என் மலர்
தென் கொரியா
- இரு நாடுகளுக்கும் தேவைகள் உள்ளதால் பரஸ்பரம் உதவி கொள்ள முடியும்
- ஐ.நா. சபை தீர்மானத்திற்கு இது எதிரானது என்கிறது தென் கொரியா
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பை ஏற்று வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் ரஷியா சென்றுள்ளார். அங்கு இரு நாட்டு அதிபர்களுக்கிடையே அதிகாரிகள் யாரும் இன்றி தனிப்பட்ட சந்திப்பு சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது.
கடந்த 2022 பிப்ரவரியில் இருந்து உக்ரைனுடன் போரில் ஈடுபட்டு வரும் ரஷியாவிற்கு ஆயுதங்களின் தேவை அதிகரித்திருக்கிறது.
அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளிடம் வெளிப்படையான எதிர்ப்பை காட்டி வரும் வட கொரியாவிற்கு உணவு தானிய தேவையும், அந்நாட்டு ராணுவத்திற்கான அதி நவீன ஆயுதங்களுக்கான தொழில்நுட்ப உதவியும் தேவைப்படுகிறது.
எனவே, இரு நாடுகளும் பரஸ்பரம் உதவி கொள்ளும் நிலையில் உள்ளதால், ஒருவர் தேவையை மற்றவர் நிறைவேற்ற முடியும். இப்பின்னணியில் சந்தித்து கொண்ட தலைவர்கள் இருவரும் பரஸ்பரம் ஒத்துழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், இரு நாட்டின் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பிற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்த நிலையில், வட கொரியாவிற்கு ரஷியா வழங்கப்போகும் அதிநவீன ஆயுத மற்றும் உளவு விண்கலத்திற்கான தொழில்நுட்ப உதவி, தென் கொரியாவில் போர் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது.
இது குறித்து தென் கொரியாவின் வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லிம் சூ-சுக், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்..,
"உலக நாடுகளின் எச்சரிக்கையையும் மீறி விண்கலன் மேம்பாடு மற்றும் பரஸ்பர ராணுவ ஒத்துழைப்பு ஆகியவை குறித்து இரு நாட்டு அதிபர்களும் பரஸ்பரம் ஒத்துழைக்க முனைவது குறித்து தென் கொரியா கவலையும், வருத்தமும் தெரிவிக்கிறது. அணு ஆயுத மற்றும் ஏவுகணை மேம்பாடு சம்பந்தமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் ஈடுபடுவது ஐ.நா.சபையின் தீர்மானங்களுக்கு எதிரானது. வட கொரியாவிற்கு ராணுவ ஒத்துழைப்பு அளித்தால், தென் கொரியாவிற்கும் ரஷியாவிற்குமான உறவில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படும் என்பதை ரஷியா உணர வேண்டும்," என்று அதில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
- அரையிறுதியில் சீன தைபே அணியிடம் தோல்வி
- சரத் கமல், சத்தியன் நேர்செட்டில் தோல்வியடைந்தனர்
ஆசிய சாம்பியன்ஷிப் டேபிள் டென்னிஸ் போட்டி தென்கொரியாவில் உள்ள பியாங்சாங்கில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் அணிக்கான அரையிறுதியில் இந்திய அணி சீன தைபே அணியை எதிர்கொண்டது.
இந்திய அணியில் சரத் கமல், ஜி. சத்தியன், ஹர்ப்ரீத் ஆகியோர் இடம் பிடித்திருந்தனர். சரத் கமல் சுயாங் சி-யுயானை எதிர்கொண்டார். இதில் சரத் கமல் 6-11, 6-11, 9-11 என தோல்வியடைந்தார்.
சத்தியன் 5-11, 6-11, 10-12 என லின் யுன்-ஜுவிடம் தோல்வியடைந்தார். ஹர்ப்ரீத் 6-11, 7-11, 11-7, 9-11 என தோல்வியடைந்தார்.
இதனால் இறுதி வாய்ப்பை இழந்த இந்திய ஆண்கள் அணி வெண்கலப் பதக்கத்தோடு விடைபெற்றது.
- கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
- தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
சியோல்:
தென்கொரியா லெசூர் மாகாணம் சியோங்கனம் பகுதியில் ஒரு வணிக வளாகம் உள்ளது. இங்கு நேற்று இரவு ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர்.பலர் அங்குள்ள கடைக்குள்ளும், வெளியிலும் இருந்தனர்.
அப்போது வணிக வளாகத்துக்கு வேகமாக ஒரு கார் வந்தது. அதை ஓட்டி வந்தவர் திடீரென நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காரை நிறுத்தி விட்டு மர்ம வாலிபர் கீழே இறங்கினான். திடீரென அவன் கையில் வைத்திருந்த கத்தியால் கண்ணில் பட்டவர்களை எல்லாம் சரமாரியாக குத்தினான். இதில் பலருக்கு கத்திக்குத்து விழுந்தது.
இதை பார்த்ததும் பொது மக்கள் உயிருக்கு பயந்து நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இந்த கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த 9 பேர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தனர். இது பற்றி அறிந்ததும் பாதுகாப்பு படை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பொதுமக்கள் மீது காரை ஏற்றி கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவருக்கு 22 வயது இருக்கும். அவர் ஏன் இந்த தாக்குதலில் ஈடுபட்டார் என தெரியவில்லை. அவருக்கு சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இது தொடர்பாக அந்த வாலிபருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கார் ஏற்றியதிலும், கத்திக்குத்திலும் படுகாயம் அடைந்த 14 பேர் ஆஸ்பத்தி ரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதில் 2 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தென்கொரியாவில் இந்த ஆண்டு இது போன்ற சம்பவம் நடந்துள்ளது இது 2- வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது.
- இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
சியோல்:
உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது.
அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா ஏவுகணைச் சோதனை நடத்தி வரும் நிலையில், தென் கொரியாவுக்கு சுமார் 150 டோமாஹாக் ஏவுகணைகளை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை அமெரிக்கா அனுப்பியது. யுஎஸ்எஸ் மிச்சிகன் எனப்படும் இந்த போர்க்கப்பல் உலகின் மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும்.
இந்நிலையில், வடகொரியா தனது கிழக்கு கடற்கரையில் இருந்து ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை கடலில் செலுத்தி சோதனை நடத்தியிருப்பதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவின் முதல் கப்பல் வந்தபோது, வடகொரிய அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்தியது
- தற்போது 2-வது கப்பல் வந்தநிலையில், வடகொரியா இதுகுறித்து கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை
வடகொரியாவின் ராணுவ அத்துமீறல்களை எதிர்கொள்ள தென்கொரியா, அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. சில தினங்களுக்கு முன் யுஎஸ்எஸ் கென்டுக்கி (USS Kentucky) எனும் அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல், தென் கொரிய துறைமுகத்தை வந்தடைந்தது.1980-களுக்குப் பிறகு தென்கொரியாவிற்கு வருகை தரும் ஒரு அமெரிக்க அணு ஆயுத ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் இதுதான்.
மேலும் வட கொரியாவுடன் அணுஆயுத போர் ஏற்பட்டால் பதிலடி கொடுக்க அமெரிக்காவிற்கும் தென்கொரியாவிற்கும் இடையே பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டது. யுஎஸ்எஸ் கென்டுக்கியின் வருகைக்குப் பிறகு கடந்த வாரம், 2 வெகுதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை வடகொரியா ஏவியது. நேற்று முன் தினமும் மீண்டும் சில குரூஸ் ஏவுகணைகளை ஏவியது.
இந்த நிலையில் இன்று இரண்டாவதாக யுஎஸ்எஸ் அனாபோலிஸ் (USS Annapolis) எனும் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தென் கொரியாவை வந்தடைந்தது.
"தென்கொரியாவின் தெற்கு தீவான ஜெஜூவில் உள்ள கடற்படை தளத்தில் அது நிறுத்தப்பட்டிருக்கிறது. அறிவிக்கப்படாத சில செயல்பாடுகளுக்காக ராணுவ தளவாடங்கள் அதில் ஏற்றப்பட்டிருக்கிறது. இரு நாடுகளுக்கான கூட்டணியின் 70-வது ஆண்டு நிறைவை நினைவு கூறும் வகையில் யுஎஸ்எஸ் அனாபோலிஸின் வருகையுடன் ஒரு ஒருங்கிணைந்த பாதுகாப்பு நிலைப்பாட்டை வலுப்படுத்த இருநாட்டு கடற்படைகளும் திட்டமிட்டுள்ளன" என்று தென்கொரிய கடற்படை தெரிவித்துள்ளது.
வெகுதூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தாங்கிய நீர்மூழ்கிக் கப்பலான அமெரிக்காவின் யுஎஸ்எஸ் கென்டுக்கி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை தென் கொரிய துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.
யுஎஸ்எஸ் கென்டுக்கியை போல் யுஎஸ்எஸ் அனாபோலிஸ் அணுஆயுதம் தாங்க கூடியதல்ல. ஆனால் போரில் கடற்படை தாக்குதல் மற்றும் கப்பல் எதிர்ப்பிலும் நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பிலும் நிபுணத்துவம் பெற்றது.
கடந்த செப்டம்பரில் கொரிய தீபகற்பத்தில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் முத்தரப்பு நீர்மூழ்கி எதிர்ப்பு பயிற்சியிலும் இது இணைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்றனர்.
- சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு ஏற்கனவே 2 சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளது.
கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி தொடர்ந்து சிறப்பான வெளிப்படுத்தியது.
காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை வென்று இறுதிச்சுற்றை உறுதி செய்தனர்.
இந்நிலையில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப்போட்டி இன்று நடந்தது. இதில், சாத்விக்-சிராஜ் ஜோடி இந்தோனேசியாவின் ஆல்பியன் ஆர்டியாண்டோ ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், சாத்விக்-சிராஜ் ஜோடி 17-21, 21-23, 21-14 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கொரிய ஓபன் சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
சாத்விக்-சிராக் ஜோடி கடந்த மாதம் இந்தோனேசிய ஓபனிலும், கடந்த மார்ச் மாதம் சுவிஸ் ஓபனிலும் சாம்பியன் பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
- சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்தனர்.
- சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றுள்ளது.
கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், இன்று அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டனர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 24-22 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில் முதல் முறையாக இன்று வெற்றி பெற்றுள்ளனர்.
சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இந்தோனேசிய சூப்பர் 1000 மற்றும் சுவிஸ் ஓபன் சூப்பர் 500 என இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.
- தென்கொரியாவில் அமெரிக்க ராணுவம் அதிகரிப்பை தொடர்ந்து வடகொரியா எச்சரிக்கை
- இன்று காலை குரூஸ் ஏவுகணைகளை அதிக அளவில் ஏவி அச்சுறுத்தியது
ராணுவ உதவி அளிக்கும் விதமாக தென்கொரிய- அமெரிக்க அணுஆயுத ஆலோசனை குழுவின் முதல் சந்திப்பு தென்கொரியாவில் நடந்தது.
இதன் பின்னணியில் அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கெண்டுக்கி (USS Kentucky) எனும் அணு ஆயுத ஏவுகணையை தாங்கி செல்லும் 18,750 டன் எடையுள்ள நீர்மூழ்கி கப்பல் ஒன்று தென்கொரியாவின் தென்கிழக்கு துறைமுக பூஸான் நகரை வந்தடைந்தது.
"பல ராணுவ மூலோபாயங்களை கையாண்டு வருவதையும், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் நீர்மூழ்கி கப்பலை தென்கொரியாவில் நிலைநிறுத்துவதையும் அமெரிக்கா நிறுத்தாவிட்டால் பதில் நடவடிக்கையாக அணுஆயுத பிரயோகம் செய்வோம்" என வடகொரியா எச்சரித்தது.
தென்கொரியாவை அச்சுறுத்தும் விதமாக வடகொரியா நெடுந்தூரம் சென்று தாக்கும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் 2 குறுகிய தூர ஏவுகணைகளையும் இம்மாதம் 12-ம்தேதி பரிசோதனை செய்தது. இதனையடுத்து கொரிய எல்லையில் பதட்டம் உருவானது. இதற்கிடையே குரூஸ் ஏவகணைகளை அடுத்தடுத்து ஏவியது.
இதுகுறித்து தென்கொரியா அமைச்சரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வடகொரியா ஏதேனும் அணு ஆயுத தாக்குதல் நடத்தினால் அந்நாட்டின் கிம் ஜாங்-உன் ஆட்சியின் முடிவாக அது அமைந்துடும். தென்கொரிய- அமெரிக்க கூட்டணிக்கு எதிராக அணு ஆயுத தாக்குதல் நடைபெற்றால் அதற்கு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
வடகொரியாவின் அணுஆயுத மற்றும் ஏவுகணை பரிசோதனைகளும் ஐநா பாதுகாப்பு சபையின் தீர்மாங்னகளுக்கெதிரான சட்ட விரோத நடவடிக்கைகளாகும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
- ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
யோசு:
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி 21-14, 21-17 என்ற நேர்செட்டில் ஜப்பானின் டகுரோ ஹோகி, யூகோ கொபாயஷி இணையை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
நாளை நடைபெறும் அரையிறுதியில் இந்திய ஜோடி, ஜப்பான் ஜோடியை எதிர்கொள்கிறது.
- ஏவப்பட்ட ஏவுகணையின் வகையை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த ஏவுதல் நடப்துள்ளது.
ஜப்பான் கடல் என்று அழைக்கப்படும் கிழக்குக் கடலில் வட கொரியா ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாக, தென் கொரியா தெரிவித்துள்ளது.
வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே அதிகரித்து வரும் பதட்டங்களை எதிர்கொள்ளும் வகையில், சியோல் மற்றும் வாஷிங்டன் பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகப்படுத்தியுள்ள நிலையில் இந்த ஏவுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜப்பானின் கடலோர காவல்படையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் ராணுவம் ஏவப்பட்ட ஏவுகணை வகையை ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
- போட்டின் மூன்றாவது நாளான நேற்று வரை இந்தியா 4 தங்கம் வென்றுள்ளது.
தென் கொரியா, சாங்வோன் நகரில் ஐ.எஸ்.எஸ்எப்.பின் ஜூனியர் உலக சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில், ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்திய அணி தங்க பதக்கம் வென்றுள்ளது.
இதேபோல், மகளிர் போட்டியில் இந்திய வீராங்கனை ரைசா தில்லான் வெள்ளி பதக்கம் வென்று உள்ளார்.
ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனி நபர் போட்டியில் இந்தியாவின் உமாமகேஷ் மதினேனி வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
போட்டின் மூன்றாவது நாளான நேற்று வரை இந்தியா 4 தங்கம் வென்றுள்ளது. இதன்மூலம், சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது.
- பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
- தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சியோல்:
தென்கொரியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அங்கு பல வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. அங்குள்ள நோன்சான், யோங்ஜூ ஆகிய பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தது.
அதேபோல் செஜோங் பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கி சுமார் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அங்கு பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனால் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.






