என் மலர்
ஆன்மிகம்
- ‘நமச்சிவாயத்’ திருப்பதிகத்தைச் சுந்தரமுர்த்தி நாயனார் கெடுமுடி என்னும் ஊரில் பாடியருளினார்.
- சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை.
1. சிவன் பேயன் வாழையிலும், விஷ்ணு முகுந்தன் வாழையிலும், பிரம்மா-பூவன் வாழையிலும் குடி கொண்டிருப்பதாலேயே இந்த மூன்று வாழைப் பழங்களில் ஒன்றையாவது இறைவனுக்குப் படைக்க வேண்டும்.
2. சிவத் தியானம் செய்யும் மகா வித்துவானான நந்தியே மகாதேவனைத் தரிசிக்க எனக்கு அனுமதி கொடு என்று கூறிக் கோவிலின் உள்ளே செல்லும்போத இரு கரங்களையும் மார்புக்கு நேராகக் குவித்து அஞ்சலி செய்து கொண்டே வலம் வருதல் வேண்டும்.
3. சிவனுடைய கடைசி அம்சம் கால பைரவர் அதனாலேயே கோவில்களில் அர்த்த ஜாமம் முடியும் போது கடைசியாகப் பைரவர்க்குத் தீபாராதனை செய்கின்றனர்.
4. 'நமச்சிவாயத்' திருப்பதிகத்தைச் சுந்தரமுர்த்தி நாயனார் கெடுமுடி என்னும் ஊரில் பாடியருளினார்.
5. சிவபெருமானுக்கு வெண்மை நிறப் பட்டாடை அணிவிப்பவர்கள் மோட்சம் பெறுவார்கள் என்பது இந்து மத நம்பிக்கை.
6. பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு அருகம்புல் மாலையும், சிவப்பு அரிசி நிவேதனமும் செய்ய வேண்டும். சிவாலயங்களில் காலையில் வலம் வந்தால் நோய் நீங்கும்.பகலில் வலம் வந்தால் விருப்பம் அளிக்கும். மாலையில் வலம் வந்தால் பாவங்கள் அகலும் அர்த்த சமாத்தில் வலம் வந்தால் மோட்ச சித்தி உண்டாகும்
7. பிரதோச விழாவின் போது நந்தி தேவர் பக்கத்திலும் இறைவன் திருச்சந்நிதியிலும் நெய் விளக்கு வைக்க வேண்டும்.
8. சிவன் என்னும் பெயர் திராவிட மொழிச் சொல். இது பிற்காலத்தில் வடமொழியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
9. மாதப் பிறப்பு சதுர்த்தி, அட்டமி, நவமி, சதுர்த்தி, அமாவாசை, பவுர்ணமி, திங்கள் ஆகிய நாட்களில் வில்வம் எடுக்கக் கூடாது.
10. சங்க இலக்கிய காலத்திலும் சிலப்பதிகார காலத்திலும் சிவாலயங்கள் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளன.
- வைகாசி:- பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும்.
- பலன்:- வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நம்மைவிட்டு அகன்றுவிடும்.
சித்திரை:- இந்த மாதத்தில் வருகிற பிரதோஷ நாட்களில் நீர்மோரும், தயிர் சாதமும் இறைவனுக்கு நிவேதனம் செய்து, நிவேதிக்கப்பட்ட நீர்மோரையும், தயிர் சாதத்தையும் விளையாட்டுப் பிள்ளைகளுக்குத் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- மூலம், பவுத்திரம், சூடு, எலும்புருக்கி போன்ற நோய்கள் நீங்கும்.
வைகாசி:- பாலையும், சர்க்கரைப் பொங்கலையும் இறைவனுக்கு நிவேதித்துப் பின் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- வயிறு சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நம்மைவிட்டு அகன்றுவிடும்.
ஆனி:- தேனும் திணைமாவும் கொண்டு ஈசனார்க்கு நிவேதனம் செய்யப்பட வேண்டும்.
பலன்:- மலட்டுத் தன்மை நீங்கும்.
ஆடி:- வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து அதை எம்பெருமானுக்கு நைவேத்தியம் செய்து பின்தானம் செய்ய வேண்டும்.
பலன்:- கொழுப்பு சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.
ஆவணி:- தயிரன்னம் நிவேதிக்கப்பட்டுத் தானம் செய்ய வேண்டும்.
பலன்:- காரியத்தடைகள் நீங்கும். நோய் வாய்ப்பட்டவர் அந்நோயினின்றும் மீண்டும் சுகம் பெறுவர்.
புரட்டாசி:- சர்க்கரைப் பொங்கலும், புளியோதரையும் நிவேதிக்கப்பட்டு தானம் புரிதல் வேண்டும்.
பலன்:- அரிப்பு, தடிப்பு, ஊரல், விஷக்கடி போன்ற தொல்லைகள் நீங்கும்.
ஐப்பசி:- உளுந்து வடையும், இனிப்புப் பண்டமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்தல் வேண்டும்.
பலன்:- சீதள நோய் விலகும்.
கார்த்திகை:- எலுமிச்சை சாதமும், தேங்காய் சாதமும் இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்திடல் வேண்டும்.
பலன்:- பெண்களுக்குரிய கர்ப்ப சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் அடி வயிற்றில் இருந்து தொடைப் பகுதி வரையிலான நோய்கள் நீங்கும்.
மார்கழி:- வெண் பொங்கலும், கடலை சுண்டலும் இறைவனுக்கு நிவேதனம் செய்து தானம் செய்யப்பட வேண்டும்.
பலன்:- மஞ்சள்காமாலை, ஆஸ்துமா போன்ற நோய்கள் விலகும்.
தை:- தயிர் ஏட்டில் தேன் சொரிந்து இறைவனுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் அளிக்கப்பட வேண்டும்.
பலன்:- கபத்தால் வரும் வியாதிகள் நீங்கும்.
மாசி:- நெய்யுடன் கலந்து ஈசனார்க்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்ய வேண்டும்.
பலன்:- மாந்தம், வயிறு உப்புசம், சிறுநீரகக் கோளாறு ஆகியன தீரும்.
பங்குனி:- தேங்காய்ச் சாதமும், தக்காளிச் சாதமும் பெருமானுக்கு நிவேதிக்கப்பட்டு தானம் செய்ய வேண்டும்.
பலன்:- பித்தம், பைத்தியம் முதலிய நோய்கள் நீங்கும்.
- பிரதோச நாளன்று நந்தி தேவருக்கு சிவப்பு அரிசியில் வெல்லம் சேர்த்து நைவேத்யம் செய்யலாம்.
- பிரதோஷ நாளன்று உபவாசம் இருப்பவர்கள் ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும்.
* பிரதோச நாளன்று நந்தி தேவருக்கு சிவப்பு அரிசியில் வெல்லம் சேர்த்து நைவேத்யம் செய்யலாம்.
* பிரதோஷ நாளன்று உபவாசம் இருப்பவர்கள் ஆலய தரிசனம் முடித்துவிட்டு வெறும் தரையில் படுத்து உறங்க வேண்டும்.
* ஒவ்வொரு மாலை வேளையான 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் தினப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகின்றது. இதில் ஈசனை தரிசனம் செய்ய பாவம் விலகும்.
* பிரதோஷ வேளை 4.30 மணிக்கும்மேல் 7 மணிக்குள்.
* பிரதோஷ வழிபாடு செய்பவர்கள் ஒரு வருடம் ஆலயத்திற்கு சென்று வந்த பலனை பெறுவார்கள்.
* சனிக்கிழமை அன்று வரும் பிரதோஷம் மிக விசேஷமானது. அன்று சனி பகவானின் தோஷத்துக்கு ஆளானவர்கள் ஈசனை வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கி சுக வாழ்வு பெறுவார்கள். சனி பிரதோஷம் அன்று வழிபட்டவர்கள் ஐந்து வருட காலம் கோவிலுக்கு சென்று வந்த பாக்கியத்தை பெறுவார்கள்.
* பிரதோஷ நாளன்று ஈசனுக்கு பால் அபிஷேகத்திற்கு பால் தானம் செய்ய சகல பாவங்களையும் போக்கி கொள்ளலாம்.
- பிரதோஷ நாளன்று ரிஷப வாகனத்தில் ஈஸ்வரர் எழுந்தருளி பிரகாரத்தை மும்முறை வலம் வருவார்.
- அப்பொழுது நாமும் அவர் பின்னால் வலம் வர முக்தி கிடைக்கும்.
பிரதோஷ நாள் அமாவாசையிலிருந்து 13 வது நாளன்று வரும். அதை திரயோகதசி நாள் என்பர்.
இதே போல் பவுர்ணமியிலிருந்து 13 வது நாளன்றும் வரும். இதையும் திரயோதசி நாள் என்பர்.
அமாவாசையிலிருந்து 13வது நாளாக வரும் திரயோதசி திதியை வளர்பிறை பிரதோஷம் என்றும், பவுர்ணமியிலிருந்து 13 வது நாளாக வரும் திரயோதசி திதியை "தேய் பிறை பிரதோஷம்" என்றும் அழைப்பர்.
பிரதோஷ நாளன்று ரிஷப வாகனத்தில் ஈஸ்வரர் எழுந்தருளி பிரகாரத்தை மும்முறை வலம் வருவார்.
அப்பொழுது நாமும் அவர் பின்னால் வலம் வர முக்தி கிடைக்கும்.
ஏனெனில் ஈஸ்வரர் பிரகாரத்தை ஒரு சுற்று வரும்போது வேத பாராயணம் ஓதப்படுகின்றது.
இரண்டாவது சுற்றில் திருமுறை பாராயணம் ஓதப்படுகின்றது.
மூன்றாவது சுற்றில் நாதங்கள் முழங்கப்படுகின்றன.
- முதலில் ரிஷப தேவருக்கு நெய் தீபம் போட்டு அருகம்புல் கொடுத்து வாலைத்தொட்டு வணங்க வேண்டும். பிறகுதான் கணபதியை வணங்க வேண்டும்.
- நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.
பிரதோஷ நாளன்று உடல் சுத்தம் செய்து கொண்டு ஆலயத்தில் பிரவேசிக்க வேண்டும்.
முதலில் ரிஷப தேவருக்கு நெய் தீபம் போட்டு அருகம்புல் கொடுத்து வாலைத்தொட்டு வணங்க வேண்டும். பிறகுதான் கணபதியை வணங்க வேண்டும்.
நந்திதேவருக்கு பின்பு நின்று கொண்டு கொம்புகளுக்கிடையே லிங்கத்தை தரிசிப்பதே சிறந்த முறை.
ஆலயத்தில் கூட்டம் அதிகமாக இருந்தால் மனதால் லிங்கத்தை தியானிக்கலாம்.
தியானித்து விட்டு அப்பிரதட்சனமாக (வலம் கை ஓரமாக) சண்டிகேஸ்வரர் சந்நிதி வரை சென்று சண்டிகேஸ்வரரை வணங்கி விட்டு, அப்படியே திரும்பி வந்து முன்பு போல நந்தீஸ்வரர் பின்பு நின்று லிங்கத்தை தியானித்துக் கொண்டு, வழக்கம் போல இடமிருந்து வலமாக பிரதட்சனமாக வர வேண்டும்.
பிரகாரத்தில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் நீர் வருவதற்கு ஒரு தொட்டி அமைந்து இருக்கும். அதை கோமுகி நீர் தொட்டி என்பர். அந்த தொட்டி வரை வரவும்.
அந்த தொட்டியை கடக்க கூடாது.
அப்படியே வந்த வழியே செல்லவும். நந்தியையும், லிங்கத்தையும் தியானிக்கவும். மறுபடியும் அப்பிரதட்சணமாக சென்று சண்டகேஸ்வரரை வணங்கவும்.
வணங்கிவிட்டு வந்த வழியே வந்து கோமுகி நீர் தொட்டி வரை வரவும். அந்த வழியே திரும்பவும்.
இவ்வாறு மூன்று முறைகள் செய்து சிவனை வணங்க வேண்டும்.
இவ்வாறு பிரதோஷ நாளன்று சிவனை வணங்க பாபம் நீங்கி "அஸ்வமேதயாகம்" செய்த பலன் கிடைக்கும்.
- இதுவரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர்.
- மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இநத ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் மாலை அணிந்து விரதமிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
நேற்று முன்தினம் (23-ந்தேதி) வரை சபரிமலைக்கு 30 லட்சத்து 87 ஆயிரத்து 49 பக்தர்கள் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 4.46 லட்சம் அதிகமாகும்.
இந்தநிலையில் மண்டல பூஜை நாளை (26-ந்தேதி) மதியம் 12 முதல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது.
மண்டல பூஜையை முன்னிட்டு கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க சாமி தரிசனம் செய்ய மெய்நிகர் வரிசை (ஆன்லைன் முன்பதிவு) முறைப்படி இன்று 50 ஆயிரம் பக்தர்களுக்கும், நாளை 60 ஆயிரம் பக்தர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாட்களில் உடனடி முன்பதிவு (ஸ்பாட் புக்கிங்) அடிப்படையில் 5 ஆயிரம் பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப் படுகின்றனர்.
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலையில் இன்று மாலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடக்கிறது. இதற்காக ஐயப்பனுக்கு அணி விக்கப்படும். தங்க அங்கி ஊர்வலம் கடந்த 22-ந்தேதி ஆரன்முழா பார்த்தசாரதி கோவிலில் இருந்து புறப்பட்டது.
அந்த ஊர்வலம் இன்று பிற்பகலில் பம்பையை வந்தடைகிறது. அதனை கேரள மாநில தேவசம்போர்டு மந்திரி வாசவன் வரவேற்கிறார். அதன்பிறகு தங்க அங்கி ஊர்வலம் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணி அளவில் சன்னிதானத்தை சென்றடைகிறது.
மாலை 6.15 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. ஐயப்பன் தங்க அங்கியில் நாளை வரை பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார். பின்பு மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு கோவில் நடை சாத்தப்படுகிறது.
தங்க அங்கி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று மதியத்திற்கு பிறகு பக்தர்கள் மலையேற கட்டுப்பாடுகள் அணிவிக்கப்பட்டுள்ளன. ஊர்வலம் பம்பையில் இருந்து சன்னிதானத்திற்கு செல்லும் போது பக்தர்கள் மலையேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
தங்க அங்கி ஊர்வலம் மாலை 5 மணிக்கு சரங்குத்தியை அடைந்ததும், பம்பையில் இருந்து மலையேறிச் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மண்டல பூஜை முடிந்து நாளை இரவு 11 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை சாத்தப்படுகிறது.
பின்பு மகரவிளக்கு பூஜைக்காக வருகிற 30-ந்தேதி மாலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட உள்ளது. அன்று முதல் ஜனவரி 19-ந்தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மகரவிளக்கு பூஜை நடைபெறும் தினத்திலும் பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் கடை பிடிக்கப்பட உள்ளன.
ஜனவரி 13-ந்தேதி 50 ஆயிரம் பக்தர்களும், 14-ந்தேதி 40 ஆயிரம் பக்தர்களும் மெய்நிகர் வரிசை முறையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- நோன்பின் பலன் கைவரப்பெற்று சொர்க்கத்தை அடைகின்ற பெண்ணே!
- சொற்களால் சொல்ல முடியாத தன்மையுடையது இறைவனின் மலர் பாதங்கள்.
திருப்பாவை
பாடல்:
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால்;
பண்டொருநாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்
தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கமலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
நோன்பின் பலன் கைவரப்பெற்று அதன் விளைவாக சொர்க்கத்தை அடைகின்ற பெண்ணே! கதவைத்தான் திறக்கவில்லை; மறுமொழியேனும் சொல்லக் கூடாதா? நறுமணம் நிறைந்த துளசி மாலையை அணிந்த நாராயணன் நமது போற்றுதலை ஏற்று அருள் தரக் காத்திருக்கிறான். முன்னொரு காலத்தில் எமனால் வீழ்த்தப்பட்டு மரணம் எய்திய கும்பகர்ணன், உனக்கு தன்னுடைய உறக்கத்தை தந்து விட்டானா? சோர்வும், சோம்பலும் கொண்டவளே! அருமைப் பெண்ணே! தெளிவுடன் எழுந்து வந்து கதவைத்திற!
திருவெம்பாவை
பாடல்:
பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே!
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒரு தோழன் தொண் டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாபிள்ளைகாள்
ஏதவன் ஊர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
பாதாள உலகங்கள் ஏழினையும் தாண்டி, சொற்களால் சொல்ல முடியாத தன்மையுடையது இறைவனின் மலர் பாதங்கள். கொன்றைப் பூவைச் சூடிய அவனே, வேதங்கள் கூறும் எல்லா பொருட்களுக்கும் முடிவானவன். அவன் ஒரு பகுதியாக அன்னை இருக்கிறாள். அனைத்திலும் நிறைந்த அவனை வேதங்களும், தேவர்களும், மானிடர்களும் போற்றினாலும், அப்போற்றுதலுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். தொண்டர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் அந்த சிவபெருமான் கோவில் உள்ள ஊரில் பிறந்த பெண் பிள்ளைகளே? அவன் ஊர் எது? அவனது உறவுக்காரர்கள் யார்? அயலார்கள் யார்? அவனைப் பாடும் முறை எது? என்று எனக்கு கூறுவீர்களாக.
- மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம்.
- ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மார்கழி-10 (புதன்கிழமை)
பிறை: தேய்பிறை
திதி: தசமி நள்ளிரவு 11.02 மணி வரை பிறகு ஏகாதசி
நட்சத்திரம்: சித்திரை மாலை 4.22 மணி வரை பிறகு சுவாதி
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். மதுராந்தகம் ஏரி காத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சனம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்க வாசகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீ ரங்கநாதர் கோவில்களில் பெருமாள் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீ சிவபெருமானுக்கு, வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் காலையில் அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் நான்காம் நவதிருப்பதி திருப்புளியங்குடி வள்ளியம்மை கோவில்களில் அபிஷேகம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-உயர்வு
ரிஷபம்-பக்தி
மிதுனம்-தனம்
கடகம்-நலம்
சிம்மம்-உயர்வு
கன்னி-ஆதரவு
துலாம்- பாசம்
விருச்சிகம்-பண்பு
தனுசு- பரிவு
மகரம்-மேன்மை
கும்பம்-உயர்வு
மீனம்-கனிவு
- ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
- ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.
ஈஸ்வரனை சாதாரண நாளில் இடமிருந்து வலமாக மூன்று முறை வலம் வந்தால் போதுமானது.
ஆனால் பிரதோஷ நாளில் அப்படி வலம் வருதல் கூடாது.
பிரதோஷ நாளில் "சோமசூக்த பிரதட்சன" முறையை கையாள வேண்டும்.
சோமசூத்த பிரதட்சணம் என்றால் என்ன?
ஆலால விசமானது தேவர்களை துரத்தியது. தேவர்கள் ஈசனை வலமாக ஓடி வந்தனர்.
ஆலால விசம் இடமாக வந்து எதிர்த்தது. விசம் எதிர்ப்பதை கண்டு தேவர்கள் அப்படியே திரும்பி இடமாக வந்தனர்.
ஆலாலம் வலமாக வந்து எதிர்த்தது.
ஆக ஆலாலம் முன்னும், பின்னும் தேவர்களை எதிர்த்ததால் பிதோஷ நாளன்று ஈஸ்வரனை வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் தரிசனம் செய்ய வேண்டும்.
இந்த முறையே "சோம சூக்த பிரதட்சணம்".
- கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.
- உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.
ஆராதனை என்று சொல்லும் போது அது கற்பூர தீப ஆரத்தியையே குறிக்கிறது.
கற்பூர தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி கற்பூர தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.
பின்னர் சிறிது பூவினை எடுத்து நீரில் நனைத்து கற்பூர தீபத்தினை 3 முறை சுற்றி ஏதோ எனக்கு தெரிந்த முறையில் முடிந்த அளவில் பூஜை செய்தேன்.
எனது பூஜையில் இருக்கும் குற்றம் குறைகளை மன்னித்து எனது பூஜையை ஏற்றுக் கொள்ளுங்கள் என மனதார வேண்டிக்கொண்டு பாதத்தில் சமர்பிக்க வேண்டும்.
ஓரிரு நிமிடங்கள் கண்ணை மூடி நாம் வணங்கிய தெய்வத்தின் உருவத்தை மனக்கண்ணில் கொண்டு வந்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.
கற்பூர தீப ஆராத்தியினை தொட்டுக் கும்பிட்டு கண்ணில் ஒற்றிக் கொள்ளவும்.
நம் வீட்டில் பூ, சூடம் இல்லை. தீர்ந்து விட்டது என்றால் அதற்காக கவலைப்பட தேவையில்லை. நம்மிடம் எது இருக்கிறதோ அதைக் கொண்டு பூஜை செய்தாலே இறைவன் ஏற்றுக் கொள்வார்.
ஒரு விளக்கை ஏற்றி, பால், பழம், கல்கண்டு, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை இதில் ஏதேனும் ஒன்றை நைவேத்தியமாக வைத்து தீபம் காட்டி, மணி அடித்து நம் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.
உங்கள் வாழ்வில் வளம் உண்டாகும்.
கடவுளுக்காக ஒரு நிமிடம் செலவழித்து வாழ்ந்தால் என்றென்றும் இன்பங்கள் அடையலாம்.
உங்கள் அன்றாட பூஜையை வளரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து, அவர்களை நல்ல வழியில் கூட்டி செல்லுங்கள்.
தூபம்
தூய சாம்பிராணி தூபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி வாசனை தூபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ளவேண்டும்.
தூய சாம்பிராணி கிடைக்காதவர்கள் நல்ல வாசனையுள்ள பத்தி காட்டலாம்.
தீபம்
நெய் தீபம் கொண்டு மூன்று முறை வலம் சுழியாக தெய்வத்தின் பெயரைக் கூறியபடி தெய்வத்தை சுற்றி காட்டி தீபம் காட்டினேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என வேண்டிக் கொள்ள வேண்டும்.
- உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.
- பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை 16 தடவை கூறி பூ சேர்க்கலாம்.
அந்தந்த தெய்வத்திற்கு உகந்த பூவினை அல்லது பூக்களைக் கொண்டு அந்த தெய்வத்தின் பதினாறு திருநாமங்களை (குறைந்த பட்சம்) சொல்லி ஒரு நாமத்திற்கு குறைந்தது ஒரு பூவாக உருவச் சிலையின் பாதத்தில் அல்லது அந்த தெய்வத்தின் படத்தில் அதன் பாதத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.
உருவச் சிலை, படம் இல்லாதவர்கள் மானசீகமாக தெய்வத்தின் பெயரைக் கூறி தூய பாத்திரத்தில் சேர்க்கலாம்.
பதினாறு பெயர் தெரியாதவர்கள் தாங்கள் எந்த பெயரை சொல்லி தெய்வத்தை வணங்குகிறார்களோ அதே பெயரை மீண்டும் மீண்டும் 16 தடவை கூறி பூ சேர்க்கலாம்.
முடிந்தவர்கள் 108 தடவை பூ சமர்பிக்கவும்.
இறுதியில் தங்களை வணங்கி பூ சேர்க்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்.
பூ கிடைக்காதவர்கள் மந்திரம் மட்டும் சொல்லி வணங்கலாம். மந்திரம் என்றதும் ஏதோ மிகப் பெரிய விஷயமாக எண்ண வேண்டாம்.
ஓம் அதனைத் தொடர்ந்து தெய்வத்தின் பெயர் இறுதியில் போற்றி. இது எளிமையான மந்திரமாகும்.
உதாரணமாக வினாயகருக்கு என்றால் ஓம் வினாயகப் பெருமானே போற்றி போதுமானது.
முருகனுக்கு என்றால் ஓம் முருகப் பெருமானே போற்றி ஆகும்.






