என் மலர்tooltip icon

    இலங்கை

    • இந்தியா 377 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,800 கோடி) வழங்கி உள்ளது.
    • 2017 முதல் 2021-ம் ஆண்டு வரை அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது.

    கொழும்பு :

    பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா, சீனா, ஜப்பான் என பல்வேறு நாடுகள் கடனுதவி வழங்கி வருகின்றன. அத்துடன் ஆசிய வளர்ச்சி வங்கி, சர்வதேச நிதியம் உள்ளிட்ட அமைப்புகளும் உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்த கடன்கள் தொடர்பாக கொழும்பு நகரை மையமாக கொண்டு இயங்கி வரும் 'வெரிட் ரிசர்ச்' என்ற ஆய்வு அமைப்பு ஆய்வு செய்து உள்ளது.

    இதில் இந்த ஆண்டில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக இந்தியா உருமாறி வருவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இந்த ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் இலங்கை பெற்ற 968 மில்லியன் டாலர் வெளிநாட்டு கடனில், இந்தியா 377 மில்லியன் டாலர் (சுமார் ரூ.2,800 கோடி) வழங்கி இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்தியாவுக்கு அடுத்ததாக ஆசிய வளர்ச்சி வங்கி 360 மில்லியன் டாலர் கடன் வழங்கி இருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2017 முதல் 2021-ம் ஆண்டுகளுக்கு இடையேயான காலகட்டத்தில் இலங்கைக்கு அதிக கடன் வழங்கிய நாடாக சீனா இருந்துள்ளது. ஆனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சக்கட்டத்தில் இருக்கும் இந்த ஆண்டில் கடன் வழங்கிய நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
    • இலவச அரிசிக்காக வெளிநாடுகளிடம் அரசு கெஞ்சிக்கொண்டு இருந்தது.

    கொழும்பு :

    இலங்கையில் அரிசி பற்றாக்குறை உள்ளது. அதேநேரம் அரிசி இறக்குமதி செய்ய பணம் இல்லை என வேளாண் மந்திரி மகிந்த அமரவீரா சமீபத்தில் தெரிவித்து இருந்தார்.

    இதைப்போல பணம் இல்லாததால் உள்நாட்டு விவசாயிகளிடம் இருந்தும் நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் இல்லாமல் விவசாயிகள் திருப்பி அனுப்பப்படும் செய்திகளை தனியார் தொலைக்காட்சிகள் தொடர்ந்து ஒளிபரப்பி வருகின்றன.

    இந்த விவகாரத்தில் அரசை பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது. இந்த கட்சி எம்.பி. ரோகிணி கவிரத்னே கூறுகையில், 'இலவச அரிசிக்காக வெளிநாடுகளிடம் அரசு கெஞ்சிக்கொண்டு இருந்தது. அதேநேரம் உள்ளூரில் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படவில்லை' என குற்றம் சாட்டினார்.

    அரிசி வாங்குவதற்கு பணமில்லை என்பதற்காக அரசு வெட்கப்பட வேண்டும் எனக்கூறிய அவர், ஆனால் 37 புதிய மந்திரிகளை நியமிக்க அரசிடம் போதுமான பணம் இருப்பதாக தெரிகிறது என்றும் சாடினார்.

    • இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • பொது மக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் அந்நாட்டு அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு ஓடினார். மேலும் ராஜபக்சே குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பதவியை விட்டு விலகினர்.

    இலங்கை நெருக்கடியை தீர்க்க புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்தில் தஞ்சம் அடைந்திருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார்.

    அவர் தற்போது கொழும்பில் உள்ள அரசு பங்களாவில் தங்கி உள்ளார். பொதுமக்கள் மீண்டும் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் பங்களாவை சுற்றி பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். அவரை பாதுகாக்கும் வகையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    இதற்கிடையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று கோத்தபய ராஜபக்சே தங்கி உள்ள வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்கள் 2 பேரும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதார நெருக்கடி சூழல் குறித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் விரைவில் 12 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர். இதில் மகிந்த ராஜபக்சேவின் மூத்த மகன் நமல் ராஜ பக்சேவுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் ரணில் விக்கிரமசிங்கே கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

    இதன் மூலம் மீண்டும் இலங்கையில் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம் தலை தூக்கலாம் என பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதனால் பொது மக்கள் மறுபடியும் போராட்டம் நடத்தலாம் என்ற நிலை உருவாகி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையே புரட்டி போட்டது.
    • அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    கொழும்பு:

    இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசியலையே புரட்டி போட்டது.

    பெட்ரோல்,டீசல். கியாஸ் மற்றும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக பொதுமக்கள கொதித்து எழுந்ததால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டே ஓடினார்.

    இதையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பதவி ஏற்றார்.

    இதையடுத்து அவர் இலங்கையில் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார், இலங்கைக்கு இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகள் உதவி கரம் நீட்டி உள்ளது. ஆனாலும் அங்கு இன்னும் நிலைமை சீரடையவில்லை. விலைவாசியும் குறைந்த பாடில்லை.

    பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களுக்காக அல்லாடி வருகின்றனர்.

    இந்த சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்க கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர்.

    நேற்று அவர்கள் ஒன்று திரண்டு கொழும்பு கலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். அவர்கள் அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

    கையில் பதாகையுடன் அத்தியாவசிய பொருட்கள் விலையை குறைக்ககோரி கோஷம் போட்டனர். இதனால் பதட்டமான நிலை உருவானது. இதையடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    ஏற்கனவே கோத்தபய ராஜபக்சே மீண்டும் இலங்கை திரும்பி உள்ளதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் மறுபடியும் அரசியலில் நுழைய எதிர்ப்பு கிளம்பி உள்ளது.இதனால் அவருக்கு எதிராக போராட்டம் வெடிக்கலாம் என்ற நிலையில் தற்போது பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் அதிபருக்கு வழங்கப்படும் சலுகைகள் கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
    • கோத்தபய ராஜபக்சே யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார்.

    கொழும்பு:

    இலங்கையில் மக்களின் புரட்சி போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே வெளிநாட்டுகளுக்கு தப்பி சென்றார்.

    51 நாட்களுக்கு பிறகு சிங்கப்பூரில் இருந்து கடந்த 3-ந்தேதி கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்பினார். அவருக்கு அரசு சார்பில் பங்களா ஒதுக்கப்பட்டது. அங்கு கோத்தபய ராஜபக்சே தங்கி இருக்கிறார். அவருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    பங்களாவை சுற்றி தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    கோத்தபய ராஜபக்சேவுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் போராட்டக்காரர்கள் அவரை கைது செய்ய வலியுறுத்தி வருகிறார்கள். முன்னாள் அதிபருக்கு வழங்கப்படும் சலுகைகள் கோத்தபய ராஜபக்சேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவுக்கு ஆபத்து உள்ளது என்றும் அவருக்கான பாதுகாப்பை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக இலங்கை பொதுஜன பெர முன கட்சியின் செயலாளர் சாகர காரியவசம் கூறியதாவது:-

    கோத்தபய ராஜபக்சே யுத்த காலத்தில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றினார். இதனால் புலம்பெயர் அமைப்புகளினால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் கோத்தபய ராஜபக்சேவிற்கு முன்னாள் அதிபருக்கு வழங்கப்படும் பாதுகாப்பு மற்றும் வசதிகளை விட அதிக பாதுகாப்பு வழங்க வேண்டும்.

    மேலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள வசதிகள் அல்லது பாதுகாப்பு தொடர்பில் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. நாங்கள் அவரை சந்திக்கச் சென்றோம். ஆனால் அரசியல் குறித்து எதுவும் பேசப்பட வில்லை. எதிர்கால அரசியல் முடிவுகள் குறித்து எங்களிடம் எதுவும் கூறவில்லை. கடந்த ஒன்றரை மாத கால அனுபவங்களை மட்டும் எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜூலை 9-ந்தேதி இலங்கையை விட்டு வெளியேறினார்.
    • கோத்தபய ராஜபக்சே கடந்த 3-ந்தேதி இலங்கை திரும்பினார்.

    கொழும்பு :

    இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே குடும்பமே காரணம் என்று கருதி, பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். அதனால், பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், நிதி மந்திரியாக இருந்த பசில் ராஜபக்சேவும் பதவி விலகினர்.

    கடந்த ஜூலை 9-ந்தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்தனர். அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். ஜூலை 13-ந் தேதி அவர் மாலத்தீவுக்கு தப்பிச்சென்றார். மறுநாள் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார். அதிபர் பதவியை ராஜினாமா செய்தார்.

    அங்கு 4 வாரங்கள் தங்கிய பிறகு தாய்லாந்து சென்றார். தனது குடும்பத்தினர் தங்கி இருக்கும் அமெரிக்காவுக்கு செல்ல அவர் விரும்பினார். ஆனால் விசா கிடைக்கவில்லை. இதனால் கடந்த 3-ந்தேதி இலங்கை திரும்பினார்.

    இந்தநிலையில், புதிய லங்கா விடுதலை கட்சி என்ற அரசியல் கட்சியின் அலுவலகம் திறப்பு விழா பட்டரமுல்லாவில் நடந்தது. அதில் அக்கட்சி தலைவர் குமார வெல்காமா பேசியதாவது:-

    கோத்தபய ராஜபக்சேவுக்கு அரசியல் அறிவு கிடையாது. அரசியலை அரசியல்வாதிகளிடமே விட்டுவிட வேண்டும்.

    அவர் அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட போதே அவர் அரசியலில் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். நாம் கணித்தது சரியானதுதான் என்பதை கடந்த 2 ஆண்டுகால நிகழ்வுகள் நிரூபித்து விட்டன.

    அவர் அரசியலில் மீண்டும் நுழைய போவதாக தகவல் வெளியாகி வருகிறது. மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடுவது பற்றி அவர் நினைத்துக்கூட பார்க்கக்கூடாது என்று நான் சொல்லிக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது.
    • சுமார் 68 ஆயிரம் பேர், நூற்றுக்கு மேற்பட்ட அரசு முகாம்களில் தங்கி உள்ளனர்.

    கொழும்பு :

    இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடந்த 1983-ம் ஆண்டு உள்நாட்டு போர் வெடித்தது. அப்போது முதல், இலங்கையில் இருந்து ஏராளமான தமிழர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து தஞ்சம் அடைந்தனர்.

    தற்போது ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் தங்கி இருப்பதாக தெரிகிறது. அவர்களில் சுமார் 68 ஆயிரம் பேர், நூற்றுக்கு மேற்பட்ட அரசு முகாம்களில் தங்கி உள்ளனர்.

    இதற்கிடையே, போர் முடிந்து விட்டதால், இந்தியாவில் வசித்து வரும் இலங்கை தமிழர்களை மீண்டும் இலங்கையில் குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு ஈழ அகதிகள் மறுவாழ்வு அமைப்பு கோரிக்கை விடுத்தது.

    அதை ஏற்று இலங்கை அதிபர் அலுவலகத்தில் ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதிபரின் செயலாளர் சமன் ஏகநாயகே தலைமையில் இந்த ஆலோசனை நடந்தது. அதில், இலங்கை தமிழர்களை அழைத்து வருவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாட்டில் இருந்து இலங்கை தமிழர்களை அழைத்து வந்து இலங்கையில் மீண்டும் குடியமர்த்துவதற்கான ஏற்பாடுகளை கவனிக்க ஒரு குழுவை இலங்கை அரசு நேற்று அமைத்தது.

    அதிபரின் கூடுதல் செயலாளர் சண்டிமா விக்ரமசிங்கே தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. குடியேற்றப்பிரிவு உயர் அதிகாரி, வெளியுறவு அமைச்சக உயர் அதிகாரி, பதிவாளர் ஜெனரல் துறையின் உயர் அதிகாரி, நீதித்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    இலங்கை தமிழர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான பணிகளை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதர் அலுவலகம் ஒருங்கிணைக்கும் என்று இலங்கை அரசின் இணையதளம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களில் 3 ஆயிரத்து 800 பேர் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்து இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோத்தபய ராஜபக்சேவை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை.
    • கோத்தபய ராஜபக்சே செய்த குற்றங்களுக்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றார்.

    கொழும்பு:

    இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் தவித்த மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டதால் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறினார்.

    மாலத்தீவு, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து நாடுகளில் தஞ்சம் அடைந்திருந்த அவர் 51 நாட்களுக்கு பிறகு நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை திரும்பினார்.

    முன்னாள் அதிபரான கோத்தபய ராஜபக்சேவுக்க இலங்கை அரசு சார்பில் கொழும்பில் பங்களா ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த பங்களாவில் அவர் தங்கியுள்ளார். பங்களாவை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    முன்னாள் அதிபர் ஒருவருக்கு வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் கோத்தபய ராஜபக்சேவுக்கு கொடுக்கப்படும் என்று இலங்கை அதிபரின் செயலாளர் சமன் ஏக நாயக்க தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் மற்றும் சில தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது தொடர்பாக ஆசிரியர் தொழிற்சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கூறும்போது, "இலங்கையில் உள்ள 2.2 கோடி மக்களுக்கு துயரத்தை ஏற்படுத்தியதற்காக அவர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

    கோத்தபய ராஜபக்சேவை எந்த நாடும் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. அவர் மறைந்திருக்க இடமில்லை என்பதால் நாடு திரும்பியுள்ளார். எதுவும் நடக்காதது போல் அவரால் சுதந்திரமாக வாழ முடியாது என்றார்.

    இதே போன்று கோத்தபய ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.

    கோத்தபய ராஜபக்சே நாடு திரும்பியது குறித்து இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜி ஜன பலவேகயா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் கூறும்போது, கோத்தபய ராஜபக்கே மீது வழக்கு தொடரப்பட வேண்டும் என்றார்.

    முன்னாள் எம்.பி. அஜித் பெரைரா கூறும்போது, "அதிபர் பதவிக்கு முன்னரும், அதிபராக இருந்த காலத்திலும் கோத்தபய ராஜபக்சே செய்த குற்றங்களுக்கு அவர் பொறுப்பு ஏற்க வேண்டும்" என்றார்.

    • பொதுமக்கள் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்.
    • தலைநகரின் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு.

    கொழும்பு:

    கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் ராஜபக்சே சகோதரர்களின் அரசுக்கு எதிராக சாலையில் இறங்கி போராட்டம் நடத்தினர். கடந்த ஜூலை மாதம் 9 ந் தேதி கொழும்பில் உள்ள அதிபர் மாளிகையை கைப்பற்றிய போராட்டக்காரர்கள் அதில் குடிபுகுந்தனர்.

    அதற்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறிய அப்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவியை துறந்து விட்டு ஜூலை 13 அன்று நாட்டை விட்டே வெளியேறினார். முதலில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்த அவர் அதன் பிறகு சிங்கப்பூர் சென்றார். அங்கிருந்து வெளியேறிய அவர் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார்.

    அவரது கட்சி ஆதரவில் ரணில் விக்ரமசிங்கே இலங்கை அதிபராக பதவியேற்ற நிலையில், மீண்டும் நாடு திரும்ப கோத்தபய ராஜபச்சே முடிவு செய்திருந்தார். அதன்படி நேற்றிரவு அவர், தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் வழியாக இலங்கைக்கு வந்து இறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பண்டார நாயக்கே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து இறங்கி கோத்தபய, அங்கிருந்து எந்த இடத்திற்கு சென்றார் என்பது குறித்து தகவல்கள் இல்லை. இந்நிலையில் கோத்தபய இலங்கை வந்துள்ளதால் மீண்டும் அவருக்கு எதிராக பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் கொழும்புவின் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • இலங்கைக்கு கடன் வழங்க சர்வதேச நிதியம் நடவடிக்கை.
    • சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த ஒப்பந்தம் ஆறுதல்.

    கொழும்பு:

    பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, மருந்து, எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்கள் நடத்திய போராட்டத்தில் அநநாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்ற நிலையில், அவரது தலைமையிலான அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியை நாடியது.

    இதையடுத்து சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு வந்தது. அவர்களுக்கும், இலங்கை அரசு அதிகாரிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் முடிவில் இருதரப்புக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, முதல் கட்டமாக இலங்கைக்கு அடுத்த 4 ஆண்டுகளுக்கு 290 கோடி டாலர் (ரூ.23 ஆயிரத்து 200 கோடி) கடன் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புக்கொண்டது.

    சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுடன் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆலோசனை நடத்தினார். அப்போது பேசிய ரணில் விக்கிரமசிங்கே, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பட்டுள்ள இந்த உடன்படிக்கை இலங்கை வரலாற்றில் முக்கியமான முன்னேற்றம் என்றும், புதிய பொருளாதார மறுமலர்ச்சிக்கான ஆரம்பம் என்றும் குறிப்பிட்டார்.

    தற்போதைய நிலையில் நாடு திவால் நிலையில் இருந்து விடுபடுவது முக்கியம் என குறிப்பிட்ட அவர், கடன்களை செலுத்துவதன் மூலம் சமூக-பொருளாதார பிரச்சினைகளை தீர்க்க இந்த உடன்படிக்கை சற்று ஆறுதல் அளிப்பதாக அவர் கூறினார். 

    • இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.
    • கோத்தபய ராஜபச்சே கடந்த மாதம் இறுதியில் இலங்கை திரும்புவார் என தகவல் வெளியானது.

    கொழும்பு:

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். ஆட்சியில் இருந்த ராஜபக்சே குடும்பத்தினரை எதிர்த்து அவர்கள் கொதித்து எழுந்ததால் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபச்சே பதவியை துறந்து விட்டு நாட்டை விட்டே ஓடி விட்டார்.

    முதலில் மாலத்தீவில் தஞ்சம் அடைந்த அவர் அதன் பிறகு சிங்கப்பூர் சென்றார்.

    அங்கிருந்து வெளியேறிய அவர் தற்போது தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தங்கி இருக்கிறார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவர் ஓட்டல் அறையை விட்டு வெளியே வரக்கூடாது என அந்நாட்டு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    இந்த நிலையில் கோத்தபய ராஜபச்சே கடந்த மாதம் இறுதியில் இலங்கை திரும்புவார் என தகவல் வெளியானது. ஆனால் அவர் வந்தால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட பொதுமக்கள் திட்டமிட்டு இருந்ததாக தெரிய வந்தது. இதனால் அவர் சொந்தநாடு திரும்ப முடியாமல் தவித்தார்.

    மேலும் குடும்பத்தினருடன் அவர் அமெரிக்காவில் குடியேற முடிவு செய்ததாகவும், இதற்காக அவர் வக்கீல் மூலம் கிரீன்கார்டு பெற முயற்சி செய்ததாகவும் செய்திகள் பரவியது. ஆனால் கோத்தபய ராஜபக்சே சொந்த நாட்டுக்கு வருவதையே விரும்பினார்.

    ராஜபக்சே சகோதரர்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனா கட்சி தற்போதைய அதிபரான ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இந்த கட்சியை சேர்ந்த தலைவர்கள் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து கோத்தபய ராஜபக்சே இலங்கை திரும்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதை ஏற்று அவர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்த சூழ்நிலையில் கோத்தபய ராஜபக்சே நாளை (3-ந்தேதி) இலங்கை திரும்ப உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது ஏற்கனவே இலங்கை மக்கள் இன்னும் கோபமாக இருப்பதால் அவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதற்காக இலங்கை அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
    • நாட்டை மீட்டெடுக்கும் வகையிலான இடைக்கால பட்ஜெட்டை இலங்கை அதிபர் தாக்கல் செய்தார்.

    கொழும்பு:

    அண்டை நாடான இலங்கை வரலாறு கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. மக்களின் போராட்டங்களால் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டது. இலங்கை அதிபராக முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

    இந்நிலையில், நாட்டின் இடைக்கால பட்ஜெட்டை நிதி மந்திரி பொறுப்பையும் வகிக்கும் ரணில் விக்ரமசிங்கே அந்த நாட்டின் பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்த பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதாரத்தை மீட்க சில நடவடிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இது பாதிப்புகளில் இருந்து மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்படுத்தும் வகையில் ஐ.எம்.எப்., எனப்படும் சர்வதேச நிதியத்தின் கடனுதவி பெறுவதற்கான பேச்சு இறுதிக்கட்டத்தில் உள்ளது. விரைவில் பொருளாதார மீட்பு திட்டம் உறுதி செய்யப்படும்.

    பல நாடுகளிடம் இருந்து வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்துவதை மாற்றி அமைப்பது தொடர்பாக அந்த நாடுகளுடன் பேச்சு நடந்து வருகிறது. மிக விரைவில் நாடு பழைய பொருளாதார நிலைக்கு திரும்பும் என தெரிவித்தார்.

    ×