என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    எப்படி சமாளிச்சீங்க..! மோடி- ஸ்டாலினை கலாய்த்து ஜெயக்குமார் பதிவு
    X

    எப்படி சமாளிச்சீங்க..! மோடி- ஸ்டாலினை கலாய்த்து ஜெயக்குமார் பதிவு

    • பிரதமர் நரேந்திர மோடியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கிண்டல் செய்யும் வகையில் பதிவு.
    • இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி ஜெயக்குமார் பதிவு.

    அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் கிண்டல் செய்யும் வகையில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "கள்ளக்குறிச்சிக்கு போகவேயில்லையே எப்டி சமாளிச்சீங்க, ஸ்டாலின்..?

    மணிப்பூருக்கேப் போகாம நீங்க சமாளிச்ச மாதிரி தான், மோடிஜி" என பதிவிட்டுள்ளார்.

    மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த கலரத்தில் ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இவ்வளவு கலவர சூழலிலும் மணிப்பூர் மாநிலத்திற்கு பிரதமர் மோடி நேரில் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

    இதேபோல், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 65 பேர் உயிரிழந்த நிலையில், அமைச்சர்கள், அரசியல் பிரமுகர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர். ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் செல்லவில்லை.

    இவை இரண்டு சம்பவங்களையும் தொடர்புப்படுத்தி அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கிண்டலாக வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

    Next Story
    ×