search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்திற்கு எதுவும் செய்யாமல் ஓட்டு மட்டும் வேண்டுமா?- மு.க.ஸ்டாலின்
    X

    தமிழகத்திற்கு எதுவும் செய்யாமல் ஓட்டு மட்டும் வேண்டுமா?- மு.க.ஸ்டாலின்

    • ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்?
    • 10 ஆண்டுகால ஆட்சியில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

    ரூ.4,181 கோடி மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித்திட்ட விரிவாக்கப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    பின்னர், தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    திமுக துவங்கப்பட்டது வட சென்னையில் தான். எம்எல்ஏவாக, மேயராக, துணை முதல்வராக, இப்போது முதல்வராக ஆக்கியதும் வட சென்னை தான்.

    சென்னையை மிக சிறந்த மாநகரமாக மாற்ற வேண்டிய பொறுப்பை அமைச்சர்களிடம் கொடுத்துள்ளேன். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமை எனக்கு உண்டு. சென்னையில் உள்ள பல்வேறு வளர்ச்சி பணிகளையும் திமுக அரசு ஏற்படுத்தியது தான். மேயராக இருந்தபோது மட்டுமில்லாமல், முதல்வரான போதும் மக்கள் சேவகனாக தான் செயல்படுகிறேன்.

    சென்னையை சிங்கார சென்னையாக மாற்றினோம். அமைச்சர் நேரு, மேயர், துணை மேயர், கவுன்சிலர்கள் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை புதுப்பொலிவு பெற்று வருகிறது. வட சென்னை வளர்ச்சி திட்டங்களுக்காக முதலில் ரூ.1000 கோடி ஒதுக்கினோம். 10 ஆண்டுகால ஆட்சியில் மத்திய பாஜக அரசு, தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை.

    குஜராத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும், உடனடியாக ஹெலிகாப்டரில் சென்றார். நிதி கொடுத்தார். நான் முதல் முறையாக பிரதமரை சந்தித்தபோது, மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு நிதி கேட்டேன். அவர்கள் தரவில்லை.

    மத்திய அரசுக்கு நம்மிடம் இருந்து தான் அதிக நிதி போகிறது. ஒரு ரூபாய் கொடுத்தால், 25 காசுகள் தான் திருப்பி தருகின்றனர்.

    நாட்டுப்பற்று பற்றி யாரும் எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஏன்?

    வெள்ளத்தின்போது மக்களை பார்க்க வராதவர், ஓட்டு கேட்க மட்டும் வரலாமா ? இந்தியாவை காக்க நாங்கள் எப்போதும் பணியாற்றி வருகிறோம் என்பதை மக்கள் அறிவர். தமிழகத்திற்கு எதுவும் செய்யாமல் ஓட்டு மட்டும் வேண்டுமா ?

    அதிமுக,பாஜகவை மக்கள் புறக்கணிப்பார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×