என் மலர்
டென்னிஸ்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் மேடிசன் கீஸ், ஆன் லி உடன் மோதினார்.
மெல்போர்ன்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், சக நாட்டவரான ஆன் லி உடன் மோதினார்.
இதில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய மேடிசன் கீஸ் 6-4 மற்றும் 7-5 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 2-வது சுற்றில் எலெனா கேப்ரியெலா ரூஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.
- போபண்ணா ஜோடி முதல் செட்டை 5-7 என இழந்தது.
- 2-வது செட்டை 6(5)-7(7) என இழந்து ஏமாற்றம் அடைந்தது.
கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் நடைபெற்று வருகிறது. இன்று ஆண்களுக்கான இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா, கொலம்பியாவைச் சேர்ந்த நிக்கோலஸ் பேரியன்டஸ் ஜோடி ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மார்ட்டினஸ்- ஜாம் முனார் ஜோடியை எதிர்கொண்டது.
இதில் போபண்ணா ஜோடி 5-7, 6-7(5) என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது. முதல் செட்டின் தொடக்கத்தில் போபண்ணா ஜோடி சிறப்பாக விளைாடினாலும், அதன்பின் ஸ்பெயின் ஜோடி உத்வேகம் பெற்று முதல் செட்டை 7-5 எனக் கைப்பற்றியது.
2-வது செட்டில் இரு ஜோடிகளும் 6-6 என சமநிலை பெற்ற நிலையில் டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் ஸ்பெயின் ஜோடி 5-3 என முன்னிலை பெற்றிருந்தது.
அதன்பின் போபண்ணா ஜோடி சிறப்பாக விளையாடி 5-5 என சமநிலை பெற்றது. என்றாலும் ஸ்பெயின் ஜோடி அடுத்த இரண்டு கேம்களையும் வென்று டை-பிரேக்கரை 7-5 என முறியடித்து 7-5, 7(5)-6(5) என வெற்றி பெற்றது.
இதனால் முதல் சுற்றோடு போபண்ணா ஜோடி ஏமாற்றம் அடைந்தது.
- முதல் சுற்று ஆட்டத்தில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.
- மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ், அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ ஆகியோர் மோதினர்.
ஆண்டின் முதல் 'கிராண்ட்ஸ்லாம்' ஆன ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), நிஷேஷ் பசவரெட்டி (அமெரிக்கா) ஆகியோர் மோதினார்.
இதில் முதல் செட்டை கோகோவிச் 4-6 என இழந்தார். அடுத்த மூன்று செட்டுகளை 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பானிஷ்) அலெக்சாண்டர் ஷெவ்செங்கோ (கஜகஸ்தான்) ஆகியோர் மோதினர். இதில் அல்காரஸ் 6-1, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் எளிதாக வீழ்த்தினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வரேவ் வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 2 வீரரும், ஜெர்மனியைச் சேர்ந்தவருமான அலெக்சாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் லூகாஸ் பவுலே உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-4, 6-4, 6-4 என்ற செட்களில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் நார்வே வீரர் காஸ்பர் ரூட் 6-3, 1-6, 7-5, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீரர் முனாரை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா வெற்றி பெற்றார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதற்கிடையே, ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் நேற்று தொடங்கின.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நம்பர் 1 வீராங்கனையும், பெலாரசைச் சேர்ந்தவருமான சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதினார்.
இதில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயினின் பவுலா படோசா, சீனாவின் வாங் ஜின்யு உடன் மோதினார். இதில் படோசா 6-3, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் தோல்வி அடைந்தார்.
சிட்னி:
டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்று போட்டிகள் இன்று தொடங்கியது.
அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதினார்.
இதில் தாமஸ் மச்சாக் 6-3, 6-1, 7-5 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் சுமித் நாகல் முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
- பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை சபலென்கா பங்கேற்கிறார்.
சிட்னி:
ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று முதல் தொடங்க உள்ளது.
இதற்கிடையே, பெண்கள் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா, அமெரிக்காவின் ஸ்லோனே ஸ்டீபன்ஸ் உடன் மோதுகிறார்.
இந்நிலையில், மகளிர் ஒற்றையர் பிரிவில் பெலாரஸ் நாட்டின் அரினா சபலென்கா ஹாட்ரிக் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகிறார். இவர் கடந்த 2024 மற்றும் 2023-ம் ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று வாகை சூடியிருந்தார்.
ஏற்கனவே, சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிஸ் 1997, 1998 மற்றும் 1999-ம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சுமித் நாகல் இன்று விளையாட உள்ளார்.
சிட்னி:
டென்னிஸ் உலகில் ஆண்டுதோறும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது.
அதன்படி, ஆண்கள் ஒற்றையர் பிரிவில் தகுதிபெற்ற ஒரே இந்தியரான சுமித் நாகல், செக் குடியரசின் தாமஸ் மச்சாக் உடன் மோதுகிறார்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலிக்ஸ் அகர் அலியாசிம்- செபாஸ்டியன் கோர்டா மோதினர்.
- பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் ஜெசிகா பெகுலா- மேடிசன் கீஸ் உடன் மோதினார்.
அடிலெய்டு:
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் பெலிக்ஸ் அகர் அலியாசிம்- செபாஸ்டியன் கோர்டா மோதினர்.
இதில் அலியாசிம் 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கோப்பை கைப்பற்றினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டவரான மேடிசன் கீஸ் உடன் மோதினார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் பரபரப்புக்குள்ளானது. இறுதியில் 3-வது செட்டை கீஸ் கைப்பற்றி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
கீஸ் இந்த ஆட்டத்தில் 6-3, 4-6 மற்றும் 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
- இன்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
- நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர்.
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ், ரஷியாவின் லியுட்மிலா சாம்சோனோவா உடன் மோதினார்.
இந்த போட்டியில் முதல் செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் லியுட்மிலா சாம்சோனோவாவும், 2-வது செட்டை 7-5 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸும் கைப்பற்றினர். தொடர்ந்து நடைபெற்ற 3-வது செட்டில் 3-0 என்ற புள்ளிக்கணக்கில் மேடிசன் கீஸ் முன்னிலையில் இருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக லியுட்மிலா சாம்சோனோவா காயம் அடைந்தார். இதன் காரணமாக அவர் போட்டியில் இருந்து வெளியேறினார். இதனால் மேடிசன் கீஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா- கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா ஆகியோர் மோதினர். இதில் 7-4, 6-3 என்ற செட் கணக்கில் பெகுலா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் மேடிசன் கீஸ், ஜெசிகா பெகுலா மோதவுள்ளனர்.
- ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் பெலிக்ஸ் அகர் அலியாசிம், டாமி பாலுடன் மோதினர்.
- இதில் முதல் 2 செட்டை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றினர்.
அடிலெய்டு டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கனடா வீரரான பெலிக்ஸ் அகர் அலியாசிம், அமெரிக்காவின் டாமி பாலுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
இதில் முதல் 2 செட்டை ஆளுக்கு ஒன்றாக கைப்பற்றிய நிலையில், 3-வது செட்டை பெலிக்ஸ் அகர் கைப்பற்றி வெற்றி பெற்றார். பெலிக்ஸ் இந்த ஆட்டத்தில் 7-6, 3-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
- நியூசிலாந்தின் ஆக்லாந்தில் ஏ.எஸ்.பி. கிளாசிக் பெண்கள் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
- இதில் ஜப்பானிய வீராங்கனை ஒசாகா காயம் காரணமாக இறுதிப்போட்டியில் இருந்து விலகினார்.
ஆக்லாந்து:
நியூலாந்தின் ஆக்லாந்து நகரில் ஏஎஸ்பி கிளாசிக் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது.
இன்று நடந்த இறுதிப்போட்டியில் ஜப்பானின் நவோமி ஒசாகா, டென்மார்க்கின் கிளாரா டவ்சன் உடன் மோதினார். இதில் ஒசாகா 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டின் ஆரம்பத்தில் ஒசாகா காயம் காரணமாக திடீரென விலகுவதாக அறிவித்தார். இதையடுத்து, கிளாரா டவ்சன் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.






