search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்
    X

    கொரிய ஓபன் பேட்மிண்டன்: சாத்விக்-சிராக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேற்றம்

    • சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்தனர்.
    • சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றுள்ளது.

    கொரிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி, தென்கொரியாவின் யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவிவில் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. நேற்று நடந்த காலிறுதி ஆட்டத்தில் ஜப்பான் ஜோடியை வீழ்த்திய இவர்கள், இன்று அரையிறுதி ஆட்டத்தில் சீனாவின் லியாங் வெய் கெங்- வாங் சாங் ஜோடியை எதிர்கொண்டனர்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சாத்விக்-சிராக் ஜோடி 21-15, 24-22 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். சீன ஜோடியிடம் இதற்கு முன்பு இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வியடைந்த நிலையில் முதல் முறையாக இன்று வெற்றி பெற்றுள்ளனர்.

    சாத்விக்-சிராக் ஜோடி இந்த ஆண்டு இந்தோனேசிய சூப்பர் 1000 மற்றும் சுவிஸ் ஓபன் சூப்பர் 500 என இரண்டு சர்வதேச பட்டங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×