என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அறிவாலயம் பக்கம் யார் போனாலும் ஸ்டாலின் சார் கூட்டணியில் சேர்த்துக்கிறார் - விஜய்
- இந்த கொள்ளை அடிச்சு வெச்சுக்குற பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது.
- இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன்.
வேலூர்:
தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், நிர்வாகிகள் கூட்டத்தில் பேசியதாவது:-
இப்போ நம்ம ஸ்டாலின் சார் அறிவாலயம் பக்கம் யார் நடந்து போனாலும், அறிவாலயம் பக்கத்தில் யார் நிழலுக்கு ஒதுங்குனாலும் கூட்டணியில் சேர்த்துக்கிறார். அந்த கொள்ளை அடிச்சி வெச்சியிருக்குற பணத்துல ஒரு பங்கு கொடுத்து அதற்கு பெயர் கல்லாப்பெட்டி கூட்டணியை கஷ்டப்பட்டு சேர்த்து இருக்கார்.
ஆனா அவருக்கு நான் சொல்றேன். அருத பழைய கூட்டணி கணக்குகளோ, இந்த கொள்ளை அடிச்சு வெச்சுக்குற பணத்தை வைத்து மக்களை ஏமாற்றி ஜெயிக்க முடியாது. ஏன் என்றால் இது மாபெரும் மக்கள் சக்தியான வித்தியாசமான விசில் புரட்சி எலெக்ஷன். உங்களோடு நான் இருக்கிறேன். நம்மோடு நம்ம மக்கள் இருக்கிறார்கள். இதற்கு மேல் என்ன வேண்டும். Confident ஆ இருங்க நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம். மீண்டும் சந்திக்கும் வரை நன்றி வணக்கம் என்றார்.






