என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • கொரோனா நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.
    • சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது.

    வாஷிங்டன் :

    அமெரிக்காவில் உள்ள ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள என்ஜினீயர்கள், மெல்லிய நூல் போன்ற மூலக்கூறு இழைகளை கண்டுபிடித்துள்ளனர்.

    பொதுவாக, கொரோனாவை உண்டாக்கும் வைரஸ், நாம் சுவாசிக்கும்போது நுரையீரல் வழியாக உடலுக்குள் நுழைந்து தொற்றை உண்டாக்குகிறது.

    இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்த மூலக்கூறுகள், சுவாசப்பாதையிலேயே வைரசை தடுத்து விடும். அதன்மூலம், அது நுரையீரலை அடைவது தடுக்கப்பட்டு, கொரோனா ஏற்படாமல் தடுக்கலாம்.

    இவர்கள் கண்டுபிடித்த மூலக்கூறுகள், பஞ்சு போல் செயல்பட்டு, கொரோனா வைரசையும், இதர வைரஸ்களையும் உறிஞ்சி விடும். அதனால், அந்த வைரஸ்கள், மேற்கொண்டு உடலுக்குள் பயணிப்பது தடுக்கப்படும்.

    இந்த மூலக்கூறுகளை மூக்கு வழியாக 'ஸ்பிரே' போல் பயன்படுத்தலாம். வாய் வழியாகவும் பயன்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    இதை சுண்டெலியிடம் பயன்படுத்தியபோது வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. மூலக்கூறு இழைகள், சுண்டெலியின் நுரையீரலில் 24 மணி நேரம்வரை இருந்தபோதிலும், நுரையீரலில் எரிச்சலோ, பாதிப்போ ஏற்படவில்லை.

    • அமெரிக்க அதிபர் ஜோ பைடனை ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று சந்தித்தார்.
    • இருவரும் உக்ரைன் போர் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி ஆலோசனை நடத்தினர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் ஜோ பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.

    இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்ட அறிக்கையில், அமெரிக்காவின் செய்தி தெளிவாக உள்ளது. அமெரிக்க, ஜப்பான் கூட்டணியில் நமது முதலீடு பெரும் ஈவுத்தொகையை அளிக்கிறது. தேசிய பாதுகாப்பு முதல் பொருளாதார பிரச்சினைகள் வரை. மேலும் இது இன்னும் பல ஆண்டுகளாக தொடரும்.

    ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா, அமெரிக்காவுடன் உறுதியான நட்பு மற்றும் நண்பராக இருந்து வருகிறார். அவருடன் அமர்ந்து, இந்தோ-பசிபிக் மற்றும் உலக நாடுகள் ஆகிய இரு நாடுகளுக்கும் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்த நாம் எவ்வாறு இணைந்து செயல்படுகிறோம் என்று விவாதிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • நித்யானந்தா கைலாசா எனும் தனித்தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டார்.
    • நித்யானந்தாவின் கைலாசாவை நாடாக அமெரிக்க நகர நிர்வாகம் அங்கீகரித்து உள்ளது.

    வாஷிங்டன்:

    பெங்களூரு அருகே பிடதியில் நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வந்தார். பெண் சீடர்களை மடத்திலேயே கட்டாயப்படுத்தி அடைத்து வைத்தல், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட புகார்களுக்கு ஆளாகி தலைமறைவானார். ஆனால் நித்யானந்தா கைலாசா எனும் தனித் தீவு நாட்டை வாங்கி அங்கே குடியேறிவிட்டதாக இணையதளத்தில் தோன்றி அறிவித்தார்.

    இந்நிலையில், நித்யானந்தாவின் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்து இருக்கிறது அமெரிக்க நெவார்க் நகர நிர்வாகம். இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்குத் தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கையெழுத்தாகிறது.

    நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள நிவார்க் நகரத்தின் சார்பில் அதன் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயப்பிரியா நித்யானந்தாவும் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டனர்.

    • டிரம்பின் இரண்டு நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டது.
    • இந்த தீர்ப்பு அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்புக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    நியூயார்க்:

    அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் குடும்ப நிறுவனமான டிரம்ப் ஆர்கனைசேசனுக்கு உட்பட்ட தி டிரம்ப் கார்ப்பரேசன், டிரம்ப் பே ரோல் கார்ப் ஆகிய இரண்டு நிறுவனங்களும் பல ஆண்டுகளாக தவறான தகவல்களை அளித்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து இந்த நிறுவனங்கள் மீது வரி ஏய்ப்பு தொடர்பாக 17 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு, நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.

    வழக்கின் விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில், டிரம்பின் நிறுவனங்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிபடுத்தப்பட்டது. இதையடுத்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

    டிரம்ப் ஆர்கனைசேசனுக்கு 1.6 மில்லியன் டாலர் (ரூ.13 கோடி) அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தீர்ப்பானது, அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட உள்ள டிரம்புக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

    • நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • அமெரிக்கா முழுவதும் விமான சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று முன்தினம் திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால் நாடு முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. விமானங்கள் அவசர அவசரமாக தரை இறக்கப்பட்டன.

    ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். நீண்ட முயற்சிக்கு பிறகு சர்வரில் ஏற்பட்ட கோளாறு சரி செய்யப்பட்டது. இதையடுத்து விமான சேவை படிப்படியாக தொடங்கியது. இதனால் 5,400 விமானங்கள் தாமதமாக வந்தடைந்தன.

    இந்த நிலையில் அமெரிக்கா முழுவதும் விமான சேவை முழுமையாக இயல்பு நிலைக்கு திரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வழக்கம் போல் விமானங்கள் இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் வால் நட்சத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • 50 ஆயிரம் ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் வால் நட்சத்திரம் இதுவாகும்.

    வாஷிங்டன்:

    மிகவும் அரிதான பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. இந்த பச்சை வால் நட்சத்திரம் பூமியை நெருங்கி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கண்டுபிடித்தனர்.

    அரிதான பச்சை வால் நட்சத்திரத்துக்கு சி/2022 இ3 (இசட்.டி.எம்.) என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பெயரிட்டது. வால் நட்சத்திரத்தை ஆய்வாளர்கள் தொடர்ந்து கண்காணித்து ஆய்வுகளை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் பச்சை வால் நட்சத்திரம் வருகிற பிப்ரவரி 2-ந்தேதி பூமிக்கு மிக அருகில் வந்து கடந்து செல்லும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதை பகல் நேரங்களில் பைனாக்குலர் மூலமாகவும், இரவில் வெறும் கண்களாலும் பார்க்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தனர்.

    பூமியிலிருந்து 26 மில்லியன் மைல் தொலைவில் வால் நட்சத்திரம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 50 ஆயிரம் ஆண்டுகளில் பூமிக்கு மிக அருகில் இருக்கும் வால் நட்சத்திரம் இதுவாகும்.

    இந்த வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கற்கால மனிதர்கள் வாழ்ந்த காலத்தில் பூமியை நெருங்கி வந்ததாக கூறப்படுகிறது.

    அரிய பச்சை வால் நட்சத்திரம் சூரியனை சுற்றி ஒரு சுற்றுப்பாதையை கொண்டுள்ளது. அது சூரிய மண்டலத்தின் வெளிப்புற பகுதிகள் வழியாக செல்கிறது. இதனால் தான் பூமியை சுற்றி வர நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • உள்நாட்டு விமான இயக்கத்தை தாமதப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
    • தீவிர முயற்சிக்கு பிறகு கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பின் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.

    அமெரிக்காவில் பயணிகள் விமான சேவை கட்டுப்பாட்டு மையமாக உள்ள மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பின் கம்ப்யூட்டர் சர்வரில் நேற்று திடீரென்று பழுது ஏற்பட்டது.

    இதனால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சர்வர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக நூற்றுக்கணக்கான விமானங்களை அவசரமாக தரையிறக்க அறிவுறுத்தப்பட்டது.

    இதையடுத்து ஏராளமான விமானங்கள், உள்ளூர் மற்றும் அண்டை விமான நிலையங்களிலும் அவசரமாக தரையிறக்கப்பட்டன. மேலும் நேற்று சுமார் 400 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சர்வரில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டனர்.

    இதையடுத்து உள்நாட்டு விமான இயக்கத்தை தாமதப்படுத்த உத்தரவிடப்பட்டது. இதனால் அமெரிக்கா முழுவதும் விமான சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். தீவிர முயற்சிக்கு பிறகு கம்ப்யூட்டர் சர்வர் கோளாறு சரி செய்யப்பட்டது. அதன் பின் விமான சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது.

    இதுதொடர்பாக மத்திய விமான போக்குவரத்து நிர்வாக அமைப்பு டுவிட்டரில் கூறும்போது, 'அமெரிக்கா முழுவதும் வழக்கமான விமான போக்குவரத்து நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டும் தொடங்குகின்றன.

    விமானங்களை அவசரமாக தரையிறக்கும் அறிவிப்பு விலக்கிகொள்ளப்பட்டுள்ளது. பிரச்சினைக்கான காரணத்தை ஆய்வு செய்து வருகிறோம்' என்று தெரிவித்தது.

    சர்வர் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு விமானங்கள் ஒவ்வொன்றாக புறப்பட்டு சென்றன. இப்பிரச்சினை காரணமாக சுமார் 5,400 விமானங்கள் தாமதமாக சென்றடைந்தன.

    இதுதொடர்பாக விமான கண்காணிப்பு இணையதளம் கூறும்போது, 'அமெரிக்காவில் உள்நாட்டு, வெளிநாட்டுக்கு செல்லும் விமானம் அங்கிருந்துவரும் விமானம் என 5,400 விமானங்களின் சேவையில் தாமதம் ஏற்பட்டது. மேலும் 900 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளது.

    இதன் காரணமாக பயணிகள் பல மணிநேரம் விமான நிலையத்தில் காத்து இருந்தனர். விமான சேவைகள் தொடங்கிய பிறகு அவர்கள் புறப்பட்டு சென்றனர்.

    • கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் ரூ.15 லட்சம் கோடியை இழந்துள்ளார்.
    • உலகின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை அவர் இழந்தார்.

    வாஷிங்டன் :

    உலகின் முதல் பெரும் பணக்காரராக இருந்து வந்தவர் அமெரிக்காவை சேர்ந்த தொழிலதிபர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான இவர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் டுவிட்டரை ரூ.3½ லட்சம் கோடி கொடுத்து வாங்குவதாக அறிவித்தார்.

    அதற்கான நடைமுறைகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிறைவடைந்து டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க் வசமானது. டுவிட்டருக்கான தொகையை செலுத்துவதற்காக தனது டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளை விற்க தொடங்கினார் எலான் மஸ்க்.

    அதோடு தனது முழு கவனத்தையும் டுவிட்டர் மீது திருப்பியதாலும், 50 சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் உள்பட டுவிட்டர் நிர்வாகத்தில் சர்ச்சைக்குரிய மாற்றங்களைகொண்டு வந்ததால் அவர் மீது சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்ததாலும் டெஸ்லா நிறுவன முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்று வெளியேறி வருகின்றனர்.

    இதனால் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதன் மூலம் உலகின் முதல் பணக்காரர் என்கிற அந்தஸ்தை அவர் இழந்தார்.

    இந்த நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக (சுமார் ரூ.26 லட்சம் கோடி) இருந்தநிலையில், தற்போது அது 137 பில்லியன் டாலராக (சுமார் ரூ.11 லட்சம் கோடி) சரிந்துள்ளது தெரியவந்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலரை (சுமார் ரூ.15 லட்சம் கோடி) அவர் இழந்துள்ளார்.

    உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. இதன் மூலம் மனித வரலாற்றில் பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என கின்னஸ் பட்டியலில் எலான் மஸ்க் இடம் பெற்றுள்ளார்.

    • சர்வரில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
    • நாடு முழுவதும் விமான சேவை முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்கா முழுவதும் இன்று விமான சேவை திடீரென முடங்கியது. விமானங்கள் அனைத்தும் அவசரமாக ஆங்காங்கே தரையிறக்கப்பட்டன. முன்னெப்போதும் இல்லாத வகையில் விமான போக்குவரத்து துறையின் சர்வரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானங்களை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. சர்வரில் ஏற்பட்ட கோளாறுகளை சரிசெய்யும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    விமான சேவை முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். என்ன நடக்கிறது என்று தெரியாமல் பல விமான நிலையங்களில் பயணிகள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். 

    • வெள்ள பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
    • கலிபோர்னியா மாகாணத்துக்கு மேலும் மழை ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் வரலாறு காணாத அளவு கன மழை பெய்தது. அங்கு பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. பல இடங்களில் சாலைகள் சேதமடைந்து துண்டாகின. கன மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. வெள்ளத்தில் சிக்கி வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. அனைத்து சாலைகளிலும் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ள பகுதிகளில் இருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மழை-வெள்ளத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதற்கிடையே கலிபோர்னியா மாகாணத்துக்கு மேலும் மழை ஆபத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா கவர்னர் கெவின் நியூசோம் கூறும்போது, மழை-வெள்ளம் காரணமாக 34 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆபத்து இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாதிப்பு குறைந்தபட்சம் வருகிற 18-ந்தேதி வரை தொடரும் என்று தெரிகிறது.

    • விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.
    • ஏசி சரனியா விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்.

    வாஷிங்டன் :

    அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசாவின் புதிய தலைமை தொழில்நுட்ப வல்லுநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளித் துறை நிபுணர் ஏசி சரனியா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இவர் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாசா தலைமையகத்தில் தொழில்நுட்ப கொள்கை மற்றும் திட்டங்களில் நாசாவின் நிர்வாகி பில் நெல்சனின் முதன்மை ஆலோசகராக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளி பொறியியலில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவரான ஏசி சரனியா நாசாவில் இணைவதற்கு முன்பு, சான்றிதழ் பெற்ற தனியார் விண்வெளி நிறுவனமான ரோபோடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிப்பு மூலோபாயத்தின் துணைத்தலைவராக பணியாற்றியுள்ளார். இது தவிர விண்வெளி தொழில்நுட்பம் தொடர்பான பல்வேறு முக்கிய பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

    • பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு 1,739 பேர் உயிரிழந்தனர்.
    • அங்கு சுமார் 3.3 கோடி மக்கள் பாதிப்பு அடைந்தனர்.

    வாஷிங்டன்:

    பாகிஸ்தானில் பருவகால மழை பாதிப்புகளால் கடந்த ஆண்டில் அந்நாடு முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சாலைகளும், பாலங்களும் முறையே துண்டிக்கப்பட்டும், நீரில் அடித்துச் செல்லப்பட்டன. நாட்டில் 3.3 கோடி பேர் வரை பாதிக்கப்பட்டனர்.

    வெள்ளத்திற்கு பின்பு லட்சக்கணக்கானோர் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 1.34 லட்சம் பேர் வயிற்று போக்காலும், 44 ஆயிரம் பேர் மலேரியா வியாதியாலும் பாதிக்கப்பட்டனர். வெள்ளம் பாதித்தோரில், 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தோல் வியாதியாலும், 101 பேர் பாம்பு கடியாலும் மற்றும் 500 பேர் நாய் கடியாலும் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    பாகிஸ்தானில் வெள்ள பாதிப்புக்கு 1,700க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் வெள்ள பாதிப்பில் காயமடைந்தனர். இந்த நெருக்கடியான சூழலில் உலக நாடுகளின் உதவியை பாகிஸ்தான் எதிர்பார்த்தது.

    இதற்கிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு மந்திரி பிலாவல் பூட்டோ சர்தாரி, அமெரிக்க வெளியுறவு மந்திரி அந்தோணி பிளிங்கனை வாஷிங்டன் நகரில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர், முதல் கட்டமாக பாகிஸ்தானின் வெள்ள நிவாரண மற்றும் மனிதநேய அடிப்படையிலான நிதி உதவியை அமெரிக்கா ஒதுக்கியது.

    இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தான் மக்களுக்கு மனிதநேய அடிப்படையில் மேலும் 100 மில்லியன் டாலரை உணவு பாதுகாப்பு உதவி தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.

    ×