என் மலர்
கிரிக்கெட் (Cricket)

ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஆசிய கோப்பையை ஒப்படைத்தார் ஏ.சி.சி. தலைவர் மோசின் நக்வி
- மோசின் நக்வியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது.
- இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆசிய கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆசிய கவுன்சில் தலைவரிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்குவதில்லை என்று இந்திய அணி தெரிவித்திருந்தது. இதனால் கோப்பை மற்றும் பதக்கங்கள் இந்திய அணிக்கு கொடுக்கப்படவில்லை.
ஆசிய கோப்பை மறுக்கப்பட்டது தொடர்பாக ஐ.சி.சி.யிடம் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்தியா முறையிடும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளர் தேவ்ஜித் சாய்க்கியா தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், ஆசிய கோப்பையை இந்தியாவிற்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்திய நிலையில், போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக வாரியத்திடம் கோப்பையை பாகிஸ்தானின் உள்துறை அமைச்சரும், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவருமான மோசின் நக்வி ஒப்படைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.






