என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டணியை கையாளத் தெரியவில்லை- நயினார் நாகேந்திரனை சாடிய டி.டி.வி. தினகரன்
    X

    கூட்டணியை கையாளத் தெரியவில்லை- நயினார் நாகேந்திரனை சாடிய டி.டி.வி. தினகரன்

    • கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.
    • கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.

    மதுரை :

    அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. அணிகளை இணைக்க அமித்ஷா முயற்சி எடுத்து வருகிறார்.

    * தேவையின்றி யாரையும் சந்திக்க வேண்டிய தேவை எனக்கில்லை.

    * கூட்டணி குறித்து டிசம்பரில் தான் அறிவிப்போம்.

    * கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து நிதானமாகவே முடிவெடுத்தோம்.

    * அ.ம.மு.க.வை சிறிய கட்சி என நயினார் நாகேந்திரன் நினைத்திருக்கலாம்.

    * கூட்டணியை கையாள நயினார் நாகேந்திரனுக்கு தெரியவில்லை.

    * விஜயுடன் கூட்டணி என பேசுவது தவறானது.

    * தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் எனக்கூறினேனே தவிர அவருடன் இணையப்போகிறேன் எனக்கூறவில்லை.

    * அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் வேட்பாளர் ஆவதில் எங்களுக்கு பிரச்சனை இல்லை என்றார்.

    Next Story
    ×