என் மலர்
பாகிஸ்தான்
- தீ விபத்தில், 10 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
- விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைத்தனர்.
பாகிஸ்தான் பெஷாவர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சவுதி ஏர்லைன்ஸ் விமானம் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தரையிறங்கும் கருவியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், தீப்பிடித்த போதிலும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் கவனிப்பாளர் தெரிவித்துள்ளார். மேலும், விமானத்தில் இருந்து 276 பயணிகளும், 21 பணிாளர்களும் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
தீ விபத்தில், 10 பயணிகள் காயமடைந்துள்ளனர். அனைத்து 276 பயணிகளும் 21 பணியாளர்களும் சறுக்கு பயன்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் தீயணைப்பு படையினர் இணைந்து தீயை அணைத்தனர்.
தீ விபத்துக்கான காரணம் குறித்து சவுதி ஏர்லைன்ஸ் விமானம் நிறுவனம் விசாரித்து வருகிறது.
- மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார்.
- மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்தியுள்ளனர்
செலவழித்து மருத்துவம் பார்க்க வசதி இல்லாததால் பிறந்து 15 நாட்களே ஆன தனது பெண் குழந்தையை தந்தை உயிருடன் புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள நவுசாகர் பெரோஸ் நகரத்தில் வாழ்ந்து வந்த தாயாப் என்ற நபரின் மனைவி கடந்த 15 நாட்கள் முன் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இந்நிலையில் குழந்தையின் ஆரோக்கியம் குன்றியதால் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மிகுந்த ஏழ்மையில் வாழ்ந்து வந்த தாயாபிடம் மருத்துவ செலவுக்கு பணம் இல்லததால், பச்சிளம் குழந்தையை உயிருடன் மண்ணில் குழிதோண்டி புதைத்துள்ளார். இதனால் குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்தது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் தந்தை தாயாபை கைது செய்துள்ளனர். மருத்துவ செலவுக்கு பணம் இல்லத்ததால் குழந்தையை புதைத்தாக தாயாப் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும் புதைக்கப்பட்ட குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாகிஸ்தான் தலைநகர் லாகூர் மாகாணத்தில் நடந்த மற்றொரு சம்பவத்தில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து தங்களின் வீட்டில் வேலை செய்து வந்த 13 வயது சிறுமியை தொடர்ச்சியாக பலமுறை நிர்வவணப்படுத்தி அடித்து துன்புறுத்திய சம்பவமும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
- முகரத்தின்போது வெறுப்பு பேச்சு, வன்முறையை கட்டுப்படுத்த பஞ்சாப் மாகாண அரசு முடிவு.
- மரியம் ஷெபாஸின் கேபினட் கமிட்டியின் பரிந்துரை அடிப்படையில் மத்திய அரசுக்கு பரிந்துரை.
பெரும்பாலான பாகிஸ்தான் மக்கள் வாட்ஸ்அப், பேஸ்புக், டிக்டாக், இன்ஸ்டாகிராம், யூடியூப், எக்ஸ் போன்ற சமூக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகின்றன. இந்த நிலையில் ஜூலை 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை ஒரு வாரத்திற்கு வெறுப்பு பேச்சு போன்றவற்றை தவிர்க்க பாகிஸதானில் தடைவிதிக்கப்படுகிறது.
முகரம் பண்டியை முன்னிட்டு ஜூலை 13-ந்தேதி முதல் ஜூலை 18-ந்தேதி வரை (முகரம் மாதம் 6-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை) பஞ்சாப் மாகாணத்தில் தடைவிதிக்க வேண்டும் அம்மாகாண முதல்வர் மரியம் நவாஸின் சட்டம் ஒழுங்கிற்கான கேபினட் கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.
வெறுப்பு பேச்சு, வன்முறை போன்ற சம்பவங்களை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக பஞ்சாப் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பஞ்சாப் அரசு ஷெபாஸ் ஷெரீப் தலைமியிலான மத்திய அரசுக்கு இது தொடர்பாக வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு தடைவிதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை ஜெனரல் ஆசிம் முனிர் ஏற்கனவே, சமூக வலைத்தளங்களை தீய மீடியா என குறிப்பிட்டள்ளார். அவற்றை டிஜிட்டில் பயங்கரவாதம் என அழைத்த அவர், அதை எதிர்த்து போராடுவது அவசம் என வலியுறுத்தியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் தேர்தல் முடிவுகள் மாற்றப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் எக்ஸ் தளம் முடக்கப்பட்டது. ஏப்ரல் 2022-ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் வெளியேற்றப்பட்டதில் இருந்து ராணுவம் மற்றும் அரசாங்கம் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் மாகாணத்தில் சுமார் 12 கோடி மக்கள் வசித்து வருகிறார்கள்.
- பதவியில் இருந்தபோது வாங்கிய பரிசு பொருட்களை சட்டவிரோதமாக விற்றதாக குற்றச்சாட்டு.
- தவறான அறிக்கைகளை அளித்ததாக தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்தது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான். இவர் பிரதமராக இருந்தபோது பெற்ற பரிசுப் பொருட்களை சட்டவிரோதமா விற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இம்ரான் கான் இது தொடர்பாக பொய்யான தகவல்களை அளித்ததாக தேர்தல் ஆணையம் அவரை தேர்தலில் போட்டியிட அனுமதி மறுத்தது.
மேலும், அவரது கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தினர்.
இதனால் பாகிஸ்தான் அரசு இம்ரான் கான் மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
இம்ரான் கான் பிரதமர் பதவியை இழந்ததும் அவர் மீது பல்வேறு வழக்குகள் போடப்பட்டன. இதில் இரண்டு வழக்குகளில் இருந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் போராட்டம் செய்யப்பட்ட வழக்கில் பெற்ற தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என இம்ரான் கான் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீடு மனு மீதான விசாரணை நடைபெற்று கடந்த வாரம் தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது. இந்த நிலையில் தற்போது இம்ரான் கான் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதேபோல் ஷா மெஹ்மூத் குரேசி, ஷேக் ரஷீத், ஆசாத் குயேசர், ஷெர்யார் அப்ரிடி, பைசல் ஜாவித், ராஜா குர்ராம் நவாஸ், அலி நவாஸ் அவான் போன்றோரும் விடுவிக்கப்பட்டனர்.
இஸ்லாத்திற்கு எதிராக திருமணம் செய்ததாக இவர் மீது வழக்கு தொடர்ந்து 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் விடுவிக்கப்பட்டால் இம்ரான் கான் சிறையில் இருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது.
- டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது.
- இந்தத் தோல்வியால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.
இஸ்லாமாபாத்:
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இந்தத் தோல்வியால் வீரர்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர். சில முன்னாள் வீரர்கள் ஒட்டுமொத்த அணியையும் நீக்கவேண்டும் என கோரினர். அணிக்குள் குழுவாதம் பற்றிய வதந்திகளும் உள்ளன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அணிக்குள் சில அரசியல் இருப்பதாகவும், சில வேறுபாடுகள் இருப்பதாகவும் மக்கள் கூறுகின்றனர்.
ஏதேனும் வேறுபாடுகள் இருந்தாலும், நாங்கள் இதற்கு முன் ஆட்டங்களை இழந்திருக்கிறோம். இது வெறும் வெளிப்புற உரையாடல்.
இதே அணி இறுதிப்போட்டி, அரையிறுதியில் விளையாடியிருந்தாலும் கோப்பையை வெல்லவில்லை என்பது உண்மைதான்.
அணி எதிர்கொள்ளும் விமர்சனம் நியாயமானது. நாங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால் இதற்கு நாங்கள் தகுதியானவர்கள். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத வீரர்களால் வெற்றிபெற முடியாது.
டி20 உலகக் கோப்பையில் எங்கள் ஆட்டத்தில் நாங்கள் ஏமாற்றம் அடைந்துள்ளோம். நமது இழப்புகளுக்குப் பின் பல காரணங்கள் உள்ளன. ஒரு அணி தோற்றால் பந்துவீச்சும், பேட்டிங்கும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல முடியாது என தெரிவித்தார்.
- இம்ரான்கானை உடனே விடுவிக்க வேண்டும் என ஐ.நா.குழு வலியுறுத்தியது.
- இது உள்நாட்டு விவகாரம் என பாகிஸ்தான் அரசு பதிலளித்துள்ளது.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பல்வேறு வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
இதற்கிடையே, முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் தடுப்புக் காவல் தன்னிச்சையானது மற்றும் சர்வதேச சட்டத்தை மீறுவதாக உள்ளது. எனவே அவரை உடனடியாக விடுதலை செய்து இழப்பீடு வழங்கவேண்டும் என தன்னிச்சையான தடுப்புக்காவல் தொடர்பான ஐக்கிய நாடுகளின் செயற்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், ஏப்ரல் 2022-ல் இம்ரான்கான் வெளியேற்றப்பட்டதிலிருந்து அவருக்கு எதிராக தொடரப்பட்ட பல வழக்குகள் குறித்து ஐ.நா. குழு தீவிர கவலைகளை எழுப்பியது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் குழுவின் இந்தக் கோரிக்கைக்கு பாகிஸ்தானின் அரசு, இது உள்நாட்டு விவகாரம் என பதிலளித்துள்ளது.
- அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன.
- சிகிச்சை பலனின்றி 568 பேர் கடந்த 6 நாட்களில் பலியாகி உள்ளனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசுகிறது. குறிப்பாக அங்குள்ள சிந்து மாகாணத்தில் 50 டிகிரி செல்சியசை தாண்டி வெயில் கொளுத்துகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வெயில் அளவு ஆகும்.
எனவே பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. அதேசமயம் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் சொல்லொணா துயரத்தை அனுபவித்து வருகின்றனர்.
இதற்கிடையே அதிக வெயில் காரணமாக பலருக்கு நீரிழப்பு, காய்ச்சல், மூச்சுத்திணறல் போன்றவை ஏற்பட்டன. குறிப்பாக முதியவர்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
எனவே அவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி 568 பேர் கடந்த 6 நாட்களில் பலியாகி உள்ளனர். மேலும் பலர் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதனையடுத்து சிந்து மாகாணத்தில் சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இதனால் டாக்டர், நர்சு உள்ளிட்ட சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட விடுப்பை அரசாங்கம் ரத்து செய்துள்ளது.
மேலும் வெயிலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவம் தற்காலிக சிறப்பு மருத்துவ முகாம்களையும் அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறது.
- இம்ரான் கானை புஷ்ரா பிபி சட்டவிரோதமாக திருமணம் செய்ததாக முன்னாள் கணவர் குற்றச்சாட்டு.
- ஏழு வருட தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
முஸ்லிம் பெண் ஒருவர் விவாகரத்து பெற்ற பிறகு அல்லது அவருடைய கணவர் இறந்த பிறகு 2-வது திருமணம் செய்து கொள்ள ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருக்க வேண்டும். இந்த மீறி சட்டவிரோதமாக இம்ரான் கான், புஷ்ரா பிபியை திருமணம் செய்து கொண்டதாக புகார் எழும்பியது.
இது தொடர்பான மாவட்ட செசன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இட்டாட் வழக்கு என மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது. இந்த வழக்கில் பிப்ரவரி 3-ந்தேதி இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி ஆகியோருக்கு நீதிமன்றம் ஏழு வருடம் தண்டனை விதித்தது. அத்துடன் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் வழக்கு தொடர்ந்தனர். நேற்று முன்தினம் வழக்கு தொடர்பான விசாரணை முடிவடைந்தது உத்தரவை கூடுதல் மாவட்டம் மற்றும் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி அஃப்சல் மஜோகா, இருவரும் கோரிக்கையையும் நிராகரித்தார்.
எப்படியும் இந்த வழக்கில் தீர்வு கிடைக்கும் என எதிர்பார்த்த இருவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின் அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளது.புஷ்ரா பிபி மீதும் சில வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
புஷ்ரா பிபியின் முன்னாள் கணவர் கவர் மனேகா இருவருக்கும் எதிராக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வழக்கு தொடர்ந்தார். இட்டாட் கட்டயாம் காத்திருக்கும் காலத்தை கடைபிடிக்காமல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்கள் திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும் கூறியிருந்தார்.
இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் 10 நாட்களுக்குள் இம்ரான் வழக்கில் தீர்ப்பு வழங்க வேண்டும் எனக் கூறியிருந்தது. அதன்படி நீதிபதி அஃப்சல் மஜோகா முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
முதன்முறையாக வழக்கு விசாரணையின்போது ஷாருக் அர்ஜுமந்த் என்ற நீதிபதி தண்டனை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ரெயிலில் தண்ணீர் தெளித்து பயணிகளை இளைஞர்கள் தொந்தரவு செய்தனர்.
- இதையடுத்து ரெயிலை நிறுத்திய அவர்களில் சிலர் அந்த இளைஞர்களை சரமாரி தாக்கினர்.
இஸ்லாமாபாத்:
டிக்டாக் செயலி மூலம் வீடியோக்கள் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடும் பொழுதுபோக்கு அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் இதனால் சிக்கல்களிலும் சிலர் சிக்கி கொள்கிறார்கள். இதுபோன்ற ஒரு சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.
பாகிஸ்தானில் ரெயில்வே தண்டவாளம் அருகே நீர்நிலையில் இளைஞர்கள் சிலர் குளித்துக் கொண்டும், வாகனத்தைக் கழுவி கொண்டும் இருந்தனர்.
அப்போது அந்தப் பகுதியில் ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதை கவனித்த இளைஞர்கள் பைக்கின் ஆக்சிலேட்டரை திருகி ரெயிலில் செல்பவர்கள் மீது தண்ணீர் தெளித்து விளையாடினர். இதனை அவர்கள் வீடியோவாக பதிவுசெய்தனர்.
அப்போது திடீரென ரெயில் நின்றது. அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் ரெயிலை பார்த்துக்கொண்டு இருந்தார்கள்.
ரெயிலில் இருந்து கீழே இறங்கிய பயணிகளில் சிலர் இளைஞர்களை சரமாரி தாக்கினர். மேலும், தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த பைக்கையும் ரெயிலில் ஏற்றிச் சென்றனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் கற்களைக் கொண்டு ரெயில் பெட்டிகள் மீது வீசினர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Kalesh b/w Train Passengers and Some guys who were sprinkling water on Train (These people thought that the train would not stop, the train stopped, the passengers beat them up and also seized there bike) Pakistan
— Ghar Ke Kalesh (@gharkekalesh) June 26, 2024
pic.twitter.com/DIKZNqeRrx
- மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது.
- பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில் வெப்ப அலை தாக்கியதில் கடந்த நான்கு நாட்களில் 450க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தாக ஒரு முன்னணி தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் துறைமுக நகரமான கராச்சி, கடந்த சனிக்கிழமை முதல் கடுமையான வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வெப்ப அலை வீசி வருகிறது. குறிப்பாக, கடலோரப் பகுதிகளில் மிக அதிகமாக வெப்பநிலை வீசுகிறது.
இந்நிலையில், கடந்த நான்கு நாட்களில் குறைந்தது 427 உடல்களைப் பெற்றதாக எதி அறக்கட்டளை கூறியுள்ளது. இது சிந்து அரசாங்கம் நேற்று 23 உடல்களை மூன்று அரசு மருத்துவமனைகளில் இருந்து பெற்றதாக தெரிவித்துள்ளது.
எதி டிரஸ்ட் என்பது பாகிஸ்தானின் மிகப்பெரிய நலன்புரி அறக்கட்டளை மற்றும் ஏழைகள், வீடற்றோர், ஆதரவற்றக் குழந்தைகள், தூக்கி எறியப்பட்ட குழந்தைகள் மற்றும் தாக்கப்பட்ட பெண்களுக்கு பல்வேறு இலவச அல்லது மானிய விலையில் சேவைகளை வழங்குகிறது.
இதுகுறித்து, அறக்கட்டளையின் தலைவர் பைசல் எதி கூறுகையில், " கராச்சியில் அறக்கட்டளையின் கீழ் நான்கு சவக்கிடங்குகள் செயல்படுகின்றன. மேலும் எங்கள் பிணவறைகளில் அதிக உடல்களை வைக்க இடமில்லாத நிலையை நாங்கள் அடைந்துள்ளோம்.
வருத்தமான உண்மை என்னவென்றால், இந்த உடல்களில் பல கடுமையான வானிலையிலும், நிறைய சுமை கொட்டும் பகுதிகளில் இருந்து வந்தவை.
பெரும்பாலான உடல்கள் வீடற்றவர்கள் மற்றும் தெருக்களில் போதைக்கு அடிமையானவர்களுடையது.
இந்த மக்கள் நாள் முழுவதையும் தங்களின் வாழ்வாதாரத்திற்காக முழு நாளையும் செலவிடுவதால் தீவிர வெப்ப அலை அவர்களுக்கு ஏற்பட்டது.
நேற்று மட்டும் 135 உடல்கள் தங்கள் பிணவறைக்கு வந்ததாகவும், திங்கட்கிழமை அன்று 128 உடல்கள் கிடைத்தது" என்றார்.
- பாகிஸ்தானில் கடுமையான வெயில் வாட்டி வதைகிறது.
- பாகிஸ்தானின் 2-வது பெரிய நகரான கராச்சியில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெயிலுக்கு 20 பேர் பலியாகினர்.
கராச்சி:
பாகிஸ்தானில் கடுமையான வெயில் வாட்டி வதைகிறது. வெப்ப அலை தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது.
இந்தநிலையில் பாகிஸ்தானின் 2-வது பெரிய நகரான கராச்சியில் கடந்த 2 நாட்களில் மட்டும் வெயிலுக்கு 20 பேர் பலியானதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
- இம்ரான் கான் கடந்த ஆண்டு முதல் ஜெயிலில் இருந்து வருகிறார்.
- ஆலோசகர் வீட்டில் இருந்து வெளியேறிய நிலையில், அவர் குறித்து தகவல் ஏதும் இல்லை என மகன் புகார்.
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது அரசியல் ஆலோசகர் குலாம் ஷபீர். இரண்டு நாட்களுக்கு முன்னதாக லாகூரின் காயன்பான்-இ-அமின் என்ற இடத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளார். இஸ்லாமாபாத் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றுள்ளார். ஆனால் அவர் குறித்து எந்த தகவலும் இல்லை என அவரது மகன் பிலால் போலீசில் புகார் அளித்துள்ளார்.
அடையாளம் தெரியாத நபர்களால் பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரான லாகூரில் இருந்து கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகப்படப்படுகிறது. குலாம் ஷபீர் பாகிஸ்தான் தெரிக்-இ-இன்சாப் கட்சியின் தலைவரான ஷபாஸ் கில்லின் மூத்த சகோதரர் ஆவார்.
கடந்த 2022-ல் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான் கான் விலகிய பின் அவர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆட்சி கவிழ்ந்ததும் ஷெபாஸ் ஷெரீப் ஆட்சிக்கு எதிராக லாகூரில் இருந்து இஸ்லாமாபாத் வரை பிரமாண்ட பேரணி நடத்தினார். அப்போது பொது சொத்துகளை சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.






