search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் - முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு
    X

    டொனால்டு டிரம்ப்

    2024 தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன் - முன்னாள் அதிபர் டிரம்ப் பேச்சு

    • கடந்த 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.
    • தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக 2016 முதல் 2020-ம் ஆண்டு வரை 4 ஆண்டுகள் இருந்தவர் டொனால்டு டிரம்ப். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போனவர் டிரம்ப். இவர் அமெரிக்காவின் அதிபராக இருந்த காலத்தில் வடகொரியாவுடன் நட்பு, இஸ்ரேல் - அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது உள்பட பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    கடந்த 2020-ம் ஆண்டு டொனால்டு டிரம்ப் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்தார். புதிய அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதற்கிடையே, 2024-ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகின.

    இந்நிலையில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியதாவது:

    நான் 2 முறை தேர்தலில் போட்டியிட்டேன். 2 முறையும் வெற்றி பெற்றேன். 2016-ம் ஆண்டு பெற்றதை விட 2020-ம் ஆண்டு தேர்தலில் 10 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்றேன்.

    அமெரிக்க வரலாற்றில் பதவியில் இருந்த அதிபர் அதிக வாக்குகள் பெற்றது அதுவே முதல்முறை. நமது நாட்டை பாதுகாப்பாகவும், வெற்றிகரமாக நடத்த நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவேன். விரைவில் போட்டியிடுவேன். தயாராக இருங்கள் என தெரிவித்தார்.

    Next Story
    ×