என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார்.
    • தற்போது டுவிட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 8 டாலர்கள் வசூலிக்க உள்ளது.

    வாஷிங்டன்:

    டுவிட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை சமீபத்தில் நிறைவு பெற்றது. டுவிட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார். டுவிட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார்.

    டுவிட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டது. வெரிபிகேஷன் சேவையையும் கொண்டுவந்த டுவிட்டர் புளூ டிக் சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 8 டாலர்கள் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

    இந்நிலையில், டுவிட்டர் நிறுவனம் ஒரு மாதத்திற்கு 8 டாலருக்கான சந்தா சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதில் புதிய உரிமையாளர் எலான் மஸ்க் இயங்குதளத்தின் சரிபார்ப்பு முறையை மாற்றியமைத்ததால் சரிபார்க்கப்பட்ட கணக்குகளுக்கு இப்போது புளூ டிக் மார்க் கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆப்பிள் ஐஒஎஸ் சாதனங்களுக்கான புதுப்பிப்பில், இப்போது பதிவுபெறும் பயனர்கள், நீங்கள் ஏற்கனவே பின்தொடரும் பிரபலங்கள், நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளைப் போலவே, அவர்களின் பெயர்களுக்கு அடுத்ததாக புளூ டிக் சரிபார்ப்பு அடையாளத்தைப் பெறலாம் என தெரிவித்துள்ளது.

    • டுவிட்டரில் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் எலான் மஸ்க்
    • சமூக ஊடக தளங்களில் வெளியாகும் தவறான தகவல்களை குறைக்க ஜோ பைடன் நிர்வாகம் நடவடிக்கை

    வாஷிங்டன்:

    உலகின் மிகவும் பிரபலமான சமூகவலைதளமான டுவிட்டரை உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் வாங்கி உள்ளார். டுவிட்டரில் ஆட்குறைப்பு உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இதனால் கடந்த சில தினங்களாக எலான் மஸ்க் பற்றியே இணையதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

    இந்த நிலையில், உலகம் முழுவதும் பொய்களை பரப்பும் டுவிட்டரை எலான் மஸ்க் வாங்கியிருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து ஜோ பைடன் பேசும்போது, "நாம் அனைவரும் இப்போது எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியதை பற்றியே கவலைப்படுகிறோம். அவர் வாங்கியிருக்கும் டுவிட்டர் உலகம் முழுவதும் பொய்களை அனுப்புகிறது, பொய்களை வேகமாக பரப்புகிறது. டுவிட்டரில் இனி எடிட்டர்கள் இல்லை. ஆபத்தில் இருப்பதை குழந்தைகள் எப்படி புரிந்துகொள்ள முடியும்" என்றார்.

    வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறுகையில், ஜோ பைடன் நிர்வாகம் சமூக ஊடக தளங்களில் வெளியாகும் "வெறுக்கத்தக்க பேச்சு" மற்றும் "தவறான தகவல்கள்" ஆகியவற்றை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றார்.

    • உக்ரைனுக்கு கூடுதலாக 400 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது.
    • இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான நிதி உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    வாஷிங்டன்:

    உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 8 மாதத்தைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.

    இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 400 மில்லியன் டாலர்கள் ராணுவ ஆயுத உதவியை அமெரிக்கா அறிவித்துள்ளது. ராக்கெட் ஏவுகணை ஆயுதங்கள் உள்ளிட்ட பல ஆயுதங்கள் ராணுவ ஆயுத உதவியின் கீழ் உக்ரைனுக்கு வழங்கப்படுகிறது.

    ரஷியாவும், ரஷியப் படைகளும் இந்த நாட்டின் குடிமக்களின் உள்கட்டமைப்பு மீது ஏவுகணைகள் மற்றும் ஈரானிய ஆளில்லா விமானங்களை பொழியும் இந்த இக்கட்டான தருணத்தில் வான் பாதுகாப்பின் தீவிரத் தேவையை நாங்கள் அங்கீகரிக்கிறோம் என வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கீவ்வில் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

    ரஷியாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு உதவியாக இதுவரை 15 பில்லியனுக்கும் அதிகமான ராணுவ உதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.
    • தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டிரம்ப். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் - அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.

    இந்நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:

    நான் 2 முறை தேர்தலில் போட்டியிட்டேன். 2 முறையும் வெற்றி பெற்றேன். 2016-ம் ஆண்டு பெற்றதை விட 2020-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றேன்.

    அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருந்த அதிபர் அதிக வாக்குகள் பெற்றது அதுவே முதல்முறை. நமது நாட்டை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாக நடத்த நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். விரைவில் போட்டியிடுவேன். தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பணியாளர்கள் நீக்கம் தொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    நியூயார்க்:

    பிரபல சமூக வலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு எலான் மஸ்க் வாங்கினார். அதைத்தொடர்ந்து அந்நிறுவனத்தில் அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    கடந்த வாரம் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகளை பணி நீக்கம் செய்தார். இந்நிலையில் டுவிட்டர் நிறுவனத்தில் மொத்தம் உள்ள 7,500 பணியாளர்களின் எண்ணிக்கையை 50 சதவீதம் வரை குறைக்க எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

    அதன்படி பணியாளர்கள் நீக்க நடவடிக்கையை எலான் மஸ்க் தொடங்கி உள்ளார். இதுதொடர்பான தகவல்கள் சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று முதல் அலுவலகங்களுக்கு வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.
    • டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் சதி மற்றும் தீமையின் பொய்களை பரப்பி வருகிறார்கள்.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் வரும் 8-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. கீழ்சபையான பிரதிநிதிகள் சபையில் மொத்தம் உள்ள 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட் சபையில் உள்ள 100 இடங்களில் 35 இடங்களுக்கும் வாக்குப்பதிவு நடக்க உள்ளது. 2024-ம் ஆண்டு நடக்க உள்ள ஜனாதிபதி தேர்தலில் இது பிரதிபலிக்கும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் டெலிவிஷனில் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அமெரிக்க தேர்தல் முடிவுகளை எந்த வேட்பாளராவது ஏற்க மறுத்தால், அது நாட்டை குழப்பத்துக்கான பாதையில் தள்ளிவிடக்கூடும். இது இதுவரை நடக்காதது. இது சட்டவிரோதமானது. இது அமெரிக்காவுக்கும் எதிரானது.

    தேர்தல் நாளன்று அரசியல் வன்முறைக்கு எதிராக அமெரிக்கர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்.

    முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் அவரது ஆதரவாளர்களும் சதி மற்றும் தீமையின் பொய்களை பரப்பி வருகிறார்கள்.

    2020-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடைபெற்றது என்று டிரம்ப் சொல்கிற பெரிய பொய்தான், 82 வயதான சபாநாயகர் நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசி மீதான தாக்குதலுக்கும், நாடாளுமன்ற தாக்குதலுக்கும் காரணம் ஆகும்.

    கடந்த 2 ஆண்டுகளில் அரசியல்வன்முறை மற்றும் வாக்காளர்கள்மீதான அச்சுறுத்தலுக்கும் இந்தப் பொய்தான் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் இதை எதிர்க்கட்சியான குடியரசு கட்சி நிராகரித்துள்ளது. அந்தக் கட்சியின் மூத்த தலைவர் கெவின் மெக்கார்த்தி கூறுகையில், "ஜனாதிபதி பைடன் பிளவினை ஏற்படுத்த முயற்சிக்கிறார். ஏனென்றால் அவர் தனது விலைவாசி உயர்வுகளுக்கு வழிவகுத்த தனது கொள்கைகள் பற்றி அவரால் பேச முடியாது" என தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனோனிச்சியா மிகவும் அரிதான பாதிப்பாகும்.
    • அனோனிச்சியா பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காது.

    கைவிரல்களில் நகங்கள் இல்லாத புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தில் ஒருவரின் 5 விரல்களும் காணப்படுகின்றன. ஆனால் எந்த விரல்களிலும் நகங்கள் இல்லை. இந்த பாதிப்புக்கு அனோனிச்சியா காங்கினிடா என்று பெயர். இது மிகவும் அரிய வகை நோயாகும்.

    இந்த பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பிறக்கும்போதே கால்விரல்கள் மற்றும் கைவிரல்களில் நகங்கள் இருக்காது. அதன் பிறகும் நகம் வளராமல் தடுக்கப்படுகிறது.

    இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள தேசிய பயோடெக்னாலஜி தகவல் மையம் கூறுகையில், "அனோனிச்சியா மிகவும் அரிதான பாதிப்பாகும். இதனால் பிறக்கும்போதே நகங்கள் இருக்காது. இந்த பாதிப்புக்கு சிகிச்சை எதுவும் இல்லை. ஆனால் செயற்கை நகங்களை பொருத்திக் கொள்ளலாம்" என்று கூறுகிறது.

    • ஜி700 விமானம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • விமானத்தை அமெரிக்க விமான உற்பத்தியாளரான கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.

    உலகின் நம்பர் ஒன் பணக்காரர் எலான் மஸ்க். இவர் ரூ.646 கோடி மதிப்புள்ள சொகுசு விமானத்தை வாங்கி உள்ளார்.

    ஜி700 என்ற ஜெட் விமானத்தை வாங்க அவர் ஆர்டர் செய்துள்ளார். 57 அடி நீளமுள்ள இந்த விமானம் நவீன வசதிகளை கொண்டது. 7500 கடல் மைல்கள் தொடர்ந்து பறக்கக்கூடியது. எரிபொருள் நிரப்பும் தேவையின்றி ஆஸ்டினில் இருந்து ஹாங்காங்குக்கு பறக்க முடியும்.

    ஜி700 விமானம் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமானத்தை அமெரிக்க விமான உற்பத்தியாளரான கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த விமானம் இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் என்ஜின்களால் இயக்கப்படுகிறது. விமானத்தில் வை-பை உள்ளிட்ட நவீன வசதிகள் உள்ளன.

    எலான் மஸ்க் தனது பயணத் தூரங்களுக்கு ஜி650 இ.ஆர் என்ற தனியார் விமானத்தை பயன்படுத்தி வருகிறார். இந்த விமானத்துக்கு பதில் அடுத்த ஆண்டு முதல் புதிய விமானத்தை பயன்படுத்த உள்ளார்.

    • அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டேக் ஆப்.
    • மர்ம நபர் ஒருவர் ராப் பாடகர் டேக் ஆப்பை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

    வாஷிங்டன்

    அமெரிக்காவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டேக் ஆப். இவரது இயற்பெயர் கிர்ஷ்னிக் காரி பால். மிகோஸ் என்கிற பிரபல ராப் இசைக்குழுவை சேர்ந்த இவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிலையில் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் உள்ள கேளிக்கை விடுதிக்கு தனது உறவுக்காரர் மற்றும் சக இசைக்கலைஞருடன் டேக் ஆப் சென்றார். அவர்கள் அங்கிருந்த நபர்களுடன் சேர்ந்து பகடைக்காய் விளையாடியதாக கூறப்படுகிறது.

    அப்போது விளையாட்டு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக மர்ம நபர் ஒருவர் ராப் பாடகர் டேக் ஆப்பை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் அவரது தலை மற்றும் கழுத்து பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார். இந்த துப்பாக்கிச்சூட்டில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி ஓடிய நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதனிடையே ராப் பாடகர் டேக் ஆப் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு ராப் இசைக்குழுவினர் உள்பட பல்வேறு துறையை சேர்ந்த பிரபலங்களும் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    • டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.
    • இக்கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்துக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி உரிமையாளராகி உள்ளார். அவர் அந்நிறுவனத்தில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    உயர் அதிகாரிகளை பணி நீக்கம் செய்த அவர், நிர்வாக குழுவையும் கூண்டோடு கலைத்தார்.

    டுவிட்டரில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் தங்களின் அதிகாரபூர்வ கணக்குகளில் 'புளூ டிக்' பயன்படுத்துகிறார்கள். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களின் அதிகாரப்பூர்வ கணக்குதான் என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள டுவிட்டர் கணக்கில் உள்ள பெயருக்கு அருகில் நீலநிற டிக் குறியீடு இருக்கும்.

    இதன் மூலம் அந்த பயனாளர்கள் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    இந்த புளூ டிக் பயனாளர்களிடம் மாதந்தோறும் 19.99 அமெரிக்க டாலர் (ரூ.1600) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்தநிலையில் டுவிட்டரில் புளூ டிக்கிற்கு இனி மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.660) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

    இக்கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்துக்கு பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே டுவிட்டரில் விளம்பரங்கள் உள்ளிட்ட முக்கிய பிரிவுகளின், உயர் அதிகாரிகள் பதவி விலகி உள்ளனர்.

    • ஸ்ரீராம் கிருஷ்ணன் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் என்கிற நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார்.
    • இந்த நிறுவனம் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இயங்கி வருகிறது.

    நியூயார்க் :

    ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ளார்.

    அவர் டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டுவர திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். டுவிட்டர் நிறுவனம் தனது கைக்கு வந்த உடனே அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க். இவர்களில் பராக் அக்ரவால் இந்தியர் ஆவார்.

    இந்த நிலையில் டுவிட்டரில் எலான் மஸ்குக்கு இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உதவி புரிந்து வருகிறார். அவர் சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்.

    எலான் மஸ்குக்கு தான் உதவி வருவதை ஸ்ரீராம் கிருஷ்ணன் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "டுவிட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்குக்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட. மஸ்க், அதை சாத்தியம் செய்வார் என்றும் நம்புகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

    சென்னையில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், இளங்கலை தொழில்நுட்பம் பயின்று பட்டம் பெற்றார். படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக அமெரிக்கா சென்ற ஸ்ரீராம் கிருஷ்ணன் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார். தொடர்ந்து அவர் பேஸ்புக், ஸ்னாப் சாட், டுவிட்டர் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களில் பல்வேறு விதமான முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.

    தற்போது அவர் ஆண்ட்ரசன் ஹாரோவிட்ஸ் என்கிற நிறுவனத்தில் பொது பங்குதாரராக உள்ளார். இந்த நிறுவனம் கிரிப்டோ மற்றும் வெப் ஸ்டார்ட்அப் முதலீடு சார்ந்து இயங்கி வருகிறது.

    கிரிப்டோகரன்சி குறித்து தான் அறிந்ததை தனது யூடியூப் சேனலில் பகிர்ந்து வரும் ஸ்ரீராம் கிருஷ்ணன் தனது மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் சேர்ந்து, 'தி குட் டைம் ஷோ' என்கிற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழில்நுட்பம் மற்றும் கலாசாரம் தொடர்பான கண்டுபிடிப்பாளர்களை அவர்கள் நேர்காணல் செய்கிறார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலமாகவே ஸ்ரீராம் கிருஷ்ணன் எலான் மஸ்குக்கு அறிமுகமானதாக கூறப்படுகிறது.

    • மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார்.
    • தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    வாஷிங்டன்:

    கடந்த வாரம் ட்விட்டர் மற்றும் எலான் மஸ்க் இடையே நிறுவனத்தை விலைக்கு வாங்கும் பரிவர்த்தனை நிறைவு பெற்றது. ட்விட்டர் நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 54.20 டாலர்கள் வீதம் மொத்தம் 44 பில்லியன் டாலர்கள் கொடுத்து எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கி இருக்கிறார்.

    ட்விட்டரை கைப்பற்றியதும் அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அலுவலர் ஆகியோரை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்தார்.

    ட்விட்டர் நிறுவனம் வெரிபிகேஷனை பயன்படுத்த ஒவ்வொரு மாதமும் கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியானது.

    தற்போது ட்விட்டர் புளூ சந்தாவுக்கு மாதம் 4.99 டாலர்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவையில் இருந்து அதிக வருவாய் ஈட்டும் வகையில், வெரிபிகேஷன் சேவையையும் இதில் கொண்டுவர ட்விட்டர் முடிவு செய்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது.

    இந்நிலையில், ட்விட்டர் புளூ டிக் சந்தாவுக்கான மாதாந்திர கட்டணம் 8 டாலர்கள் என எலாம் மஸ்க் அறிவித்துள்ளார்.

    ×