என் மலர்
ஜெர்மனி
- ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை ஜெய்சங்கர் சந்தித்தார்.
- இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.
பெர்லின்:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அரசுமுறை பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளார். அதன்படி, நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளுக்கு சென்ற ஜெய்சங்கர் ஜெர்மனிக்குச் சென்றார்.
அவர் ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் வெல்பலை சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது இருநாட்டு உறவு, பஹல்காம் தாக்குதல், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி ஜோஹன் கூறுகையில், ஏப்ரல் 22-ம் தேதி இந்தியாவில் நடைபெற்ற கொடூரமான பயங்கரவாத தாக்குதலால் நாங்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தோம். இரு நாடுகள் இடையேயான ராணுவ தாக்குதலை தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிராக தங்களை தற்காத்துக் கொள்ள இந்தியாவிற்கு முழு உரிமை உள்ளது. அதை நாங்கள் ஆதரிக்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே தற்போது போர்நிறுத்தம் அமலில் உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.
- ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.
- இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ் காலிறுதியில் வெற்றி பெற்றார்.
பெர்லின்:
ஜெர்மனியில் ஹம்பர்க் ஓபன் ஆண்கள் டென்னிஸ் போட்டி நடக்கிறது.
இதன் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலியின் லூசியானோ டர்டேரி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ரூப்லெவ் 6-1, 3-6, 6-3 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் அரையிறுதியில் கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் ரூப்லெவ் மோதுகிறார்.
- ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா வெற்றி பெற்றார்.
பெர்லின்:
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியின் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடந்தது. இதில் பெலாரஸ் வீராங்கனையான அரினா சபலென்கா, இத்தாலி வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 7-5, 6-4 என வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டோபென்கோ 6-4, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் அலெக்சாண்ட்ரோவாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
- மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.
முனீச்:
மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், அமெரிக்காவின் பென் ஷெல்டன் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்வரேவ் 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
ஸ்வரேவ் பிறந்த நாளான இன்று முனீச் ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஸ்டட்கர்ட் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியின் நடைபெற்று வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி சுற்று போட்டிகள் நேற்று நடைபெற்றது. இதில் போலந்து வீராங்கனையான இகா ஸ்வியாடெக், லாத்வியா வீராங்கனை ஜலினா ஒஸ்டாபென்கோ உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 3-6 என இழந்த இகா ஸ்வியாடெக் 2வது செட்டை 6-3 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 2-6 என ஸ்வியாடெக் இழந்தார். இதன்மூலம் ஸ்டட்கர்ட் தொடரில் இருந்து ஸ்வியாடெக் வெளியேறினார்.
- மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
முனீச்:
மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், ஹங்கேரியின் பேபியன் மாரோசான் உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ஸ்வரேவ் 7-6 (7-3), 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 2-6, 7-6 (9-7), 6-4 என்ற செட் கணக்கில் அர்ஜெண்டினாவின் பிரான்சிஸ்கோவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்வரேவ், பென் ஷெல்டன் ஆகியோர் மோதுகின்றனர்.
- மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் ஜெர்மனி வீரர் ஸ்வரேவ் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
முனீச்:
மூனீச் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், நெதர்லாந்தின் கிரிக்ஸ்புர் உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை 7-8 (6-8) என இழந்த ஸ்வரேவ், அடுத்த இரு செட்களை 7-6 (7-3), 6-4 என வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பென் ஷெல்டன் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் இத்தாலி வீரர் லூசியானோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதியில் தோல்வி அடைந்தது.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, இந்தோனேசியாவின் குஷார்ஜண்டோ-குளோரியா ஜோடி மோதியது.
இதில் இந்திய ஜோடி 23-25, 21-10, 15-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தது.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி அரையிறுதிக்கு முன்னேறியது.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, சீனாவின் ஜியா ஜுவான்-மெங் யங் ஜோடி மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-14, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடந்து வருகிறது.
- கலப்பு இரட்டையரில் இந்திய ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-துருவ் கபிலா ஜோடி, ஜெர்மனியின் ஜேன்சன்-நுயென் ஜோடி மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இந்திய ஜோடி 21-10, 21-19 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
- ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
- இதில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
பெர்லின்:
ஜெர்மனி ஓபன் பேட்மிண்டன் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சக நாட்டு வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் உடன் மோதினார். இதில் ரஜாவத் 21-14, 21-12 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் கிரண் 21-18, 19-21, 21-16 என்ற செட் கணக்கில் பின்லாந்தின் ஓல்டர்பை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
- எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார்.
ஜெர்மனியில் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்(சிஎஸ்யு/சிடியு) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.
நேற்று (பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகலின்படி ஆளுங்கட்சியான ஜனநாயக சமூகம் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஆளுங்கட்சியை பின்னுக்குத்தள்ளி தீவிர வலதுசாரிக் கூட்டணி(ஏ.எப்.டி) 20 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் நடந்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றம் இது.
உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இக்கட்சிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






