என் மலர்
வட கொரியா
- இரண்டு முறை தோல்வியுற்ற நிலையில், 3-வது முறையாக வடகொரியா வெற்றிகரமாக செலுத்தியது.
- ஜப்பான், தென்கொரியா, அமெரிக்க நாடுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
பயாங்யாங், நவ.28-
வடகொரியா கடந்த வாரம் புதிய செயற்கை கோள் ஒன்றை விண்ணில் செலுத்தியது. இது உளவு பார்க்கக் கூடிய செயற்கை கோள் ஆகும். விண்ணில் செலுத்தப்பட்ட வடகொரி யாவின் முதல் உளவு செயற்கைகோளும் இது தான்.
இந்த செயற்கை கோள் உளவு பார்த்து பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பியுள்ளதாக வடகொ ரியா கூறியுள்ளது.
இந்த உளவு செயற்கை கோளானது அமெரிக்கா வின் வெள்ளை மாளிகை, பென்டகன் மற்றும் கடற் படை நிலையங்களின் புகை படங்களை எடுத்துள்ளதாக வடகொரியா தெரிவித்து உள்ளது.

மேலும் ரோம்நகரம், குவாமில் உள்ள ஆண்டர் சன் விமானப்படை தளம், பேர்ல் துறைமுகம், அமெ ரிக்க கடற்படையின் கார்ல் வின்சன் விமானம் தாங்கி போர்க்கப்பல் ஆகியவற்றை யும் புகைப்படம் எடுத்து உள்ளது.
இந்த புகைப்படங்களை, வடகொரிய அதிபர் கிம் ஜாங் பார்த்துள்ளதாக அம்மாநிலத்தில் இருந்து வெளியாகும் அதிகாரப் பூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவிக்கையில், "உளவு செயற்கைகோளை நன்றாக சரிபடுத்தும் நடைமுறை இன்னும் 2 நாட்களில் முடிவடையும். டிசம்பர் 1-ந்தேதி முதல் இந்த செயற்கைகோள் உளவுப் பணியை தொடங்கும்" என்று தெரிவித்து உள்ளது.
ஆனால் வடகொரிய செயற்கைகோள் எடுத்து உள்ள புகைப்படங்கள் எதுவும் வெளியிடப்பட வில்லை.
- சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நுழைந்ததாக வடகொரியா தெரிவித்துள்ளது.
- ஜப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.
ஏவுகணைகளை அடிக்கடி சோதனை செய்து பார்ப்பதை வடகொரிய வழக்கமாக கொண்டுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா இணைந்து பல்வேறு தடைகள் விதித்த போதிலும், வடகொரிய அதற்கு கட்டுப்படாமல் தொடர்ந்து அதன் வேலையை செய்து வருகிறது.
உச்சக்கட்டமாக உளவு பார்க்கும் செயற்கைக்கோளை தயாரித்து அதை விண்ணில் செலுத்துவோம் என அறிவித்தது. இந்த உளவு செயற்கைக்கோள் கொரிய தீபகற்பம், ஜப்பான் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ராணுவ நடவடிக்கையை துல்லியமாக கண்டறியும். இதனால் தங்களது பாதுகாப்பை அதிகரித்து கொள்ள முடியும் என வடகொரிய தெரிவித்து வந்தது.
இந்த ஏவுகணையை செலுத்தினால், பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா நேரடியாக எச்சரித்து வந்தது.
ஆனால், சில மாதங்களுக்கு முன் உளவு பார்க்கும் செயற்கைக்கோளை செலுத்தியது. ஆனால், முதல் முயற்சி தோல்வியில் முடிந்தது. செயற்கைக்கோளின் பாகங்களை சேகரித்த தென்கொரியா, அது உளவு பார்க்கும் திறனற்றது எனத் தெரிவித்தது.
ஆனால், வடகொரியா தனது முயற்சியை கைவிடாமல், 2-வது முறையாக முயற்சி செய்தது. 2-வது முறையாகவும் தோல்வியடைந்தது. அப்போதும் வடகொரியா மனம் தளறவில்லை.
தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதை சரி செய்தது. கடந்த இரண்டு நாட்களாக, நாங்கள் உளவு செயற்கைக்கோளை செலுத்த இருக்கிறோம் என ஜப்பானுக்கு தகவல் தெரிவித்தது. இதனால், தென்கொரியா தங்களது கவலையை தெரிவித்தது. ஜப்பான் எல்லையில் உள்ள கடற்பகுதியில்தான் வடகொரிய ஏவுகணை சோதனை நடத்தும் என்பதால் தகவல் தெரிவித்தது.
இந்த நிலையில், உளவு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, சுற்றுப்பாதையில் நுழைந்ததாக என வடகொரியா தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கொரியா பதற்றம்-குறைப்பு ஒப்பந்தத்தின் ஒருபகுதியை சஸ்பெண்ட் செய்துள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, உளவு செயற்கைக்கோள் செலுத்தியதை ஜப்பான் இன்னும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இருந்தபோதிலும் வடகொரியா செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
ஜப்பான் உறுதிப்படுத்தாத நிலையில், நாங்கள் அதுகுறித்து மதிப்பீடு செய்து வருகிறோம் என பென்டகன் தெரிவித்துள்ளது.
வடகொரியாவின் செயல் ஐ.நா. தீர்மானத்தை மீறியது மட்டுமல்லாமல், நமது நாட்டின் பாதுகாப்பிற்கான பயங்கரமான ஆத்திரமூட்டல் செயல் என தென்கொரியாவின் தேசிய பாதுகாப்பு கொள்கைக்கான துணை மந்திரி தெரிவித்துள்ளார்.
மேலும், 2018-ம் ஆண்டு போடப்பட்ட பதற்றம்-குறைப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதி சஸ்பெண்ட் செய்யப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
- கடந்த இரு வாரங்களுக்கு முன் கிம் ஜாங் உன் ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
- அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும்
பியாங்யாங்:
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகளால் கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றம் நிலவுகிறது. குறிப்பாக தென்கொரியா மற்றும் ஜப்பான் கடற்பகுதியில் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணை சோதனைகளை நடத்தி உள்ளது.
இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகள் கருதுகின்றன. இதனால் இந்த இரு நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
இப்போர்ப்பயிற்சியானது அந்த நாடுகளிடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்தி வருகிறது. எனவே இதனை நேட்டோவின் ஆசிய பதிப்பை இவர்கள் உருவாக்கி வருவதாக வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன் குற்றம்சாட்டினார்.
தங்களுக்கு எதிராக வளர்ந்து வரும் இந்த அச்சுறுத்தலை கைவிட வேண்டும் என கிம் ஜாங் உன் கூறினார். இருப்பினும் இந்த போர்ப்பயிற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே கடந்த இரு வாரங்களுக்கு முன் கிம் ஜாங் உன் ரஷிய சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ராணுவ தளங்களை பார்வையிட்ட அவர் அதிபர் புதின் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். இதனால் இரு நாடுகளிடையே ஆயுத ஒப்பந்தம் நடைபெற்று இருக்கலாம் என தென்கொரியா குற்றம்சாட்டியது.
இந்தநிலையில் வடகொரியாவில் பாராளுமன்றம் கூடியது. இதில் கிம் ஜாங் உன் கலந்து கொண்டு பேசுகையில், `உலகம் புதியதொரு பனிப்போரில் நுழைகிறது. இதில் அமெரிக்காவை எதிர்கொள்ளும் கூட்டணியில் வடகொரியா முக்கிய பங்கை வகிக்க வேண்டும். எனவே அணு ஆயுத உற்பத்தியை அதிகரிப்பது காலத்தின் கட்டாயம் என கூறினார். இதனால் அங்கு மேலும் போர்ப்பதற்றம் அதிகரித்துள்ளது.
- ரஷியா சென்ற கிம் ஜாங் அன் அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- ரஷிய சுற்றுப்பயணம் முடிந்த நிலையில் கிம் ஜாங் அன் நேற்று வடகொரியா திரும்பினார்.
பியாங்யாங்:
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியாவில் சுற்றுப் பயணம் செய்து வருகிறார். கடந்த வாரம் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் ரஷியா சென்றார். அவருடன் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர்.
அங்கு சென்றுள்ள அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷியாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பிறகு ரஷியாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டார்.
இந்தப் பயணத்தில் அதிபர் புதின், ராணுவ மந்திரி செர்ஜி ஷோய்கு மற்றும் பிற ராணுவ உயர் அதிகாரிகளை கிம் ஜாங் அன் சந்தித்துப் பேசினார். விளாடிவோஸ்டாக்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்ற அவர்கள், ரஷியாவின் ராணுவ திறன்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கம் அளித்தனர். ரஷியாவின் முக்கிய விண்வெளி தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிட்டார்.
மேலும் ரஷியாவுக்கு ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம், ராணுவத்துக்கு இடையேயான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.
இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது 6 நாள் ரஷிய பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று நாடு திரும்பினார்.
கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கிம் ஜாங் உன் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ரஷியாவில் தொடர்ந்து அந்நாட்டின் ஆயுத திறனை பார்வையிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- உணவுத் துறை வணிகங்களையும் ஜிம் ஜாங் உன் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரியா அதிபர் ஜிம் ஜாங் உன், ரஷியாவுக்கு சென்றுள்ளார். அங்கு அவர் ரஷிய அதிபர் புதினை சந்தித்து பேசினார்.
பின்னர் கிம்ஜாங் உன் ரஷியாவின் போர் விமான ஆலையை பார்வையிட்டார். அதே போல் ஏவுகணை தயாரிப்பையும் பார்வையிட்டார்.
அவர், ரஷியாவில் தொடர்ந்து அந்நாட்டின் ஆயுத திறனை பார்வையிட்டு வருவதாக பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வடகொரியாவின் அணு ஆயுத தாக்குதல் திறனை அதிகரிக்கக் கூடிய ஒப்ந்தத்தை இரு நாடுகளும் மேற்கொள்ளக் கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
நேற்று ரஷியாவின் பசிபிக் கடற்படை பிரிவில் அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட குண்டு வீச்சு விமானங்கள், ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள், அதிநவீன போர்க் கப்பல் ஆகியவற்றை பார்வையிட்டார்.
இந்நிலையில், ரஷிய பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்குவுடன் கிம் ஜாங் உன் பேச்சு வார்த்தை நடத்தினார்.
இது தொடர்பாக வடகொரியா அரசு ஊடகம் கூறும்போது, வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், ரஷிய பாதுகாப்பு மந்திரியுடன் இரு நாடுகளின் ராணுவங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தார் என்று தெரிவித்தது. இதில் அவர்கள் ஆயுத ஒத்துழைப்பு குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் இன்று விளாடிவோஸ்டாக் நகரில் உள்ள பல்கலைக்கழகத்துக்கு சென்றார்.
அப்போது அவரை ப்ரிமோரி பிராந்திய கவர்னர் ஓலெக் கோஜெமியாகோ சந்தித்து பேசினார். மேலும் அங்குள்ள உணவுத் துறை வணிகங்களையும் ஜிம் ஜாங் உன் பார்வையிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில் ரஷியா-வடகொரியா இடையே ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- 2022-ல் இருந்து சுமார் 100 ஏவுகணைகளை செலுத்தியுள்ளது
- ரஷியாவுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்ட வாய்ப்பு
தனது நாட்டிற்கு எப்போதெல்லாம் அச்சுறுத்தல் என நினைக்கிறதோ, அப்போதெல்லாம் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்துவது வழக்கம். சமீபத்தில் அமெரிக்க அணுஆயுத கப்பல் தென்கொரிய கடற்பகுதிக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தி எச்சரித்தது.
இந்த நிலையில் இன்று காலை கிழக்கு கடற்கரையில் ஏவுகணை செலுத்தியதாக தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது. அணுஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை செலுத்தியதாக ஜப்பான் பிரதமர் அலுவலகமும் தெரிவித்துள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷியாவிற்கு சுற்றுப் பயணம் செய்துள்ளார். அவர் புதினை சந்திக்க இருக்கிறார். இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின்போது ஆயுதம் வழங்குவது தொடர்பான ஒப்பந்தம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உக்ரைன் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் ரஷியாவுக்கு, வடகொரியா ஆயுதம் வழங்கினால் அது எரியும் விளக்கில் எண்ணெய் ஊற்றும் கதையாக அமைந்து விடும் என உலக நாடுகள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையே, ரஷியா- உக்ரைன் போர் மீது உலகத் தலைவர்கள் கவனம் திரும்பிய நிலையில், கடந்த ஆண்டில் இருந்து சுமார் 100 ஏவுகணைகளை வடகொரியா செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- அணு ஆயுதங்கள் தாங்கிய இந்த நீர்மூழ்கி கப்பல் கொரியா தீப கற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும்.
- என்னென்ன அணு ஆயுதங்கள் இந்த கப்பலில் உள்ளன என்பது தொடர்பான விவரங்கள் எதையும் வடகொரியா தெரிவிக்கவில்லை.
சியோல்:
வடகொரியா- தென் கொரியா இடையே நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. தென்கொரியாவுடன் இணைந்து அமெரிக்க படையினர் கொரியா தீபகற்ப பகுதிகளில் கூட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தி வருகிறது. உலக நாடுகள் எதிர்ப்பை மீறி வடகொரியா இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறது. 'இந்த நிலையில் வடகொரியா தனது கடற்படையை பலப்படுத்தும் விதமாக முதல் முறையாக அணுசக்தி தாக்குதல் நடத்தும் நவீன நீர்மூழ்கி கப்பலை தயாரித்து உள்ளது.
இந்த நீர்மூழ்கி கப்பல் தற்போது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனை வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அணு ஆயுதங்கள் தாங்கிய இந்த நீர்மூழ்கி கப்பல் கொரியா தீப கற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே உள்ள கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடும்.
பல மணி நேரம் நீரில் மூழ்கியபடி பயணம் செய்யும் வகையில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து அணுஆயுத தாக்குதல் நடத்தலாம். என்னென்ன அணு ஆயுதங்கள் இந்த கப்பலில் உள்ளன என்பது தொடர்பான விவரங்கள் எதையும் வடகொரியா தெரிவிக்கவில்லை.
இதன் தொடர்ச்சியாக தற்போது கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களை அணு ஆயுதம் தாங்கிய நீர் மூழ்கி கப்பலாக மாற்ற வடகொரியா முடிவு செய்துள்ளது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
- நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
- 2 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை மேற்கொண்டது.
பியாங்யாங்:
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. இதனால் தங்களது நாட்டின் பாதுகாப்புக்காக தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனை பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக கருதும் வடகொரியா இந்த பயிற்சிகளை உடனடியாக நிறுத்தும்படி எச்சரித்தது. ஆனால் தென்கொரியா தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில் தென்கொரியாவில் உள்ள ராணுவ நிலைகள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவது போலவும், போர் ஏற்பட்டால் தென்கொரிய எல்லைகளை ஆக்கிரமிப்பது போலவும் வடகொரியா ஒத்திகை பயிற்சி மேற்கொண்டது. அதன்படி 2 அதிநவீன ஏவுகணைகளை வடகொரியா அனுப்பி சோதனை மேற்கொண்டது.
ஐ.நா. உடன்படிக்கையை மீறும் வடகொரியாவின் இந்த செயல் சர்வதேச அமைதிக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி தென்கொரியா கடும் கண்டனம் தெரிவித்தது.
- அமெரிக்கா- தென்கொரியா கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகிறது
- அமெரிக்க அணுஆயுத கப்பல்கள் தென்கொரியா கடற்பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்து வரும் நிலையில், தென்கொரியா தன்னை பாதுகாத்துக் கொள்ள அமெரிக்காவுடன் நட்பு வைத்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க போர் கப்பல்கள் கொரிய தீபகற்பத்தில் கால் பதித்துள்ளன.
மேலும், அமெரிக்கா- தென்கொரிய ராணுவம் இணைந்து போர் பயிற்சியை கடந்த 21-ந்தேதி தொடங்கியுள்ளது. இந்த போர் பயிற்சி 11 நாட்கள் நடைபெற இருக்கிறது. இது வடகொரியாவை கோபத்திற்குள்ளாக்கியது. இதனால் அடிக்கடி ஆயுத தொழிற்சாலைகளில் காணப்பட்ட வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், நவீன ஆயுதங்களின் உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்கா- தென்கொரியா இணைந்து எப்போது வேண்டுமென்றாலும் வடகொரியா மீது போர் தொடுக்கலாம் என நினைக்கிறார். இதனால் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பை முறியெடுக்க, தொடர்ந்து தயார் நிலையில் இருக்கும்படி வடகொரிய ராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார். கப்பல் படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது உரையாற்றிய கிம் ஜாங் உன், இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்கா- தென்கொரியா- ஜப்பான் உச்சி மாநாட்டினை தொடர்ந்து, அமெரிக்கா அணு ஆயுதம் தொடர்பான மூலோபாய சொத்துகளை (போர்க்கப்பல் உள்பட) குவித்து, பயிற்சியில் ஈடுபட்டு வருவதை குறிப்பிட்டார்.
இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. சில தினங்களுக்கு முன் வடகொரியா, தனது உளவு செயற்கைக்கோளை 2-வது முறையாக ஏவியது. பின்னர், இந்த முறையும் தோல்வியடைந்ததாக தெரிவித்திருந்தது.
- செயற்கைகோளை சுமந்து சென்ற ராக்கெட் வெடித்து கடலில் விழுந்தது.
- அக்டோபர் மாதம் மீண்டும் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
வடகொரியா, கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. செயற்கைகோளை சுமந்து சென்ற ராக்கெட் வெடித்து கடலில் விழுந்தது. இந்நிலையில் இன்று 2-வது முறையாக ராணுவ உளவு செயற்கை கோளை வடகொரியா ஏவியது. ஆனால் இதுவும் தோல்வி அடைந்தது. வடகொரியாவின் தேசிய விண்வெளி மேம்பாட்டு நிர்வாகம் இன்று அதிகாலை மல்லிஜியாங்-1 என்ற புதிய வகை ராக்கெட்டில் சோஹே செயற்கைகோளை விண்ணில் ஏவியது. ராக்கெட்டின் முதல் மற்றும் 2-ம் நிலைகளின் விமானங்கள் இயல்பாக செயல்பட்டன.
ஆனால் 3-ம் கட்டத்தில் அவசர வெடிப்பு அமைப்பில் ஏற்பட்ட தவறு காரணமாக ஏவுதல் தோல்வி அடைந்தது என்று வடகொரியா தெரிவித்தது. மேலும், இந்த தகவலுக்கான காரணம் ஒரு பெரிய பிரச்சினை இல்லை என்றும் சிக்கலை ஆராய்ந்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு. அக்டோபர் மாதம் மீண்டும் செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
- முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வட கொரியா தெரிவித்தது.
- அதே வேளையில் வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவ உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை
அமெரிக்கா-தென் கொரியா நாடுகள் இணைந்து போர்ப் பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கிடையே கடந்த மே மாதம் ராணுவ உளவு செயற்கைக்கோளை வடகொரியா விண்ணில் ஏவியது. ஆனால் ராக்கெட் கடலில் விழுந்து தோல்வியில் முடிந்தது. முதல் ஏவுதலில் என்ன தவறு ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று வட கொரியா தெரிவித்தது. இந்நிலையில் உளவு செயற்கை கோளை மீண்டும் விண்ணில் ஏவ வடகொரியா திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக ஜப்பான் அதிகாரிகள் கூறும்போது, வடகொரியா வரும் நாட்களில் உளவு செயற்கைகோளை ஏவ திட்டமிட்டுள்ளது என்றனர்.
வருகிற 24-ந்தேதி முதல் 30-ந்தேதிக்குள் செயற்கைக் கோளை விண்ணில் செலுத்தும் திட்டம் குறித்து வடகொரியா அதிகாரிகள் தெரிவித்ததாக ஜப்பான் கடலோர காவல் படை கூறியுள்ளது.
அதே வேளையில் வடகொரியா எந்த வகையான செயற்கைக் கோளை ஏவ உள்ளது என்பது குறித்து தெரிவிக்கவில்லை என்று கடலோர காவல் படை செய்தி தொடர்பாளர் ஹிரோ முனே கிகுச்சி தெரிவித்தார். ஆனால் அந்த செயற்கைக்கோள் கடந்த மே மாதம் ஏவப்பட்ட உளவு செயற்கைக் கோளை போலவே இருக்கலாம் என்று நம்புகிறேன் என்றார்.
- ஆயுத தொழிற்சாலைக்கு சென்ற கிம் ஜாங் உன், உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தல்
- தென்கொரியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள இருக்கும் நிலையில் கிம் ஜாங் உன் முடிவு
கொரிய தீபகற்பத்தில் எப்போதுமே அசாதாரண சூழ்நிலைதான் நிலவி வருகிறது என்றால் அது மிகையாகாது. அதற்கு முக்கிய காரணம் வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்துவதுதான்.
வடகொரியாவிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தென்கொரியா அமெரிக்காவுடன் நெருக்கம் காட்டி வருகிறது. இது வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னிற்கு பிடிக்கவில்லை. இதனால் தென்கொரியாவை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், வடகொரியா ஆயுதங்கள் சப்ளை செய்வதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த மாதம் அமெரிக்காவின் அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் தென்கொரிய கடற்பகுதியில் காணப்பட்டது. இதற்கு வடகொரிய ஆட்சேபனை தெரிவித்தது.
வருகிற 21 மற்றும் 24-ந்தேதிகளுக்கிடையில் அமெரிக்காவுடன் இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபட இருப்பதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.
இதை வடகொரியாவுக்கான அச்சுறுத்தல் என கிம் ஜாங் உன் பார்க்கிறார்.
இந்த நிலையில் வடகொரியாவின் ராணுவ தலைமை ஜெனரலை நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக ரி யோங் கில் என்பவரை ராணுவ தலைமை ஜெனரலாக நியமித்துள்ளார். இவர் பாதுகாப்பு மந்திரியாகவும் இருந்து வருகிறார். அந்த பதவியில் தொடர்ந்து நீடிப்பாரா? எனத் தெரியவில்லை.
அதனோடு போருக்கு தயாராகும்படி அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு ஏற்ப ஆயுத தயாரிப்பை அதரிக்கவும் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் ஆயுத தொழிற்சாலைக்கு சென்றிருந்தார். அப்போது ஏவுகணை என்ஜின், பீரங்கி மற்றும் ஆயுதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்ய கேட்டுக்கொண்டார்.
அங்குள்ள மீடியா ஒன்று, கிம் ஜாங் உன் தென்கொரியாவின் தலைநகர் சியோல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியை வரைபடத்தில் சுட்டிக்காட்டியது போன்ற படத்தை வெளியிட்டுள்ளது. இதனால் கிம் ஜாங் உன் போர் தொடுப்பதற்கு, ராணுவத்தை தயார் படுத்துகிறார் என பார்க்கப்படுகிறது.
வடகொரியா குடியரசு நிறுவப்பட்ட 75-ம் ஆண்டையொட்டி அடுத்த மாதம் வடகொரியா ராணுவ அணிவகுப்பை நடத்த இருக்கிறது. ராணுவத்தை பலப்படுத்த பல்வேறு குழுக்களை வடகொரியா பயன்படுத்தி வருகிறது. போருக்கு தயாராகும் வகையில், தற்போதைய நவீன ஆயுதங்களை கொண்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடவும் கேட்டுக்கொண்டுள்ளார்.






