என் மலர்
ஐக்கிய அரபு அமீரகம்
- ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.
- எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார்.
தெற்கு ஆப்பிரிக்காவில் எசுவாத்தினி என்ற நாடு உள்ளது. பின்னர் இந்த நாடு சுவாசிலாந்து என்று அழைக்கப்பட்டது. ஆப்பிரிக்காவில் மன்னராட்சியின் கீழ் இருக்கும் ஒரே நாடு எசுவாத்தினி மட்டும் தான்.
எசுவாத்தினி நாட்டை மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி ஆட்சி செய்து வருகிறார். 1986 முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 40 வருடங்களாக அந்நாட்டை அவர் ஆட்சி செய்து வருகிறார்.
இந்நிலையில், எசுவாத்தினி மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி தனி விமானத்தில் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கினார். அப்போது ன்னர் மூன்றாம் எம்ஸ்வதி அந்நாட்டின் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார்.
மன்னர் மூன்றாம் எம்ஸ்வதி உடன் அவரது 15 மனைவிகள் மற்றும் 30 குழந்தைகள் மற்றும் 100 பணியாளர்கள் அபுதாபி விமான நிலையத்தில் இறங்கிய வீடியோ இணையத்தில் வைரலாக வருகிறது.
- டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. 2 போட்டிகள் முடிவில் வங்கதேசம் 2-0 என கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. டார்விஷ் 32 ரன்னும், செடிகுல்லா அடல் 28 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் சயீபுதின் 3 விக்கெட்டும், நவ்சம் அகமது, தன்ஜிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் தன்ஜிம் ஹசன்
பொறுப்புடன் ஆடி 33 ரன்கள் சேர்த்தார்.
சயீப் ஹாசன் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்து 64 ரன்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், வங்கதேசம் 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 3-0 என முழுவதுமாகக் கைப்பற்றி அசத்தியது.
- டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது. நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற வங்கதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்தது. இப்ராகிம் ஜட்ரன் 38 ரன்னும், குர்பாஸ் 30 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் நவ்சம் அகமது, ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர். 24 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
அடுத்து இறங்கிய ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடியது.4வது விக்கெட்டுக்கு 56 ரன் சேர்த்த நிலையில் ஜேகர் அலி 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து ஷமிம் ஹொசைன் 33 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் நூருல் ஹசன் போராடி 31 ரன் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரை 2-0 என கைப்பற்றியது.
- டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 20 ஓவரில் 151 ரன்கள் எடுத்தது.
ஷார்ஜா:
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3 டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட் தொடரில் ஷார்ஜாவில் நடைபெறுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 151 ரன்கள் எடுத்தது. குர்பாஸ் 40 ரன்னும், மொகம்மது நபி 38 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தன்ஜிம் ஹசன், ரிஷாத் ஹொசைன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. ஆரம்பம் முதல் சிறப்பாக ஆடிய வங்கதேச வீரர்களை ரஷித் கான் சோதனைக்கு ஆளாக்கினார்.
தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அரை சதம் கடந்தனர். முதல் விக்கெட்டுக்கு 109 ரன் சேர்த்த நிலையில் பர்வேஸ் ஹொசைன் 54 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து பந்துவீசிய ரஷித் கான் தன்ஜிம் ஹசனை 51 ரன்னில் ஆட்டமிழக்கச் செய்தார். சயீப் ஹசன், ஜேகர் அலி, ஷமிம் ஹொசைன் ஆகியோரையும் விரைவில் அவுட்டாக்கினார்.
118 ரன்கள் எடுப்பதற்குள் 6 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் தத்தளித்தது.
அடுத்து இறங்கிய நூருல் ஹசன், ரிஷாத் ஹொசைன் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றி பெறச் செய்தது.
இறுதியில், வங்கதேசம் 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி 20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
- இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், ஆசிய கோப்பையை இந்தியாவிற்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்திய நிலையில், போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக வாரியத்திடம் கோப்பையை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி ஒப்படைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- இலங்கைக்கு எதிராக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை 133 ரன்கள் எடுத்தது.
அபுதாபி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
சூப்பர் 4 சுற்றின் 3வது ஆட்டம் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. ஆட்டத்தின் 2வது பந்தில் குசால் மெண்டிஸ் டக் அவுட்டானார்.
பதும் நிசங்கா 8 ரன்னிலும், குசால் பெரேரா 15 ரன்னிலும், சரித் அசலங்கா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டாசன் ஷனகா முதல் பந்தில் டக் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.
இறுதியில், இலங்கை 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து, 134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.
- இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
- இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
அபுதாபி:
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (டி20) ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது.
லீக் சுற்று முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
இந்நிலையில், இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு ஆட்டம் தொடங்கும் நிலையில், 7.30 மணியளவில் டாஸ் போடப்பட்டது. இதில், இலங்கைக்கு எதிராக பாகிஸ்தான் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்துள்ளது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி பந்து வீச, இலங்கை பேட் செய்ய களமிறங்குகிறது.
- டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய வங்கதேசம் 154 ரன்கள் எடுத்தது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தொடக்க ஆட்டக்காரர் தன்ஜித் ஹசன் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 31 பந்தில் 52 ரன்கள் குவித்தார். சைப் ஹசன் 30 ரன்கள் எடுத்தார். தவ்ஹிக் ஹிருதோய் 26 ரன்கள் எடுத்தார்.
இறுதியில், வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
ஆப்கானிஸ்தானின் ரஷித் கான், நூர் அகமது தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களமிறங்குகிறது.
- முதலில் ஆடிய வங்கதேசம் 139 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை, வங்கதேசம் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய வங்கதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 139 ரன்கள் எடுத்தது. முன்னணி வீரர்கள் விரைவில் வெளியேறினர். ஜேகர் அலி 41ரன்னும், ஷமிம் ஹொசைன் 42 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இலங்கை அணி அணி ஹசரங்கா 2 விக்கெட் கைப்பற்றினார்.
இதையடுத்து, 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. பதும் நிசங்கா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அவுட்டானார்.
கமில் மிஷாரா 46 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், இலங்கை அணி 14.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்து முதல் வெற்றியைப் பதிவுசெய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 160 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய ஓமன் 67 ரன்களில் சுருண்டு தோல்வி அடைந்தது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
இன்று நடைபெற்ற 4-வது லீக் ஆட்டத்தில் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான், ஓமன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 160 ரன்கள் எடுத்தது. முகமது ஹாரிஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்து 66 ரன்னில் வெளியேறினார்.
ஓமன் அணி சார்பில் ஷா பைசல், ஆமிர் கலீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இதையடுத்து, 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களமிறங்கியது. பாகிஸ்தான் அணியினரின் துல்லியமான பந்து வீச்சில் ஓமன் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.
இறுதியில், ஓமன் அணி 67 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 93 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சார்பில் சயீம் அயூப், சுபியான் முகீம், பாஹிம் அஷ்ரப் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
- முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய வங்கதேசம் 144 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. நிசாகத் கான் 42 ரன்னும், ஜீஷன் அலி 30 ரன்னும், யாசிம் முர்தசா 28 ரன்னும் எடுத்தனர்.
வங்கதேசம் சார்பில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹொசைன், தன்ஷிம் ஹசன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது. பர்வேஸ் ஹொசைன் 19 ரன்னும், தன்சித் ஹசன் 14 ரன்னும் எடுத்தனர்.
3-வது விக்கெட்டுக்கு லிட்டன் தாஸ், தவ்ஹித் ஹிருதோய் ஜோடி இணைந்தது. இந்த ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
அதிரடியாக ஆடிய லிட்டன் தாஸ் அரை சதம் கடந்து 59 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், வங்கதேசம் 17.4 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தவ்ஹித் ஹிருதோய் 35 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.
- இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.
அபுதாபி:
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி துபாயில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா, ஓமன் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் அணிகள் இடம்பிடித்துள்ளன.
இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் குறித்து ஓமன் அணியின் சாமேய் ஸ்ரீவத்சவா கூறியதாவது:
மற்ற எல்லா கிரிக்கெட் வீரர்களையும் போல இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. ஆனால் சில சூழ்நிலைகளால் அது சாத்தியமாகவில்லை. இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சுவாரசியமாக இருக்கும்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது தானே ஒரு பெரிய விஷயமாக இருக்கும். எங்கள் முழு அணியும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவும், நல்ல போட்டியை கொடுக்கவும் தயாராக இருக்கும் என தெரிவித்தார்.






