறந்த பிறகு அவரை தூற்றுவது "பிரேத சாபம்" என்னும் கடுமையான தோஷத்தைத் தரும். இதுவும் மாந்தி தோஷத்தில் ஒரு பகுதியே! எனவே எந்தச் சூழ்நிலையிலும் எப்போதும் இறந்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து பேசாதீர்கள். அது உங்களுக்கு மட்டுமல்ல உங்கள் குடும்பத்தினரையும் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
    தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும்.
    பொதுவாகவே எந்த கோவிலுக்கு சென்றாலும் முதலில் விநாயகப் பெருமானை தான் தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம். இதேபோல் பெருமாள் கோவில்களுக்கு நாம் செல்லும் போது, முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற ஒரு சாஸ்திரமும் உண்டு. இது பெரும்பாலானோருக்கு தெரிவதில்லை. முதலில் கருடாழ்வாரை தரிசனம் செய்துவிட்டு, அதன் பின்பு பெருமாளை தரிசனம் செய்வதுதான் சரியான முறையும் கூட. இனி பெருமாள் கோவில்களுக்கு சென்றால் இந்த முறையை பின்பற்றி கொள்ளுங்கள்.

    ஒருவருக்கு இருக்கக்கூடிய தீராத உடல் உபாதைகள் தீர வேண்டுமென்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கருடாழ்வாரை வழிபட வேண்டும்.

    குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி, சந்தோஷம் நிலவ வேண்டுமென்றால் திங்கட்கிழமை கருடாழ்வார் வழிபாடு சிறந்தது.

    உடல் உறுதியும், மன உறுதியும் தேவை என்றால் செவ்வாய்க்கிழமைகளில் கருடாழ்வார் வழிபாடு சிறப்பானது.

    எதிரி தொல்லை இருப்பவர்களும், ரொம்பவும் பயந்த சுபாவம் இருப்பவர்களும் கருடாழ்வாரை புதன்கிழமை வழிபடுவது நல்லது.

    நீண்ட ஆயுளைப் பெற வியாழக்கிழமை வழிபாடு சிறந்தது. வீட்டில் பணப் பிரச்சனை தீர்வதற்கு கருடாழ்வாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபட வேண்டும்.

    சொர்க்கத்தை அடைய வேண்டும் என்றால் சனிக்கிழமை கருடாழ்வாரை வழிபடுங்கள்.

    இப்படியாக உங்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகள் தீர குறிப்பிட்ட கிழமைகளிலும் கருடாழ்வாரை வழிபடலாம். தினம்தோறும் கருடாழ்வாரை மனதில் நினைத்து வழிபடுபவர்களுக்கு வாழ்வில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட சங்கடங்களும், சிறு துரும்பாக மாறும்.
    ×