என் மலர்tooltip icon

    உலகம்

    ஜெர்மனி தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி!..
    X

    ஜெர்மனி தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி!..

    • ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவிகித வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.
    • எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார்.

    ஜெர்மனியில் பிரதமர் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவரான நிதி மந்திரியை அதிபர் ஸ்கால்ஸ் திடீரென பதவிநீக்கம் செய்தார். இதனால் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஸ்கால்ஸ் அரசு தோல்வியுற்றது. எனவே அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

    இந்த தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் அதிபர் ஒலாப் ஸ்கால்ஸ், கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்(சிஎஸ்யு/சிடியு) சார்பில் பிரெட்ரிக் மெர்ஸ், ஏ.எப்.டி. சார்பில் ஆலீஸ் வீடெல் ஆகியோர் மோதினர்.

    நேற்று (பிப்ரவரி 23 - ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் முதல்கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகலின்படி ஆளுங்கட்சியான ஜனநாயக சமூகம் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. ஜனநாயக சமூகம் கட்சிக்கு 16 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது.

    எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.

    இதைத்தொடர்ந்து ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் பதவியேற்பார் என்றும் எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இதற்கிடையே ஆளுங்கட்சியை பின்னுக்குத்தள்ளி தீவிர வலதுசாரிக் கூட்டணி(ஏ.எப்.டி) 20 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது. ஜெர்மனியில் இரண்டாம் உலகப் போருக்குப்பின் நடந்துள்ள குறிப்பிடத்தகுந்த மாற்றம் இது.

    உலகின் முன்னணி தொழிலதிபரான எலான் மஸ்க் ஏ.எப்.டி. கட்சிக்கு ஆதரவாக சமூக வலைதளங்களிலும், வீடியோ மூலமாகவும் பிரசாரம் செய்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் இக்கட்சிக்கு ஆதரவு அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×