என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    அனைத்து அணிகளையும் ஒரு கை பார்ப்போம்: ஓமன் வீரர் தடாலடி
    X

    அனைத்து அணிகளையும் ஒரு கை பார்ப்போம்: ஓமன் வீரர் தடாலடி

    • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது.
    • இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ளது.

    அபுதாபி:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது.

    இந்திய அணி துபாயில் இன்று நடைபெறும் முதல் லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை சந்திக்கிறது.

    இந்தியா, பாகிஸ்தான் மோதும் போட்டி செப்டம்பர் 14-ம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா, ஓமன் அணிகள் மோதும் போட்டி செப்டம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது.

    ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் அணிகள் இடம்பிடித்துள்ளன.

    இந்நிலையில், ஆசிய கோப்பை தொடர் குறித்து ஓமன் அணியின் சாமேய் ஸ்ரீவத்சவா கூறியதாவது:

    மற்ற எல்லா கிரிக்கெட் வீரர்களையும் போல இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்ற கனவு எனக்கும் இருந்தது. ஆனால் சில சூழ்நிலைகளால் அது சாத்தியமாகவில்லை. இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது சுவாரசியமாக இருக்கும்.

    இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவது தானே ஒரு பெரிய விஷயமாக இருக்கும். எங்கள் முழு அணியும் அனைத்துப் போட்டிகளிலும் சிறப்பாக செயல்படவும், நல்ல போட்டியை கொடுக்கவும் தயாராக இருக்கும் என தெரிவித்தார்.

    Next Story
    ×