என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது.
    ஜாதகத்தில் சில கிரகங்களின் நிலை சரியில்லாமல் இருப்பதாலும், நாம் செய்யும் சில செயல்களின் வினைகளாலும் நமக்கு தோஷங்கள் ஏற்படுகின்றது. அப்படியான ஒரு தோஷம் தான் நாக தோஷம். ஒருவருக்கு மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் நாக தோஷத்திற்கான காரணங்களையும், அதற்கான பரிகாரங்களையும் இங்கு பார்ப்போம்.

    ஒருவரின் ஜாதகத்தில் ராகு அல்லது கேது கிரகம் லக்னம் 2, 5, 7, 8 ஆகிய இடங்களில் இருக்கும் பட்சத்தில் அந்த நபருக்கு சர்ப்ப தோஷம் அல்லது நாக தோஷம் உண்டாகிறது. மேலும் பாம்பு புற்றுகளை இடிப்பதாலும், நாக பாம்புகளை கொல்வதாலும் நாக தோஷம் உண்டாகிறது. இந்த தோஷத்தால் திருமண தாமதம், கணவன் மனைவி பிரிதல், குழந்தை பாக்கியம் இல்லாதிருத்தல், வேலைவாய்ப்பின்மை மற்றும் தொழில் வியாபாரங்களில் நஷ்டம், திடீர் விபத்துகள் போன்ற துர்பலன்கள் ஏற்படக்கூடும்.

    இந்த நாக தோஷம் கொண்ட நபர்கள். தினந்தோறும் காலையில் முருகப்பெருமானின் கோவிலுக்கு சென்று அவரை வழிபட்டு வருவது நல்லது. கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் வள்ளி, தெய்வானை உடன் இருக்கும் முருகப்பெருமானின் படத்திற்கு முன்பு விளக்கேற்றி வழிபட்டு வருவது நாக தோஷத்தின் கடுமைத்தன்மையை குறைக்கும்.

    செவ்வாய்க்கிழமைகளில் நரசிம்மரை வழிபட்டு வருவதும் சிறந்தது. பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று புற்றில் பாலூற்றி வழிபட்டு, அக்கோவிலிலிருக்கும் ராகு-கேது விக்கிரகங்களுக்கு விளக்கேற்றி வழிபட்டு வருவதும் நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரமாகும்.

    வெள்ளியால் செய்யப்பட்ட மோதிரத்தில் கோமேதக ரத்தினத்தை பதித்து வலது கையின் நடுவிரலில் அணிந்து கொள்வதால் நாக தோஷம் கொண்டவர்களுக்கு தீய தோஷம் ஏற்படாமல் தடுக்கும். அன்றாட உணவிற்கு கஷ்டப்படும் ஏழைகளுக்கு ஏதேனும் ஒரு பருப்பு வகையை தானமாக நாக தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் ஆகும்.
    மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள். பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள்.
    தட்சிணாய காலத்தின் முதல் மாதமான ஆடிமாதம் இறைவழிபாட்டுக்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. பெற்றோருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை சரியாக கவனிக்க முடியாதவர்கள்கூட பிதுர் பூஜை செய்து வழிபட்டால், மனச்சுமைகள் குறையும். பெற்ற பிள்ளைகளை எந்த சூழ்நிலையிலும் மன்னித்தே பழக்கப்பட்ட பெற்றோர், இந்த விஷயத்திலும் மன்னித்து அருள்புரிவார்கள்.

    காவிரிக்கரை, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை திருச்சி முக்கொம்பு, மயிலாடுதுறை நந்திக்கட்டம், பவானி முக்கூடல், உள்பட பல நீர்நிலைகளில் பக்தர்கள் அதிக அளவில் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்வார்கள். நதிக்கரைகள் மட்டுமின்றி, கடற்கரை ஸ்தலங்களன ராமேஸ்வரம், தனுஷ்கோடி , முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பூம்புஹார், வேதாரண்யம், கொடியக்கரை ஆகிய கடற்கரைப் பகுதிகளும் பிதுர் பூஜைகளுக்கு ஏற்றவை.

    சில கோவில்களும் பிதுர் பூஜை செய்ய உகந்ததாக சொல்லப்படுகின்றன. அந்த வகையில், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆடி அமாவாசை அன்று மூதாதையர்களுக்காக சிறப்பு பூஜை செய்வது சிறப்பானது. அப்போது மூங்கில் தட்டில் வெற்றிலைபாக்கு, தேங்காய், பழங்கள், மலர்ச் சரங்கள், வாழைக்காய், பூசணிக்காய் வைத்து, அதனைக் கோவில் அர்ச்சகரிடம் கொடுத்து அம்மன் சன்னிதியில் சமர்ப்பிக்கிறார்கள்.

    மறைந்த தங்கள் பெற்றோரின் பெயர், நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்யச் சொல்கிறார்கள். பிறகு பூஜை செய்யப்பட்ட அந்தத் தட்டினை வயதான ஒரு அந்தணரிடம் தட்சிணை கொடுத்து சமர்ப்பிக்கிறார்கள். அல்லது வயதான சுமங்கலிப் பெண்ணிடம் கொடுத்து அவர்கள் காலில் விழுந்து ஆசி பெறுகிறார்கள். வசதி படைத்தோர் அன்றைய தினம் அன்னதானம் செய்வதுடன் ஆடைதானமும் செய்கிறார்கள்.

    தஞ்சையில் இருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் பாதையில் கண்டியூரில் இருந்து 3கி.மீ. தொலைவில் உள்ள திருத்தலம் திருப்பந்துருத்தி. இந்த தலமும் ஆடி அமாவாசைக்கு ஏற்ற இடம்தான்.
    ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும் நம்பிக்கையாக உள்ளது.
    சேலத்தின் மேச்சேரியில் இருக்கிறது 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் திருக்கோவில். இந்த அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும்.

    அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும்  நம்பிக்கையாக உள்ளது. 

    மேலும் மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர். கோயிலில் பூவாக்கு கேட்பது மிகவும் பிரசித்தி பெற்றது.

    பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், திருமணம், நிலம் வாங்குதல் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கும் பூவாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர்.

    இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் இருந்தும் பக்தர்கள் திரண்டு வந்து மேச்சேரி பத்திரகாளியம்மனை வழிபட்டுச் செல்கின்றனர்.
    குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த சுமங்கலி பெண்கள் கோவில் குளத்தில் புனித நீராடி மடிப்பிச்சை ஏந்தி கோவில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் பிரசாதம் பெற்றனர்.
    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கோட்டுப்பாக்கம் கிராமத்தில் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழந்த மகான் ஆறுமுக சுவாமி பொதுமக்களுக்கு மூலிகை மருத்துவம் செய்து கொண்டு அருளாசி வழங்கி வந்தார்.

    இந்நிலையில் வயது முதிர்ந்த தருவாயில் ஆடி அமாவாசை தினத்தன்று ஜீவசமாதி அடைய போவதாகவும், அந்த இடத்தில் கோவில் கட்டி வருடந்தோறும் ஆடி அமாவாசை நாளில் குழந்தை பாக்கியம் இல்லாத திருமணமான பெண்கள் விரதமிருந்து இங்கு வந்து எனக்கு படைக்கும் படையலை பரதேசிகளிடம் இருந்து மடிப்பிச்சையாக பெற்று அருகில் உள்ள குளக்கரையில் மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக்கொண்டு மண்சோறு சாப்பிட்டால் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என கூறி ஜீவசமாதி அடைந்தார்.

    அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பொது மக்கள் கோவில் கட்டி வணங்கி வருகின்றனர்.

    ஆடி அமாவாசை தினமான நேற்று குருபூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி அதிகாலை ஆறுமுக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.

    குழந்தை வரம் வேண்டி விரதமிருந்த சுமங்கலி பெண்கள் கோவில் குளத்தில் புனித நீராடி மடிப்பிச்சை ஏந்தி கோவில் வளாகத்தில் உள்ள சாதுக்களிடம் பிரசாதம் பெற்றனர்.

    தொடர்ந்து அவர்கள் கோவில் அருகில் உள்ள குளக்கரை படியில் சென்று பிரசாதத்தினை வைத்து பயபக்தியுடன் சுவாமியை வேண்டி மண்டியிட்டு கைகளை பின்புறமாக கட்டிக் கொண்டு மண்சோறு சாப்பிட்டனர்.

    மேலும் வேண்டுதலை நிறைவேறிய பெண்கள் தங்கள் குழந்தையுடன் வந்து எடைக்கு எடை நாணயம் காணிக்கையாக செலுத்தினர்.
    தஞ்சை மாவட்டம் திருவிசநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள பஞ்சமுக மகா மங்கல பிரத்யங்கிராதேவி கோவிலில் நடக்கும் மிளகாய் யாகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பூம்புகார் சாலையில் 7 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருவிசநல்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது பஞ்சமுக மகா மங்கல பிரத்யங்கிராதேவி கோவில்.

    மாதந்தோறும் அமாவாசை அன்று காலை 10 மணி முதல் நிகும்பலா யாகம் நடைபெறும். யாக குண்டத்தில் பட்டுப்புடவை, மிளகாய் வற்றல் ஆகியவை போடப்பட்டு இந்த யாகம் நடைபெறும். இந்த மிளகாய் யாகத்தில் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவியை மன முக தரிசனம் செய்பவர்களுக்கு பகை, கடன், நோய் அகலும். சகலவித நன்மைகள் உண்டாகும். தீவினைகள் அடியோடு விலகும். பொன், பொருள் வாங்கும் யோகம் அதிகரிக்கும். தொழில், வேலை, உத்தியோகம் அபிவிருத்தி அடைந்து பணம் வரவு அதிகரித்து வளம் உண்டாகும்.

    திருமணத்தடை நீக்கி விரைவில் திருமணம் நடைபெற பிரத்யங்கிராதேவி கோவிலில் சிறப்பு யாகம் நடக்கிறது. இதில் கலந்து கொள்பவர்களுக்கு திருமணத்தடை நீங்குகிறது என இங்கு வரும் பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

    இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் ராகுகாலத்தில் மாலை 3 மணி முதல் 4.30 மணி வரை நடைபெறும் ராகு கால பூஜையில் பங்கேற்பதால் திருமணத்தடை நீங்கும். புது வீடு வாங்கும் எண்ணம் உள்ளவர்களுக்கு உடன் கை கூடும், வேலையில் நிரந்தரம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் ஈடேறும், வெளிநாட்டு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களின் எண்ணம் 11 வாரத்தில் ஈடேறும். அரசு உத்தியோகம் எதிர்பார்ப்பவர்களுக்கு அதிவிரைவில் நிரந்தர உத்தியோகம் கிடைக்கும்.

    தமிழகத்திலேயே தனிச்சிறப்பாக இவ்வாலயத்தில் உள்ள அனுமன் நேரெதிர் சனி பகவானை பார்க்கிறார். ஏழரை சனி, அஷ்டமத்து சனி, அர்தாஷ்டம சனி, கண்டக சனி தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமைகளில் வழிபட கிரக தோஷங்கள் அறவே விலகும்.

    இவ்வாலயத்தில் உள்ள திரிசூலத்தில் பில்லி, சூனியம், உடல் வியாதி, தீராத மன நோய், குடும்ப கஷ்டம், போட்டிகள், பெரும்பகை இவற்றினை களைய பக்தர்கள் மிளகாய் அரைத்து தாங்களே சாற்றி பலன் பெறலாம்.
    தொடர்ச்சியாக வரும் மூன்று பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக நல்ல வரன் அமையும்.

    ஒருவரது ஜாதகத்தில் புனர்பூ தோஷம் இருந்தால் அவருக்கு திருமணம் நிச்சயம் ஆகி பின்பு திடீரென திருமணம் நின்று விடும் அல்லது இரு வீட்டாரும் நல்ல மனநிலையில் இருந்து சுபகாரிய பேச்சுவார்த்தை நடை பெற்று திடீர் என்று ஏதாவது ஒரு பிரச்சனை மற்றும் காரணத்தால் திருமணம் தடைபெறுவது, திருமணத் தேதி குறித்த பின்பு இருவீட்டாருக்கும் சண்டை ஏற்பட்டு திருமணம் நிற்பது மேலும், திருமணம் நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுவது போன்றவை நிகழும்.

    திருமணம் நடைபெற்றாலும் திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்குள் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்படுவது, தீராத வியாதியால் வாழ்நாள் முழுவதும் அவதிப்படுவது, இரு தார யோகம் ஏற்படுவது, திருமணம் செய்து சில நாட்களிலேயே பெண் தன் தாய் வீட்டிற்கு வந்து விடுவது, கணவன் மற்றும் மனைவி இருவரில் ஒருவர் சீக்கிரமாகவே இறந்துவிடுவது போன்ற துர்சம்பவங்கள் ஏற்படும்.

    புனர்பூ தோஷத்துக்கான பரிகாரங்கள்

    புனர்பூ ஜாதக அமைப்பு கொண்டவர்கள் திருமணஞ்சேரி தலத்திற்கு சென்று முறையாக பரிகாரம் செய்தால் இந்த தோஷத்திலிருந்து விடுபடலாம். குலதெய்வ கோவிலுக்கு அடிக்கடி சென்று வரலாம். முடி காணிக்கை செலுத்துவது நல்லது.

    தொடர்ச்சியாக வரும் மூன்று பௌர்ணமி நாட்களில் விரதம் இருந்து திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று, ஒன்பது துறவிகளுக்கு வஸ்திர தானம் செய்து வந்தால் திருமண தடை நீங்கி உடனடியாக நல்ல வரன் அமையும்.

    அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
    தித்திக்கும் மாங்கனிக்கு புகழ்பெற்ற சேலத்தின் மேச்சேரியில் இருக்கிறது பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் திருக்கோயில். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலின் பிரதான வாசல், வடக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

    அன்னையை தரிசனம் செய்வதால் 21 தலைமுறையில் செய்த பாவங்கள், சோகம், ரோகம் போன்றவை நீங்கும். வித்தை, புத்தி சித்திக்கும். அஷ்டமாசித்திகளும் அன்னையை பணிந்து வழிபட்டால் கைகூடிவரும். மேலும் பாவதோஷங்கள், ஏவல், பில்லிசூனியம், எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள், ராகு, கேது தோஷத்தால் ஏற்படும் திருமண தடைகள், குழந்தைபேறின்மை ஆகியவைகளுக்கு ராகுகாலத்தில் எலுமிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் நீங்கும் என்பது பக்தர்களிடம் தொடரும்  நம்பிக்கையாக உள்ளது.  

    மேலும் மன நோய் பாதித்தவர்கள் ஒருமண்டலம் இங்குவந்து தீர்த்தம், விபூதி உட்கொண்டால் நோய் நீங்குகிறது. பேய், பிசாசு பிடித்தவர்கள் வந்து பூதகணங்களின் முன் கூட்டு பிரார்த்தனை செய்து விபூதி அணிந்தால் அவைகள் நீங்கிவிடுகிறது. கால்நடைகளுக்கு ஏற்படும் நோய் நீங்க பக்தர்கள் வீபூதி பெற்று செல்கின்றனர். மக்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் ஆலயத்திற்கு வந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

    கோயிலில் பூவாக்கு கேட்பது மிகவும் பிரசித்தி பெற்றது. பக்தர்கள் புதிய தொழில்கள் தொடங்குவதற்கும், திருமணம், நிலம் வாங்குதல் மற்றும் பல்வேறு விசேஷ காரியங்களுக்கும் பூவாக்கு கேட்டு அதன்படி செயல்படுகின்றனர். அமாவாசையில் நடைபெறும் சிறப்பு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரத்தில் கலந்து கொண்டு தரிசனம் செய்தால் நினைத்தது நடப்பதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
    கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
    திருவண்ணாமலையில் உள்ள நார்த்தாம்பூண்டி திருத்தலத்தில் பிரம்மதேவன் வழிபட்ட திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் கோவில் கொண்டுள்ளனர்.

    இங்கு பத்மாவதி தாயார், ஆண்டாள் நாச்சியார் ஆகியோருக்கும் தனித்தனி சன்னிதிகள் உள்ளன. இது ஒரு திருமண தடைநீக்கும் திருத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கல்யாண வெங்கடேசப் பெருமாளுக்கு, மட்டைத் தேங்காய் வைத்து பக்தர்கள் வழிபடுகின்றனர். கோவிலில் நீராடிவிட்டு ஈரத்துணியுடன் கல்யாண வெங்கடேசருக்கு மட்டை தேங்காய் வைத்து வழிபட்டு, கோவிலை 27 முறை வலம் வந்தால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறியதும் தம்பதி சமேதராக இங்கு வந்து வழிபடுபவர்களின் எண்ணிக்கை இந்த பெருமாளின் பெருமையை பறைசாற்றுகிறது.

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நாயுடுமங்கலம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள கூட்டுரோட்டில் 5 கிலோமீட்டர் தூரம் சென்றால் நார்த்தாம்பூண்டியை அடையலாம்.
    இவைகள் பொதுவானவை ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.
    நம்முடைய சில செயல்கள் நமக்கு எவ்வாறு தோஷமாகி நம்முடைய வளர்ச்சியை கெடுக்கிறது என்று நமக்கு தெரியாது. அதுபோல சில நல்ல செயல்கள் நம்முடைய தோஷத்தை விளக்கி நமக்கு நம்மை செய்யும்.

    * படுக்கை அறையில் தலை அருகே நீரை வைத்து உறங்கிவிட்டு அந்த நீரை காலையில் செடிகளுக்கு விட சுக்ர தோஷம் படிப்படியாக குறையும்.

    * அடிக்கடி பசுவிற்கு வாழை பழம், கற்கண்டு பொங்கல் கொடுப்பது சந்திரனின் ஆசிகளை நமக்கு கொடுத்து புகழை பெற்று தரும்.

    * வசதி இல்லாத குடும்பத்தினருக்குப் ஈமச் சடங்குகள் செய்ய பணம், பொருள் கொடுத்து உதவி செய்தல் சனியின் ஆசிகளை கொடுத்து ஆயுளை விருத்தி செய்யும்.

    * ஆசான், வேதம் படித்தவர், நம் முன்னோர்கள் மற்றும் சாதுக்களை விழுந்து வணங்கிட, புண்ணிய யாத்திரைக்கு இல்லாதவருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குழந்தை பெற்ற ஏழை தம்பதியருக்கு பொருள் கொடுத்து உதவுவது, குருவின் ஆசிகள் கிடைக்கும்.

    * சிவ பெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வதும் பசித்து தவிக்கும் உயிர்களுக்கு உணவு அளிப்பதும், கோவிலுக்கு சொர்ணத்தை தானமாக அல்லது கலசத்திற்கு தருவது, தொழு நோய் / குஷ்டம் கண்டவர்களுக்கு வைத்திய செலவு அல்லது அவர்களுக்கு நல்ல உணவு அளிப்பது சூரியனின் ஆசிகளை கொடுத்து நல்ல ஆரோக்கியம் மற்றும் வம்ச விருத்தி செய்யும்.

    * திருமணம் செய்ய ஏழை பெண்களுக்கு பொருள் கொடுத்து உதவுதல், நம் வாழும் மனை, தொழில் செய்யும் மனை கைகளால் தொட்டு வணங்குதல், மேலும் பூமிக்கு மரியாதை செய்தல், பல உயிர்களை வளர்த்தல் (விலங்கு, பறவைகள்), உயிர் பலிகளை நாம் தவிர்த்தல், இல்லாதவர்களுக்கு மருத்துவ செலவிற்கு பணம் கொடுத்தல் செவ்வாயின் ஆசிகளை கொடுத்து அஷ்ட சுகம்களையும் தரும்.

    * ஏழை குழந்தைகளுக்கு கல்விக்கு பொருள் உதவி செய்தல், புதன்கிழமை தோறும் அன்னதானம் செய்தல், புதிய உடைகளை தானம் செய்தல் (குறிப்பாக குளிர் காலத்தில் செய்வது) புதனின் ஆசிகளை நமக்கு கொடுத்து சண்டை, பொறாமையினால் வரும் நோய் (திருஷ்டி) நீதிமன்ற சோதனை போன்ற தொல்லைகளை விலக்கி நல்ல தொழில், மென்மையான வாழ்க்கையை கொடுக்கும்.

    * நாகங்களை கண்டதும் அடிக்காமல் இருப்பது, இறந்த நாகத்தின் உடலை கண்டதும் தீயிட்டு கொளுத்துவது, குடி கெடுத்தவன், குடிகாரன், குரு துரோகி, பசுவை கொன்றவன், சண்டாளன் — இவர்களிடம் நட்பு கொள்ளாமல் தவிர்ப்பது ராகு -கேது ஆசிகளை கொடுத்து அதிர்ஷ்டம், போகம், மற்றும் சகல பாக்கியத்தை அனுபவிக்கும் ஆசிகளை தரும்.

    * பாழடைந்த சிவன் கோவிலில் விளக்கு ஏற்றுவது, பிரதோஷ நாளில் சிவஸ்தலங்களுக்கு முடிந்த வரையிலான அபிஷேகத்திற்கு தேவையிலான பொருட்களை வாங்கி கொடுப்பது, வெள்ளத்துடன் பச்சரிசி துளை கலந்து அந்த கோவிலின் சுற்று பிரகாரத்தில் தூவி விடுவது தேவர்களை சாந்தி படுத்திவிடும், இவர்கள் நம் முன்னோர்களுக்கு மோட்ச பதவி அளிப்பார்கள்.

    இவைகள் பொதுவானவை ஒரு முறை செய்யும் பரிகாரம் அல்ல. வழக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. புரிந்து செய்தாலும், தெரியாமல் செய்தாலும் பலன் ஒன்று தான்.

    கோவில் சுற்றும் போது நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பார்களாம்.
    நம் முன்னோர்கள் எத்தனை செய்தாலும் அதற்கு பின் ஒரு அறிவியல் உண்மை இருக்கும் என்பதை கண்கூடாக பார்க்க முடியும் ஏழு ஜென்ம பாவங்களையும் கூட பச்சரிசி கொண்டு தீர்க்க முடியும் என்கிறது ஐதீகம்.

    சனிக்கிழமை நாம் செய்ய வேண்டியது:

    சனிக்கிழமையன்று விடியற்காலை எழுத்து குளித்து விட்டு தூய்மையாக கையில் கொஞ்சம் பச்சரிசியை எடுத்துக்கொண்டு , அப்படியே சூரிய பகவானை பார்த்து வணங்கிவிட்டு, பின்னர் அதே அரிசியை கையில் வைத்துக்கொண்டு விநாயகரை மூன்று முறை சுற்றி வர வேண்டும். அப்போது கையில் இருக்கும் பச்சரிசியை தூவி விட அதனை எறும்பு முழுவதுமாக எடுத்து சென்று விட்டால் நம்முடைய ஏழு ஜென்ம பாவங்கள் அனைத்தும் தீர்ந்து விடும் என்கிறது ஐதீகம்.

    எறும்புகள் என்ன செய்யும் தெரியுமா ..?

    கோவில் சுற்றும் போது நாம் தூவிய பச்சரிசியை எறும்புகள் இழுத்து சென்று மழைக்காலத்தில் சாப்பிடும். இந்த உணவை சாப்பிட்டு முடிக்கவே எறும்புகளுக்கு இரண்டரை ஆண்டு காலம் ஆகுமாம். இந்த காலத்தில் எறும்பகளின் செயல்பாடும் அந்த உணவை எறும்பு சாப்பிடுகிறதா என முப்பத்து முக்கோடி தேவர்களும் கவனித்துக்கொண்டே இருப்பார்களாம்.

    அதாவது எறும்பின் எச்சில் அந்த பச்சரிசி மீது படும் போதே அந்த அரிசி கெடாமல் சில ஆண்டுகள் இருக்கும் . இதன்மூலம் மிகக்கொடுமையான விளைவுகளைத் தரக்கூடிய அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, ஏழரைச்சனி, கண்ட சனி ஆகியவற்றால் உண்டாகும் எந்த ஒரு தீங்கும் நம்மை அண்டாமல் இருக்குமாம். அதனால் தான் நம் முன்னோர்கள் எறும்புகளுக்கு அவ்வப்போது தேவையான அரிசி மற்றும் சில உணவு வகைகளை தூவி விடுவார்கள்.
    எதிர்மறையான சக்தியின் தாக்குதல்களை தடுக்கும் சம்ஹார ஹோமத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் சிறப்பான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    நன்மை என்கிற ஒரு விஷயம் இருந்தால் அதன் எதிர்பதமாக தீமை என்கிற ஒன்றும் இருப்பது தவிர்க்க முடியாத பிரபஞ்ச விதியாகும். நம் வளர்ச்சியை தடுப்பதற்கும் நமக்குத் தீங்கு விழைப்பதற்கும் நினைப்பவர்கள் பல வகையான மாந்திரீக முறைகளை கையாளுகின்றனர். அத்தகைய மனிதர்கள் நமக்கு செய்கின்ற எதிர்மறையான சக்தியின் தாக்குதல்களை தடுப்பதற்கான ஒரு சிறந்த ஹோமம் தான் சத்ரு சம்ஹார ஹோமம். மிக அற்புதமான இந்த ஹோமத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும் அதனால் நமக்கு உண்டாகும் சிறப்பான பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

    சத்ரு சம்ஹார ஹோமத்தை உங்கள் ஜென்ம நட்சத்திரத்திற்கு பொருந்தும் திதிகளில் செய்வது சிறப்பு. இந்த சத்ரு சம்ஹார ஹோமத்தை வீடுகளிலோ அல்லது கோயில்களிலோ செய்து கொள்ளலாம். முருகன் வழிபாட்டிற்குரிய வைகாசி விசாகம், கார்த்திகை மாதம், கந்த சஷ்டி விரத தினங்கள் போன்ற காலங்களில் செய்வது சிறப்பான பலன்களை தரும்.

    முருகன் கோயிலில் இந்த ஹோமத்தை செய்வது பலன்களை விரைவாக தர வல்லதாகும். யாக குண்டம் அமைத்து, ஹோமம் செய்வதில் பல ஆண்டு அனுபவம் வாய்ந்த வேதியர்கள் சக்தி வாய்ந்த மந்திரங்களை துதித்து, யாகத்தீ வளர்த்து முறையாக ஹோமத்தை செய்வதால் நிச்சயமான பலன்களை நமக்கு தருகிறது. இந்த ஹோமத்திற்காக 6 வகையான பூக்கள், பழங்கள், திரவியங்கள் மற்றும் நைவேத்திய பிரசாதங்களை வழங்க வேண்டும்.

    சத்ரு சம்ஹார ஹோம பூஜை முடிந்த பிறகு இறைவனுக்கு சமர்ப்பிக்கப்பட்ட நைவேத்தியப் பொருட்கள் மற்றும் ஹோம குண்டத்தில் இடப்பட்ட பொருட்களின் புனித அஸ்தி போன்றவை பிரசாதமாக நமக்கு தரப்படுகிறது இவற்றை பூஜையறையில் வைத்து தினமும் நாம் வழிபடுவதும் அந்த சாம்பலில் தினமும் சிறிது எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்வதும் நம்முடைய தோஷங்களை போக்குகிறது.

    சத்ரு சம்ஹார ஹோமத்தின் பிரதான நோக்கமாக இருப்பது நம் வாழ்வில் ஏற்படும் நேரடி மற்றும் மறைமுக எதிரிகளை அறவே ஒழிப்பதோடு, பின் வரும் காலங்களில் எத்தகைய எதிரிகளும் ஏற்படாமல் தடுக்க வல்லதாக இருக்கிறது. மேலும் அத்தகைய எதிரிகளால் நமக்கு தீய மாந்திரிக கலையின் மூலம் செய்யப்பட்ட செய்வினை, மாந்திரீக ஏவல் போன்றவற்றின் எதிர்மறை ஆற்றல்களை அழித்து உங்கள் வீட்டையும், குடும்பத்தையும் காக்கிறது. துஷ்ட சக்திகள் உங்கள் வீட்டுக்குள் எப்போதும் நுழையாமல் தடுக்கிறது காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படாமல் கெட்டது அனைத்திலும் சிறப்பான வெற்றியை பெருமாறு செய்ய வல்ல ஒரு ஹோமம் இந்த சத்ரு சம்ஹார ஹோமம் ஆகும்.
    அஷ்டமி மற்றும் நவமி அன்று செய்யும் புதிய விஷயங்கள் எந்த தடங்களும் இல்லாமல் நடக்க செய்ய வேண்டிய அற்புத பரிகாரம், செய்யக்கூடாதவை என்னவென்று பார்க்கலாம்.
    அஷ்டமி அன்று....

    அன்றைய தினம் மருத்துவம் தொடர்பான எந்த செயலிலும் ஈடுபடாமல் இருப்பது மிகவும் நன்று. ஏனெனில் இந்த நாளில் மருத்துவம் சார்ந்த விஷயங்களை மேற்கொண்டால் தொடர்ந்து மருத்துவனை செல்ல வேண்டிய நிலை ஏற்படும். முன்னோர்களை வழிபட மிகவும் உகந்த நாள். மேலும் பிரத்தியங்கரா தேவி, துர்கை அல்லது வாராஹி வழிபாடு மற்றும் துர்கா சப்தசதி பாராயணம், சண்டி பாராயணம் செய்ய மிகவும் உகந்த தினம்.

    நவமி அன்று ....

    இந்த நவமி திதி வரும் நாளில் எதிரிகள் மற்றும் போட்டியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க, நமக்கு வெற்றி நிச்சயம். மேலும் இந்த திதி நாளில் அன்னை சரஸ்வதி தேவியை வணங்கி வேலையில் ஈடுபட்டால், அனைத்தும் சுபமாக முடியும். நாள் இனிமை சேர்க்கும்.
    ×