ராஜபக்சே சகோதரர்களை சந்தித்தார் சுப்ரமணிய சாமி

கொழும்புவில் ராஜபக்சே சகோதரர்களை சுப்ரமணிய சாமி நேரில் சந்தித்து பேசினார். அதிபர் பதவியில் இருந்து விலகி வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் தாய்நாடு திரும்பினர்.
ராஜபக்சேவை சந்தித்த சுப்ரமணிய சாமி
ராஜபக்சேவை சந்தித்த சுப்ரமணிய சாமி
Published on

கொழும்பு:

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவர் சுப்ரமணிய சாமி. இலங்கை முன்னாள் அதிபர்களான மகிந்த மற்றும் கோத்தபய ராஜபக்சேவின் குடும்ப நண்பர் ஆவார். அவர்களை கொழும்புவில் அடிக்கடி சந்தித்தும் வருகிறார்.

இந்நிலையில், கொழும்புவில் நேற்று முன்தினம் மகிந்த ராஜபக்சே வீட்டில் நடந்த நவராத்திரி பூஜையில் சுப்ரமணிய சாமி பங்கேற்றார். அப்போது அவரைச் சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நேற்று கோத்தபய ராஜபக்சேவையும் சந்தித்துப் பேசினார். இந்த தகவல்களை ராஜபக்சே குடும்ப வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடு தப்பி ஓடிய கோத்தபய ராஜபக்சே சமீபத்தில்தான் தாய்நாடு திரும்பினார். அவரைச் சந்தித்த முதல் வெளிநாட்டு தலைவர் சுப்ரமணிய சாமி என்பது குறிப்பிடத்தக்கது

X

Maalai Malar
www.maalaimalar.com