என் மலர்
இலங்கை
- புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
- இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி உள்பட பலர் பங்கேற்றனர்.
கொழும்பு:
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து புதிய ஜனாதிபதி பதவியேற்பு விழா இன்று பாராளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்றது.
இதற்கிடையே, பாராளுமன்ற மைய மண்டபத்தில் நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய மந்திரிகள், கவர்னர்கள், முதல் மந்திரிகள், முப்படை தளபதிகள், பல்வேறு நாடுகளின் தூதர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள திரவுபதி முர்முவுக்கு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே வாழ்த்து
தெரிவித்துள்ளார்.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் பாகிஸ்தான் வென்றது.
- ஒஷாடா பெர்னாண்டோ 50 ரன்னும், தினேஷ் சண்டிமால் 80 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
கல்லே:
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஒஷாடா பெர்னாண்டோ, கருணரத்னே ஆகியோர் இறங்கினர். இருவரும் நிதானமாக ஆடினர்.
அணியின் எண்ணிக்கை 92 ஆக இருந்தபோது, பொறுப்புடன் ஆடிய பெர்னாண்டோ அரை சதம் அடித்து ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய குசால் மெண்டிஸ் 3 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கருணரத்னே 40 ரன்னில் அவுட்டானார்.
தொடர்ந்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100வது டெஸ்ட் போட்டி ஆகும். அவரும் சண்டிமாலும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
4வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 75 ரன்கள் சேர்த்த நிலையில், மேத்யூஸ் 42 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து அரை சதமடித்த சண்டிமால் 80 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய தன்ஞ்செய டி சில்வா 33 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 315 ரன்களை எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் நிரோஷன் டிக்வெலா 42 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பாகிஸ்தான் சார்பில் முகமது நவாஸ் 2விக்கெட் வீழ்த்தினார்.
- இந்தியாவின் முன்னாள் கேப்டன் விராட் கோலி சமீபத்தில் 100 டெஸ்ட் போட்டிக்கான பட்டியலில் இணைந்தார்.
- இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 6.876 ரன்கள் எடுத்துள்ளார்.
கல்லே:
பாகிஸ்தான் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கல்லேவில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூசுக்கு இது 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேத்யூஸ் 6.876 ரன்கள் எடுத்துள்ளார்.
இதையடுத்து, போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ஏஞ்சலோ மேத்யூசுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மஹேலா ஜெயவர்த்தனே (149), குமார் சங்கக்கரா (134), முத்தையா முரளீதரன் (132), சமிந்தா வாஸ் (111), சனத் ஜெயசூர்யா (110) ஆகியோர் 100க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளனர்.
- மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.
- போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களின் புரட்சி போராட்டம் வெடித்ததால் அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார்.
அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றதால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது.
இதற்கிடையே இலங்கை பாராளுமன்றத்தில் புதிய அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்று கடந்த 21-ந்தேதி பதவி ஏற்றார்.
மறுநாளே அதிபர் மாளிகைக்கு உள்ளேயும், முன்பும் இருந்த போராட்டக்காரர்களை போலீசார், ராணுவத்தினர் அப்புறப்படுத்தினர்.
அப்போது போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஐ.நா.சபை மற்றும் பல நாடுகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தன. ரணில் விக்ரமசிங்கேவை அமெரிக்கா தூதர் சந்தித்து தனது கவலையை தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பல வெளிநாட்டு தூதர்கள் கலந்துரையாடல் நடத்தினார்கள். அப்போது ரணில் விக்ரமசிங்கே கூறும் போது:-
எனது தனிப்பட்ட வீடு எரிக்கப்பட்ட போது எந்த தரப்பினரும் எவ்வித டுவிட்டர் பதிவுகளையும் வெளியிடாதது குறித்து நான் ஆச்சரியமடைந்தேன். தற்போது கேள்வி எழுப்பும் ஒருவரும் அன்று ஒரு பதிவையேனும் வெளியிடவில்லை என்று கூறினார்.
அதிபர் மாளிகை முன்பு காலிமுகத் திடலில் இருந்த போராட்டக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்ட போது அவர்களின் கூடாரங்களை போலீசார் அகற்றினர். அதிபர் மாளிகையை சுற்றி உள்ள பகுதிகள் அனைத்தும் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த நிலையில் மூன்று மாதங்களுக்கு மேலாக இயங்காமல் இருந்த அதிபர் மாளிகை நாளை முதல் முழுமையாக செயல்பட வைக்க அதிபர் ரணில் விக்ரமசிங்கே முடிவு செய்து உள்ளார்.
போராட்டக்காரர்களால் கட்டிடத்தின் சில பகுதிகள் சேதமடைந்துள்ளன. கதவுகள், ஜன்னல்களை சுத்தம் செய்தல் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதிபர் மாளிகை வளாகத்தில் நடந்த குற்றச்செயல்களுக்கான சாட்சியங்களை சேகரிப்பதற்காக சிறப்பு குற்றப்பிரிவு மற்றும் கைரேகை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
- இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது.
- வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதி.
கொழும்பு :
இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன.
இது பலமுறை நீட்டிக்கப்பட்டு கடைசியாக இன்று வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இது மேலும் நீட்டிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து மூடுவதை அரசு நிறுத்தி உள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் நாளை (திங்கட்கிழமை) முதல் திறந்து கல்விப்பணிகளை தொடர அரசு அனுமதி அளித்து உள்ளது.
எனினும் வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பள்ளிகளை இயக்க அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கல்வி அமைச்சகம் கூறியுள்ளது.
- அதிபர் மாளிகை, பிரதமர் இல்லம் முற்றுகை தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு விசாரணை நடத்தி வருகிறது.
- எம்.பி.க்கள் அவர்களின் கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்று அதிபர் வேண்டுகோள்
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களை அனுபவித்து வரும் பொதுமக்கள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 9ம்தேதி, அதிபர் கோத்தபய பதவி விலக வலியுறுத்தி அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டனர். பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு வந்ததால் அவர்களை பாதுகாப்பு படையினரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. அதிபர் மாளிகையை ஆக்கிரமித்த போராட்டக்காரர்கள் அங்குள்ள பொருட்களை எடுத்து பயன்படுத்தினர். இதேபோல் பிரதமர் இல்லத்தையும் ஆக்கிரமித்தனர். ஒரு கட்டடத்திற்கு தீ வைத்தனர். இது தொடர்பாக சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அதிபர் மாளிகை மற்றும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து அரிய கலைப்பொருட்கள், பழங்கால பொருட்கள் உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்ட பொருட்கள் காணாமல் போனதாகவும், அவற்றை போராட்டக்காரர்கள் எடுத்துச்சென்றிருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல் தெரியவந்திருக்கிறது. ஆனால், இது தொடர்பாக விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, போராட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கான உரிமையை மதிப்பதாகவும், அதேசமயம், அதிபர் மாளிகை அல்லது பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் போன்ற அரசு கட்டடங்களை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது என்றும், அதிபர் ரணில் விக்கிரமசிங்க கூறி உள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்றம் அவர்களின் கடமையை நிறைவேற்றுவதற்கு தடையாக இருக்க வேண்டாம் என்றும் போராட்டக்குழுவினரை அவர் கேட்டுக்கொண்டார்.
- இலங்கையின் 15-வது புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார்.
- 73 வயதான தினேஷ் குணவர்த்தன முன்னாள் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தவர்.
கொழும்பு:
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளுவதற்காக கடந்த மே மாதம் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றுக்கொண்டார்.
பொதுமக்கள் போராட்டம் காரணமாக அந்நாட்டு அதிபர் கோத்த பய ராஜபக்சே இலங்கையை விட்டு ஓட்டம் பிடித்தார், தற்போது அவர் சிங்கப்பூரில் தங்கி உள்ளார். மேலும் அவர் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதையடுத்து புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் புதிய பிரதமராக யாரை நியமிக்கலாம் என அவர் ஆலோசனை நடத்தினார் .
இதில் ராஜபக்சே கட்சியை சேர்ந்த தினேஷ் குணவர்த்தனவை நியமிப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டது. பின்னர் அவர் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து இலங்கையின் 15-வது புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தன இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
73 வயதான தினேஷ் குணவர்த்தன முன்னாள் வீட்டு வசதி துறை மந்திரியாக பதவி வகித்தவர். இவர் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியின் முக்கிய தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்தார். புதிய பிரதமருக்கு அக்கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
- புதிய அதிபராக தேர்தெடுக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக தீவிரம் அடையும் போராட்டம்.
- அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைப்பு.
கொழும்பு:
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே நேற்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்க எதிராக பல இடங்களில் திரண்ட போராட்டக்காரர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், சட்டத்தின்படி கையாள்வோம் என்று ரணில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் நேற்றிரவு கொழும்பில் உள்ள அதிபர் மாளிகை வளாககத்திற்கு வெளியே ஆயுதம் ஏந்தி ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் நெருங்க முடியாத அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.

உடனடியாக அங்கிருந்த போராட்டக்காரர்கள் தடுப்பு வேலிகளை அகற்ற முயற்சித்த நிலையில் அதை ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டக்காரர்களின் கூடாரங்களை அப்பறப்படுத்தும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டனர். இந்த அந்த பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.
- இலங்கையில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று காலை பாராளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார்.
- ரணில் விக்ரமசிங்கே தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்லையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
கொழும்பு:
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவிப்புக்குள்ளான மக்கள், அரசு அலுவலகங்களில் உயர் பதவிகளில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையடுத்து கடந்த மே மாதம் 9-ந்தேதி மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக நியமிக்கப்பட்டார்.
அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலக மறுத்து வந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மக்கள் புரட்சி வெடித்தது. அதனால் நாட்டைவிட்டு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். இதை தொடர்ந்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரம சிங்கே நியமிக்கப்பட்டார்.
புதிய அதிபரை பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கான தேர்தல் நேற்று நடந்தது.
அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார். அவருக்கு 134 வாக்குகள் கிடைத்தது. மற்ற வேட்பாளர்களான அழகபெருமா 82 வாக்குகளும், அனுராகுமார திசநாயகே 3 வாக்குகளும் பெற்றனர்.
அப்போது பாராளுமன்றத்தில் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரம சிங்கே இன்று பதவி ஏற்பார் என்று அதிபர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி இலங்கையில் 8-வது அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று காலை பாராளுமன்றத்தில் பதவியேற்றுக்கொண்டார். அவர் தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா முன்லையில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி அவர்களை அரசாங்க பதவிகளில் இருந்து துரத்திய நிலையில் ரணில் விக்ரமசிங்கேவுக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
கோத்தபய ராஜபக்சே அதிபர் பதவியை ராஜினாமா செய்த பிறகு, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலக கோரி போராட்டம் வெடித்தது.
அது போல நேற்று புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்தெடுக்கப்பட்ட போது அதிபர் மாளிகை முன்பு அவருக்கு எதிராக போராட்டஙகள் நடந்தது. பல இடங்களில் போராட்டக்காரர்கள் திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் போராட்டக்காரர்களுக்கு ரணில் விக்ரமசிங்கே கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கொழும்பில் உள்ள புத்த கோவிலில் தரிசனம் செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-
நீங்கள் (போராட்டக்காரர்கள்) அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்தால், அதிபர் அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலகங்களை ஆக்கிரமிக்க முயற்சித்தால் அது ஜனநாயகம் அல்ல, அது சட்டத்திற்கு எதிரானது. அப்படி செய்பவர்களை சட்டத்தின் படி உறுதியாக கையாள்வோம்.
அரசியல் அமைப்பில் மாற்றத்துக்காக அமைதியாக போராடும் பெரும்பான்மையினரின் எண்ணங்களை ஒரு சிறிய அளவில் உள்ள எதிர்ப்பாளர்களால் நசுக்க அனுமதிக்கமாட்டோம். நான் ராஜபக்சேக்களின் நண்பன் அல்ல. நான் மக்களின் நண்பன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார்.
- 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார்.
கொழும்பு :
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜினாமா செய்தாா்.
இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றாா். இலங்கையின் பிரதமராகப் பதவியேற்றிருந்த ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவி விலகலுக்குப் பிறகு, இலங்கையின் இடைக்கால அதிபராகவும் பதவியேற்றார்.
இந்தநிலையில், இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நேற்று நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் 134 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார்.
இந்தத் தேர்தலில் அதிபர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கே, டலஸ் அழகப்பெருமா, அனுரா திசநாயக்க ஆகியோர் போட்டியிட்டனர். அதிகபட்சமாக 134 வாக்குகள் பெற்ற ரணில் விக்கிரமசிங்கே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் இன்று அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். இதனை அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை ரணில் விக்கிரமசிங்கே, அதிபர் பதவியில் நீடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
- புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார்.
- நாட்டின் பல்வேறு பகுதிகளில் புதிய அதிபர் ரணிலுக்கு எதிராக போராட்டம்
கொழும்பு:
இலங்கையில் மக்கள் புரட்சி தீவிரமடைந்த நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூருக்கு தப்பிச் சென்றார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், தற்காலிக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்றார். அதன்பின்னர் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில், ரணில் விக்ரமசிங்கே வெற்றி பெற்றார்.
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில் இலங்கையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. இலங்கை அதிபர் அலுவலகத்தின் முன்பு போராட்டக்காரர்கள் மீண்டும் திரண்டுள்ளனர். ரணில் பதவி விலக கோரி அதிபர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதேபோல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ரணிலுக்கு எதிராக போராட்டக்காரர்கள் முழக்கங்கள் எழுப்பத் தொடங்கி உள்ளனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
இதற்கிடையே, நாளை முதல் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக ரணில் தெரிவித்துள்ளார்.
- இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார்.
இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபரான கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கு தப்பி சென்றார். பின்னர் சிங்கப்பூருக்கு சென்ற அவர் அங்கிருந்தபடி அதிபர் பதவியை ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை இ-மெயில் மூலம் சபாநாயகருக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து தற்காலிக அதிபராக ரணில் விக்ரம சிங்கே நியமிக்கப்பட்டார்.
புதிய அதிபர் தேர்வு 20-ந்தேதி (இன்று) பாராளுமன்றத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுவதாக அறிவித்தார்.
அவருக்கு ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சி ஆதரவு தெரிவித்தது. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா, இலங்கை பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி டல்லஸ் அழகப்பெருமா, ஜனதா விமுக்தி பெரமுன (ஜெ.வி.பி.) தலைவர் அனுரா குமார திஸ்சநாயகே ஆகி யோரும் போட்டியிடுவதாக அறிவித்தனர். நேற்று அதிபர் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வ தற்காக பாராளுமன்றம் கூடியது.
இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தலைவருமான பிரேமதாசா போட்டியில் இருந்து விலகுவதாக திடீரென்று அறிவித்தார்.
மேலும் டல்லஸ் அழகப் பெருமாவுக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்தார். இதையடுத்து நேற்று ரணில் விக்ரமசிங்கே, டல்லஸ் அழகப் பெருமா, அனுராகுமார திஸ்சநாயகே ஆகிய 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பின்னர் அதிபர் தேர்தலில் போட்டியிடும் மூன்று பேரின் பெயரும் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. மேலும் அதிபர் தேர்வுக்காக ரகசிய வாக்களிப்பு 20-ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று சபையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி புதிய அதிபரை தேர்வு செய்வதற்காக இலங்கை பாராளுமன்றம் இன்று காலை கூடியது. எம்.பி.க்கள் ஒவ்வொருவராக பாராளுமன்றத்துக்கு வந்தனர்.
பின்னர் காலை 10 மணிக்கு ரகசிய வாக்கெடுப்பு தொடங்கியது. எம்.பி.க்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இந்நிலையில், இலங்கையின் புதிய அதிபராக ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்ரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இடைக்கால அதிபராக இருந்தநிலையில், 134 எம்பிக்கள் ஆதரவுடன் முறைப்படி அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வாகியுள்ளார்.
222 எம்பிக்களில் 2 பேர் ரகசிய வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் 223 எம்பிக்கள் வாக்களித்தனர். 4 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் பதவிக்காலம் முடியும் 2024-ம் ஆண்டு நவம்பர் வரை ரணில் விக்ரமசிங்சே அதிபர் பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.






